Panchatantra Kathaigal - பஞ்சதந்திரக் கதைகள்
Latha Kuppa
Narrador Uma Maheswari
Editorial: itsdiff Entertainment
Sinopsis
Panchatantra Kathaigal- A proud Aurality tamil audio book production ebook by Swasam Publications. Download FREE Aurality app now on play store and or iphone ios store இந்தியத் தொன்மக் கதைகளின் வரலாற்றில் பஞ்சதந்திரக் கதைகளுக்கு எப்போதும் ஒரு முக்கிய இடம் உண்டு. செவிவழிக் கதைகளாகப் பல தலைமுறைகளைக் கடந்து வந்த இந்தக் கதைகள் விஷ்ணுசர்மா என்பவரால் சம்ஸ்கிருத மொழியில் முதன்முதலாகத் தொகுக்கப்பட்டன. அரசர்களை நல்வழிப்படுத்தும் ஓர் உத்தியாக இந்தக் கதைகளை அவர் பயன்படுத்தி இருந்தாலும், சிறுவர்கள் மட்டுமின்றி அனைவராலும் விரும்பிப் படிக்கப்படும் இலக்கியப் படைப்பாகவும் அது அமைந்தது. ‘பஞ்சதந்திரக் கதைகள்’ ஐந்து பகுதிகளைக் கொண்டது. தாமரை மலரின் பல்லாயிரக்கணக்கான இதழ்கள் போல, ஒரு கதைக்குள் பல கதைகள் ஒளிந்திருப்பதே பஞ்சதந்திரக் கதைகளின் சிறப்பம்சம். உலகின் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள பஞ்சதந்திரக் கதைகளில் பொதிந்துள்ள நீதி போதனைகளும் ராஜ தந்திர நுணுக்கங்களும் காலத்தைத் தாண்டி நிற்பவை. முன்னெப்போதோ இக்கதைகள் எழுதப்பட்டிருந்தாலும் இந்தக் கதைகள் எல்லாக் காலத்துக்கும் பொருந்துபவையாக இருக்கின்றன. லதா குப்பாவின் தெளிந்த நீரோடை போன்ற எழுத்து நடையில், ஓவியர் ஜீவாவின் ஓவியங்களுடன் வெளிவந்துள்ள இந்தத் தொகுப்பு, மிருகங்களின் மாய உலகிற்குள் நம்மைக் கட்டிப்போடும் என்பதில் ஐயமில்லை. எழுத்தாளர் லதா குப்பா எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம். Audiobook by Aurality.
Duración: alrededor de 6 horas (05:47:15) Fecha de publicación: 11/04/2025; Unabridged; Copyright Year: — Copyright Statment: —

