Kutumpa Vilakku
Bharathithasan
Narrador Ramani
Editora: Ramani Audio Books
Sinopse
பாரதிதாசன் குடும்ப விளக்கு நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்' என்னும் கருத்தை முன்னிறுத்தி பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் தமது குடும்ப விளக்கு நூலினை எழுதியுள்ளார். குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் அன்பு எனும் நூலால் பின்னப்பட்டு, பாசவலையில் கட்டுண்டிருக்குமாறு பணித்துள்ளார். குடும்பத்தில் உள்ளவர்கள் ஒவ்வொருவருக்கு தங்கள் பொறுப்புகளைச் சரியாகப் புரிந்து வாழும்போது இனிய இல்வாழ்க்கை அமைந்து, இல்லறம் சிறக்கிறது என்கிறார். அதிகாலையில் துயில் எழுவது முதல் தனது கடமைகளைச் செவ்வனே செய்யும் ஒரு பெண்ணாகக் குடும்ப விளக்கின் தலைவியை மிளிரச் செய்துள்ளார். நேர்மையாக வாணிபம் செய்து பொருள் ஈட்டுபவனாகத் தலைவன் படைக்கப்பட்டுள்ளான். அன்பான பெற்றோர், அழகான குழந்தைகளுடன் சிறந்த குடும்பம் எப்படி இருக்க வேண்டும் என்பதை இந்நூல் வழியாகக் காட்டியுள்ளார். பாரதிதாசனின் குடும்ப விளக்கு வழிநின்று, குடும்பங்கள் சிறப்புற அமையுமானால், இந்தச் சமுதாயம் உயர்வடையும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
Duração: aproximadamente 3 horas (03:11:26) Data de publicação: 18/01/2023; Unabridged; Copyright Year: — Copyright Statment: —

