¡Acompáñanos a viajar por el mundo de los libros!
Añadir este libro a la estantería
Grey
Escribe un nuevo comentario Default profile 50px
Grey
Suscríbete para leer el libro completo o lee las primeras páginas gratis.
All characters reduced
இடுப்பு சிறுத்தவளே… - cover

இடுப்பு சிறுத்தவளே…

ஆர்.மகேஸ்வரி

Editorial: Pocket Books

  • 0
  • 0
  • 0

Sinopsis

சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் களைகட்டி இருந்தது. மக்கள் பரபரப்புடன் இங்கும் அங்குமாய் ஓடிக்கொண்டு இருந்தார்கள். காரணம்... டெல்லியில் இருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருக்கும் விரைவு ரெயில் இன்னும் பத்து நிமிடங்களில் சென்னைக்கு வந்து சேரும் என்ற அறிவிப்புதான்.இளம் நீலநிற சல்வாரில்... தன் தோழியின் வருகையை எதிர்நோக்கிக் காத்திருந்தாள் பிரியங்கா!முகத்தைக் கழுவி துடைத்தபடி தன் இருக்கையில் வந்து அமர்ந்த சித்தரஞ்சனை ஏறிட்டார் பரணிதரன்.“கொஞ்சம் பவுடர் போட்டுக்க சித்து! சென்னையிலே பொண்ணுங்க ரொம்ப அழகாய் இருப்பாங்களாம்!” என்றார் கிண்டலாய்.“ஐம்பது வயசானாலும் குறும்பு போகலேப்பா உங்களுக்கு! இந்த வயசிலேயே இவ்வளவு விளையாடறவர் என் வயசிலே எப்படியெல்லாம் ஆட்டம் போட்டு இருப்பீங்களோ?”“அதை என் கேட்கறே? உன் வயசிலே நான் உன்னைவிடவும் அழகா இருப்பேனாக்கும்! பொண்ணுங்களோட கூட்டம் என்னைச் சுற்றி எப்பவும் இருக்கும். நான் காதலிக்க மாட்டேனான்னு ஏக்கமா வருவாளுங்க... எனக்கும் காதலிச்சிக் கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசைதான்! ஆனால், விதி யாரைவிட்டது? சின்ன வயசிலே இருந்தே.... விசாலத்துக்குப் பரணிதான், பரணிதரனுக்கு விசாலம்னு எங்க அப்பா மிரட்டி மிரட்டி வளர்த்துட்டார். வேற வழி இல்லாம மனசையும், கண்ணையும் பொத்திக்க வேண்டியதாப் போயிடுச்சு. கடைசியில் உங்க அம்மாவையே கட்டிக்கிட்டேன். நீயும் பொறந்தே! சாமியாராட்டம் வளர்ந்துட்டே!”“போதும்ப்பா... நான் உங்ககிட்டே இந்தக் கேள்வியை கேட்டிருக்கக்கூடாது. சென்னை வந்தாச்சு. பை, பெட்டியைச் சரிபார்த்து எடுத்துக்குங்க...” என்றான் செல்லமாய்ச் சலித்தபடிஅப்பவே எல்லாம் எடுத்து வச்சாச்சு. ஏன் சித்து எல்லாத்தையும் சீரியசா எடுத்துக்கறே....? ஜாலியா எடுத்துக்க...!”“அய்யோ.... நான் சீரியசா எடுத்துக்கலேப்பா... அந்த தண்ணி பாட்டிலை மட்டும் என் கையிலே கொடுத்திடுங்க!”“டெல்லி வெயில் உன்னைத் தாகப் பறவையா மாத்திடுச்சி! எப்பவும் பாட்டிலும், கையுமா அலையரே... அதாவது... தண்ணி பாட்டிலைச் சொல்றேன்...”சித்தரஞ்சன் அப்பாவின் பேச்சை ரசித்தபடி அவர் நீட்டிய தண்ணீர் பாட்டிலை வாங்கிக்கொண்டான். .அடுத்த இரண்டாவது நிமிடம் விரைவு ரெயில், சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் வந்து நின்றது. பரணிதரன், பெட்டிகளைச் சுமந்தபடி இறங்கி நடந்தார்.“ஏம்ப்பா... அத்தனை பையையும் சுமக்கறீங்க...? அந்தத் தோல் பையையும், பெட்டியையும் இப்படிக் கொடுங்க!”“இது அந்தக் காலத்து உரமேறிய உடம்பு! அதுவும் காவிரித் தண்ணியை குடிச்சு வளர்ந்த உடம்பு! தண்ணி பாட்டில் குடிக்கிற பசங்களால ஒரே ஒரு தோல் பையை மட்டும்தான் சுமக்க முடியும். நீ இந்த ஒரு பையை மட்டும் எடுத்துக்கிட்டு வா! அதற்குள் நான் கார் பிடிச்சிடுறேன்!” என்றபடி மிடுக்கான நடையுடன் சென்றார்.பரணிதரன் எப்பவும் இப்படித்தான்! ஒரே மகன் சித்தரஞ்சன் மீது கொள்ளை பாசம் வைத்திருந்தார். அவனை ஒரு வேலையும் செய்யவிடமாட்டார். இப்படி அப்படி என்று கிண்டல் செய்து அவனை ஒரு ஓரமாய் உட்கார வைத்துவிட்டு எல்லாவற்றையும் தானே செய்வார்.அப்பாவை நினைத்து சித்தரஞ்சன் தனக்குத்தானே சிரித்தபடி, மக்கள் வெள்ளத்தில் நீந்திக்கொண்டிருந்தான்.பிரியங்கா முதல் வகுப்புப் பெட்டியை நோக்கி விரைந்து நடந்தாள்
Disponible desde: 13/01/2024.
Longitud de impresión: 81 páginas.

Otros libros que te pueden interesar

  • நாணலே நங்கையானால் - Naanale Nangaiyaanaal? - cover

    நாணலே நங்கையானால் - Naanale...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுள் ஒன்றை வைத்து, அழகான காதல் கதையின் மூலம் வாசிப்பவர்களுக்கு சுவாரஸ்யம் ஊட்டும் வகையில், பலவித திடீர் திருப்பங்களுடனும் சுவாரஸ்யங்களுடனும் கதையை எளிமையாக விளக்க முயன்றிருக்கிறேன். 
    Ver libro
  • Meendum Jeeno - cover

    Meendum Jeeno

    Sujatha

    • 0
    • 0
    • 0
    முற்றிலும் விஞ்ஞானமயமாக்கப்பட்ட வேறொரு உலகம், அந்த உலகத்தை ஆளும் பொம்மை ராணி நிலா. அவளைப் பின்னாலிருந்து ஆட்டுவிக்கும் ரவி, மனோ இருவர் கையில் ஒட்டுமொத்த அதிகாரமும் இருக்க, இயந்திர நாயான ஜீனோ, நிலாவுக்கு உதவ தன் ஒட்டு மொத்தத் தந்திரங்களையும் மூளையையும் பிரயோகிக்கிறது. ஜீனோவுக்கும் எதிரிகளுக்கும் இடையில் நடக்கும் போரின் முடிவு என்ன என்பதுதான் இந்த நாவல்.
    Ver libro
  • Choza Sooriyan - சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் - cover

    Choza Sooriyan - சோழன் தலைகொண்ட...

    Siraa

    • 0
    • 0
    • 0
    Description 
    சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் - Part 1 சோழ இளவரசனான உத்தம சீலியுடன் நடந்த யுத்தத்திற்குப் பின், பாண்டிய நாட்டைக் கைப்பற்றினான் வீரபாண்டியன். ஒரு போருக்குப் பின் ஒரு மன்னன் தன் நாட்டை மீட்டெடுப்பது அத்தனை சுலபமல்ல. அது எத்தனை கடினமானது என்பதை, கற்பனை கலந்து கல்வெட்டுத் தரவுகளுடன் எழுதி இருக்கிறார் சிரா. சோழனோ பாண்டியனோ, தோல்வியுற்ற மன்னனுக்கும் பெரிய நாடு இருக்கும். அவனைக் கடவுள் என்று கொண்டாடிய மனிதர்கள் இருப்பார்கள். ஒரு போரில் தோல்வியுற்றான் என்ற காரணத்துக்காக அந்த மன்னன் வீரம் இல்லாதவன் என்று அர்த்தமில்லை. ஒரு மாபெரும் அரசனைத் துணிவுடன் எதிர்த்து நிற்க இன்னொரு மாவீரனால்தான் முடியும். அப்படி சோழம் என்ற ஒரு பெரும் தேசத்தை எதிர்க்கத் துணிந்த ஓர் உன்னத வீரனைப் பற்றிய கதை இது. பல்வேறு ஆதாரங்களை மையமாக வைத்து எழுதப்பட்டிருக்கும் சுவராஸ்யமான வரலாற்று நாவல். எழுத்தாளர் சிரா எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம். A proud Aurality production
    Ver libro
  • நேசம் மறவாத நெஞ்சமடி - Nesam Maravaatha Nenjamadi - cover

    நேசம் மறவாத நெஞ்சமடி - Nesam...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    "அதை இன்னும் கொஞ்சம் முன்னமே சொன்னா தான் என்னவாம்! கை வலிக்கிது..." என்று வாய்க்குள் முணுமுணுத்தாள்.  
    மீனாக்ஷியின் கூற்றில், அவளைப் பார்த்தபடியே வீரா மெலிதாக சிரித்து சிகாரைத் தரையில் எரிந்து தன் ஷூ காலால் மிதித்து அதன் நெருப்பை அணைத்தான். ஆனால் மீனக்ஷியால் அவனுள் மூண்ட நெருப்பு என்னவோ அணைய மறுத்தது. 
     "அடுத்த முறை, முட்டாள்களின் பேச்சைக் கேட்காத அளவுக்கு புத்திசாலித்தனமா நடந்துக்கோ..." என்று கூறியவன் குரலில் கிண்டல் நிறைந்திருந்தது. 
    அவன் கூற்றை சரியாக புரிந்து கொள்ளவே சில நொடிகள் பிடித்தது மீனாக்ஷிக்கு. 
    மீனாக்ஷி பதிலளிப்பதற்கு முன்பு, வீரா தனது பைக்கின் மீது காலை சுழற்றி அமர்ந்தவன் என்ஜினைத் ஆன் செய்தான். 
    வாகனத்தை கிளப்பும் முன், “வெல்கம் டு திஸ் காலேஜ்” என்று கூறியவன் கண்கள் அவள் மீது நிலைத்திருக்க அவள் பதிலை எதிர்பாராமல் வாகன இயந்திரத்தின் ஒலியுடன் சென்றுவிட்டான் வீரா.  
    மீனாக்ஷியின் இதயத் துடிப்பின் வேகம் கூடியது. அவள், வீரா... அவன் மேல் கோபப்படுகிறாளா, சங்கடப்படுகிறாளா அல்லது அவன் யாரென்று அறிய ஆர்வமாக இருக்கிறாளா? என்பதை அவளால் தீர்மானிக்க முடியவில்லை. 
    ஆனால் ஒரு விஷயம் மட்டும் உறுதியாக இருந்தது. வீரா அவளால் அவள் மனதில், என்றும் மறக்க முடியாத எண்ணத்தை விட்டுச் சென்றிருந்தான்... 
    “ஹே நிறுத்து நிறுத்து... அதென்ன? முதல் முதல்ல ஒரு பொண்ணை பாக்குற ஆண், இப்படியா சிகிரெட்டை ஊதிக்கிட்டு... வெறிச்சு வெறிச்சு பாப்பான்? இவனுங்களை தானே உங்களை மாதிரி பொண்ணுங்களுக்கெல்லாம் பிடிக்கிறது? அவனை ஹீரோன்னு வேற சொல்லிக்கிறீங்க... 
    என்னால இந்த மாதிரி இர்ரிடேட்டிங் ஸ்டோரி எல்லாம் கேக்க முடியாது. ச்சா... நான்சென்ஸ்...” என்று வர்மா மீனாக்ஷியை பொரிந்து தள்ளி கதையை பாதியில் இடை வெட்டினான்.
    Ver libro
  • Idamum Valamum Alaivuru Sirusudar - இடமும் வலமும் அலைவுறு சிறுசுடர் - cover

    Idamum Valamum Alaivuru...

    B.R. Mahadevan

    • 0
    • 0
    • 0
    Auto fiction Novel: இடமும் வலமும் அலைவுறு சிறுசுடர் A proud Aurality tamil audio book production ebook by Swasam Publications. Download FREE Aurality app now on play store and or iphone ios store தீவிரமான கருத்துகளும் சுயமான சிந்தனையும் கொண்ட இளைஞன் தனது கனவுலகைத் தேடி மேற்கொள்ளும் அலைச்சலே இந்த நாவல். மதத் தத்துவங்கள் அவனைத் துரத்துகின்றன. அரசியல் கொள்கைகள் அவனைக் குழப்புகின்றன. மாயமான் வேட்டையில் நிதர்சனத்தைப் புரிந்துகொண்டு, இதுவே நம் பாதை என்று அவன் ஒரு முடிவுக்கு வரும்போது காத்திருக்கிறது இன்னொரு மாயமான். எல்லாவற்றையும் கேள்விகளால் எதிர்கொள்ளும் ஓர் இளைஞனின் பேரலைச்சலை ரத்தமும் சதையுமாக, கொஞ்சம் புனைவுடன் நிறைய உண்மைகளுடன் எழுதி இருக்கிறார் B.R.மகாதேவன். அரசியல் என்ற பெயரிலும், ஆன்மிகம் என்ற பெயரிலும், மதம் என்ற பெயரிலும் இந்தச் சமூகம் தனக்குக் கற்பிக்கும் அனைத்தையும் கேள்விகளால் அடித்து நொறுக்கி தன் அடுத்த பயணத்துக்குக் காத்திருக்கும் இந்த இளைஞன், நிச்சயம் உங்களை அசைத்துப் பார்ப்பான். எழுத்தாளர் B.R.மகாதேவன் எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்
    Ver libro
  • En Iniya Iyandhira - cover

    En Iniya Iyandhira

    Sujatha

    • 0
    • 0
    • 0
    சுஜாதா எண்பதுகளில் ஆனந்த விகடனில் எழுதிய விஞ்ஞானத் தொடர்கதை. கி.பி 2022-ல் நடப்பதான இந்தக் கதையில் 'ஜீனோ' என்கிற ரோபாட் நாய்தான் கதாநாயகன். கதையில் வேறு கதாநாயகனே கிடையாது! இந்தியாவில் 'ஜீவா' என்னும் மகத்தான மெஸ்ஸையாவின் ஆட்சி நடைபெறுகிறது. தேசத்தில் லஞ்சம் கிடையாது. கவிதை கிடையாது. பாட்டு, கூத்து, பண்பாடு ஒன்றுக்கும் அனுமதி கிடையாது. தன்னிச்சையாக பிள்ளை பெற்றுக்கொள்ளக்கூட அனுமதி கிடையாது. ஐம்பது வயதுக்கு மேல் வாழ்க்கை நீடிப்பும் கிடையாது. இத்தகைய இயந்திரமயமான தேசத்தில் நிலா என்னும் குடிமகளின் கணவன் சிபி காணாமல் போய்விடுகிறான். ஜீவாவை எதிர்க்கும் புரட்சிக் கும்பலில் ஒருவனான ரவி, அவனது இயந்திர நாயான ஜீனோ இருவரும் நிலாவுக்கு உதவியாக இணைகின்றனர். நிலா - ஜீனோ கூட்டணி அரசாங்கத்தையே அசைத்துப் பார்க்கிறது.
    Ver libro