¡Acompáñanos a viajar por el mundo de los libros!
Añadir este libro a la estantería
Grey
Escribe un nuevo comentario Default profile 50px
Grey
Suscríbete para leer el libro completo o lee las primeras páginas gratis.
All characters reduced
மனம் விரும்புதே உன்னை - cover

மனம் விரும்புதே உன்னை

ஆர்.மகேஸ்வரி

Editorial: Pocket Books

  • 0
  • 0
  • 0

Sinopsis

தெருவிளக்குகள் எரிய ஆரம்பித்திருந்தன.பூரணி ஹாலின் மூலையில் செருப்பை கழற்றி வைக்கப் போன போதுதான் கவனித்தாள் அங்கு இன்னொரு ஜோடி செருப்பிருந்தது.பூரணி கண்கள் சுருக்கி யோசனையோடு உள்ளே நுழைந்தபோது தெரிந்து போனது.விஜயலட்சுமி வந்திருந்தாள். சிவக்குமாரின் அம்மா!விசாலாட்சி எதையோ சொல்லி சிரித்தபடி பேசிக் கொண்டிருந்தாள். விமலா அவர்கள் முன் தட்டில் சாப்பிட போண்டாவும் காபியும் கொண்டு வந்து வைத்தாள். முதலில் விஜயலட்சுமிதான் பூரணியைப் பார்த்தாள்.“வாம்மா... பூரணி!” என்று வாஞ்சையோடு அழைத்தாள்.பூரணி தலைகுனிந்தபடி ஏதும் பேசாமல் அவர்களைத் தாண்டி செல்ல முற்பட்டபோது விஜயலட்சுமி அவள் கையைப் பற்றினாள்.“உக்காரு பூரணி!” வேறு வழியின்றி அமர்ந்தாள்.“உன்னைப் பார்க்கறதுக்காக... ஒரு மணி நேரமா காத்துக்கிட்டிருக்காங்க உங்க அத்தை! ஏம்மா லேட்டு?” என்றாள் விசாலாட்சி.அம்மாவை ஒரு கணம் முறைத்தவள் விஜயலட்சுமி பக்கம் பார்வையைத் திருப்பினாள்.“என்ன விஷயம்?” பூரணி பளிச்சென்று கேட்கவும் அந்தம்மாள் கொஞ்சம் தடுமாறித்தான் போனாள்.“ஒண்ணுமில்லேம்மா! உன்னைப் பார்க்கறதுக்கு ஏதாவது காரணத்தை தூக்கிட்டு வரணுமா? உன்னைப் பார்க்கணும் போல இருந்துச்சு! அதோட... சிவக்குமார். வேலை விஷயமா கேரளா போய் வந்தான். உனக்குநேந்திரங்காய் சிப்ஸ் பிடிக்கும்னு உங்கண்ணன் மூலமா தெரிஞ்சு வச்சிக்கிட்டு... உனக்காக வாங்கிட்டு வந்தான். இந்தா பூரணி” என்றபடி ஒரு கிலோ பாக்கெட்டை அவளிடம் நீட்டினாள்.பூரணி அதை வாங்காமல் வெறித்துப் பார்த்தாள்.“வாங்கிக்க பூரணி!” என்றாள் விசாலாட்சி.மௌனமாய் வாங்கிக் கொண்டாள்.“எங்க வீட்டுக்கு நீ சீக்கிரம் வரணும் பூரணி எனக்கு சிவக்குமார் ஒரே பையன்தான்! அவனும் ஆபீஸ்க்கு போயிடறான் நான் தனியா வீட்லே இருக்க வேண்டியிருக்கு. நீ வந்த பிறகு தான் அந்த வீடு கலகலன்னு இருக்கும்!”‘இருக்கும்... இருக்கும்.’ என்றெண்ணிக் கொண்டாள் பூரணி.“சம்பந்தியம்மா... முதல்ல போண்டா சாப்பிடுங்க. ஆறிப் போகுது!” என்றாள் விசாலாட்சி.“பூரணி... நீயும் சேர்ந்து சாப்பிடேன்!”“இல்லே... வேண்டாம். ஆபீஸ் கேன்ட்டீன்ல சாப்பிட்டுட்டுதான் வந்தேன் நான் முகம் கழுவணும்!” என்றபடி எழுந்து விட்டாள்.“கேன்ட்டீன்ல சாப்பிட்டு உடம்பை கெடுத்துக்காதே பூரணி” விஜயலட்சுமி சொல்லிக் கொண்டிருக்கும் போதே அங்கிருந்து சென்று விட்டாள்.விசாலாட்சிக்கே என்னமோப் போலாகி விட்டது.“தப்பா நினைச்சுக்காதீங்க! அவ குழந்தை மாதிரி. அவ யதார்த்தமாதான்...”“அடடா... எதுக்கு பெரிய வார்த்தையெல்லாம் பேசிக்கிட்டு? நான் தப்பா நினைச்சுக்கலியே நானும் பொண்ணுதானே? அவமனசை என்னால் புரிஞ்சுக்க முடியுது. பள்ளமாகிப்போன இதயத்துல அன்பால பூசி மெழுகிடுவேன். அந்த நம்பிக்கை எனக்கிருக்கு. அவ புரிஞ்சுக்கறதுக்கு பழகிக்கறதுக்கு கொஞ்ச நாளாகும்அது எல்லா பொண்ணுங்களுக்கும் உள்ள ஆரம்ப பிரச்சனைதானே? நீங்க இந்த விஷயத்தை பெரிசுபடுத்தறதுதான் எனக்குப் பிடிக்கலே!”விசாலாட்சியின் கண்கள் கண்ணீரில் தளும்பின.“என் பொண்ணை இப்படி நடுக்கடல்ல தள்ளிவிட்டுட்டியேன்னு கடவுளை தினந்தோறும் பழி சொல்லி சண்டை போட்டுக்கிட்டிருந்தேன். ஆனா, அந்த கடவுளே இப்ப உங்க ரூபத்துலே வந்திருக்கு. என் பொண்ணை கடவுள் கைவிடலே! அவ செஞ்ச புண்ணியம் நீங்க அவளுக்கு மாமியாரா கிடைச்சிருக்கீங்க!”“சேச்சே... என்னைப் போய் கடவுள், கடவுள்னு. விமலா! போண்டா நீயா செஞ்சே? அருமையா மெது மெதுன்னு இருக்கு. இன்னொன்னு சாப்பிடணும்ணு ஆசையா தான் இருக்கு. ஆனா, என் பேரப்பிள்ளைகளையெல்லாம் கொஞ்சறதுக்கு கடவுள் எனக்கு ஆயுளைத் தரணும். இதை அதிகமா சாப்பிட்டா எனக்கு மூச்சிரைக்கும்!” சிரித்தபடி சொன்னாள்.“ஏம்மா அப்படி சொல்றீங்க? உங்க பேரப்பிள்ளைங்களுக்கு கல்யாணம் பண்ணி அதுங்களும் குழந்தைங்க பெத்துக்கறதையும் பார்க்கத்தான் போறீங்க!” என்றாள் விமலா.“என்னம்மா... நல்லாருக்கீங்களா?” என்ற குரல் கேட்டு மூவரும் வாசல் பக்கம் திரும்பினர்.அன்னம்மாள் நின்றிருந்தாள்.அந்த நேரத்தில் அந்த இடத்தில் அவளை எதிர்பார்க்கவில்லை விசாலாட்சி.“வா... வாங்க” என்றாள்.“பூரணி எங்கே? ஆபீஸ்லேர்ந்து வந்துட்டாளா?” அன்னம்மாளின் கண்கள் பூரணியைத் தேடியது.விஜயலட்சுமி புருவம் சுருக்கி வந்த பெண்மணியைப் பார்த்தாள்.விசாலாட்சி மரியாதை நிமித்தமாக அவர்களை அறிமுகப்படுத்தியாக வேண்டிய கட்டாயம்.“இவங்க... பூரணியோட மாமியார்!” என்றாள் விஜயலட்சுமியிடம்.“வணக்கம்மா!” என்று கைகூப்பினாள்வணக்கம்! நீங்க?” என்றாள் அன்னம்மாள்.
Disponible desde: 13/01/2024.
Longitud de impresión: 43 páginas.

Otros libros que te pueden interesar

  • வாழ்வின் முதல் காதலா! நீதானா - Vaalvin Muthal Kadhalaa Neethaanaa - cover

    வாழ்வின் முதல் காதலா! நீதானா -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    “வெற்றி, நேத்து கிளப்ல பேசீட்டு இருக்கும் போது உனக்கு பொண்ணு பாக்கனுன்னு தான் ஒரு பே...ச்சுக்கு சொன்னேன். உடனே நம்ம ராஜி இருக்காளே, அவ பொண்ணு கூட ஏதோ மாடலிங் பண்ணீட்டு இருக்கான்னு... 
    நீ கூட நம்ப கம்பெனி விளம்பரத்துக்கு நடிக்க ஒரு வாய்ப்பு கொடுத்தியே.. அவ பேர் கூட...என்னம்மோ...” என்று நெற்றியை தட்டி தெரியாதது போல் இழுத்தவரிடம், 
    செய்தித் தாளைப் புரட்டியபடியே, “மிதுல்லா...” என்று அலட்டாமல் கூறியவனிடம், 
    “ஆஹ்... மிதுல்லா, நல்ல பேர். பாத்தியா ரெண்டு மூணு தடவை பாத்த உனக்கே அவளோட பேர் ஞாபகம் இருக்கு. அவ்வளவு சுலபமா அவளை மறக்க முடியுமா? எவ்ளோ அழகு அந்த பொண்ணு... 
    ம்ம்... வெற்றி, அவளுக்கு உன்னை கல்யாணம் பண்ண கேட்டாபா ராஜி. அழகு, அறிவு, திறமை எல்லாம் இருக்கு அவகிட்ட. 
    நம்ம வீட்டுக்கு ஏத்த பொண்ணு டா அவ. அதுவும் உனக்கு ரொம்ப பொருத்தமா இருப்பா. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. நீ என்ன சொல்ற வெற்றி?” என்று மகனின் முகத்தை ஆர்வமாக பார்த்து வினவினார் கற்பகாம்பாள். 
    செய்தித் தாளை மூடி மேஜையில் வைத்தவன், கற்பகாம்பாள் புறம் திரும்பி, “ம்ம்.. நல்ல அழகான பொண்ணு தான். நல்ல திறமையா நடிச்சா. ரொம்ப அறிவா பேசுனா தான். 
    ஆனா, ரொம்ப அதிகமா பேசுவாளே... அதுவுமில்லாம அவ யாருமில்லாத அநாதை இல்லை. நீங்க சொல்றது எதையும் அப்படியே கேக்கவும் மாட்டா. உங்களை எதித்து கேள்வி கேப்பா... 
    அவ இஷ்டத்துக்கு உங்களால இருக்க விட முடியுமா? முக்கியமா... உங்களுக்குத் தான் வாய் பேசாத முடியாத ஊமை பொண்ணு தானே மருமகளா வர பிடிக்கும்....” என்றவன் எழுந்து அவன் அணிந்திருந்த வெண்ணிற பருத்தி உடை பாக்கெட்டில் கைகளை நுழைத்த படி வினவ, 
    “என்னடா குத்தி பேசுறியா?” என்று கற்பகாம்பாள் வெற்றியை முறைக்க, 
    “என்னடா குத்தி பேசுறியா?” என்று கற்பகாம்பாள் வெற்றியை முறைக்க, 
    “இல்லையே நேரா தான் கேக்குறேன்.” என்றவன் பதில் தெளிவாக வந்து விழுந்தது.
    Ver libro
  • En Iniya Iyandhira - cover

    En Iniya Iyandhira

    Sujatha

    • 0
    • 0
    • 0
    சுஜாதா எண்பதுகளில் ஆனந்த விகடனில் எழுதிய விஞ்ஞானத் தொடர்கதை. கி.பி 2022-ல் நடப்பதான இந்தக் கதையில் 'ஜீனோ' என்கிற ரோபாட் நாய்தான் கதாநாயகன். கதையில் வேறு கதாநாயகனே கிடையாது! இந்தியாவில் 'ஜீவா' என்னும் மகத்தான மெஸ்ஸையாவின் ஆட்சி நடைபெறுகிறது. தேசத்தில் லஞ்சம் கிடையாது. கவிதை கிடையாது. பாட்டு, கூத்து, பண்பாடு ஒன்றுக்கும் அனுமதி கிடையாது. தன்னிச்சையாக பிள்ளை பெற்றுக்கொள்ளக்கூட அனுமதி கிடையாது. ஐம்பது வயதுக்கு மேல் வாழ்க்கை நீடிப்பும் கிடையாது. இத்தகைய இயந்திரமயமான தேசத்தில் நிலா என்னும் குடிமகளின் கணவன் சிபி காணாமல் போய்விடுகிறான். ஜீவாவை எதிர்க்கும் புரட்சிக் கும்பலில் ஒருவனான ரவி, அவனது இயந்திர நாயான ஜீனோ இருவரும் நிலாவுக்கு உதவியாக இணைகின்றனர். நிலா - ஜீனோ கூட்டணி அரசாங்கத்தையே அசைத்துப் பார்க்கிறது.
    Ver libro
  • Idamum Valamum Alaivuru Sirusudar - இடமும் வலமும் அலைவுறு சிறுசுடர் - cover

    Idamum Valamum Alaivuru...

    B.R. Mahadevan

    • 0
    • 0
    • 0
    Auto fiction Novel: இடமும் வலமும் அலைவுறு சிறுசுடர் A proud Aurality tamil audio book production ebook by Swasam Publications. Download FREE Aurality app now on play store and or iphone ios store தீவிரமான கருத்துகளும் சுயமான சிந்தனையும் கொண்ட இளைஞன் தனது கனவுலகைத் தேடி மேற்கொள்ளும் அலைச்சலே இந்த நாவல். மதத் தத்துவங்கள் அவனைத் துரத்துகின்றன. அரசியல் கொள்கைகள் அவனைக் குழப்புகின்றன. மாயமான் வேட்டையில் நிதர்சனத்தைப் புரிந்துகொண்டு, இதுவே நம் பாதை என்று அவன் ஒரு முடிவுக்கு வரும்போது காத்திருக்கிறது இன்னொரு மாயமான். எல்லாவற்றையும் கேள்விகளால் எதிர்கொள்ளும் ஓர் இளைஞனின் பேரலைச்சலை ரத்தமும் சதையுமாக, கொஞ்சம் புனைவுடன் நிறைய உண்மைகளுடன் எழுதி இருக்கிறார் B.R.மகாதேவன். அரசியல் என்ற பெயரிலும், ஆன்மிகம் என்ற பெயரிலும், மதம் என்ற பெயரிலும் இந்தச் சமூகம் தனக்குக் கற்பிக்கும் அனைத்தையும் கேள்விகளால் அடித்து நொறுக்கி தன் அடுத்த பயணத்துக்குக் காத்திருக்கும் இந்த இளைஞன், நிச்சயம் உங்களை அசைத்துப் பார்ப்பான். எழுத்தாளர் B.R.மகாதேவன் எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்
    Ver libro
  • நாணலே நங்கையானால் - Naanale Nangaiyaanaal? - cover

    நாணலே நங்கையானால் - Naanale...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுள் ஒன்றை வைத்து, அழகான காதல் கதையின் மூலம் வாசிப்பவர்களுக்கு சுவாரஸ்யம் ஊட்டும் வகையில், பலவித திடீர் திருப்பங்களுடனும் சுவாரஸ்யங்களுடனும் கதையை எளிமையாக விளக்க முயன்றிருக்கிறேன். 
    Ver libro
  • Meendum Jeeno - cover

    Meendum Jeeno

    Sujatha

    • 0
    • 0
    • 0
    முற்றிலும் விஞ்ஞானமயமாக்கப்பட்ட வேறொரு உலகம், அந்த உலகத்தை ஆளும் பொம்மை ராணி நிலா. அவளைப் பின்னாலிருந்து ஆட்டுவிக்கும் ரவி, மனோ இருவர் கையில் ஒட்டுமொத்த அதிகாரமும் இருக்க, இயந்திர நாயான ஜீனோ, நிலாவுக்கு உதவ தன் ஒட்டு மொத்தத் தந்திரங்களையும் மூளையையும் பிரயோகிக்கிறது. ஜீனோவுக்கும் எதிரிகளுக்கும் இடையில் நடக்கும் போரின் முடிவு என்ன என்பதுதான் இந்த நாவல்.
    Ver libro
  • Choza Sooriyan - சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் - cover

    Choza Sooriyan - சோழன் தலைகொண்ட...

    Siraa

    • 0
    • 0
    • 0
    Description 
    சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் - Part 1 சோழ இளவரசனான உத்தம சீலியுடன் நடந்த யுத்தத்திற்குப் பின், பாண்டிய நாட்டைக் கைப்பற்றினான் வீரபாண்டியன். ஒரு போருக்குப் பின் ஒரு மன்னன் தன் நாட்டை மீட்டெடுப்பது அத்தனை சுலபமல்ல. அது எத்தனை கடினமானது என்பதை, கற்பனை கலந்து கல்வெட்டுத் தரவுகளுடன் எழுதி இருக்கிறார் சிரா. சோழனோ பாண்டியனோ, தோல்வியுற்ற மன்னனுக்கும் பெரிய நாடு இருக்கும். அவனைக் கடவுள் என்று கொண்டாடிய மனிதர்கள் இருப்பார்கள். ஒரு போரில் தோல்வியுற்றான் என்ற காரணத்துக்காக அந்த மன்னன் வீரம் இல்லாதவன் என்று அர்த்தமில்லை. ஒரு மாபெரும் அரசனைத் துணிவுடன் எதிர்த்து நிற்க இன்னொரு மாவீரனால்தான் முடியும். அப்படி சோழம் என்ற ஒரு பெரும் தேசத்தை எதிர்க்கத் துணிந்த ஓர் உன்னத வீரனைப் பற்றிய கதை இது. பல்வேறு ஆதாரங்களை மையமாக வைத்து எழுதப்பட்டிருக்கும் சுவராஸ்யமான வரலாற்று நாவல். எழுத்தாளர் சிரா எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம். A proud Aurality production
    Ver libro