காவலை மீறிய காற்று
கிரிஸ் ப்ரெண்டிஸ்
Editorial: Pocket Books
Sinopsis
மனம் இறுக அமர்ந்திருந்தான் விஜயன்.படுக்கையில் அருண் தூங்கிக் கொண்டிருக்க... தூங்காமல் படுத்திருக்கும் ஆதி அப்பாவிடம் வருகிறான்.“டாடி... அம்மா இனிமே வரவே மாட்டாங்களா...?’’விஜயனின் கண்களில் கண்ணீர் தளும்பி நிற்கிறது.‘‘கடவுள் நம்மளை சோதிச்சுட்டாரு ஆதி. அம்மா திரும்ப முடியாத இடத்துக்கு போயிட்டா.’’“இல்லே டாடி... எனக்கு அம்மா வேணும். நான் அம்மா பக்கத்தில் தான் படுப்பேன்.’’ஆதி அழத் தொடங்க... அங்கு வருகிறாள் மரகதம்.‘‘ஆதி... பாட்டி கிட்டே வா. உனக்கு பாட்டி கதை சொல்வேனாம்... நீ கேட்டுகிட்டே தூங்குவியாம்...’’“போ... பாட்டி... எனக்கு கதையெல்லாம் வேணாம்... அம்மா தான் வேணும்...’’‘‘நீ இப்படி அழுது அடம் பண்ணினா அம்மா வரமாட்டா... சமர்த்தா பாட்டியும், டாடியும் சொல்றதை கேட்டு நடந்தா... ஒருநாள் அம்மா வந்துடுவா...”‘‘நிஜமாவா பாட்டி... அழுகையை நிறுத்திக் கேட்கிறான்.”‘‘பாட்டி பொய் சொல்ல மாட்டேன்.”“அப்ப சரி... நீ கதை சொல்லு. உன்கிட்டேயே படுத்துக்கிறேன்.”அவள் கைபிடித்து நடக்க,“உங்களுக்கு எதுக்கு சிரமம் அத்தை... நான் பார்த்துக்கிறேன்... நீங்க போய் படுங்க...”‘இல்லை மாப்பிள்ளை... வந்த உறவு ஜனம் போயாச்சு. நானும், எனக்கு சமைச்சு போடும் ருக்குவும் தான் இருக்கோம்.இனி நான் எங்கேயும் போகப் போறதில்லை. இந்த குழந்தைகளுக்கும், உங்களுக்கும் வழி பண்ணிட்டுதான் கிளம்புவேன்.நீங்க அருண்கிட்டே படுத்துக்குங்க...’’பேரனுடன் அறையை விட்டு வெளியேறுகிறாள்.‘‘என்னங்க... பால்கனியில் நின்னுகிட்டு என்ன செய்யறீங்க...? டி.வி.யில் சினிமா போடறான். என்னோடு உட்கார்ந்து பார்க்கலாம் இல்லையா...?’’‘‘எனக்கு தான் சினிமா பிடிக்காதுன்னு உனக்கு தெரியுமே கீர்த்தி...’’‘‘சரி, அப்ப நானும் பார்க்கலை. உங்களோடு இங்கேயே இருக்கேன்.”‘‘ஆதி, அருண் தூங்கியாச்சா...?’’“அவங்க அப்பவே தூங்கிட்டாங்க.”“என்ன கீர்த்தி புதுசா பார்க்கிற மாதிரி என்னையே பார்த்துட்டு இருக்கே...?”‘‘என் புருஷன் இவ்வளவு அழகான்னு பார்க்கிறேன்’’சிரிக்கிறான் விஜயன்.“ஆறு வருஷமா பார்க்கிற மூஞ்சி தான்.”“இருக்கட்டுமே... என்னைக்கும் எனக்கு நீங்க புதுசாதான் தெரியறீங்க...’’‘‘நான் அப்படி இல்லப்பா... எனக்கு உன்கிட்டே எந்த வித்தியாசமும், எப்பவும் தெரியறதில்லை. உன்னை மாதிரி ஒவ்வொன்றையும் ரசிக்கவும், வர்ணிக்கவும் தெரியாது.’’‘‘அதுதான் தெரிஞ்ச விஷயமாச்சே.”கணவனை பார்த்து சிரிக்கிறாள் கீர்த்தனா.கீர்த்தி... என்னை இப்படி தவிக்க விட்டுட்டு போயிட்டியே... நீயில்லாம இந்த பிள்ளைகளை நான் எப்படி வளர்க்கப் போறேன்.புரியலையே கீர்த்தி... கண்களில் கண்ணீர் பெருகுகிறது.ஹாலில் உட்கார்ந்திருந்த ரகுபதி, வீட்டைச் சுற்றிலும் நோட்டமிடுகிறார். அழகான வீடு. நேர்த்தியாக அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. சுவற்றில் தொங்கிய இயற்கை காட்சிகள்... கீர்த்தனா நிச்சயம் ரசனை உள்ளவளாகத்தான் இருந்திருப்பாள் என்பதை பறைசாற்றியது.“என்ன சார் பார்க்கறீங்க...? என் மகள் கீர்த்தனா, ஒவ்வொன்றையும் பார்த்து, பார்த்து செய்வா...அதோ அந்த பெயிண்டிங் அவ வரைஞ்சதுதான். வீட்டு நிர்வாகம் அவ கையில்.என் மாப்பிள்ளை எதிலும் தலையிடமாட்டாரு. சம்பாதிப்பதோடு அவர் வேலை முடிஞ்சுதுன்னு நிம்மதியா இருப்பாரு. பாவம்... இப்ப விழிபிதுங்கி தடுமாறுகிறதை பார்த்தா, பரிதாபமாக இருக்கு.”‘‘நீங்க எங்கே இருக்கீங்க...?’’‘‘ஈரோட்டில். என் கணவர் மில் வச்சுருந்தாரு. இறந்த பிறகு எல்லாத்தையும் வித்து, பணத்தை வங்கியில் போட்டு, என் மகளை படிக்க வச்சேன்.சொந்தமா வீடு இருக்கு. மகளை கட்டிக்கொடுத்துட்டு நிம்மதியா இருந்தேன். கண்ணுக்கு நிறைஞ்சு மகள் வாழறதை பார்த்திட்டே காலம் தள்ளிடலாம்னு நினைச்சேன்.என்னை புலம்ப வச்சுட்டு அவ போயிட்டாளே...’
