¡Acompáñanos a viajar por el mundo de los libros!
Añadir este libro a la estantería
Grey
Escribe un nuevo comentario Default profile 50px
Grey
Suscríbete para leer el libro completo o lee las primeras páginas gratis.
All characters reduced
பூவும் நானும் வேறு - cover

பூவும் நானும் வேறு

ஆர்.மகேஸ்வரி

Editorial: Pocket Books

  • 0
  • 0
  • 0

Sinopsis

மகேந்திரன் கார்ப்பரேஷனில் கிளார்க்காக வேலை செய்து கொண்டிருக்கிறான்.நல்ல மனிதன், நல்ல கணவன், நல்ல தந்தை! குழந்தைகள் மீதும், அகிலா மீதும் அளவு கடந்த அன்பை வைத்திருக்கிறான். மனைவி சந்தோஷமும், குழந்தைகள் சந்தோஷமும்தான் அவனுக்கு முக்கியம்.அகிலா தனக்கு மனைவியாய் கிடைத்தது தன் முன்னோர்கள் செய்த புண்ணியம் என்றே கருதினான்.!மகேந்திரனுக்குப் பெற்றோர் இல்லை. தாய்மாமனின் பராமரிப்பில்தான் வளர்ந்து, படித்து, உத்யோகத்திற்குப் போனான்.அவர் தான் அகிலாவைப் பார்த்து கல்யாணம் செய்து வைத்தார்.அகிலா பேரழகி! அடர்த்தியான நீண்ட கூந்தல் அவள் முக அழகை இன்னும் அதிகப்படுத்திக் காட்டியது.மகேந்திரன் கறுப்பு! ஆனால் மனசு வெள்ளை. பார்க்க களையாக இருக்கும் சராசரி ஆண்மகன்.மாமா தனக்கு கிடைத்தற்கரிய பொக்கிஷமாய் அகிலாவைத் தேடிப்பிடத்து ஒப்படைத்திருப்பதாகக் கருதிய மகேந்திரன் அவளை உள்ளங்கையில் வைத்துத் தாங்கினான். அவளுக்கு என்னவெல்லாம் பிடிக்கும் என்பதறிந்து அவள் கேட்கும் முன்பே வாங்கி வந்து அவள் மகிழ்வதைப் பார்த்து பூரித்துப் போகும் அன்பான கணவன்.பதினோரு வருட தாம்பத்தியத்தில் அவன் ஒரு நாள் கூட, கடிந்தோ, முகம் சுருக்கியோ பேசியதில்லை. பெற்றோரை சிறிய வயதிலேயே இழந்து விட்ட மகேந்திரன் மனைவியை தாயாகவும் நேசித்தான்.நிஜத்தில் சொல்லப் போனால் மகேந்திரனை விட, அவனை கணவனாய் அடைந்த அகிலாதான் அதிஷ்டசாலி எனலாம்.அன்று அலுவலகத்தில் சம்பளத்தோடு சேர்த்து தீபாவளி போனஸும் தந்தனர்உடனே மகேந்திரன் அதை எப்படி செலவழிக்கலாம் என்று பட்ஜெட் போட ஆரம்பித்தான்...ஒரு குறிப்பிட்ட தொகையை ரேவதியின் கல்லூரிப் படிப்பிற்கு உதவும் திட்டத்தில் பேங்கில் போட்டான். மீதிப் பணத்தில் அகிலாவுக்கும், குழந்தைகளுக்கும் தீபாவளி பண்டிகைக்கென துணிகள் எடுத்தான். அகிலாவிற்குப் பிடித்த பாதாம் அல்வாவை அரைகிலோ வாங்கிக் கொண்டு உற்சாகமாய் வீட்டிற்கு வந்தான்.“அகில்... அகில்... மை டியர் அகில்”“என்ன... ஐயா ரொம்ப துள்ளிக் குதிச்சிட்டு வர்றீங்க?” சிரித்தபடி வெளிப்பட்ட அகிலா தன்னை விசேஷமாய் அலங்கரித்துக் கொண்டிருந்தாள். தலை நிறைய ஜாதி மல்லிகை ப்ரூட் பாடி ஸ்ப்ரேயின் நறுமணம். மெல்லிய ஷிபான் சேலை.“வாவ்!” என்று இடுப்பில் கைவைத்தபடி அவளை ஏற இறங்கப் பார்த்தான்.“என்ன அப்படிப் பார்க்கறீங்க?”“வாயடைக்க வச்சுட்டியே அகில்! ரேவதியும், ப்ரீத்தியும் - எங்கே?” அக்கம் பக்கம் பார்த்தபடி அவளை நெருங்கினான்.அவன் எண்ணத்தைப் புரிந்து கொண்ட அகிலா குறுஞ்சிரிப்புடன் பின்னே நகர்ந்தாள்.“வந்ததும் வராததுமா என்ன இதெல்லாம்? ரேவதி ட்யூஷனுக்குப் போயிருக்கா... ப்ரீத்தி பக்கத்து வீட்லே விளையாடிட்டிருக்கா...!”“அப்புறமென்ன?” இன்னும் நெருங்கினான்.“ஹலோ... சார்! நான் உங்க பொண்டாட்டி! எப்பவும் உங்க கூடவே இருக்கிற பொண்டாட்டி. இந்த விளையாட்டெல்லாம் நைட்ல வச்சுக்குங்க! உடம்பெல்லாம் கசகசன்னு இருக்கீங்க. மொதல்ல குளிச்சிட்டு வாங்க!” அவன் மார்பில் கைவைத்து விளையாட்டாய் தள்ளிவிட்டாள்.“ஹூம்...” பெருமூச்சு விட்டபடி பாத்ரூமை நோக்கி நகர்ந்தான்
Disponible desde: 13/01/2024.
Longitud de impresión: 100 páginas.

Otros libros que te pueden interesar

  • நேசம் மறவாத நெஞ்சமடி - Nesam Maravaatha Nenjamadi - cover

    நேசம் மறவாத நெஞ்சமடி - Nesam...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    "அதை இன்னும் கொஞ்சம் முன்னமே சொன்னா தான் என்னவாம்! கை வலிக்கிது..." என்று வாய்க்குள் முணுமுணுத்தாள்.  
    மீனாக்ஷியின் கூற்றில், அவளைப் பார்த்தபடியே வீரா மெலிதாக சிரித்து சிகாரைத் தரையில் எரிந்து தன் ஷூ காலால் மிதித்து அதன் நெருப்பை அணைத்தான். ஆனால் மீனக்ஷியால் அவனுள் மூண்ட நெருப்பு என்னவோ அணைய மறுத்தது. 
     "அடுத்த முறை, முட்டாள்களின் பேச்சைக் கேட்காத அளவுக்கு புத்திசாலித்தனமா நடந்துக்கோ..." என்று கூறியவன் குரலில் கிண்டல் நிறைந்திருந்தது. 
    அவன் கூற்றை சரியாக புரிந்து கொள்ளவே சில நொடிகள் பிடித்தது மீனாக்ஷிக்கு. 
    மீனாக்ஷி பதிலளிப்பதற்கு முன்பு, வீரா தனது பைக்கின் மீது காலை சுழற்றி அமர்ந்தவன் என்ஜினைத் ஆன் செய்தான். 
    வாகனத்தை கிளப்பும் முன், “வெல்கம் டு திஸ் காலேஜ்” என்று கூறியவன் கண்கள் அவள் மீது நிலைத்திருக்க அவள் பதிலை எதிர்பாராமல் வாகன இயந்திரத்தின் ஒலியுடன் சென்றுவிட்டான் வீரா.  
    மீனாக்ஷியின் இதயத் துடிப்பின் வேகம் கூடியது. அவள், வீரா... அவன் மேல் கோபப்படுகிறாளா, சங்கடப்படுகிறாளா அல்லது அவன் யாரென்று அறிய ஆர்வமாக இருக்கிறாளா? என்பதை அவளால் தீர்மானிக்க முடியவில்லை. 
    ஆனால் ஒரு விஷயம் மட்டும் உறுதியாக இருந்தது. வீரா அவளால் அவள் மனதில், என்றும் மறக்க முடியாத எண்ணத்தை விட்டுச் சென்றிருந்தான்... 
    “ஹே நிறுத்து நிறுத்து... அதென்ன? முதல் முதல்ல ஒரு பொண்ணை பாக்குற ஆண், இப்படியா சிகிரெட்டை ஊதிக்கிட்டு... வெறிச்சு வெறிச்சு பாப்பான்? இவனுங்களை தானே உங்களை மாதிரி பொண்ணுங்களுக்கெல்லாம் பிடிக்கிறது? அவனை ஹீரோன்னு வேற சொல்லிக்கிறீங்க... 
    என்னால இந்த மாதிரி இர்ரிடேட்டிங் ஸ்டோரி எல்லாம் கேக்க முடியாது. ச்சா... நான்சென்ஸ்...” என்று வர்மா மீனாக்ஷியை பொரிந்து தள்ளி கதையை பாதியில் இடை வெட்டினான்.
    Ver libro
  • நெஞ்சம் உன்னைக் கெஞ்சும் - Nenjam Unnai Kenjum - cover

    நெஞ்சம் உன்னைக் கெஞ்சும் -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    கண்களில் கண்ணீர் வழிந்தோடியது. "எனக்கு... என்னை உங்ககிட்ட இருந்து காப்பாத்திக்க வேற வழி தெரியலை... என்னை மன்னிச்சிடுங்க...” என்றாள் மீரா. “பின்ன ஏன் இந்தக் கண்ணீர்?” விக்ரம் குரல் சந்தேகமாக வெளி வந்தது. “அது... தெரியலை! நீங்க... உங்க கையில ரத்தத்தைப் பாத்ததும்.... சாரி, நான் திரும்பவும் சொல்றேன், உங்களை நான் காயப்படுத்த நினைக்கலை... ஆனா, நீங்க என்கிட்டே நடந்துகிட்ட முறை ரொம்ப தப்பு... ஒரு பொண்ணோட அனுமதி இல்லாம அவளை அடைய நினைக்கிறது, தப்பு. அது அவளோட கணவனாவே இருந்தாலும் சரி....” என்றாள் தலை குனிந்தபடி. 
     விக்ரம் மெதுவாக மூச்சை உள்ளே இழுத்து, காயம் இல்லாத தன் இடக்கையை வைத்து மீராவின் நாடி பிடித்து உயர்த்தி தன்னைப் பார்க்கச் செய்தவன், "அப்படின்னா நீ ஏன் இன்னும் இங்கேயே இருக்க? போயிடு... போ மீரா, என்கிட்டே இருந்து தப்பிச்சு போயிடு... திரும்ப என் கண் முன்னாடி வராத. 
     இந்த மாதிரி ஒரு சந்தர்ப்பத்தை நீ பயன் படுத்திக்கலேன்னா... உன்னால எப்பவுமே என்கிட்டே இருந்து தப்பிக்க முடியாது... இப்போ நான் சொன்ன இந்த வார்த்தை... இதை இந்த ஒரு முறைக்கு மேல என் கிட்ட இருந்து நீ எதிர்பாக்க முடியாது. போ... போயிடு” என்றான் குரலில் சற்றே கடுமை கூட்டி.... 
     மீராவின் முகம் மெல்ல புன்னகையில் விகசித்தது. “நிஜம்மாவா நான் போகலாமா? திரும்ப என்னை தொந்தரவு செய்ய மாட்டீங்களே?” என்றாள் நம்ப முடியாத பாவனையில். “ம்… ஹ்ம்ம்..... கண்டிப்பா... மாட்டேன்” என்றான் விக்ரமாதித்யன்.
    Ver libro
  • முற்றும் முதல் நீ எனக்கு - Mutrum Muthal Nee Enakku - cover

    முற்றும் முதல் நீ எனக்கு -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    வாழ்க்கையில் யாருடைய துணையும் இன்றி தன் லட்சியங்களை அடையத் துடிக்கும் நம் நாயகன் கதிர்முகிலனுக்கு தன் மனம் கவர்ந்த பெண் மயூரியால் தடைபடும் தன் இலட்சியத்தை, ஒருவர் மேல் ஒருவர் கொண்டுள்ள அதீத காதலால் எவ்வாறு முறியடித்தனர் என்பதை அறிய என்னோடு பயணியுங்கள் 'முற்றும் முதல் நீ எனக்கு'   
    Ver libro
  • உடன்பிறப்பு - Udanpirappu-Sirukathai - cover

    உடன்பிறப்பு -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    உடன்பிறப்பு
    Ver libro
  • Meendum Jeeno - cover

    Meendum Jeeno

    Sujatha

    • 0
    • 0
    • 0
    முற்றிலும் விஞ்ஞானமயமாக்கப்பட்ட வேறொரு உலகம், அந்த உலகத்தை ஆளும் பொம்மை ராணி நிலா. அவளைப் பின்னாலிருந்து ஆட்டுவிக்கும் ரவி, மனோ இருவர் கையில் ஒட்டுமொத்த அதிகாரமும் இருக்க, இயந்திர நாயான ஜீனோ, நிலாவுக்கு உதவ தன் ஒட்டு மொத்தத் தந்திரங்களையும் மூளையையும் பிரயோகிக்கிறது. ஜீனோவுக்கும் எதிரிகளுக்கும் இடையில் நடக்கும் போரின் முடிவு என்ன என்பதுதான் இந்த நாவல்.
    Ver libro
  • வாழ்வின் முதல் காதலா! நீதானா - Vaalvin Muthal Kadhalaa Neethaanaa - cover

    வாழ்வின் முதல் காதலா! நீதானா -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    “வெற்றி, நேத்து கிளப்ல பேசீட்டு இருக்கும் போது உனக்கு பொண்ணு பாக்கனுன்னு தான் ஒரு பே...ச்சுக்கு சொன்னேன். உடனே நம்ம ராஜி இருக்காளே, அவ பொண்ணு கூட ஏதோ மாடலிங் பண்ணீட்டு இருக்கான்னு... 
    நீ கூட நம்ப கம்பெனி விளம்பரத்துக்கு நடிக்க ஒரு வாய்ப்பு கொடுத்தியே.. அவ பேர் கூட...என்னம்மோ...” என்று நெற்றியை தட்டி தெரியாதது போல் இழுத்தவரிடம், 
    செய்தித் தாளைப் புரட்டியபடியே, “மிதுல்லா...” என்று அலட்டாமல் கூறியவனிடம், 
    “ஆஹ்... மிதுல்லா, நல்ல பேர். பாத்தியா ரெண்டு மூணு தடவை பாத்த உனக்கே அவளோட பேர் ஞாபகம் இருக்கு. அவ்வளவு சுலபமா அவளை மறக்க முடியுமா? எவ்ளோ அழகு அந்த பொண்ணு... 
    ம்ம்... வெற்றி, அவளுக்கு உன்னை கல்யாணம் பண்ண கேட்டாபா ராஜி. அழகு, அறிவு, திறமை எல்லாம் இருக்கு அவகிட்ட. 
    நம்ம வீட்டுக்கு ஏத்த பொண்ணு டா அவ. அதுவும் உனக்கு ரொம்ப பொருத்தமா இருப்பா. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. நீ என்ன சொல்ற வெற்றி?” என்று மகனின் முகத்தை ஆர்வமாக பார்த்து வினவினார் கற்பகாம்பாள். 
    செய்தித் தாளை மூடி மேஜையில் வைத்தவன், கற்பகாம்பாள் புறம் திரும்பி, “ம்ம்.. நல்ல அழகான பொண்ணு தான். நல்ல திறமையா நடிச்சா. ரொம்ப அறிவா பேசுனா தான். 
    ஆனா, ரொம்ப அதிகமா பேசுவாளே... அதுவுமில்லாம அவ யாருமில்லாத அநாதை இல்லை. நீங்க சொல்றது எதையும் அப்படியே கேக்கவும் மாட்டா. உங்களை எதித்து கேள்வி கேப்பா... 
    அவ இஷ்டத்துக்கு உங்களால இருக்க விட முடியுமா? முக்கியமா... உங்களுக்குத் தான் வாய் பேசாத முடியாத ஊமை பொண்ணு தானே மருமகளா வர பிடிக்கும்....” என்றவன் எழுந்து அவன் அணிந்திருந்த வெண்ணிற பருத்தி உடை பாக்கெட்டில் கைகளை நுழைத்த படி வினவ, 
    “என்னடா குத்தி பேசுறியா?” என்று கற்பகாம்பாள் வெற்றியை முறைக்க, 
    “என்னடா குத்தி பேசுறியா?” என்று கற்பகாம்பாள் வெற்றியை முறைக்க, 
    “இல்லையே நேரா தான் கேக்குறேன்.” என்றவன் பதில் தெளிவாக வந்து விழுந்தது.
    Ver libro