Junte-se a nós em uma viagem ao mundo dos livros!
Adicionar este livro à prateleira
Grey
Deixe um novo comentário Default profile 50px
Grey
Assine para ler o livro completo ou leia as primeiras páginas de graça!
All characters reduced
ஒளி தரும் உதயம் - cover
LER

ஒளி தரும் உதயம்

கிரிஸ் ப்ரெண்டிஸ்

Editora: Pocket Books

  • 0
  • 0
  • 0

Sinopse

ரோஜா மாலைக்கு நடுவில் கம்பீரமாக புன்னகைத்த படி காட்சி தரும் கணவனை பார்க்கிறாள் சிவகாமி.உங்க உழைப்பிலும், முயற்சியில் உருவானது இந்தகுடும்பம். இன்னைக்கு ஸ்பின்னிங் மில், நாற்பது கடை வாடகைக்கு விட்டிருக்கும் பெரிய மால், இதோ இத்தனை பெரிய கடல் போன்ற வீடு எல்லாமுமே நீங்க சம்பாதித்து கொடுத்தது. நம்ப இரண்டு மகன்களும் இதை கட்டி காக்கிறாங்க. எந்த குறையுமில்லாமல் இரண்டு பேருக்கும் கல்யாணமும் பண்ணி வச்சுட்டு தான் நீங்க போனீங்க... இன்னைக்கு பேரன், பேத்தின்னு நம்ப வம்சம் தழைச்சுட்டு இருக்கு. இருந்தாலும் எனக்கு நிறைவு இல்லைங்க... மனசெல்லாம் பாரமாக இருக்கு. எல்லாம் இருந்தும் எதுவுமே இல்லாத மாதிரியான உணர்வு தான் இருக்குங்க. இதுக்கெல்லாம் காரணம் என்னன்னு உங்களுக்கே தெரியும்.நம்ப மூணாவது மகன் சுதாகர். இருபதைந்து வயதைதொட்டுட்டான். அவன் கிட்டே பெரிசா எந்த மாற்றமும் இல்லை. நீங்க இருக்கும் போதே எவ்வளவு டீரிட்மெண்ட்... மருந்து மாத்திரைகள். இது பிறவி குறைபாடு. மூளை வளர்ச்சி இயல்பாக இல்லை. இதனால் பெரிசா எந்த பாதிப்பும் வராது. வளர வளர புரிஞ்சுக்கிற தன்மை அதிகரிக்கும். பெரிசா முன்னேற்றம் கிடைக்கலைன்னாலும்... இயல்பான ஆண்மகனாக இருப்பான். பயப்படாதீங்கன்னு டாக்டர் சொன்னாரு. ஸ்பெஷல் ஸ்கூலில் படிக்க வச்சோம். கஷ்டப்பட்டு பத்தாவது வரை படிச்சான். உடல் வளர்ச்சியில் எந்த குறையும் இல்லைங்க... உங்க சாயலில், கம்பீரமாக ஒரு ஆண்மகனாக, இளமைக்கே உரிய பொலிவோடு இருக்கான். அறிவு வளர்ச்சி, சுயமாக சிந்திக்கும் திறன், எதுவும் இல்லைங்க. மத்தவங்க சொல்றதை கேட்கிறான். அவ்வளவு தான்.எவ்வளவு நாள் நான் அவனுக்கு துணை வர முடியும். எனக்கு பிறகு அவன் வாழ்க்கை... நினைக்கவே பயமா இருக்குங்க...சிவகாமியின் கண்களிலிருந்து கண்ணீர் வடிகிறது.“அம்மா... அம்மா...”சமையல்காரி வேதா கூப்பிடுவது கேட்க,முந்தானையால் கண்ணீரை துடைத்தவளாய், அறையை விட்டு வெளியே வருகிறாள்.“அம்மா... நம்ப சுதாகர் தம்பி இன்னும் சாப்பிட வரலைம்மா... பசி தாங்க மாட்டாரு. எட்டு மணிக்கெல்லாம் சாப்பிட வந்துடுவாரு... பெரியவங்க இரண்டு பேரும் சாப்பிட்டு கிளம்பிட்டாங்க... அதான் உங்க கிட்டே சொல்லலாம்னு கூப்பிட்டேன்.”மாடி ஏறுகிறாள்.“சுதாகர்... சுதா எங்கேப்பா இருக்கே?”மாடியில் பெரியவன் சுந்தருக்கும், அடுத்தவன் சுரேனுக்கும் தனி, தனி ரூம்கள் இருக்க,சுதாகருக்கென்று ஒதுக்கப்பட்ட ரூம் அனைவரும் உபயோகப் படுத்தும் அறையாக மாறிவிட, அதை பற்றியெல்லாம் அலட்டிக் கொள்ளாத சுதாகர், அம்மாவின் ரூமை பயன்படுத்தி கொண்டான். இரவு படுப்பதும் அவள் ரூமில் தான்.“சுதாகர், நீ சின்னவனாக இருந்த வரைக்கும் அம்மாவுடன் இருந்தே... இப்ப இளைஞனான பிறகும், இன்னும் அம்மாவை தேடிவர்றியே... உன் ரூமில் படுத்துக்கப்பா...”“போம்மா... சின்ன பிள்ளையிலிருந்து நீ தானே எனக்கு அம்மா... இப்ப மட்டும் ஏன் நான் உன்னை பிரியணும். இங்கே தான் இருப்பேன்.”“இவனுக்கு எப்படி புரிய வைப்பது...”அவள் ரூமிலும் சுதாகரை காணாமல், திரும்பவும் கூப்பிடுகிறாள். “சுதாகர்... எங்கே இருக்கே?”“இங்கே வாம்மா... சின்ன அண்ணன் சுரேன் ரூமில் இருக்கேன் பாரு...”அங்கே என்ன செய்கிறான், உள்ளே நுழைந்தவள்சுரேனின் மனைவி தீபாவின் அலமாரியில் புடவைகளை வரிசைப் படுத்தி அடுக்கி கொண்டிருக்கிறான் சுதாகர்.“என்னப்பா இது... இந்த வேலைகளை நீ செய்யலாமா... எழுந்திரு.”“தீபா அண்ணி தான், எந்த வேலையும் பார்க்காமல் சும்மா இருக்கே. என் புடவை அலமாரியெல்லாம் ஒழுங்கா அடுக்கி வை. நான் ப்யூட்டி பார்லர் போய்ட்டு வரும் போது, எல்லாம் வரிசையாக ஒழுங்காக அடுக்கி வச்சுருக்கணும்னு சொல்லிட்டு போனாங்க.”கடவுளே இவன் அறியாமையை பயன்படுத்தி ஒவ்வொருவரும் இவனிடம் எப்படி வேலை வாங்குகிறார்கள்.‘இவனும் இந்த வீட்டில் சமபங்கு உரிமை உள்ளவன் இவனை ஒரு வேலைக்காரனை போல் அல்லவா நடத்துகிறார்கள்.நேற்று சாயந்திரம் சுந்தரின் மனைவி பூஜா... இவனிடம், சுந்தரின் ஷுவை பாலிஷ் பண்ணி வைக்க சொல்லியிருக்கிறாள். கையில் எல்லாம் கறுப்பு பாலிஷ் பூசிக் கொண்டு வந்து நின்னவனை பார்த்து திகைத்து போனாள்
Disponível desde: 12/02/2024.
Comprimento de impressão: 65 páginas.

Outros livros que poderiam interessá-lo

  • Subbaiah Pillayin Kaadhalgal - cover

    Subbaiah Pillayin Kaadhalgal

    Pudhumaipithain

    • 0
    • 0
    • 0
    சென்னையில் தன் சிறிய உலகத்தை அமைத்துக் கொண்ட ஸ்ரீ சுப்பையா பிள்ளை, குடும்பப் பொறுப்புகள், அலுவலக வாழ்க்கை, தினசரி பயணங்கள் என நடுத்தர வர்க்க வாழ்வின் சிக்கல்களுக்கு இடையே தன் உள்ளார்ந்த ஆசைகளுடன் போராடுகிறார். 
    புதுமைப்பித்தனின் நகைச்சுவையும் நுட்பமான மனித அவதானிப்பும் நிறைந்த இந்தச் சிறுகதை, சாதாரண மனிதனின் இதயத்தில் ஒளிந்திருக்கும் பல காதல்களை அழகாக வெளிப்படுத்துகிறது.
    Ver livro
  • Karaintha Nizhalkal - cover

    Karaintha Nizhalkal

    Asokamithran

    • 0
    • 0
    • 0
    A novel that talks about the work and life of Junior artists, Stunt Masters, Studio Workers, Light Boys and Car Drivers of the Industry of Dreams - Tamil Cinema. Ashokamitran is known for his stark everyday language and exploring deeper questions of life through that.  திரைத்துறை ஊழியர்களின் பிரச்சனைகளை, அவர்கள் அன்றாட வேலையில் எதிர்கொள்ளும் சிரமங்கள், பாதுகாப்பற்ற வேலைநிலை, குடும்ப வாழ்க்கை ஆகியவற்றை துல்லியமாக சித்தரிக்கப்பட்டு ஸ்டூடியோ ஊழியர்களை கதை மாந்தர்களாக கொண்ட நாவல் - கரைந்த நிழல்கள்
    Ver livro
  • Manal Veedugal - cover

    Manal Veedugal

    Indumathi

    • 0
    • 0
    • 0
    நடுத்தர வர்க்கத்தில் பிறந்த சசி அப்பாவால் கைவிடப்பட்ட தன் குடும்பத்தில் பிள்ளைகளுக்காக குடும்பபாரத்தை சுமக்கும் தாய்க்கு   ஓய்வு கொடுக்க வேண்டும் என்று வேலை தேடி சென்னை வருகிறாள் . தன்  பெரியம்மா வீட்டில் தங்கி வேலை தேடி அலைகிறாள்.  வேலை கிடைக்காததால் பெரியம்மாவின் வசைகளுக்கு ஆளாகிறாள்.இப்படி பட்ட தருணத்தில் அவளுக்கு வேலை வாய்ப்பு வருகிறது ,அங்கு சென்று வேலை பற்றி அறிய முற்படும் போது தான் க்ருபாகர் என்பவர் மேல்  காதல் கொள்கிறாள்.  அவர் திருமணம் ஆனவர் .வாரிசு அற்ற  அவர், அவளிடம் வேண்டியது   வாடகைதாயாக இருக்க ஒப்பந்தம். இதை அறிந்த சசி, க்ருபாகர் மீது கொண்ட காதலால் அதற்கு  சம்மதிக்கிறாளா ,இல்லையா என்பதை மேலும் அறிய கேளுங்கள் மணல் வீடுகள்..
    Ver livro
  • Maharajavin Rail Vandi - cover

    Maharajavin Rail Vandi

    A. Muthulingam

    • 0
    • 0
    • 0
    This collection of short stories is a fine example of Ezham Tamil's contribution to modern Tamil literature by A. Muthulingam
    
    முத்துலிங்கத்தின் படைப்புகள் நவீனத் தமிழிலக்கியத்திற்கு ஈழத்தமிழ் தந்திருக்கும் முக்கியமான கொடை. அவர் கதைகளில் வெவ்வேறு தேசங்கள், வெவ்வேறு கலாச்சாரங்கள், வெவ்வேறு மனிதர்கள்; தமிழ் வாசகனுக்கு அன்னியப்படாமலும் தீவிரம் சிதைக்கப்படாமலும் படைக்கப்பட்டிருக்கின்றன
    Ver livro
  • Mahabharatham - Full Story - Tamil AudioBook - The Great Epic of Dharma and War - cover

    Mahabharatham - Full Story -...

    Viyasar

    • 0
    • 0
    • 0
    மகாபாரதம் என்பது உலகின் மிகப்பெரிய காவியங்களில் ஒன்றாகும். இதை முனிவர் வியாசர் (வியாச முனிவர்) இயற்றியது 
    இது பாண்டவர்கள் – கௌரவர்கள் இடையிலான குருச்சேத்திரப் போரைக் குறித்து விவரிக்கிறது. அதேசமயம், தர்மம், நெறி, பக்தி, ஆன்மிகம், அரசியல், குடும்பம், காதல், தியாகம் போன்ற வாழ்க்கையின் எல்லா அம்சங்களையும் உள்ளடக்கியது. 
    மகாபாரதத்தில் அடங்கியுள்ள பகவத்கீதை ஆனது உலகின் மிகப் புனித நூல்களில் ஒன்றாகும். இது அர்ஜுனனுக்கும் கிருஷ்ணருக்கும் இடையிலான ஆன்மிக உரையாடல். 
    மகாபாரதத்தை வாசிப்பது அல்லது கேட்பது, வாழ்க்கையில் துணிவு, தர்ம உணர்வு, ஆன்மிக வழிகாட்டுதல் ஆகியவற்றை வழங்குகிறது.
    Ver livro
  • Kanivu - cover

    Kanivu

    Ki Rajanarayanan

    • 0
    • 0
    • 0
    கி. ராஜநாராயணன், ஜானகிராமனின் குடும்பத்தைச் சேர்ந்தவர். ஜானகிராமனைப் போலவே அபூர்வமான அழகுணர்ச்சியும் ரசனையில் திளைக்கும் மனோபாவமும் கொண்டவர். இவரது கதை உலகத்தைத் தமிழ் மண்ணுக்கே உரித்தான ஒரு பழத்தோட்டம் என்று சொல்லலாம். வித்தியாசமான மனிதர்களைக் கதாபாத்திரங்களாக மாற்றும் ஆற்றல் இவர் கலை வன்மை. - சுந்தர ராமசாமி கரிசல் இலக்கியத்தின் முன்னோடி கி. ராஜநாராயணனின் தேர்ந்தெடுத்த 17 கதைகளின் தொகுப்பு இந்நூல். A collection of 14 selected short stories by well-knows writer Ki.Rajanarayanan. His charachters are as unique as his writing style. Writer Sundara Ramasamy describes the stories of Ki.Ra as a fruit garden of Tamil literary world. His aesthetics is unparalleled and he is considered a pioneer of literature from Karisal region in Tamil.
    Ver livro