குயில்பாட்டு
Bharathiyaar
Narrador Ramani
Editorial: Ramani Audio Books
Sinopsis
ரமணியின் குரலில் பாரதியாரின் குயில் பாட்டு... புதுவை நகரின் மேற்கில் ஒரு மாஞ்சோலை. அங்கு ஒரு நாளில் விந்தைக் குயிலொன்று பாடியது. "காதல் காதல் காதல் காதல் போயின் காதல் போயின் சாதல் சாதல் சாதல்" இன்ப வெறியும் துயரும் கலந்த குரலில் குயில் பாடியதைக் கவிஞன் கேட்டான். குயிலே! உன் துயரம் யாது என்று அதனிடம் வினவினான். "நான் மனிதர்களின் மொழியெல்லாம் அறியும் பேறு பெற்றேன்; பாட்டில் நெஞ்சைப் பறி கொடுத்தேன்; இப்போது காதலை வேண்டிக் கரைகின்றேன்" என்று கூறியது. கவிஞனுக்குக் குயிலின் மீது அடங்காக் காதல். மற்ற பறவைகளெல்லாம் சோலைக்கு வந்துவிட்டன. குயில் கவிஞரை நான்காம் நாள் அவ்விடத்திற்கு வந்து விடக்கூறி மறைந்து விடுகிறது. கவிஞனின் காதல் மனம் உறங்கவில்லை; காதலியைப் பிரிந்த துயர் வருத்த மறுநாளே சோலைக்குச் செல்கின்றான். அங்குக் குயில் ஒரு குரங்கோடு காதல்மொழி பேசிக் கொண்டிருந்தது. நீசக் கருங்குயில் அதே பாட்டைப் பாடிக் குரங்கின் அழகைப் பாராட்டிக் கொண்டிருந்தது. கவிஞன் வாளைக் குரங்கின மீது வீச, குரங்கு தாவி ஒளிந்தது. குயிலும் பிற பறவைகளும் மறைந்தன. இரவு முழுவதும் துயில் கொள்ளாமல் இருந்து மூன்றாம் நாள் காலையில் கவிஞன் சோலைக்குச் சென்றான். அப்போது குயில் கிழக்காளை மாடு ஒன்றோடு காதல் மொழி பேசிக் கொண்டிருந்தது. கவிஞன் வாளை உருவிக் காளையின் மீது வீச, காளை ஓடிவிடக் குயிலும் மற்ற பறவைகளும் மறைந்தன. நான்காம் நாள் கவிஞன், சோலையிலே குயிலைச் சந்தித்து அதன் பொய்மையை எடுத்துரைக்கின்றான். குயில் தன் முற்பிறவிக் கதையைக் கூறுகின்றது. கவிஞன் குயிலின் பழம்பிறப்பையும் மாடன் குரங்கனின் மாயச் செயல்களையும் உணர்ந்து தெளிகிறான். குயிலை முத்தமிடுகிறான். குயில் மறைந்து அங்கே கொள்ளை வனப்புடை
Duración: alrededor de 1 hora (00:58:24) Fecha de publicación: 30/04/2023; Unabridged; Copyright Year: — Copyright Statment: —

