¡Acompáñanos a viajar por el mundo de los libros!
Añadir este libro a la estantería
Grey
Escribe un nuevo comentario Default profile 50px
Grey
Suscríbete para leer el libro completo o lee las primeras páginas gratis.
All characters reduced
இச்சைக்கு ஒரு ஒ போடு - cover

இச்சைக்கு ஒரு ஒ போடு

LS Morgan

Traductor Charlie

Editorial: Tektime

  • 0
  • 0
  • 0

Sinopsis

பாவ கதைகள் வரிசையில் ஒரு காமக் கதை.

ஆவா மெண்டெஸ் காலையில் எழுந்தவுடன், இன்றைய நாள் எப்போதும் போல தான் இருக்கப் போகிறது என்று நினைத்தாள், ஆனால் அன்று நடந்த இரகசிய படப்பிடிப்பில் புகைப்படம் எடுக்கப்பட்ட அந்த வசீகரமான நபரை, அவள் எதிர்பார்க்கவில்லை. அந்த மனிதரின் கண்ணில் தெரிந்த அவரது எதிர்பார்ப்பு அவள் தான் என்பதையும் அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. 
பாவ கதைகள் வரிசையில் ஒரு காமக் கதை.
Disponible desde: 22/08/2023.
Longitud de impresión: 56 páginas.

Otros libros que te pueden interesar

  • நம்பிக்கை ஒளி - Nambikkai Oli - Short Story - குறுநாவல் - cover

    நம்பிக்கை ஒளி - Nambikkai Oli -...

    Pavala Sankari

    • 0
    • 0
    • 0
    நம்பிக்கை ஒளி - Nambikkai Oli நம்பிக்கை ஒளி இரவென்று ஒன்றிருந்தால் பகல் என்ற ஒன்று வந்தே தீருமல்லவா ? இதில் தீவிரமான நம்பிக்கை கொண்டவர்களே சாதனையாளராகிறார்கள் கடலில் அலை ஓய்ந்தால்தான் மீன் பிடிப்பேன் என்பது சாத்தியமில்லை . அலையை எதிர்த்துப் போராடும் வல்லமையுடன் வாழ்ந்து பார்த்தால் அதன் சுகமே அலாதிதான். இதுவும் கடந்து போகும் என்ற நம்பிக்கை ஒளி வழிகாட்ட, அந்த தைரியத்தில் வானத்தை வசப்படுத்தி வெற்றி கண்ட நாயகிதான் மாலதி
    Ver libro
  • நேசம் மறவாத நெஞ்சமடி - Nesam Maravaatha Nenjamadi - cover

    நேசம் மறவாத நெஞ்சமடி - Nesam...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    "அதை இன்னும் கொஞ்சம் முன்னமே சொன்னா தான் என்னவாம்! கை வலிக்கிது..." என்று வாய்க்குள் முணுமுணுத்தாள்.  
    மீனாக்ஷியின் கூற்றில், அவளைப் பார்த்தபடியே வீரா மெலிதாக சிரித்து சிகாரைத் தரையில் எரிந்து தன் ஷூ காலால் மிதித்து அதன் நெருப்பை அணைத்தான். ஆனால் மீனக்ஷியால் அவனுள் மூண்ட நெருப்பு என்னவோ அணைய மறுத்தது. 
     "அடுத்த முறை, முட்டாள்களின் பேச்சைக் கேட்காத அளவுக்கு புத்திசாலித்தனமா நடந்துக்கோ..." என்று கூறியவன் குரலில் கிண்டல் நிறைந்திருந்தது. 
    அவன் கூற்றை சரியாக புரிந்து கொள்ளவே சில நொடிகள் பிடித்தது மீனாக்ஷிக்கு. 
    மீனாக்ஷி பதிலளிப்பதற்கு முன்பு, வீரா தனது பைக்கின் மீது காலை சுழற்றி அமர்ந்தவன் என்ஜினைத் ஆன் செய்தான். 
    வாகனத்தை கிளப்பும் முன், “வெல்கம் டு திஸ் காலேஜ்” என்று கூறியவன் கண்கள் அவள் மீது நிலைத்திருக்க அவள் பதிலை எதிர்பாராமல் வாகன இயந்திரத்தின் ஒலியுடன் சென்றுவிட்டான் வீரா.  
    மீனாக்ஷியின் இதயத் துடிப்பின் வேகம் கூடியது. அவள், வீரா... அவன் மேல் கோபப்படுகிறாளா, சங்கடப்படுகிறாளா அல்லது அவன் யாரென்று அறிய ஆர்வமாக இருக்கிறாளா? என்பதை அவளால் தீர்மானிக்க முடியவில்லை. 
    ஆனால் ஒரு விஷயம் மட்டும் உறுதியாக இருந்தது. வீரா அவளால் அவள் மனதில், என்றும் மறக்க முடியாத எண்ணத்தை விட்டுச் சென்றிருந்தான்... 
    “ஹே நிறுத்து நிறுத்து... அதென்ன? முதல் முதல்ல ஒரு பொண்ணை பாக்குற ஆண், இப்படியா சிகிரெட்டை ஊதிக்கிட்டு... வெறிச்சு வெறிச்சு பாப்பான்? இவனுங்களை தானே உங்களை மாதிரி பொண்ணுங்களுக்கெல்லாம் பிடிக்கிறது? அவனை ஹீரோன்னு வேற சொல்லிக்கிறீங்க... 
    என்னால இந்த மாதிரி இர்ரிடேட்டிங் ஸ்டோரி எல்லாம் கேக்க முடியாது. ச்சா... நான்சென்ஸ்...” என்று வர்மா மீனாக்ஷியை பொரிந்து தள்ளி கதையை பாதியில் இடை வெட்டினான்.
    Ver libro
  • Anithaavin Kadhalgal - cover

    Anithaavin Kadhalgal

    Sujatha

    • 0
    • 0
    • 0
    ஓர் அமெரிக்க மாப்பிள்ளை, உள்ளன்போடு நேசிக்கும் அம்மாஞ்சி முறைப் பையன், பரந்த வானத்தின் கீழிருக்கும் எதையும் விலை பேசும் பெரும் பணக்கார இளைய தொழிலதிபன், வாழ்க்கையை சுவாரஸ்யமாக வாழ அழைக்கும் ஒரு சங்கீத இளைஞன் என நாலா திக்கிலும் தன் மீது வலை பின்னும் காதல்களால் திகைத்துத் திணறி திக்குமுக்காடி போகும் ஓர் எளிய நடுத்தர வர்க்கத்து பெண்ணின் உள்ளுணர்வுகள், மன சஞ்சலங்களை விவரிக்கும் வசீகர நாவல்.
    Ver libro
  • இளநெஞ்சே வா - Ilanenjee vaa (Romantic Thriller) - cover

    இளநெஞ்சே வா - Ilanenjee vaa...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    மன்னா பயணிகள் இருக்கையிலிருந்து குதித்து பாண்டியாவை நோக்கிச் சென்றான். "அவளை வெளிய கூட்டி வா...", என்று தாழ்வான குரலில் கூறினான். ஆனால் அதுவே கட்டளையாக இருந்தது..... 
    பாண்டியா ஒரு கணம் தயங்கி, ராதிகா அமர்ந்திருந்த வேனின் பின்புறத்தைப் பார்த்தான். 
    அவள் கைகள் கட்டப்பட்டிருந்தன, அவள் முகம் வெளிரிப்போய்... ஆனால் கண்கள் சண்டைக்கு நிற்ப்பவள் போல் முறைத்துக் கொண்டு இருந்தது. "நாம இங்க தான் இருக்கனுமா மன்னா? இந்த இடத்தை பாத்தா எனக்கு பயமா இருக்கு... வேற எங்காவது...?" என்றான். 
    மன்னா புன்னகைத்து, குளிர்ந்த காற்றுக்கு எதிராக தனது மேல் சட்டையை இறுக்கமாக இழுத்தபடி, சுற்றிலும் பார்த்தான். முகத்தில் இனம் புரியா புன்னகை அரும்பியது. 
    "அது தான் நமக்கு வேணும், பாண்டியா. இது தான் சரியான இடம்... இங்க தான் யாரும் வரமாட்டாங்க. அவள் கத்துனாலும் அலறினாலும்... யாரும் என்னன்னு கேட்க மாட்டாங்க.. now move" என்றான் அதற்க்கு மேல் பேசாதே என்பது போல்... 
    ராதிகா அமைதியாக இருக்க முயன்றாலும், மன்னா அவனது வார்த்தைகளில் சற்று நிதானமாக இருந்தாள். அவளுடைய இதயத் துடிப்பின் வேகம் கூடியது. ஆனால் அவள் அழவில்லை. அவள் உடைந்து அழுவதை தன் முன்னே இருக்கும் இந்த ஆடவர்களுக்குக் காண்பிக்க அவள் விரும்பவில்லை.... 
    பாண்டியா வேனின் கதவை எச்சரிக்கையுடன் திறந்தான். ராதிகாவின் கை மற்றும் கால் கட்டுக்களை அவிழ்த்து விட்டான். 
    அவனது குரல் முன்பை விட மென்மையாக இருந்தது. "இறங்கி வா..." என்றான். 
    மணிக்கட்டில் சிவந்து போயிருந்த தடத்தைப் மெலிதாக தேய்த்துவிட்டாள். வாயில் இருந்த கட்டு அவிழ்க்கப்பட அப்போது தான் நன்றாக மூச்சே விட முடிந்தது அவளாள்.
    Ver libro
  • Edhiroliyaal - cover

    Edhiroliyaal

    Va Ve Su Iyer

    • 0
    • 0
    • 0
    தமிழின் முதல் சிறுகதையாக கருதப்படுகிறது. சிறுகதை என்ற வடிவம் இந்தக் கதையோடுதான் தொடங்குவதாக கருதப்படுகிறது. எளிமையான, மிகை உணர்ச்சிக் கதை என்றாலும் இன்றும் படிக்கக் கூடிய கதைதான்.
    Ver libro
  • நாணலே நங்கையானால் - Naanale Nangaiyaanaal? - cover

    நாணலே நங்கையானால் - Naanale...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுள் ஒன்றை வைத்து, அழகான காதல் கதையின் மூலம் வாசிப்பவர்களுக்கு சுவாரஸ்யம் ஊட்டும் வகையில், பலவித திடீர் திருப்பங்களுடனும் சுவாரஸ்யங்களுடனும் கதையை எளிமையாக விளக்க முயன்றிருக்கிறேன். 
    Ver libro