Unisciti a noi in un viaggio nel mondo dei libri!
Aggiungi questo libro allo scaffale
Grey
Scrivi un nuovo commento Default profile 50px
Grey
Iscriviti per leggere l'intero libro o leggi le prime pagine gratuitamente!
All characters reduced
திசை மாறும் தென்றல் - cover

திசை மாறும் தென்றல்

கிரிஸ் ப்ரெண்டிஸ்

Casa editrice: Pocket Books

  • 0
  • 0
  • 0

Sinossi

வாலிபம் மாறும் வயதாக கூடும் மாறாது அன்பு மறையாததுஅழகான மனைவி, அன்பான துணைவி அமைந்தாலே பேரின்பமே... எப்.எம்.மை ஆஃப் செய்கிறாள் ப்ரியா.“கற்பனை உலகிலேயே மிதக்கிறவர் ஆச்சே. வீட்டிலே பொண் டாட்டி ஒருத்தி இருக்கா... அவளுக்கும் உணர்ச்சிகள் இருக்கு எதுவும் தெரியாது. ஆபிஸ், வீடு, ரேடியோ, டி.வி. இது மட்டும்தான் உங்க உலகம்... அப்படிதானே...”கண்மூடி படுத்திருந்தவன், மெல்ல இமைகளை திறக்கிறான். எதிரில் கோபமாக ப்ரியா.இவளால் பரிவாக, அன்பாக, சாந்தமாக பேச தெரியாதா... திருமணமாகி ஒரு வருடம் ஆகியும்... இவளை புரிந்து கொள்ளவே முடியவில்லையே.“இப்ப உனக்கு என்ன வேணும். ஆபிஸ் விட்டு வந்து நீ கொடுத்த டீயை குடிச்சேன். நிம்மதியா பத்து நிமிஷம் ரிலாக்ஸா இருப் போம்னு பெட்ரூம் வந்தேன். எதுக்கு இப்படி கோபப்படறே?”“அடடா... உங்களைப் பத்தி தெரியாதா? கனவுலகில் மிதக்கிற ஆளு. கோபியர்களுக்கிடையே கண்ணன் மாதிரி உங்களை சுத்தி பெண்கள் இருக்க, ரொம்ப ஜாலியாக ஆபிஸில் பொழுது போக் கிட்டு... இங்கே வந்தபிறகும் அந்த நினைப்பிலேயே இருப்பீங்க.”“நீ பேசறது சரியில்லை பிரியா. புரிஞ்சுதான் பேசறியா...”“ஏன் நான் பேசறது உண்மையில்லைன்னு சொல்லப் போறீங்களா. அதான் கண்கூடாக பார்த்தேனே. போன மாதம் உங்க ப்ரெண்டு கல்யாணத்திற்கு போனோமே. உங்க ஆபிஸ். ஸ்டாப்ஸ் வந்திருந்தாங்க. வந்திருந்த லேடீஸ் எல்லாம் ஜீவா, ஜீவான்னு இளிச்சுக்கிட்டு பேசினதை பார்த்தேன். சை... கல்யாணமான பெண்கள் இப்படியா விவஸ்தையில்லாம பழகுவாங்க.கோபம் மூளையை தாக்க... இவள் இப்படிதான்... என்ன சொல்லியும் சமாதானம் ஆக மாட்டாள். வாயை மூடிக் கொண்டிருந்தால்தான் பிரச்சினை ஓயும். கோபத்தை கட்டுபடுத்து கிறான் ஜீவா.வெளியேறியவள், அடுத்த பத்தாவது நிமிடம் கையில் காபியோடு வருகிறாள்.“இந்தாங்க காபி...”“அப்படி வச்சுட்டு போ...”“கோபமா?”பதில் வராமல் இருக்க, அவனருகில் நெருங்கி வருகிறாள்.“என் ஜீவா எனக்கு மட்டும்தான் சொந்தம். நீங்க எவ்வளவு அழகு தெரியுமா... இப்படி ஆணழகனாக இருக்கிற உங்களை யாரும் மயக்கிடுவாங்களோன்னு பயம் அவ்வளவுதான்...”அதற்கும் அவனிடம் பதிலில்லை.“ஸாரி... ஜீவா...”அவன் கன்னத்தை தொட்டு முத்தமிட்டவள்...“அதான் ஸாரி சொல்லிட்டேனே... அப்புறம் என்ன?”“நீ இப்படி பேசறது எனக்கு வருத்தமாக இருக்கு ப்ரியா. நீ என் மனைவி. எனக்கு உரிமையானவள் நீதான். அவங்ககிட்டே நட்பு முறையோடு பழகறேன் அவ்வளவுதான். இதை எத்தனையோ முறை உனக்கு புரிய வச்சுட்டேன். நீதான் திரும்ப திரும்ப பழைய இடத்துக்கே வந்து நிற்கிறே. சரி... நீ காபி குடிச்சியா?”“ம்ஹூம்...”“சரி எடு... ஆளுக்கு பாதி பாதி சரியா...”மனைவியை பார்த்து புன்னகைக்கிறான் ஜீவா.‘‘கல்யாண வாழ்க்கைங்கிறது கலைச்சு போடற சீட்டு கட்டில்லை. ஒருத்தருக்கொருத்தர் விட்டுக்கொடுத்து வாழ வேண்டிய வாழ்க்கை. அக்னி சாட்சியாக காலமெல்லாம் ஒருத்தருக் கொருத்தர் துணை வருவோம்னுகைபிடிச்சுட்டு, இப்ப வாழ பிடிக்கலைன்னு வந்து நிற்கிறீங்க... இரண்டு பேருமே விவாகரத்து வேணும்னு முடிவு பண்ணிட்டிங்களா?” லாயர் சிவபிரகாசத்தை கண்ணீருடன் பார்க்கிறார் அந்த பெண்.“ஐயா... இது என் விருப்பமில்லை. அவருக்கு என்னோட வாழப் பிடிக்கலை. எவ்வளவோ அனுசரிச்சு போயிட்டேன். அவர் கேட்கிற விவாகரத்தை கொடுக்க ஏற்பாடு பண்ணுங்கய்யா.” அருகில் உட்கார்ந்திருக்கும் மேகலாவை பார்த்தவர்…“இரண்டு பேர் கிட்டேயும் விபரம் கேட்டு, கேஸ் ஃபைல் பண்ணிடும்மா. இனி பேசி பிரயோஜனமில்லை.”எழுந்தவளிடம்...“மேகலா... நாளை அந்த ஆத்மநாதன் கேஸ் ஹியரிங் இருக்கு. நோட்ஸ் ரெடி பண்ணிடு.”“ரெடி பண்ணிட்டேன் சார்...”“குட்...”“சார் நான் கிளம்பறேன்.”“உட்கார் மேகலா. காலையிலிருந்து பிஸி. உன்கிட்டே கேஸ் விஷயம் தவிர; எதையுமே பேச முடியலை.”“ரகு என்ன சொல்றான். உன் மாமனார், மாமியார் மாறியிருக் காங்களா... இல்லை பழையபடி...”“எங்களுக்குள் பிரச்சினை ஏற்பட காரணமே அவங்கதான் சார்... அவங்க பேச்சை கேட்டு இவர் ரொம்பவே மாறி போயிட்டாரு. தினம் தினம் சித்ரவதை அனுபவிக்கிறேன். என் மகனுக்காக எல்லாத்தையும் பொறுத்து போறேன். மனசு வெறுக்கும்போது இரண்டு நாள் ஆறுதலாக அப்பா வீட்டில் போய் இருந்துட்டு வரேன். இவர் வா மேகலான்னு கூப்பிட்டதும்... பழைய செல்லாம் மறந்து ஓடறேன்... திரும்ப பழைய நிலை... இதுதான் என் வாழ்க்கைன்னு ஆயிடுச்சு சார்...”“கஷ்டமாயிருக்கு மேகலா. எவ்வளவு நல்ல பொண்ணு நீ. காதலிச்சு, கைபிடிச்சவனுக்கு உன் அருமை தெரியாம போச்சே. அப்பாவிடம் சொல்லி, நல்ல வார்த்தை சொல்ல சொல்லு...” மெளனமாக இருக்கிறாள் மேகலா
Disponibile da: 12/02/2024.
Lunghezza di stampa: 60 pagine.

Altri libri che potrebbero interessarti

  • உடன்பிறப்பு - Udanpirappu-Sirukathai - cover

    உடன்பிறப்பு -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    உடன்பிறப்பு
    Mostra libro
  • Kaadhugal - cover

    Kaadhugal

    M V Venkatram

    • 0
    • 0
    • 0
    இந்த நாவலின் கதாநாயகன் மகாலிங்கத்தின் மத்திய வயதில் அவன் உள்ளிருந்தும் வெட்ட வெளியிலிருந்தும் பல ஓசைகளை, குரல்களை அவன் காதுகளுக்குள் கேட்க நேர்கிறது. கெட்ட வார்த்தைகள் கூட அவருக்குள் கேட்டன. அவர் உடல் ஒரு குருக்ஷேத்ரமாக வடிவமைக்கப்படுகிறது. இரண்டு அணியினர் போரிடுகிறார்கள். அவர் தெய்வத்தைச் சார்ந்து நிற்கிறார். நன்மைக்கும் தீமைக்குமான போரில், தெய்வம்கூடச் சுலபமாக ஜெயிக்க முடிவதில்லை. ஆனாலும் தன் குரு, அந்தக் கெட்டவைகளை வெற்றி கொள்வார் என்று நம்புகிறார் மகாலிங்கம். அந்த நம்பிக்கைதான் நாவலின் பக்கங்கள். இதை எம்.வி.வி. தன் வாழ்க்கை வரலாற்று நாவல் என்கிறார். விமர்சகர்கள் சிலர் இது மேஜிக்கல் ரியலிச நாவல் என்கிறார்கள். மனநல மருத்துவக் காரர்கள் இது ஒரு ஆடிட்ரி ஹாலுயூசினேஷன் சார்ந்த நாவல் என்கிறார்கள். தமிழ் நாவல் சரிதத்தில இது ஒரு முக்கியமான, வாசிக்கப் பட வேண்டிய நாவல் என்பது ஒரு நிச்சயமான உண்மை.
    Mostra libro
  • நாணலே நங்கையானால் - Naanale Nangaiyaanaal? - cover

    நாணலே நங்கையானால் - Naanale...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுள் ஒன்றை வைத்து, அழகான காதல் கதையின் மூலம் வாசிப்பவர்களுக்கு சுவாரஸ்யம் ஊட்டும் வகையில், பலவித திடீர் திருப்பங்களுடனும் சுவாரஸ்யங்களுடனும் கதையை எளிமையாக விளக்க முயன்றிருக்கிறேன். 
    Mostra libro
  • மகரந்தம் தாங்கும் மலரவள் - Magarantham Thangum Malaraval (Tamil Edition) - cover

    மகரந்தம் தாங்கும் மலரவள் -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    தந்தையின் உழைப்பில் வாழ விரும்பாமல் தன் வாழ்க்கையின் ஒவ்வொரு முக்கியமான கால கட்டத்திலும், தன்னுடைய முடிவையே பிரதானமாகக் கொண்டு அதில் வெற்றியும் பெற்றிருப்பவன் நளன். தனக்கு எது வேண்டும் என்று முடிவெடுக்கத் தெரியாத பேதையவள் நேத்ரா. 
    காலத்தின் போக்கில் இணைந்த இவர்களது காதல் மூன்றாம் நபரின் தலையீட்டால் என்னவானது? தெரிந்து கொள்ளப் படியுங்கள் மகரந்தம் தாங்கும் மலரவள்!   
     
    Mostra libro
  • வாழ்வின் முதல் காதலா! நீதானா - Vaalvin Muthal Kadhalaa Neethaanaa - cover

    வாழ்வின் முதல் காதலா! நீதானா -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    “வெற்றி, நேத்து கிளப்ல பேசீட்டு இருக்கும் போது உனக்கு பொண்ணு பாக்கனுன்னு தான் ஒரு பே...ச்சுக்கு சொன்னேன். உடனே நம்ம ராஜி இருக்காளே, அவ பொண்ணு கூட ஏதோ மாடலிங் பண்ணீட்டு இருக்கான்னு... 
    நீ கூட நம்ப கம்பெனி விளம்பரத்துக்கு நடிக்க ஒரு வாய்ப்பு கொடுத்தியே.. அவ பேர் கூட...என்னம்மோ...” என்று நெற்றியை தட்டி தெரியாதது போல் இழுத்தவரிடம், 
    செய்தித் தாளைப் புரட்டியபடியே, “மிதுல்லா...” என்று அலட்டாமல் கூறியவனிடம், 
    “ஆஹ்... மிதுல்லா, நல்ல பேர். பாத்தியா ரெண்டு மூணு தடவை பாத்த உனக்கே அவளோட பேர் ஞாபகம் இருக்கு. அவ்வளவு சுலபமா அவளை மறக்க முடியுமா? எவ்ளோ அழகு அந்த பொண்ணு... 
    ம்ம்... வெற்றி, அவளுக்கு உன்னை கல்யாணம் பண்ண கேட்டாபா ராஜி. அழகு, அறிவு, திறமை எல்லாம் இருக்கு அவகிட்ட. 
    நம்ம வீட்டுக்கு ஏத்த பொண்ணு டா அவ. அதுவும் உனக்கு ரொம்ப பொருத்தமா இருப்பா. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. நீ என்ன சொல்ற வெற்றி?” என்று மகனின் முகத்தை ஆர்வமாக பார்த்து வினவினார் கற்பகாம்பாள். 
    செய்தித் தாளை மூடி மேஜையில் வைத்தவன், கற்பகாம்பாள் புறம் திரும்பி, “ம்ம்.. நல்ல அழகான பொண்ணு தான். நல்ல திறமையா நடிச்சா. ரொம்ப அறிவா பேசுனா தான். 
    ஆனா, ரொம்ப அதிகமா பேசுவாளே... அதுவுமில்லாம அவ யாருமில்லாத அநாதை இல்லை. நீங்க சொல்றது எதையும் அப்படியே கேக்கவும் மாட்டா. உங்களை எதித்து கேள்வி கேப்பா... 
    அவ இஷ்டத்துக்கு உங்களால இருக்க விட முடியுமா? முக்கியமா... உங்களுக்குத் தான் வாய் பேசாத முடியாத ஊமை பொண்ணு தானே மருமகளா வர பிடிக்கும்....” என்றவன் எழுந்து அவன் அணிந்திருந்த வெண்ணிற பருத்தி உடை பாக்கெட்டில் கைகளை நுழைத்த படி வினவ, 
    “என்னடா குத்தி பேசுறியா?” என்று கற்பகாம்பாள் வெற்றியை முறைக்க, 
    “என்னடா குத்தி பேசுறியா?” என்று கற்பகாம்பாள் வெற்றியை முறைக்க, 
    “இல்லையே நேரா தான் கேக்குறேன்.” என்றவன் பதில் தெளிவாக வந்து விழுந்தது.
    Mostra libro
  • Maharadhan - மகாரதன் - cover

    Maharadhan - மகாரதன்

    Siraa

    • 0
    • 0
    • 0
    மகாரதன் வரலாற்று நாவல் என்றாலே ஏதாவது ஒரு மன்னனின் வீர சாகசங்களையோ அல்லது அவன் காலத்தில் நடந்த நிகழ்வுகளையோ முன்னிலைப்படுத்திப் படைப்பதே வழக்கம். ஆனால் அதிலிருந்து மாறுபட்டு, ஒரு போர் என்றால் அதற்கு முன் மன்னர்கள் என்னவெல்லாம் செய்திருப்பார்கள், எப்பேர்ப்பட்ட நடவடிக்கைகளை எல்லாம் மேற்கொண்டிருப்பார்கள் என்று இந்த நாவல் நமக்கு அறிமுகம் செய்கிறது. பல்லவ மன்னர்களில் ஆகச் சிறந்த மன்னனாகவும் அதி சிறந்த வீரனாகவும் விளங்கிய இரண்டாம் நந்திவர்மன் காலத்தைக் கதைக்களமாகக் கொண்டு, சில கல்வெட்டுத் தரவுகளையும் வரலாற்றுக் குறிப்புகளையும் மையமாக வைத்து, அந்தக் காலத்து நிகழ்வுகளை நம் கண் முன்னால் கொண்டு வருகிறது இந்தப் புதினம். கடந்த கால நிகழ்வுகளை ஆராய்ந்து, கிடைக்கப் பெற்ற ஆவணங்களைச் சரிபார்த்து, அதில் கற்பனையைப் புகுத்தி நாவலாகப் படைப்பது மிகப்பெரிய சவால். அதனைத் திறம்படச் செய்திருக்கிறார் எழுத்தாளர் சிரா. எழுத்தாளர் சிரா எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் மகாரதன் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்  
    an Aurality Production
    Mostra libro