சுயசரிதை
Bharathiyaar
Narrador Ramani
Editora: Ramani Audio Books
Sinopse
மகாகவி பாரதியார் 'சுயசரிதை' என்னுமொரு கவிதை எழுதியிருக்கின்றார். பாரதியாரின் ஆளுமையை அறிந்து கொள்வதற்கு உதவும் கவிதைகளிலொன்று அவரது இந்தக்கவிதை. இதுவொரு நீண்ட கவிதை. கவிதையின் ஆரம்பம் "பொய்யாய்ப் பழங்கதையாய்க் கனவாய் மெல்லப் போனதுவே." என்ற பட்டினத்துப்பிள்ளையாரின் கவிதை வரிகளுடன் ஆரம்பமாகின்றது. பாரதியார் தன்னைச் சித்தர்களிலொருவராகக்கருதுபவர். சித்தர்களிலொருவரான பட்டினத்தாரின் இருப்பு பற்றிய கவிதை வரிகளுடன் ஆரம்பமாகியிருப்பது ஒன்றினை நன்கு புலப்படுத்துகின்றது. அது பாரதியாரின் இருப்பு பற்றிய சிந்தனையினைத்தான். 'பொய்யாய்ப் பழங்கதையாய்க் கனவாய் மெல்லப் போனதுவே' என்னும் கூற்றுக்கேற்ப அவரது வாழ்வில் கடந்து போன இழப்புகளைப்பற்றிச் சுயசரிதை விவரிக்கின்றது. பாரதி அறுபத்தாறு என்ற பகுதியில் ‘எனக்கு முன்னே பல சித்தர்கள் இருந்தனர், யானும் வந்தேன் – ஒரு சித்தன் இந்நாட்டில்’ என்று தன்னையும் ஒரு சித்தனாக அறிமுகப்படுத்திக் கொண்டு துவங்குகிறார். கடவுள் வாழ்த்து, மரணத்தை வெல்லும் வழி, கடவுள் எங்கே இருக்கிறார்? சினத்தின் கேடு. பொறுமையின் பெருமை, குள்ளச்சாமி கதை, கோவிந்தசாமி புகழ், யாழ்ப்பாணத்து சாமி புகழ், குவளைக்கண்ணன் புகழ் என்று செல்லும் இப்பாடல் பெண் விடுதலை, தாய் மாண்பு, காதலின் புகழ் என்று தொடர்கிறது. சர்வமத சமரசம் என்ற முத்தாய்ப்போடு பாடல் முடிகிறது. மாங்கொட்டைசாமி மற்றும் குள்ளச்சாமி எனுப்படும் சித்தர் – அவரையே பாரதி – தன் மோனகுரு - கோவிந்தசாமி மற்றும் யாழ்ப்பாணத்துச்சாமி ஆகியோரின் நேரடித் சந்திப்புகள் பாரதியின் ஆன்ம தாகத்திற்கு உரமூட்டின. ரமணி இந்நூலை ஒலி நூலாக்கியிருக்கிறார்.
Duração: aproximadamente 1 hora (00:52:57) Data de publicação: 30/05/2023; Unabridged; Copyright Year: — Copyright Statment: —

