Junte-se a nós em uma viagem ao mundo dos livros!
Adicionar este livro à prateleira
Grey
Deixe um novo comentário Default profile 50px
Grey
Assine para ler o livro completo ou leia as primeiras páginas de graça!
All characters reduced
தென்றல் வந்து என்னை தொடும் - cover
LER

தென்றல் வந்து என்னை தொடும்

கிரிஸ் ப்ரெண்டிஸ்

Editora: Pocket Books

  • 0
  • 0
  • 0

Sinopse

குளித்துவிட்டு தலையை காய வைத்தபடி வெளியே வந்த வித்யா, படிகளில் இறங்கி வரும் இளைஞனை பார்த்தாள்.சுருண்ட முடி, அடர்த்தியான மீசை, மாநிறம். பார்ப்பதற்கு கண்ணியமான குணத்துடன் இருந்தான். வாசலில் நிறுத்தியிருந்த மாருதி காரில் ஏறி புறப்பட்டு செல்லும் அவனை பார்த்தபடி நின்றாள் வித்யா.“சவுந்தர்யாம்மா, உள்ளேதான் இருக்கீங்களா”‘‘வாங்க, உட்காருங்க”“இருக்கட்டும். சீனி இருந்தா ஒரு டம்ளர் கொடுங்க. என் புள்ளை செல்வத்துக்கிட்டே நேத்து சொல்லி அனுப்பினேன். மறந்துட்டான். இன்னைக்கு வரும்போது வாங்கிட்டு வந்துடுவான். தந்திடறேன்.’’“இருக்கட்டுமா. இருங்க கொண்டு வரேன்”உள்ளே செல்ல,“பேச்சு சப்தம் கேட்குதே. காலேஜ் ஹாஸ்டலில் இருந்த உங்க மகள் படிப்பு முடிச்சு வந்துட்டா போலிருக்”“ஆமாம். காலையில்தான் வந்தா... வித்யா..... வித்யா இங்கே வாம்மா. வீட்டுக்காரம்மா வந்திருக்காங்க.”உள் அறையிலிருந்து வெளிப்பட்ட வித்யாவை மேலும், கீழும் பார்த்தாள்.ஆளை அசத்தும் அழகு. செளந்தர்யாவுக்கு நேர்மாறாக சிவந்த நிறம். நீண்ட விழிகளும், எடுப்பான நாசியுமாக பார்ப்பதற்கு லட்சணமாக இருந்தாள்.“வாங்கம்மா.”தன்னை நோக்கி வரும் வித்யாவை, ஒருவித பொறாமையுடன் பார்த்தாள். “வாம்மா, நல்ல லட்சணமா சினிமா நடிகை மாதிரி இருக்கே. படிப்பை முடிச்சிட்டியோ”என்ன இவள் வயசுக்கு தகுந்த மாதிரி பேசாமல், முதன் முதல் அறிமுகமாகுபவரிடம், எப்படி பேசுவது என்ற நாகரிகம் கூட தெரியாமல், முதல் பார்வையிலேயே அவளை பிடிக்காமல் போக,“ம்... முடிச்சிட்டேன்மா “அதற்குள் செளந்தர்யா, சீனி டம்ளருடன் வர, “என்ன சவுந்தரியாம்மா. உங்க மகள் அளந்துதான் பேசுவா போலிருக்கு... கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்றா.”“அது ஒண்ணுமில்லை. உங்ககிட்டே இன்னும் பழகலை. அதான் தயங்கறா”“இதிலென்ன தயக்கம். வயசுப்பையனா எதிரில் உட்கார்ந்திருக்கான் தயங்கறதுக்கு. இந்த காலத்தில் பொம்பளை புள்ளைங்க, இப்படித்தான்... பாதி நடிப்பு, ஆம்பளைங்களை பார்த்தால் கலகலன்னு பேசறாங்க. இந்த பூனையும் பால் குடிக்குமாங்கிற பாவனை.”சொன்னவள், வித்யாவின் முகம் சிவப்பதைப் பார்த்து,“நீ ஒண்ணும் தப்பா எடுத்துக்காதே. உன்னை சொல்லலை. சாதாரணமாக, எல்லா பெண்களையும் பற்றி பொதுவான அபிப்ராயம் சொன்னேன். வரட்டுமா.இன்னைக்கு காலையிலேயே, என் மூத்த தாரத்து மகன் விக்ரம் வந்து என் பாதி உசிரை எடுத்துட்டு போயிட்டான். அவனோட கத்தி தொண்டையே வறண்டு போச்சு. போய் சூடா காபி கலந்து குடிக்கணும்”“என்னம்மா இது, இந்தம்மா மோசமானவாங்களாக இருப்பாங்க போலிருக்கே. குத்தலான பேச்சு, பொறாமை வீசும் பார்வை. ஆளே சரியில்லமா”“நமக்கென்ன வந்தது. அவங்க எப்படியோ இருந்துட்டு போகட்டும். வாடகைக்கு இருக்கிறோம். ஒண்ணாந்தேதி பணத்தை கொடுத்துட்டு நம்ப வேலையை பார்ப்போம்”“இப்படி உங்களுக்குள்ளே பண்டமாற்று அடிக்கடி நடக்கும் போலிருக்கே.”“நான் எதைக் கேட்டும் அவங்க வாசல்படி ஏறமாட்டேன். அந்த பங்கஜம் வாரம் ஒரு தடவையாவது எதையாவது கேட்டு வந்துடுவாங்க. அரிசி, சீனி, பருப்புன்னு என்ன செய்யறது. கொடுக்க வேண்டியதா இருக்கு.”“திரும்ப வருமா”“எப்பவாவது மனசு வந்தா கொண்டு வந்து கொடுப்பாங்க. வாடகையோடு இதையும் சேர்த்துக்க வேண்டியதுதான்”“சரிம்மா, நான் பேங்க் வரைக்கும் போய்ட்டு வரேன்.”“ஆமாம் வித்யா. நானே சொல்லணும்னு இருந்தேன். உன் பேரில் போட்ட பணம் அஞ்சு லட்சம், வட்டியெல்லாம் என்ன வருதுன்னு பாரு. அஞ்சு வருஷத்துக்கு போட்டது முடிஞ்சிருக்கும். எல்லாம் கணக்கு பண்ணிட்டு வா... அதை எடுத்து உனக்கு கொஞ்சம் நகை வாங்கலாம்னு பார்க்கிறேன். இன்னும் இரண்டு வருஷத்தில் உன் கல்யாணத்தை முடிக்கணும். உனக்கானவன் எங்கே பிறந்திருக்கானோ. வலைவீசி தேடணும்.”“ஆரம்பிச்சுட்டியா. நான் கிளம்பறேன்”“இரு வித்யா. நீ குளிக்கும்போது ஊட்டி ரோஸ் வந்தது. வாங்கி வச்சேன். உனக்கு பிடிக்குமே. எடுத்திட்டு வரேன் வச்சுட்டு போ”ரத்த சிவப்பில், மலர்ந்தும், மலராமல் கூம்பு வடிவில், பெரிதாக இதழ்களை விரித்திருக்கும், அந்த இரண்டு ரோஜாக்களையும், ஹேர்பின்னையும் எடுத்து வருகிறாள் சௌந்தர்யா.“காதோரத்தில் வச்சுக்க வித்யா”“இல்லேம்ம... முடியை தளரவிட்டு கிளிப் பண்ணியிருக்கேன். நடுவில் வச்சாதான் அழகு.” இரண்டையும் சேர்த்து வைத்து ஹேர்பின்னை செருகுகிறாள்.“அம்மா, நல்லாயிருக்கா”“நீ கட்டி இருக்கற ரோஸ் கலர் புடவைக்கும், சிவந்த நிற ரோஜாவுக்கும் ரொம்பவே அழகாயிருக்கு. போயிட்டு சீக்கிரம் வந்துடு வித்யா. உனக்கு பிடிச்ச வெங்காய சாம்பாரும், உருளைக்கிழங்கு வறுவலும் செய்து வைக்கிறேன்.”
Disponível desde: 12/02/2024.
Comprimento de impressão: 47 páginas.

Outros livros que poderiam interessá-lo

  • வாழ்வின் முதல் காதலா! நீதானா - Vaalvin Muthal Kadhalaa Neethaanaa - cover

    வாழ்வின் முதல் காதலா! நீதானா -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    “வெற்றி, நேத்து கிளப்ல பேசீட்டு இருக்கும் போது உனக்கு பொண்ணு பாக்கனுன்னு தான் ஒரு பே...ச்சுக்கு சொன்னேன். உடனே நம்ம ராஜி இருக்காளே, அவ பொண்ணு கூட ஏதோ மாடலிங் பண்ணீட்டு இருக்கான்னு... 
    நீ கூட நம்ப கம்பெனி விளம்பரத்துக்கு நடிக்க ஒரு வாய்ப்பு கொடுத்தியே.. அவ பேர் கூட...என்னம்மோ...” என்று நெற்றியை தட்டி தெரியாதது போல் இழுத்தவரிடம், 
    செய்தித் தாளைப் புரட்டியபடியே, “மிதுல்லா...” என்று அலட்டாமல் கூறியவனிடம், 
    “ஆஹ்... மிதுல்லா, நல்ல பேர். பாத்தியா ரெண்டு மூணு தடவை பாத்த உனக்கே அவளோட பேர் ஞாபகம் இருக்கு. அவ்வளவு சுலபமா அவளை மறக்க முடியுமா? எவ்ளோ அழகு அந்த பொண்ணு... 
    ம்ம்... வெற்றி, அவளுக்கு உன்னை கல்யாணம் பண்ண கேட்டாபா ராஜி. அழகு, அறிவு, திறமை எல்லாம் இருக்கு அவகிட்ட. 
    நம்ம வீட்டுக்கு ஏத்த பொண்ணு டா அவ. அதுவும் உனக்கு ரொம்ப பொருத்தமா இருப்பா. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. நீ என்ன சொல்ற வெற்றி?” என்று மகனின் முகத்தை ஆர்வமாக பார்த்து வினவினார் கற்பகாம்பாள். 
    செய்தித் தாளை மூடி மேஜையில் வைத்தவன், கற்பகாம்பாள் புறம் திரும்பி, “ம்ம்.. நல்ல அழகான பொண்ணு தான். நல்ல திறமையா நடிச்சா. ரொம்ப அறிவா பேசுனா தான். 
    ஆனா, ரொம்ப அதிகமா பேசுவாளே... அதுவுமில்லாம அவ யாருமில்லாத அநாதை இல்லை. நீங்க சொல்றது எதையும் அப்படியே கேக்கவும் மாட்டா. உங்களை எதித்து கேள்வி கேப்பா... 
    அவ இஷ்டத்துக்கு உங்களால இருக்க விட முடியுமா? முக்கியமா... உங்களுக்குத் தான் வாய் பேசாத முடியாத ஊமை பொண்ணு தானே மருமகளா வர பிடிக்கும்....” என்றவன் எழுந்து அவன் அணிந்திருந்த வெண்ணிற பருத்தி உடை பாக்கெட்டில் கைகளை நுழைத்த படி வினவ, 
    “என்னடா குத்தி பேசுறியா?” என்று கற்பகாம்பாள் வெற்றியை முறைக்க, 
    “என்னடா குத்தி பேசுறியா?” என்று கற்பகாம்பாள் வெற்றியை முறைக்க, 
    “இல்லையே நேரா தான் கேக்குறேன்.” என்றவன் பதில் தெளிவாக வந்து விழுந்தது.
    Ver livro
  • Idamum Valamum Alaivuru Sirusudar - இடமும் வலமும் அலைவுறு சிறுசுடர் - cover

    Idamum Valamum Alaivuru...

    B.R. Mahadevan

    • 0
    • 0
    • 0
    Auto fiction Novel: இடமும் வலமும் அலைவுறு சிறுசுடர் A proud Aurality tamil audio book production ebook by Swasam Publications. Download FREE Aurality app now on play store and or iphone ios store தீவிரமான கருத்துகளும் சுயமான சிந்தனையும் கொண்ட இளைஞன் தனது கனவுலகைத் தேடி மேற்கொள்ளும் அலைச்சலே இந்த நாவல். மதத் தத்துவங்கள் அவனைத் துரத்துகின்றன. அரசியல் கொள்கைகள் அவனைக் குழப்புகின்றன. மாயமான் வேட்டையில் நிதர்சனத்தைப் புரிந்துகொண்டு, இதுவே நம் பாதை என்று அவன் ஒரு முடிவுக்கு வரும்போது காத்திருக்கிறது இன்னொரு மாயமான். எல்லாவற்றையும் கேள்விகளால் எதிர்கொள்ளும் ஓர் இளைஞனின் பேரலைச்சலை ரத்தமும் சதையுமாக, கொஞ்சம் புனைவுடன் நிறைய உண்மைகளுடன் எழுதி இருக்கிறார் B.R.மகாதேவன். அரசியல் என்ற பெயரிலும், ஆன்மிகம் என்ற பெயரிலும், மதம் என்ற பெயரிலும் இந்தச் சமூகம் தனக்குக் கற்பிக்கும் அனைத்தையும் கேள்விகளால் அடித்து நொறுக்கி தன் அடுத்த பயணத்துக்குக் காத்திருக்கும் இந்த இளைஞன், நிச்சயம் உங்களை அசைத்துப் பார்ப்பான். எழுத்தாளர் B.R.மகாதேவன் எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்
    Ver livro
  • Choza Sooriyan - சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் - cover

    Choza Sooriyan - சோழன் தலைகொண்ட...

    Siraa

    • 0
    • 0
    • 0
    Description 
    சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் - Part 1 சோழ இளவரசனான உத்தம சீலியுடன் நடந்த யுத்தத்திற்குப் பின், பாண்டிய நாட்டைக் கைப்பற்றினான் வீரபாண்டியன். ஒரு போருக்குப் பின் ஒரு மன்னன் தன் நாட்டை மீட்டெடுப்பது அத்தனை சுலபமல்ல. அது எத்தனை கடினமானது என்பதை, கற்பனை கலந்து கல்வெட்டுத் தரவுகளுடன் எழுதி இருக்கிறார் சிரா. சோழனோ பாண்டியனோ, தோல்வியுற்ற மன்னனுக்கும் பெரிய நாடு இருக்கும். அவனைக் கடவுள் என்று கொண்டாடிய மனிதர்கள் இருப்பார்கள். ஒரு போரில் தோல்வியுற்றான் என்ற காரணத்துக்காக அந்த மன்னன் வீரம் இல்லாதவன் என்று அர்த்தமில்லை. ஒரு மாபெரும் அரசனைத் துணிவுடன் எதிர்த்து நிற்க இன்னொரு மாவீரனால்தான் முடியும். அப்படி சோழம் என்ற ஒரு பெரும் தேசத்தை எதிர்க்கத் துணிந்த ஓர் உன்னத வீரனைப் பற்றிய கதை இது. பல்வேறு ஆதாரங்களை மையமாக வைத்து எழுதப்பட்டிருக்கும் சுவராஸ்யமான வரலாற்று நாவல். எழுத்தாளர் சிரா எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம். A proud Aurality production
    Ver livro
  • உடன்பிறப்பு - Udanpirappu-Sirukathai - cover

    உடன்பிறப்பு -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    உடன்பிறப்பு
    Ver livro
  • நெஞ்சம் உன்னைக் கெஞ்சும் - Nenjam Unnai Kenjum - cover

    நெஞ்சம் உன்னைக் கெஞ்சும் -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    கண்களில் கண்ணீர் வழிந்தோடியது. "எனக்கு... என்னை உங்ககிட்ட இருந்து காப்பாத்திக்க வேற வழி தெரியலை... என்னை மன்னிச்சிடுங்க...” என்றாள் மீரா. “பின்ன ஏன் இந்தக் கண்ணீர்?” விக்ரம் குரல் சந்தேகமாக வெளி வந்தது. “அது... தெரியலை! நீங்க... உங்க கையில ரத்தத்தைப் பாத்ததும்.... சாரி, நான் திரும்பவும் சொல்றேன், உங்களை நான் காயப்படுத்த நினைக்கலை... ஆனா, நீங்க என்கிட்டே நடந்துகிட்ட முறை ரொம்ப தப்பு... ஒரு பொண்ணோட அனுமதி இல்லாம அவளை அடைய நினைக்கிறது, தப்பு. அது அவளோட கணவனாவே இருந்தாலும் சரி....” என்றாள் தலை குனிந்தபடி. 
     விக்ரம் மெதுவாக மூச்சை உள்ளே இழுத்து, காயம் இல்லாத தன் இடக்கையை வைத்து மீராவின் நாடி பிடித்து உயர்த்தி தன்னைப் பார்க்கச் செய்தவன், "அப்படின்னா நீ ஏன் இன்னும் இங்கேயே இருக்க? போயிடு... போ மீரா, என்கிட்டே இருந்து தப்பிச்சு போயிடு... திரும்ப என் கண் முன்னாடி வராத. 
     இந்த மாதிரி ஒரு சந்தர்ப்பத்தை நீ பயன் படுத்திக்கலேன்னா... உன்னால எப்பவுமே என்கிட்டே இருந்து தப்பிக்க முடியாது... இப்போ நான் சொன்ன இந்த வார்த்தை... இதை இந்த ஒரு முறைக்கு மேல என் கிட்ட இருந்து நீ எதிர்பாக்க முடியாது. போ... போயிடு” என்றான் குரலில் சற்றே கடுமை கூட்டி.... 
     மீராவின் முகம் மெல்ல புன்னகையில் விகசித்தது. “நிஜம்மாவா நான் போகலாமா? திரும்ப என்னை தொந்தரவு செய்ய மாட்டீங்களே?” என்றாள் நம்ப முடியாத பாவனையில். “ம்… ஹ்ம்ம்..... கண்டிப்பா... மாட்டேன்” என்றான் விக்ரமாதித்யன்.
    Ver livro
  • இளநெஞ்சே வா - Ilanenjee vaa (Romantic Thriller) - cover

    இளநெஞ்சே வா - Ilanenjee vaa...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    மன்னா பயணிகள் இருக்கையிலிருந்து குதித்து பாண்டியாவை நோக்கிச் சென்றான். "அவளை வெளிய கூட்டி வா...", என்று தாழ்வான குரலில் கூறினான். ஆனால் அதுவே கட்டளையாக இருந்தது..... 
    பாண்டியா ஒரு கணம் தயங்கி, ராதிகா அமர்ந்திருந்த வேனின் பின்புறத்தைப் பார்த்தான். 
    அவள் கைகள் கட்டப்பட்டிருந்தன, அவள் முகம் வெளிரிப்போய்... ஆனால் கண்கள் சண்டைக்கு நிற்ப்பவள் போல் முறைத்துக் கொண்டு இருந்தது. "நாம இங்க தான் இருக்கனுமா மன்னா? இந்த இடத்தை பாத்தா எனக்கு பயமா இருக்கு... வேற எங்காவது...?" என்றான். 
    மன்னா புன்னகைத்து, குளிர்ந்த காற்றுக்கு எதிராக தனது மேல் சட்டையை இறுக்கமாக இழுத்தபடி, சுற்றிலும் பார்த்தான். முகத்தில் இனம் புரியா புன்னகை அரும்பியது. 
    "அது தான் நமக்கு வேணும், பாண்டியா. இது தான் சரியான இடம்... இங்க தான் யாரும் வரமாட்டாங்க. அவள் கத்துனாலும் அலறினாலும்... யாரும் என்னன்னு கேட்க மாட்டாங்க.. now move" என்றான் அதற்க்கு மேல் பேசாதே என்பது போல்... 
    ராதிகா அமைதியாக இருக்க முயன்றாலும், மன்னா அவனது வார்த்தைகளில் சற்று நிதானமாக இருந்தாள். அவளுடைய இதயத் துடிப்பின் வேகம் கூடியது. ஆனால் அவள் அழவில்லை. அவள் உடைந்து அழுவதை தன் முன்னே இருக்கும் இந்த ஆடவர்களுக்குக் காண்பிக்க அவள் விரும்பவில்லை.... 
    பாண்டியா வேனின் கதவை எச்சரிக்கையுடன் திறந்தான். ராதிகாவின் கை மற்றும் கால் கட்டுக்களை அவிழ்த்து விட்டான். 
    அவனது குரல் முன்பை விட மென்மையாக இருந்தது. "இறங்கி வா..." என்றான். 
    மணிக்கட்டில் சிவந்து போயிருந்த தடத்தைப் மெலிதாக தேய்த்துவிட்டாள். வாயில் இருந்த கட்டு அவிழ்க்கப்பட அப்போது தான் நன்றாக மூச்சே விட முடிந்தது அவளாள்.
    Ver livro