¡Acompáñanos a viajar por el mundo de los libros!
Añadir este libro a la estantería
Grey
Escribe un nuevo comentario Default profile 50px
Grey
Suscríbete para leer el libro completo o lee las primeras páginas gratis.
All characters reduced
திசைமாறி பாயும் நதி - cover

திசைமாறி பாயும் நதி

கிரிஸ் ப்ரெண்டிஸ்

Editorial: Pocket Books

  • 0
  • 0
  • 0

Sinopsis

சுஜி சந்தோஷ குரலில் ‘அம்மா... அம்மா...’’ என்று கூப்பிட்டபடி வீட்டினுள் வந்தாள்.‘‘என்னம்மா... என்ன விஷயம்’’சாரதா எதிர்கொண்டு வர, ‘‘அம்மா, நான் எழுதின கவிதை ‘தீப்பொறி’ இதழில் வெளிவந்திருக்கு. இங்கே பாருங்களேன்.’’புத்தகத்தை அவளிடம் நீட்ட.‘‘என்ன சுஜி, உன் கவிதை வந்திருக்கா, எங்கே கொடுபார்ப்போம்’’ நந்தினி அங்கே வர,“இருங்க அண்ணி, அம்மா முதலில் படிக்கட்டும்’’“நந்தினி, இந்தாம்மா... நீயேபடி... எல்லோரும் கேட்கலாம் கெளதமும் வந்தாச்சு’’ சாரதா சொல்ல,“அம்மா நீங்க தான் படிக்கணும்... உங்களுக்கு எழுத, படிக்க சொல்லி கொடுத்திருக்கேன். இப்பதான் நல்லா படிக்கிறீங்க. எழுதறீங்க, சங்கோஜபடாம படிங்கம்மா.”சுஜி, அம்மாவின் அருகில் வந்து அவள் தோள்களை பற்றிக் கொண்டாள்.சுஜியின் கவிதையை எழுத்துகூட்டி மெல்ல படிக்க ஆரம்பித்தாள் சாரதா. பரந்த ஆகாயம், படபடக்கும் பறவைகள்.சில்லென்ற காற்று, சிறகடிக்கும் உணர்வுகள்,மனதில் பூ மழையாய் நினைவுகள் அனைத்தையும் இழந்து விட்டேன் என்றுதுக்கப்பட்ட நேரத்தில் கடவுள் அனுப்பிய தேவதையாய் என்னருகில் நீ, என் சோகங்களை உன் தோள்களில் சுமந்து உன் இதமான ஸ்பரிசத்தில்மயிலறகு வருடலாய்,என் மனதில் சாமரம் வீசியஉன்னை என் உதடுகள்‘‘அம்மா’’ என்றழைத்தாலும்என் மனம் தெய்வமே என்று தான் அழைக்கின்றதுபடித்தவள் கண்கலங்க சுஜியை கட்டிக்கொள்கிறாள்.‘‘உன் கவிதை ரொம்ப நல்லாருக்கு சுஜி. நம்ப அம்மாவை நினைச்சுதான் இந்த கவிதை எழுதியிருக்கேன்னு தெரியுது”கௌதம் மனம் நெகிழ்ந்து சொல்ல,நந்தினி அத்தையின் அருகில் வருகிறாள்.‘‘அத்தை, என்ன இது, கண்ணை துடைங்க, உங்க மகள் எழுதின கவிதையை, உங்க வாயால படிச்சு கேட்டது, மனசுக்கு சந்தோஷமா இருக்கு. உங்க அன்பும், பாசமும் கடைசிவரை இந்த குடும்பத்தை சந்தோஷமா வழிநடத்தும்.”‘சுஜிம்மா, இதை போல நீ எல்லா விஷயத்திலும் வெற்றி பெற்று, வாழ்க்கையில் உயர்ந்த இடத்துக்கு வரணும் இந்த அம்மாவோட ஆசிர்வாதம் என்னைக்கும் உனக்கு இருக்கு’’‘‘அம்மா, வெறும் ஆசிர்வாதத்தோடு முடிச்சுடாதீங்க. கவிதை வெளியானதற்கு, உங்க கையால சூடா கேசரி செய்து எடுத்துட்டு வாங்க... எல்லோரும் சாப்பிடலாம்.’’“உன் கவிதை வந்ததுக்கு அம்மாவை வேலை வாங்கறே பாத்தியா, அத்தை இருக்கட்டும். நான் போயி செஞ்சு எடுத்துட்டு வரேன்.’’‘‘நோ அண்ணி... நீங்க செஞ்சா அது கேசரியாக இருக்காது. அதுக்கு வேற ஏதாவது பெயர் வைக்கணும் ப்ளீஸ் அண்ணி, அம்மாவே செய்யட்டும்சுஜி, கண்களில் குறும்பு மின்ன சொல்ல, நந்தினி அவளை செல்லமாக அடிக்க, அதை பார்த்து ரசித்தபடி எழுந்து அடுப்படி நோக்கி சென்றாள் சாரதா.சாப்பிட்டு மேஜையின் முன் அமர்ந்திருந்தார் சிவராமன். வகை, வகையாக பழங்கள் வெட்கப்பட்டு தட்டுகளில் வைக்கப்பட்டிருக்க, ஒரு கிண்ணத்தில் ஓட்ஸ், பால் ஊற்றி வைக்கப்பட்டிருந்தது. சூடா காபி டம்ளருடன் வந்த சமையல் ஆள் அதையும் டேபிளின் மீது வைத்தான்
Disponible desde: 12/02/2024.
Longitud de impresión: 84 páginas.

Otros libros que te pueden interesar

  • உடன்பிறப்பு - Udanpirappu-Sirukathai - cover

    உடன்பிறப்பு -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    உடன்பிறப்பு
    Ver libro
  • நெஞ்சம் உன்னைக் கெஞ்சும் - Nenjam Unnai Kenjum - cover

    நெஞ்சம் உன்னைக் கெஞ்சும் -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    கண்களில் கண்ணீர் வழிந்தோடியது. "எனக்கு... என்னை உங்ககிட்ட இருந்து காப்பாத்திக்க வேற வழி தெரியலை... என்னை மன்னிச்சிடுங்க...” என்றாள் மீரா. “பின்ன ஏன் இந்தக் கண்ணீர்?” விக்ரம் குரல் சந்தேகமாக வெளி வந்தது. “அது... தெரியலை! நீங்க... உங்க கையில ரத்தத்தைப் பாத்ததும்.... சாரி, நான் திரும்பவும் சொல்றேன், உங்களை நான் காயப்படுத்த நினைக்கலை... ஆனா, நீங்க என்கிட்டே நடந்துகிட்ட முறை ரொம்ப தப்பு... ஒரு பொண்ணோட அனுமதி இல்லாம அவளை அடைய நினைக்கிறது, தப்பு. அது அவளோட கணவனாவே இருந்தாலும் சரி....” என்றாள் தலை குனிந்தபடி. 
     விக்ரம் மெதுவாக மூச்சை உள்ளே இழுத்து, காயம் இல்லாத தன் இடக்கையை வைத்து மீராவின் நாடி பிடித்து உயர்த்தி தன்னைப் பார்க்கச் செய்தவன், "அப்படின்னா நீ ஏன் இன்னும் இங்கேயே இருக்க? போயிடு... போ மீரா, என்கிட்டே இருந்து தப்பிச்சு போயிடு... திரும்ப என் கண் முன்னாடி வராத. 
     இந்த மாதிரி ஒரு சந்தர்ப்பத்தை நீ பயன் படுத்திக்கலேன்னா... உன்னால எப்பவுமே என்கிட்டே இருந்து தப்பிக்க முடியாது... இப்போ நான் சொன்ன இந்த வார்த்தை... இதை இந்த ஒரு முறைக்கு மேல என் கிட்ட இருந்து நீ எதிர்பாக்க முடியாது. போ... போயிடு” என்றான் குரலில் சற்றே கடுமை கூட்டி.... 
     மீராவின் முகம் மெல்ல புன்னகையில் விகசித்தது. “நிஜம்மாவா நான் போகலாமா? திரும்ப என்னை தொந்தரவு செய்ய மாட்டீங்களே?” என்றாள் நம்ப முடியாத பாவனையில். “ம்… ஹ்ம்ம்..... கண்டிப்பா... மாட்டேன்” என்றான் விக்ரமாதித்யன்.
    Ver libro
  • Meendum Jeeno - cover

    Meendum Jeeno

    Sujatha

    • 0
    • 0
    • 0
    முற்றிலும் விஞ்ஞானமயமாக்கப்பட்ட வேறொரு உலகம், அந்த உலகத்தை ஆளும் பொம்மை ராணி நிலா. அவளைப் பின்னாலிருந்து ஆட்டுவிக்கும் ரவி, மனோ இருவர் கையில் ஒட்டுமொத்த அதிகாரமும் இருக்க, இயந்திர நாயான ஜீனோ, நிலாவுக்கு உதவ தன் ஒட்டு மொத்தத் தந்திரங்களையும் மூளையையும் பிரயோகிக்கிறது. ஜீனோவுக்கும் எதிரிகளுக்கும் இடையில் நடக்கும் போரின் முடிவு என்ன என்பதுதான் இந்த நாவல்.
    Ver libro
  • Kaalachakram - cover

    Kaalachakram

    Kalachakram Narasimha

    • 0
    • 0
    • 0
    "காஷ்மீரம் சிவனால் உண்டாக்கப்பட்டது. பார்வதி தனது தோழிகளுடன் விளையாடுவதற்காக ஒரு இடம் கேட்க, சிவானந்தர் தனது கேசத்திலிருந்து ஓர் முடி யை எடுத்து போட அது காஷ்மீரம் என்கிற அழகிய நந்தவனமாக உருவாகியது என்று புராணங்கள் கூறுகின்றன. கேசத்திலிருந்து வந்ததால், கேஷ மீறம். பார்வதி இதன் அழகில் மெய்யாக்கி இங்கேயே குஜ் ஜேஸ்வரியாக ஸ்ரீசக்கரம் மீது நின்று கோவில் கொள்கிறாள். தெற்கே குடந்தையில் கொம்பை காளியின் உக்கிரத்தை அடக்க, ஆதி சங்கரர் ஸ்ரீ சக்கரத்தை எடுத்துச் சென்றுவிட, காஷ்மீரம் சிறிது சிறிதாக நாசம் அடைகிறது. காஷ்மீரத்து பண்டிதர்கள் அகதிகளாக விரட்டப்பட்ட தங்கள் நாட்டின் இழிநிலையை கண்டு மனம் வருந்திய ஷ்ரத்தா என்கிற பெண், ஒரு வேளை மீண்டும் ஸ்ரீ சக்கரத்தை குஜிஜேஸ்வரி ஆலயத்தில் வைத்தால், காஷ்மீரத்துக்கு விடிவு பிறக்குமோ என்று நினைத்து, ஸ்ரீசக்கரத்தை தேடி தெற்கே வருகிறாள். கும்பையை சேர்ந்த அந்தணர் குடும்பத்தை சேர்ந்த ஒரு வாலிபனை மணந்து, அவன் உதவியோடு ஸ்ரீசக்கரத்தை தேட, பல மர்ம நிகழ்வுகளை சந்திக்கிறாள். அந்த ஸ்ரீசக்கரம் எங்கு இருக்கிறது என்று தேடியவள் அதனை கண்டுபிடித்து எடுக்க முயலும்போது பல சக்திகள் அவளுக்கு எதிராக செயல்பட, எல்லாவற்றையும் முறியடித்து அவள் ஸ்ரீசக்கரத்தை எடுக்க முயலும்போது, ஒரு பெரிய பிரச்சனை ஏற்படுகிறது. அதையும் சமாளிகையில் ஒரு பெரிய அரசியல் குடும்பத்தின் சூழ்ச்சிக்கு பலியாகிறாள். தன்னை பலிகடா ஆக்கிய அந்த குடும்பத்தையும் பழி வாங்க நினைக்கிறாள். ஸ்ரீசக்கரத்தையும் மீண்டும் காஷ்மீரத்திற்கு கொண்டு போக ஷ்ரதா முயலுகிறாள். அவளது எண்ணங்கள் ஈடேறியாதா என்பதுதான் கதை. காலச்சக்கரம் நரசிம்மாவின் முதல் நாவல்."
    Ver libro
  • முற்றும் முதல் நீ எனக்கு - Mutrum Muthal Nee Enakku - cover

    முற்றும் முதல் நீ எனக்கு -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    வாழ்க்கையில் யாருடைய துணையும் இன்றி தன் லட்சியங்களை அடையத் துடிக்கும் நம் நாயகன் கதிர்முகிலனுக்கு தன் மனம் கவர்ந்த பெண் மயூரியால் தடைபடும் தன் இலட்சியத்தை, ஒருவர் மேல் ஒருவர் கொண்டுள்ள அதீத காதலால் எவ்வாறு முறியடித்தனர் என்பதை அறிய என்னோடு பயணியுங்கள் 'முற்றும் முதல் நீ எனக்கு'   
    Ver libro
  • மகரந்தம் தாங்கும் மலரவள் - Magarantham Thangum Malaraval (Tamil Edition) - cover

    மகரந்தம் தாங்கும் மலரவள் -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    தந்தையின் உழைப்பில் வாழ விரும்பாமல் தன் வாழ்க்கையின் ஒவ்வொரு முக்கியமான கால கட்டத்திலும், தன்னுடைய முடிவையே பிரதானமாகக் கொண்டு அதில் வெற்றியும் பெற்றிருப்பவன் நளன். தனக்கு எது வேண்டும் என்று முடிவெடுக்கத் தெரியாத பேதையவள் நேத்ரா. 
    காலத்தின் போக்கில் இணைந்த இவர்களது காதல் மூன்றாம் நபரின் தலையீட்டால் என்னவானது? தெரிந்து கொள்ளப் படியுங்கள் மகரந்தம் தாங்கும் மலரவள்!   
     
    Ver libro