கந்தர் அநுபூதி
நிலோபர் அன்பரசு
Narrador Ramani
Editora: Ramani Audio Books
Sinopse
கந்தரனுபூதி அல்லது கந்தர் அனுபூதி என்னும் நூல் 15ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அருணகிரிநாதர் என்பவரால் பாடப்பட்டது. அனுபூதி என்னும் சொல்லினை அனு + பூதி என்று பிரிக்கலாம். "அனு" என்பது அனுபவம். "பூதி" என்பது புத்தி. அறிவின் பூரிப்பு. அனுபவ அறிவின் பூரிப்பே அனுபூதி. திருமூலர் இடையன் உடலுக்குள் புகுந்து திருமந்திரம் சொன்னாராம். அதுபோல அருணகிரிநாதர் கிளி உடலுக்குள் இருந்துகொண்டு இந்த நூலைச் சொன்னார் எனக் கூறுவர். எல்லாப்பாடல்களுமே நிலைமண்டில ஆசிரியப்பா வகையில் எழுதியிருப்பதனை காண முடிகிறது. எனவே ஒவ்வொரு பாடலும் 4 அளவடிகள் கொண்டு, ஆசிரியச்சீர்கள் கொண்டு இயற்றப்பட்டிருக்கின்றன. இந்த நூலில் 101 பாடல்கள் உள்ளன. பாடல்கள் எதுகைத் தொடை ஓட்டத்தால் சந்தச்சுவை உடையனவாக உள்ளன. இவற்றோடு மேலும் சில பாடல்களைச் சேர்த்து 105 பாடல்கள் கொண்ட பதிப்புகளும் உள்ளன. இந்த நூலில் முருகனின் திருவுரு, ஊர்தி, படை, கொடி முதலானவை கூறப்படுகின்றன. ஈதல் இந்த நூலில் வலியுறுத்தப்படுகிறது. பாசத் தளையில் கலங்கிய நிலை, மனம் அமைதி பெற்றுத் தவத்தில் ஒன்றிய நிலை, முருகன் திருவருள் பெற்ற ஞானநிலை, உபதேச நிலை என்னும் நான்கு பிரிவுகளில் பாடல்கள் அமைந்துள்ளன. ரமணியின் நேர்த்தியான வாசிப்பில் இந்த நூலைக் கேட்பதும் ஓர் அநுபூதியே!
Duração: 23 minutos (00:23:19) Data de publicação: 13/09/2023; Unabridged; Copyright Year: — Copyright Statment: —

