¡Acompáñanos a viajar por el mundo de los libros!
Añadir este libro a la estantería
Grey
Escribe un nuevo comentario Default profile 50px
Grey
Suscríbete para leer el libro completo o lee las primeras páginas gratis.
All characters reduced
உன் பார்வை ஒரு வரம் - cover

உன் பார்வை ஒரு வரம்

ஆர்.மகேஸ்வரி

Editorial: Pocket Books

  • 0
  • 0
  • 0

Sinopsis

பௌர்ணமி நிலவு ஒன்று பூமிக்கு வந்தது போல்... பளிச்சென்று... வைரத்தின் ஒளிவீச்சுடன்... அழகின் இலக்கணமாய் ஹாலுக்கு வந்தாள் கீர்த்தனா.சாதாரண காட்டன் சேலையிலும் தேவதைக்கணக்காய்... புத்தம் புது மலராய்... மணம் வீசிக் கொண்டு வந்து நின்றாள்.சமையலறையைப் பார்த்து குரல் கொடுத்தாள்.“அம்மா... அம்மா...”“இதோ வந்துட்டேம்மா...” கைகளை முந்தானையில் துடைத்துக் கொண்டு வந்தாள் தாய் தமிழ்ச்செல்வி.“எனக்கு நேரமாயிடிச்சி...வரவா?” என்ற மகளை ஆச்சரியமாய்ப் பார்த்தாள்.“எங்கேடி...இந்த காலம் கார்த்தால போறே? இன்னைக்கு ஆபீசும் இல்லையே!”‘என்னம்மா மறந்துட்டியா? நேத்து நைட் சொன்னேனே! இன்று தைக்கிருத்திகை. வட சென்னிமலை கோவிலுக்கு போறேன்னு.”“ச்சே! நான் ஒரு ஞாபகமறதிக்காரி. எப்படியோ அந்த சென்னிமலை முருகன் இனிமேலாவது உனக்கு நல்ல புத்தி கொடுக்கட்டும். இந்த வருடமாவது திருமணயோகம் வந்து... சமூக சேவை, நியாயம், தர்மம் எல்லாத்தையும் விட்டு ஒழிச்சிட்டு... உனக்குன்னு ஒரு நல்ல வாழ்க்கை அமைய... அந்த கடவுள்தான் கருணை காட்ட வேண்டும்!” அம்மா கவலையாய் கூறினாள்.“ஏம்மா... சலிச்சுக்கிறே! நான் இப்போ அங்கே போறது சாமி கும்பிட மட்டும் இல்லை!’’ புதிராய் பேசினாள் கீர்த்தனா.“பின்னே?”வயதான பெரியவர்கள் எத்தனை பேர் முருகனை தரிசிக்க ஆசைப்பட்டு... படியேற முடியாமல்... தவிச்சிட்டு இருப்பாங்க. அவங்களை எல்லாம் என் ஸ்கூட்டியில ஏத்திட்டு... பாதை வழியா கொண்டு போய் சாமி கும்பிட வைத்து... திரும்ப மலையிறங்க உதவி செய்யத்தான் அங்கே போறதே!”“சேவை...ம்...சமூக சேவை! உன் வயசுல இருக்கிறவ எல்லாம் கையில ஒண்ணும், வயித்துல ஒண்ணுமா... புருஷனோட லட்சணமா இருக்க... நீ மட்டும் ஏன்டி வருகிறவனையெல்லாம் விரட்டிகிட்டு... சேவை சேவையின்னு அறிவு கெட்டத்தனமா அலையறே!” தமிழ்ச்செல்வி கோபமாய் கூறினாள்.“உன் பொண்ணு ஒரு நல்லது செய்தா...உனக்குப் பிடிக்காதே! திட்டாதேம்மா! நான் செய்யும் நல்லதிற்கு புண்ணியமே கிடைக்காது!”“பிடிக்காம இல்லடி கீர்த்தனா, நீ சேலத்துல இருந்து அவ்ளோ தூரம் ஸ்கூட்டியில போய்... மேலேயும், கீழேயும் மலை ஏறி இறங்கினால்... இந்த மண்டையைப் பிளக்கும் வெய்யிலில் உன் உடம்புக்கு..., ஏதாவது வந்துட்டா... என்னால் தாங்க முடியுமா? சொல்லு.”“வயசானவங்களுக்கு செய்யறது கோடி புண்ணியம்மா!”“புண்ணியமும் வேண்டாம்... ஒண்ணும் வேண்டாம். போக ஆசையானால்... பஸ்ல போயிட்டு உடனே திரும்பிடு” கட்டளையாய் தாய் கூற, தவித்து விட்டாள் கீர்த்தனா.“என்னம்மா நீ! நான் செய்யும் அத்தனை நல்லதோட பலனும், உன்னையும்... அப்பாவையும் தான் வந்து சேரும். என்னை ஆசீர்வதிக்கற அத்தனை பேரும்... நீயும். உன்னை பெற்றெடுத்த மகராசனும், மகராசியும் நல்லாயிருக்கணும்னு சொல்லும்போது... என்மனசு குளிர்ந்துடும். அப்போ எவ்வளவு சந்தோஷப்படுவேன் தெரியுமா? மனித ஜென்மமா பிறப்பதே ஒரு தடவைதான்! மனிதர்களுக்கு எந்த நேரத்துல எதுவரும் என்று சொல்ல முடியாது. அப்படியிருக்க உயிரோடு இருக்கும் காலம் வரை... மத்தவங்களுக்கு உபத்திரவம் இல்லாமல்... உதவியா இருந்தால்... என்னம்மா கெட்டுப்போகும்? ம்ம்...?” சாமர்த்தியமாய் பேசினாள்
Disponible desde: 15/02/2024.
Longitud de impresión: 148 páginas.

Otros libros que te pueden interesar

  • Un Edhiril Oru Edhiri - cover

    Un Edhiril Oru Edhiri

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    அல்ஸீமர் என்கிற மறதி நோயினால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் பின்புலம் எத்துணை மர்மம் வாய்ந்தது என்பதை வெளியுலகிற்கு அறிமுகப்படுத்தும் கதை இது. அல்ஸீமர் பிரச்சனையோடு இணையும் போது ஏற்படுகிற அதிர்வலைகள் இந்த உன் எதிரில் ஒரு எதிரி.
    Ver libro
  • Ondu Arthapurna Satya - cover

    Ondu Arthapurna Satya

    Himamshu Joshi

    • 0
    • 0
    • 0
    ಖ್ಯಾತ ಹಿಂದಿ ಲೇಖಕ ಹಿಮಾಂಶು ಜೋಶಿ ಅವರ ಕಥಾ ಜಗತ್ತು ಅತ್ಯಂತ ವ್ಯಾಪಕ. ವಿವಿಧ ಆಯಾಮ ಗಳನ್ನೊಳಗೊಂಡ ಇವರ ಕೃತಿಗಳಲ್ಲಿ ಜೀವನದ ಯಥಾರ್ಥ ಸಹಜವಾಗಿ ಮೂಡಿ ಬಂದಿದೆ. ಇವರ ಸಜೀವ ಪಾತ್ರಗಳ ದರ್ಪಣದಲ್ಲಿ ಪ್ರತಿಬಿಂಬಿತಗೊಂಡಿರುವ ಜಗತ್ತು ಓದುಗನಿಗೆ ತನ್ನ ಸುತ್ತಮುತ್ತಲಿನದೇ ಎನಿಸ ತೊಡಗುತ್ತದೆ - ತನ್ನದೇ ಅನುಭೂತಿಗಳ ವಿವಿಧ ಬಿಂಬಗಳೆಂಬಂತೆ. ಇಂದಿನ ಕಥಾಜಗತ್ತಿನಲ್ಲಿ ತನ್ನದೇ ಆದ ಒಂದು ಸ್ಥಾನವನ್ನು ಗುರುತಿಸಿಕೊಂಡಿರುವ ಈ ಕತೆಗಳಲ್ಲಿ ಮುಂಬರುವ ನಾಳಿನ ಕತೆಗಳ ಸ್ವರೂಪದ ಹೊಳಹು ಕಾಣುತ್ತದೆ.
    
    "ಹಿಮಾಂಶು ಜೋಶಿ ಕೀ ಲೋಕಪ್ರಿಯ ಕಹಾನಿಯಾಂ" ಮತ್ತು "ಸಾಗರ್ ತಟ್ ಕೇ ಶಹರ್" - ಈ ಎರಡು ಕಥಾಸಂಕಲನಗಳಿಂದ ಆಯ್ದ ಹದಿನಾರು ಕತೆಗಳು ಲೇಖಕರ ಜೀವನಾನುಭವ ಹಾಗೂ ಅನುಭೂತಿಗಳಿಂದ ಮೂಡಿಬಂದಿರುವ ಸುಂದರ ಚಿತ್ರಗಳು. ತಮ್ಮ ಸುತ್ತಮುತ್ತಲಿನ ಪರಿಸರ - ವಿಶೇಷವಾಗಿ ಪರ್ವತ ಪ್ರದೇಶ, ಜನಜೀವನ, ಮಣ್ಣಿನ ಸೊಗಡು, ಹೆಣ್ಣಿನ ಬವಣೆ, ಸ್ವಾತಂತ್ರ್ಯ ಹೋರಾಟಗಾರರ ನೋವು ಹಾಗೂ ಹಿರಿಯ ನಾಗರಿಕರ ಅಸಹಾಯಕತೆ - ಇವುಗಳನ್ನು ನಾನಾ ರೂಪಗಳಲ್ಲಿ, ನಾನಾ ಬಣ್ಣಗಳಲ್ಲಿ ಚಿತ್ರಿಸಿದ್ದಾರೆ. ಕನ್ನಡದ ಓದುಗರ ಆಸ್ವಾದನೆಗಾಗಿ ಹಿಂದಿಕತೆಗಳನ್ನು ಅನುವಾದಿಸಿದವರು ಡಾ. ಜೆ. ಎಸ್. ಕುಸುಮಗೀತ.
    Ver libro
  • வெள்ளியங்காட்டான் கவிதைகள் மழலை - cover

    வெள்ளியங்காட்டான் கவிதைகள் மழலை

    வெள்ளியங்காட்டான்

    • 0
    • 0
    • 0
    வெள்ளியங்காட்டான் (1904 - 1991) என்னும் தமிழ்க் கவிஞரின் இயற்பெயர் என். கே. இராமசாமி. தன்னுடைய வாழ்க்கைப்பாட்டிற்காக விவசாயியாக, தையல்காரராக, ஆசிரியராக, இதழொன்றில் மெய்ப்புப் பார்ப்பவராக (Proof Reader) பணியாற்றியவர். பகுத்தறிவாளராக, ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைப் போராளியாக, கவிஞராக இனங்காணப்படுபவர். தன்னுடைய ஊரை அடியாகக்கொண்டு வெள்ளியங்காட்டான் என்னும் புனைப்பெயரில் கவிதைகள் எழுதினார். "ஒரு எழுச்சி, ஒரு நுழைவு, ஒரு நெகிழ்வு, ஒரு பொறி, ஒரு ஏக்கம், ஒரு வியப்பு, ஒரு தோற்றம், ஒரு மின்னல், இவற்றுக்கு வண்ணம் கொடுத்து வெளிப்படுத்தும் கவிதைக்கு "லிரிக்' என ஆங்கில இலக்கியத்தில் அடையாளம் கூறப்படுகிறது. வெள்ளியங்காட்டான் கவிதைகளைப் படித்தபோது "லிரிக்' கவிதைகளுக்கு வேண்டிய கனல் மூண்டிருப்பதைக் கண்டேன்” என்கிறார் கவிஞர் திரிலோக சீதாராம். "வயல் வெளிகளிலே அன்பு / வடிவ நெல்லெல்லாம் / சுயநல எருமை அந்தோ / சூறையாடுதே' என்ற வெள்ளியங்காட்டான் பாடலையும் இதர பாடல்களையும் குறிப்பிட்டு எளிமையும், உண்மையான உணர்ச்சியும் உள்ள பாடல்கள் வெள்ளியங்காட்டான் பாடல்கள் என பேராசிரியர் அ. சீனிவாசராகவன் குறிப்பிடுகிறார். “வெள்ளியங்காட்டானை யார் என்று எனக்குத் தெரியாது. அவர் பாடல்களோ எனக்கு பழக்கமிருக்கிறது. அவர் பாடல்களில் நாட்டின் பண்பு நன்றாக இருக்கிறது. உண்மைகளையே சொல்லியிருப்பதனால் பாட்டுகள் பொருளுடையனவாக இருக்கின்றன” என்கிறார் கொத்தமங்கலம் சுப்பு. 
    உணர்ச்சி வசப்படுபவன் கவிஞன். சத்தியத்திலும் சமத்துவத்திலும் பற்றுடையவன். சராசரி மனிதன் விலகிப் போக ஒதுக்க, கவிஞன் ஒதுங்கிப் போகிறான். உண்மையை உயிராகக் கொண்டவன் கவிஞன். அறமறிந்து ஒழுகுபவன். பிறரால் ஆளமுடியாதவன். தன்னைத் தான் ஆள்கிறவன். தலைவனை அறிந்து அடைந்தவன். மக்கள் மொழியில் விபத்தானதை சம்பத்து எனக் கொள்பவன். கவிஞனை இப்படி இனம் காண்கிறார் வெள்ளியங்காட்டான். அவருடைய கவிதைகளை ஐந்து ஒலி நூல்களாக பேராசிரியர் ரமணி அளிக்கிறார். இந்த மூன்றாவது ஒலிநூலில் மழலை என்ற துணைத்தலைப்பில் அவருடைய 12 கவிதைகள். 
     
    Ver libro
  • Policekaaranin Magal - cover

    Policekaaranin Magal

    Vaikom Mohammed Bashir

    • 0
    • 0
    • 0
    முற்போக்கு இலக்கியம் முதன்மையான நடைமுறையாக இருந்த காலப் பகுதியில் எழுத்தில் ஈடுபட்டவர் பஷீர். 'ஜீவன் சாஹித்ய பிரஸ்தானம்' (வாழ்விலக்கிய இயக்கம்) என்று அழைக்கப்பட்ட போக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தியவர்கள் பஷீர், தகழி சிவசங்கர பிள்ளை, பி. கேசவதேவ், பொன்குன்னம் வர்க்கி ஆகியோர். இவர்களின் எழுத்தில் புதுவகையை உருவாக்கியவர் பஷீர். நடைமுறை உலகை மாற்றிப் புதிய உலகைச் சமைப்பதற்கான அறைகூவலைப் பிற எழுத்தாளர்கள் முன்னிருத்தினர். இந்த முழுமையற்ற உலகத்தை மாற்றி முழுமையான உலகைப் படைப்பது பற்றிய கனவை முன்வைத்தார்கள். ஆனால் பஷீர் இந்த முழுமையற்ற உலகை நேசித்தவராக இருந்தார். தீமையும் கீழ்மையும்இந்த உலகின் உயிரோட்டமான அம்சங்கள் என்று உணர்ந்திருந்தார். நடைமுறை உலகத்தால் புறக்கணிக்கப்பட்டவர்களேஅவரது கதை மாந்தர்களாக இருந்தனர். அவர்களது வாழ்க்கையே அவருக்குக் கதை நிகழ்வுகளாக இருந்தன. பொறுக்கிகள், வேசிகள், திருடர்கள், முட்டாள்கள், பைத்தியங்கள், ஏமாற்றுப்பேர்வழிகள் எல்லாரும் அவருடைய அன்புக்குரிய பாத்திரங்களாக இருந்தார்கள்.அந்தப் பாத்திரங்கள்மீது வாசகரும் அன்பு பாராட்டக் கட்டாயப்படுத்தியதுதான் பஷீர் கலையின் வெற்றி.
    Ver libro
  • CN Annathurai Short Stories - cover

    CN Annathurai Short Stories

    C N Annathurai

    • 0
    • 0
    • 0
    சி என் அண்ணாதுரை 1934லிருந்து 1966 வரை  108 சிறுகதைகள் எழுதியிருக்கிறார்.  சமூக சீர்திருத்தமே லட்சியம் என்று தொடங்கிய திராவிட இயக்கங்களின் தளர்நடைப் பருவத்திலிருந்து திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்ற காலம்வரை எழுதப்பட்ட இந்தக் கதைகளில் சமூகத்தின் அனைத்துத் தளங்களிலிருந்தும் கதாபாத்திரங்கள் படைக்கப்பட்டிருக்கிறார்கள். அண்ணாவின் சிறுகதைகள் என்ற இந்த ஒலிநூலில் 108ல் 18 கதைகளுக்கு ஒலிவடிவம் தந்திருக்கிறேன். 
    CN Annathurai has written 108 short stories over a period of time. Full of earnestness for social reform, Anna's characters cut across several sections of the society of contemporary Tamilnadu during the days of early Dravidian social activism. In this volume of Anna's Short Stories we have the first eighteen stories. All the 108 stories have been published as audiobooks read by Dr.N.Ramani in 5 volumes. The stories in this volume are 
    1. கொக்கரகோ 2 பாமா விஜயம் 3 தங்கத்தின் காதலன் 4 வாலிப விருந்து 5 பேரன் பெங்களூரில் 6 பிரார்த்தனை 7 வள்ளித் திருமணம் 8 கைக்கு எட்டியது 9 நாக்கிழந்தார் 10 சரோஜா ஆறணா 11 இவர்கள் குற்றவாளிகளா? 12 உண்ணாவிரதம் ஒரு தண்டனை 13 சொல்லாதது 14 பள்ளியறையில் பரமசிவன் 15 ஜஸ்டிஸ் ஜானகி   16 கிருஷ்ண-லீலா 17 ஒரு வசீகர வரலாறு 18 தீர்ப்பளியுங்கள் சிக்கலான பிரச்சினை
    Ver libro
  • Meyyaram - cover

    Meyyaram

    Va Vu Chithamparampillai

    • 0
    • 0
    • 0
    "கப்பலோட்டிய தமிழன்" வ உ சிதம்பரம்பிள்ளை அவர்கள் ஒரு பன்முகர் என்பதைப் பலரும் அறிவதில்லை. சுதந்திரப் போராட்டத்தில் சிறை சென்று செக்கிழுத்த செம்மல் சீரியதொரு தொழிற்சங்கவாதி. கவிஞர். இலக்கியத் திறனாய்வாளர். அவருடைய கவிதை நூல்களை ஒலி நூலாக்கம் செய்தது ரமணியின் பாக்கியம். 
    நூல்கள் 
    வ.உ.சி. இயற்றிய நான்கு நூல்களுமே கவிதைகளால் ஆனவைதான். அவை 1.மெய்யறம் 2.மெய்யறிவு 3.பாடல் திரட்டு 4.சுயசரிதை 
    மெய்யறம்-1914 
    மெய்யறம் 125 அதிகாரங்களை உடையது. ஒவ்வொரு அதிகாரமும் 10 பாடல்களைக் கொண்டது. ஒரு பாடல் என்பது ஒரு வரி மட்டுமே உடையது. மெய்யறம் 5 பகுதிகளை உடையது. முதல் பகுதி மாணவர்களுக்கானது. அதில் 30 அதிகாரங்கள் உள்ளன. இரண்டாவது பகுதி இல்லறத்தார்களுக்கானது. அதுவும் 30 அதிகாரங்கள் உடையது. மூன்றாவது பகுதியில் ஓர் அரசன் எவ்வாறு இருக்க வேண்டும் என்று 50 அதிகாரங்களில் வ.உ.சி. விளக்குகிறார். நான்காவது பகுதி 10 அதிகாரங்களுடன் நன்னெறி குறித்து விளக்குகிறது. கடைசிப் பகுதியில் உண்மையை அடைவது எப்படி என்று 5 அதிகாரங்களில் வ.உ.சி. விளக்குகிறார்.
    Ver libro