Puratchikkavi
Bharathidasan
Narrador Ramani
Editorial: Ramani Audio Books
Sinopsis
கடந்த நூற்றாண்டின் தலை சிறந்த கவிஞர்களில் ஒருவரான பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் எழுதிய ஒரு குறுங்காவியமே புரட்சிக்கவி என்பதாகும். இக்காவியம் காஷ்மீரத்தில் எழுதப்பட்ட பில்கணீயம் என்ற நூலைத் தழுவி எழுதப்பட்டாலும் பாவேந்தர் கதை முடிவில் காட்சி அமைப்பை மாற்றி மக்கள் புரட்சி அமைவதாகக் காட்டியுள்ளார்.இக்காவியத்தில் நாட்டின் அரசன் உதாரன் எனும் கவிஞனை தன் மகளுக்குத் தமிழ் கற்பிக்கத் தருவிக்கிறான். இருவரும் காதல் வயப்படாமல் இருக்கத் தன் மகள் அமுதவல்லிக்குத் தொழு நோய் என்று உதாரனிடமும் உதாரனுக்குக் கண் பார்வையில்லை என்று அமுதவல்லியிடமும் கூறுகின்றான்.ஒரு நாள் இரவு உதாரன் வானத்தில் நிலவைக் கண்டு பாட, அமுதவல்லி கண்பார்வை அற்றவன் எவ்வாறு நிலவைப் பாடுகின்றான் என ஐயம் கொண்டு உதாரனைக் காண, இருவரும் காதல் கொள்கின்றனர். இச்செய்தி அறிந்த மன்னவன் இருவருக்கும் மரண தண்டனை விதிக்கின்றான். மக்கள் புரட்சி செய்து, அரசனைத் துரத்தி விட்டு கவிஞனுக்கும் இளவரசிக்கும் மீட்சி தருவதாகவும் அங்கு மக்களாட்சி அமைவதாகவும் காட்டிக் காவியத்தை நிறைவு செய்கின்றார். இப்பாடலில் பாவேந்தர் தம் உள்ளக்கிடக்கையான பெண் கல்வியை வெளிப்படுத்துகிறார். அமுதவல்லி, “தமிழிலக் கியங்கள் தமிழிலக் கணங்கள் அமைவுற ஆய்ந்தாள் அயல்மொழி பயின்றாள் ஆன்ற ஒழுக்கநூல் நீதிநூல் உணர்ந்தாள்” கொலைக்களத்தில் பேச வாய்ப்பு கிடைத்த பின் உதாரன் நாட்டு மக்களைப் பார்த்து உரையாடுகின்றான். பேரன்பு கொண்டோரே பெரியோரே என் பெற்றதாய் மாரே நல்லிளம் சிங்கங்காள் என்று தொடங்கும் தன் உரையில் உதாரன் நாட்டு மக்களின் உணர்வைத் தட்டி எழுப்ப முயல்கிறான். முதலில் அரசன் மக்களின் உழைப்பை உறிஞ்சி மக்களையே ஆள்வதாகக
Duración: 28 minutos (00:28:01) Fecha de publicación: 06/02/2023; Unabridged; Copyright Year: — Copyright Statment: —

