Azhakin Sirippu
Bharathidasan
Narrador Ramani
Editora: Ramani Audio Books
Sinopse
பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள், "அழகின் சிரிப்பு" என்ற இக்கவிதைத் தொகுப்பில் இயற்கையின் சிரிப்பில் தான் ரசித்தவை எவ்வளவு அழகு என்பதைச் செந்தமிழில் மிகவும் நயமாக எழுதியுள்ளார். கடல், தென்றல், காடு, குன்றம், ஆறு, செந்தாமரை, ஞாயிறு, வானம் எனப் பல தலைப்புகளில் கவிதைகள் இருப்பினும் தமிழ் மொழியின் சிறப்புக்கள் நல்கும் இறுதிக் கவிதைகள் தனிச் சிறப்பு. சிற்றூருக்கும், பட்டினத்திற்கும் உள்ள வித்தியாசங்களைக் குறித்தும் அழகாகப் பதிவிட்டுள்ளார். “அதிகாலைப் பொழுதில் உதித்தெழும் சூரியனின் காட்சி மிகவும் அழகானது. அக்காட்சியானது கடலின் மீது விழும் சூரிய ஒளியின் பிரகாசத்தினை கடலும் சேர்ந்து வாங்கிப் பொன் மஞ்சள் நிறமாக ஒளிருகின்ற காட்சி மிகவும் தனித்த அழகுடையது ஆகும். பூஞ்செடிகளின் கூட்டம் அணிவகுக்கும் சோலைகளிலும், அங்கு மலர்ந்து மணம் வீசும் மலர்களிலும், பசுமையான தளிர்களிலும், இப்படிப் பார்க்கும் இடங்களில் எல்லாம் அந்த அழகு என்கிற பெண் நம் கண்களில் தெரிந்தாள். அவ்வாறே மாலை நேரத்தில் சூரியன் மறையும் காட்சி ஒரு பெரிய மாணிக்கக் கட்டியினை வெட்டி எடுத்து கீழ்வானில் ஒட்டிவைத்ததனைப் போன்று ஒளிவீசுகின்ற அழகாக அந்த அழகுப்பெண் இருந்தாள். சாலையோரங்களில் நிறைந்திருந்த ஆலமரங்களின் கிளைகளில் எல்லாம் கிளிகளின் கூட்டம் அமர்ந்திருந்த காட்சி மிகவும் அழகிய பெண்ணாகி என் உணர்வுகளைத் தூண்டி இந்தக் கவிதையினைத் தந்தாள்.” என்ற பொருள்தரும் எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தத்தோடு நூல் ஆரம்பமாகிறது.
Duração: aproximadamente 1 hora (01:00:42) Data de publicação: 20/01/2023; Abridged; Copyright Year: — Copyright Statment: —

