¡Acompáñanos a viajar por el mundo de los libros!
Añadir este libro a la estantería
Grey
Escribe un nuevo comentario Default profile 50px
Grey
Suscríbete para leer el libro completo o lee las primeras páginas gratis.
All characters reduced
ஒளி தரும் உதயம் - cover

ஒளி தரும் உதயம்

கிரிஸ் ப்ரெண்டிஸ்

Editorial: Pocket Books

  • 0
  • 0
  • 0

Sinopsis

ரோஜா மாலைக்கு நடுவில் கம்பீரமாக புன்னகைத்த படி காட்சி தரும் கணவனை பார்க்கிறாள் சிவகாமி.உங்க உழைப்பிலும், முயற்சியில் உருவானது இந்தகுடும்பம். இன்னைக்கு ஸ்பின்னிங் மில், நாற்பது கடை வாடகைக்கு விட்டிருக்கும் பெரிய மால், இதோ இத்தனை பெரிய கடல் போன்ற வீடு எல்லாமுமே நீங்க சம்பாதித்து கொடுத்தது. நம்ப இரண்டு மகன்களும் இதை கட்டி காக்கிறாங்க. எந்த குறையுமில்லாமல் இரண்டு பேருக்கும் கல்யாணமும் பண்ணி வச்சுட்டு தான் நீங்க போனீங்க... இன்னைக்கு பேரன், பேத்தின்னு நம்ப வம்சம் தழைச்சுட்டு இருக்கு. இருந்தாலும் எனக்கு நிறைவு இல்லைங்க... மனசெல்லாம் பாரமாக இருக்கு. எல்லாம் இருந்தும் எதுவுமே இல்லாத மாதிரியான உணர்வு தான் இருக்குங்க. இதுக்கெல்லாம் காரணம் என்னன்னு உங்களுக்கே தெரியும்.நம்ப மூணாவது மகன் சுதாகர். இருபதைந்து வயதைதொட்டுட்டான். அவன் கிட்டே பெரிசா எந்த மாற்றமும் இல்லை. நீங்க இருக்கும் போதே எவ்வளவு டீரிட்மெண்ட்... மருந்து மாத்திரைகள். இது பிறவி குறைபாடு. மூளை வளர்ச்சி இயல்பாக இல்லை. இதனால் பெரிசா எந்த பாதிப்பும் வராது. வளர வளர புரிஞ்சுக்கிற தன்மை அதிகரிக்கும். பெரிசா முன்னேற்றம் கிடைக்கலைன்னாலும்... இயல்பான ஆண்மகனாக இருப்பான். பயப்படாதீங்கன்னு டாக்டர் சொன்னாரு. ஸ்பெஷல் ஸ்கூலில் படிக்க வச்சோம். கஷ்டப்பட்டு பத்தாவது வரை படிச்சான். உடல் வளர்ச்சியில் எந்த குறையும் இல்லைங்க... உங்க சாயலில், கம்பீரமாக ஒரு ஆண்மகனாக, இளமைக்கே உரிய பொலிவோடு இருக்கான். அறிவு வளர்ச்சி, சுயமாக சிந்திக்கும் திறன், எதுவும் இல்லைங்க. மத்தவங்க சொல்றதை கேட்கிறான். அவ்வளவு தான்.எவ்வளவு நாள் நான் அவனுக்கு துணை வர முடியும். எனக்கு பிறகு அவன் வாழ்க்கை... நினைக்கவே பயமா இருக்குங்க...சிவகாமியின் கண்களிலிருந்து கண்ணீர் வடிகிறது.“அம்மா... அம்மா...”சமையல்காரி வேதா கூப்பிடுவது கேட்க,முந்தானையால் கண்ணீரை துடைத்தவளாய், அறையை விட்டு வெளியே வருகிறாள்.“அம்மா... நம்ப சுதாகர் தம்பி இன்னும் சாப்பிட வரலைம்மா... பசி தாங்க மாட்டாரு. எட்டு மணிக்கெல்லாம் சாப்பிட வந்துடுவாரு... பெரியவங்க இரண்டு பேரும் சாப்பிட்டு கிளம்பிட்டாங்க... அதான் உங்க கிட்டே சொல்லலாம்னு கூப்பிட்டேன்.”மாடி ஏறுகிறாள்.“சுதாகர்... சுதா எங்கேப்பா இருக்கே?”மாடியில் பெரியவன் சுந்தருக்கும், அடுத்தவன் சுரேனுக்கும் தனி, தனி ரூம்கள் இருக்க,சுதாகருக்கென்று ஒதுக்கப்பட்ட ரூம் அனைவரும் உபயோகப் படுத்தும் அறையாக மாறிவிட, அதை பற்றியெல்லாம் அலட்டிக் கொள்ளாத சுதாகர், அம்மாவின் ரூமை பயன்படுத்தி கொண்டான். இரவு படுப்பதும் அவள் ரூமில் தான்.“சுதாகர், நீ சின்னவனாக இருந்த வரைக்கும் அம்மாவுடன் இருந்தே... இப்ப இளைஞனான பிறகும், இன்னும் அம்மாவை தேடிவர்றியே... உன் ரூமில் படுத்துக்கப்பா...”“போம்மா... சின்ன பிள்ளையிலிருந்து நீ தானே எனக்கு அம்மா... இப்ப மட்டும் ஏன் நான் உன்னை பிரியணும். இங்கே தான் இருப்பேன்.”“இவனுக்கு எப்படி புரிய வைப்பது...”அவள் ரூமிலும் சுதாகரை காணாமல், திரும்பவும் கூப்பிடுகிறாள். “சுதாகர்... எங்கே இருக்கே?”“இங்கே வாம்மா... சின்ன அண்ணன் சுரேன் ரூமில் இருக்கேன் பாரு...”அங்கே என்ன செய்கிறான், உள்ளே நுழைந்தவள்சுரேனின் மனைவி தீபாவின் அலமாரியில் புடவைகளை வரிசைப் படுத்தி அடுக்கி கொண்டிருக்கிறான் சுதாகர்.“என்னப்பா இது... இந்த வேலைகளை நீ செய்யலாமா... எழுந்திரு.”“தீபா அண்ணி தான், எந்த வேலையும் பார்க்காமல் சும்மா இருக்கே. என் புடவை அலமாரியெல்லாம் ஒழுங்கா அடுக்கி வை. நான் ப்யூட்டி பார்லர் போய்ட்டு வரும் போது, எல்லாம் வரிசையாக ஒழுங்காக அடுக்கி வச்சுருக்கணும்னு சொல்லிட்டு போனாங்க.”கடவுளே இவன் அறியாமையை பயன்படுத்தி ஒவ்வொருவரும் இவனிடம் எப்படி வேலை வாங்குகிறார்கள்.‘இவனும் இந்த வீட்டில் சமபங்கு உரிமை உள்ளவன் இவனை ஒரு வேலைக்காரனை போல் அல்லவா நடத்துகிறார்கள்.நேற்று சாயந்திரம் சுந்தரின் மனைவி பூஜா... இவனிடம், சுந்தரின் ஷுவை பாலிஷ் பண்ணி வைக்க சொல்லியிருக்கிறாள். கையில் எல்லாம் கறுப்பு பாலிஷ் பூசிக் கொண்டு வந்து நின்னவனை பார்த்து திகைத்து போனாள்
Disponible desde: 12/02/2024.
Longitud de impresión: 65 páginas.

Otros libros que te pueden interesar

  • Washingtonil Thirumanam - cover

    Washingtonil Thirumanam

    Saavi

    • 0
    • 0
    • 0
    எழுத்தாளர் சாவியால் எழுதப்பட்ட ஒரு நகைச்சுவைக் கதை. ராக்பெல்லர் எனும் அமெரிக்கத் தம்பதிகள் தென்னிந்திய திருமணம் ஒன்றை வாசிங்டன் நகரில் நடத்திப் பார்க்க ஆசைப்படுகின்றனர். திருமணம் நடத்திட தேவைப்படும் அனைத்துச் செலவுகளையும் இத்தம்பதியினரே செய்கின்றனர். திருமணம் எப்படி நடத்தப்பட்டது என்பதே இந்தக் கதை.
    Ver libro
  • Naandi - cover

    Naandi

    Chandrakant Kusunur

    • 0
    • 0
    • 0
    Short story by Chandrakant Kusunur
    Ver libro
  • Vilaivu - cover

    Vilaivu

    Ki Rajanarayanan

    • 0
    • 0
    • 0
    கி. ராஜநாராயணன், ஜானகிராமனின் குடும்பத்தைச் சேர்ந்தவர். ஜானகிராமனைப் போலவே அபூர்வமான அழகுணர்ச்சியும் ரசனையில் திளைக்கும் மனோபாவமும் கொண்டவர். இவரது கதை உலகத்தைத் தமிழ் மண்ணுக்கே உரித்தான ஒரு பழத்தோட்டம் என்று சொல்லலாம். வித்தியாசமான மனிதர்களைக் கதாபாத்திரங்களாக மாற்றும் ஆற்றல் இவர் கலை வன்மை. - சுந்தர ராமசாமி கரிசல் இலக்கியத்தின் முன்னோடி கி. ராஜநாராயணனின் தேர்ந்தெடுத்த 17 கதைகளின் தொகுப்பு இந்நூல். A collection of 14 selected short stories by well-knows writer Ki.Rajanarayanan. His charachters are as unique as his writing style. Writer Sundara Ramasamy describes the stories of Ki.Ra as a fruit garden of Tamil literary world. His aesthetics is unparalleled and he is considered a pioneer of literature from Karisal region in Tamil.
    Ver libro
  • Manaiviyin Kaadhalan - cover

    Manaiviyin Kaadhalan

    Vaikom Mohammed Bashir

    • 0
    • 0
    • 0
    முற்போக்கு இலக்கியம் முதன்மையான நடைமுறையாக இருந்த காலப் பகுதியில் எழுத்தில் ஈடுபட்டவர் பஷீர். 'ஜீவன் சாஹித்ய பிரஸ்தானம்' (வாழ்விலக்கிய இயக்கம்) என்று அழைக்கப்பட்ட போக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தியவர்கள் பஷீர், தகழி சிவசங்கர பிள்ளை, பி. கேசவதேவ், பொன்குன்னம் வர்க்கி ஆகியோர். இவர்களின் எழுத்தில் புதுவகையை உருவாக்கியவர் பஷீர். நடைமுறை உலகை மாற்றிப் புதிய உலகைச் சமைப்பதற்கான அறைகூவலைப் பிற எழுத்தாளர்கள் முன்னிருத்தினர். இந்த முழுமையற்ற உலகத்தை மாற்றி முழுமையான உலகைப் படைப்பது பற்றிய கனவை முன்வைத்தார்கள். ஆனால் பஷீர் இந்த முழுமையற்ற உலகை நேசித்தவராக இருந்தார். தீமையும் கீழ்மையும்இந்த உலகின் உயிரோட்டமான அம்சங்கள் என்று உணர்ந்திருந்தார். நடைமுறை உலகத்தால் புறக்கணிக்கப்பட்டவர்களேஅவரது கதை மாந்தர்களாக இருந்தனர். அவர்களது வாழ்க்கையே அவருக்குக் கதை நிகழ்வுகளாக இருந்தன. பொறுக்கிகள், வேசிகள், திருடர்கள், முட்டாள்கள், பைத்தியங்கள், ஏமாற்றுப்பேர்வழிகள் எல்லாரும் அவருடைய அன்புக்குரிய பாத்திரங்களாக இருந்தார்கள்.அந்தப் பாத்திரங்கள்மீது வாசகரும் அன்பு பாராட்டக் கட்டாயப்படுத்தியதுதான் பஷீர் கலையின் வெற்றி.
    Ver libro
  • Thiruvarutpa - Sixth Thirumurai - cover

    Thiruvarutpa - Sixth Thirumurai

    Vallalar

    • 0
    • 0
    • 0
    வள்ளலாரின் திருவருட்பா ஆறாம் திருமுறையில் 150 பதிகங்கள் உள்ளன. இவற்றின் பாடல்கள் முழுக்கக் கேட்பதற்கு இந்த ஒலிநூலை வாங்கிப் பயனடையுங்கள். இயற்றமிழுக்கு உரிய யாப்போசையில் இந்தப் பாடல்கள் ஒலிப்பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. 
    முதலாம் திருமுறையிலிருந்து ஆறாம் திருமுறை வரை ஒவ்வொன்றும் ஒரு ஒலிநூலாக வெளியிடப்படும். 
    Vallalar's Thiruvarutpa SixthThirumurai is an anthology of 150 pathikams. Several hundreds of verses are there in the volume. This is the second in the series of Vallalar's work in the form of an audiobook. First to Sixth Thirumurai are presented as separate books each.
    Ver libro
  • Irantam Thirumurai - cover

    Irantam Thirumurai

    Sampanthar

    • 0
    • 0
    • 0
    இரண்டாம் திருமுறை என்பது பன்னிரு சைவத் திருமுறைகளில் இடம்பெற்றுள்ள இரண்டாம் தொகுப்பாகும். இவை திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் பாடிய தேவாரங்களில் ஒரு பகுதியை உள்ளடக்கியது. இத் திருமுறையில் 122 பதிகங்களில் அடங்கும் 1331 பாடல்கள் உள்ளன. இத்தேவாரங்கள் தமிழ்நாடு முழுவதிலும் பரந்துள்ள பல்வேறு கோயில்களில் உள்ள சிவபெருமானைக் குறித்துப் பாடப்பட்டவையாகும்.
    Ver libro