திருப்புகழ் - Volume 12
நிலோபர் அன்பரசு
Narrador Ramani
Editora: Ramani Audio Books
Sinopse
திருப்புகழ் என்பது முருகக் கடவுள் மீது அருணகிரிநாதர் இயற்றிய ஒரு பக்தி நூல். திருப்புகழில் 1340 இசைப்பாடல்கள் உள்ளன. இவற்றுள் 1088க்கும் மேற்பட்ட சந்த வேறுபாடுகள் உள்ளன என்று கணித்திருக்கிறார்கள். திருப்புகழை தேவாரம், திருவாசகம் போல் மந்திர நூலாகவும், நாள்தோறும் இறைவனைப் போற்றிப் புகழ்பாடும் நூலாகவும், முருகன் மீது பக்தி கொண்டோர் பின்பற்றும் நூலாகவும் கொள்கின்றனர். திருப்புகழில் மிகச் சிறந்த சொல்லாட்சி, இசை நூட்பங்கள், கவித்துவம், இலக்கிய நயம், தாள நுட்பம், சந்தபேதம், இனிய ஓசை ஆகியவை அடங்கியது. இது இசை நூல்களிலடங்காத தனித்தன்மை பெற்றது. அருணகிரிநாதர் 15-ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். திருப்புகழில், இலக்கியமும் பக்தியும் இணக்கமாகக் கலக்கப்பட்டுள்ளதைக் காணலாம். மேலும், "திருப்புகழ்" இடைக்கால தமிழ் இலக்கியத்தின் முக்கிய படைப்புகளில் ஒன்றாக உள்ளது. திருப்புகழ் பாடல்கள் நல்லொழுக்கம் மற்றும் நீதியுள்ள வாழ்க்கையை வாழ்வதற்கான வழியைக் காட்டுகின்றன. மேலும் ஒரு புதிய வழிபாட்டு முறையான இசை மூலம் வழிபடுவதை உலகிற்கு உணர்த்தும் விதமாக அவை உள்ளன. ரமணியின் ஒலி நூலாக்கத்தில் பன்னிரெண்டாம் தொகுதியாக 862 முதல் 991 வரையிலான 129 திருப்புகழ்ப் பாடல்கள் அமைகின்றன. இப்பாடல்கள் திரிபுவனம் கும்பகோணம் சோமீச்சுரம் கொட்டையூர் சிவபுரம் திருநாகேச்சுரம் கூந்தலூர் திருச்சத்திமுத்தம் திருவழஞ்சுழி திருப்பழையாறை திருச்சகரப்பள்ளி திருக்குறங்காடுதுறை காவளூர் தஞ்சை சப்தஸ்தானம் திருவையாறு திருப்பூந்துருத்தி திருநெய்த்தானம் திருப்பழுவூர் பெரும்புலியூர் நெடுங்களம் குறட்டி அத்திப்பட்டு அத்திக்கரை கந்தனூர் வாலிகொண்டபுரம் திருமாந்துறை வயலூர் திருத்தவத்துறை பூவாளூர் திருப்பராய்த்துறை தென்கடம்பந்துறை கருவூர் நெருவூர் திருவெஞ்சமாக்கூடல் திருப்பாண்டிக்கொடுமுடி சேலம் ராஜபுரம் விஜயமங்கலம் காங்கேயம் பட்டாலியூர் திருமுருகன்பூண்டி அவினாசி திருப்புக்கொளியூர் பேரூர் கொடும்பாளூர் கீரனூர் குளந்தைநகர் தனிச்சயம் மதுரை பவானி புருஷமங்கை இலஞ்சி திருக்குற்றாலம் ஆய்க்குடி திருப்புத்தூர் திருவாடானை உத்தரகோசமங்கை இராமேசுரம் இந்தம்பலம் எழுகரைநாடு ஒடுக்கத்துச்செறிவாய் காமத்தூர் முள்வாய் வாகைமாநகர் விசுவை தலங்களில் பாடப்பட்டவை.
Duração: aproximadamente 2 horas (02:16:33) Data de publicação: 13/09/2023; Unabridged; Copyright Year: — Copyright Statment: —

