Ettam Thirumurai Thirukkovaiyar
Manikkavasakar
Narrador Ramani
Editora: RamaniAudioBooks
Sinopse
திருக்கோவையார் திருவாதவூரார் என்னும் மாணிக்கவாசகரால் இயற்றப்பட்டது. இது பன்னிரண்டு சைவத் திருமுறைகளில் எட்டாவது திருமுறையாகும். இதைத் திருச்சிற்றம்பலக்கோவையார் என்றும் அழைப்பர். இந்நூலுக்குப் பெயர் திருக்கோவை என்பது இறைவணக்கத்தில், நண்ணியசீர்த் தேனூறு செஞ்சொல் "திருக்கோவை" என்கின்ற நானூறும் என்மனத்தே நல்கு என்பதால் விளங்கும். இந்நூல் 400 பாடல்களை உடையது. இந்நூலை ஆரணம் (வேதம்) என்பர் சைவ சமய சாதகர்கள். இஃது இயற்கைப் புணர்ச்சி முதலாகப் பரத்தையிற் பிரிவு ஈறாக 25 அதிகாரங்களை உடையது. இந்நூல் பேரின்ப நூல் ஆகும். மேலோட்டமாகக் காணும்பொழுது அகத்திணை நூல் போல் காட்சி தருகிறது. அன்பே சிவமாகவும், அருளே காரணமாகவும், சுத்த அவத்தையே நிலமாகவும், நாயகி பரம்பொருளாகவும், நாயகன் ஆன்மாவாகவும், தோழி திருவருளாகவும், தோழன் ஆன்மபோதமாகவும், நற்றாய் (அம்மை)பரையாகவும், சித்திரிக்கப் பட்டுள்ளனர்.
Duração: aproximadamente 4 horas (03:51:06) Data de publicação: 15/03/2022; Unabridged; Copyright Year: — Copyright Statment: —

