Junte-se a nós em uma viagem ao mundo dos livros!
Adicionar este livro à prateleira
Grey
Deixe um novo comentário Default profile 50px
Grey
Assine para ler o livro completo ou leia as primeiras páginas de graça!
All characters reduced
இரை தேடும் பறவைகள் - cover
LER

இரை தேடும் பறவைகள்

ஆர்.மகேஸ்வரி

Editora: Pocket Books

  • 0
  • 0
  • 0

Sinopse

அதுவரை பல்லை கடித்து பொறுமையோடிருந்த மாலதி முதல் ஆளாய் வகுப்பை விட்டு வெளியில் வந்தாள். பகலிலிருந்தே அவளுக்கு நல்ல வயிற்றுவலி. அதனாலேயே கொண்டு வந்திருந்த சாப்பாட்டைக் கூட சாப்பிடவில்லை.“ஏய்... மாலு!” வினோலியா கூப்பிட்டாள்.நடந்துக் கொண்டிருந்த மாலதி நின்று திரும்பினாள்.“ம்... என்ன?”“என்னை விட்டுட்டு நீ பாட்டுக்கு ஓடறே?”“ஸாரி வினோ! ஸ்டமக்பெய்ன்... தாங்க முடியலே! என்னால பஸ்ல வர முடியாது. நான் வீட்டுக்கு ஆட்டோவுல போய்டலாம்னு இருக்கேன். இன்னைக்கு ஒருநாள் நீ தனியா போய்டு... வேறு வழியில்லே!”மாலதியும், வினோலியாவும் ஒரே வகுப்பில் படிப்பவர்கள். ஒரே பஸ்ஸில் பயணம் செய்பவர்கள். ஒரே பஸ் என்றாலும் வினோலியாவின் வீடு... நங்கநல்லூரில் இருந்தது. மாலதியின் வீடு பள்ளியிலிருந்து சற்று தூரத்தில்தான் இருந்தது.வினோலியா தோழியை கவலையுடன் பார்த்தாள்.“ரொம்ப முடியலியா மாலு! நானும் உன்கூட துணைக்கு வரட்டுமா?”“சேச்சே... வேணாம்பா... உனக்கேன் கஷ்டம்? நானே போய்க்கறேன்!’’“பார்த்து... ஜாக்கிரதையா போ... என்ன?”“சரி!” என்று வலியுடன் அவளைப் பார்த்து புன்னகைத்து விட்டுச் சென்றாள் மாலதிஎதிர்வந்த ஆட்டோவை நிறுத்தி ஏறிக் கொண்டாள்.எதேச்சையாக வாசலுக்கு வந்த அம்பிகா.எதிர்வீட்டின் வாசலில் வந்து நின்ற ஆட்டோவை பார்த்தாள்.ஆட்டோவிலிருந்து மாலதி வயிற்றை பிடித்துக் கொண்டு முகம் சுருக்கியபடி இறங்கினாள். ஆட்டோ ஒரு வட்டம் போட்டு திரும்பியது.அம்பிகா அருகில் வந்தாள்.“என்ன மாலதி? ஏன் ஒரு மாதிரியா இருக்கே?”“வயிறு வலிக்குது ஆன்ட்டி!”“அப்படியா?” என்றபடி ஆச்சர்யமாய் பார்த்தவள் விபரம் புரிந்து முகம் மலர்ந்தாள்,“வீட்டுக்குள்ளே போய் ஒரு ஓரமா உக்காரு! உங்கம்மாவுக்கு ஒரு போன் பண்ணிட்டு வந்திடறேன்” என்று பக்கத்தில் இருந்த மளிகை கடையை நோக்கி கிட்டத்தட்ட ஓடினாள்.சிரத்தையுடன் வேலையில் மூழ்கி இருந்தாள் சரஸ்வதி. அவள் கையில் ஃபைல் இருந்தது. டேபிள் மீதிருந்த காபி ஆறிப்போய் ஆடைக் கட்டி இருந்தது.சரஸ்வதி கார்ப்பரேஷன் ரெவின்யூ ஆபிஸில் சீனியர் அக்கவுண்டன்டாக பணிபுரிகிறாள்.டேபிள் மீதிருந்த போன் அலறுகிறது.சரஸ்வதி எடுத்தாள்.“ஹலோ... சரஸ்வதி ஸ்பீக்கிங்!”“ஹலோ... நான்தான் அம்பிகா பேசறேன்”“என்ன, ஆச்சர்யமாயிருக்கு? நீங்களா பேசுவது?” வியப்பாய் கேட்டாள்
Disponível desde: 13/01/2024.
Comprimento de impressão: 54 páginas.

Outros livros que poderiam interessá-lo

  • Choza Sooriyan - சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் - cover

    Choza Sooriyan - சோழன் தலைகொண்ட...

    Siraa

    • 0
    • 0
    • 0
    Description 
    சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் - Part 1 சோழ இளவரசனான உத்தம சீலியுடன் நடந்த யுத்தத்திற்குப் பின், பாண்டிய நாட்டைக் கைப்பற்றினான் வீரபாண்டியன். ஒரு போருக்குப் பின் ஒரு மன்னன் தன் நாட்டை மீட்டெடுப்பது அத்தனை சுலபமல்ல. அது எத்தனை கடினமானது என்பதை, கற்பனை கலந்து கல்வெட்டுத் தரவுகளுடன் எழுதி இருக்கிறார் சிரா. சோழனோ பாண்டியனோ, தோல்வியுற்ற மன்னனுக்கும் பெரிய நாடு இருக்கும். அவனைக் கடவுள் என்று கொண்டாடிய மனிதர்கள் இருப்பார்கள். ஒரு போரில் தோல்வியுற்றான் என்ற காரணத்துக்காக அந்த மன்னன் வீரம் இல்லாதவன் என்று அர்த்தமில்லை. ஒரு மாபெரும் அரசனைத் துணிவுடன் எதிர்த்து நிற்க இன்னொரு மாவீரனால்தான் முடியும். அப்படி சோழம் என்ற ஒரு பெரும் தேசத்தை எதிர்க்கத் துணிந்த ஓர் உன்னத வீரனைப் பற்றிய கதை இது. பல்வேறு ஆதாரங்களை மையமாக வைத்து எழுதப்பட்டிருக்கும் சுவராஸ்யமான வரலாற்று நாவல். எழுத்தாளர் சிரா எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம். A proud Aurality production
    Ver livro
  • Meendum Jeeno - cover

    Meendum Jeeno

    Sujatha

    • 0
    • 0
    • 0
    முற்றிலும் விஞ்ஞானமயமாக்கப்பட்ட வேறொரு உலகம், அந்த உலகத்தை ஆளும் பொம்மை ராணி நிலா. அவளைப் பின்னாலிருந்து ஆட்டுவிக்கும் ரவி, மனோ இருவர் கையில் ஒட்டுமொத்த அதிகாரமும் இருக்க, இயந்திர நாயான ஜீனோ, நிலாவுக்கு உதவ தன் ஒட்டு மொத்தத் தந்திரங்களையும் மூளையையும் பிரயோகிக்கிறது. ஜீனோவுக்கும் எதிரிகளுக்கும் இடையில் நடக்கும் போரின் முடிவு என்ன என்பதுதான் இந்த நாவல்.
    Ver livro
  • மகரந்தம் தாங்கும் மலரவள் - Magarantham Thangum Malaraval (Tamil Edition) - cover

    மகரந்தம் தாங்கும் மலரவள் -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    தந்தையின் உழைப்பில் வாழ விரும்பாமல் தன் வாழ்க்கையின் ஒவ்வொரு முக்கியமான கால கட்டத்திலும், தன்னுடைய முடிவையே பிரதானமாகக் கொண்டு அதில் வெற்றியும் பெற்றிருப்பவன் நளன். தனக்கு எது வேண்டும் என்று முடிவெடுக்கத் தெரியாத பேதையவள் நேத்ரா. 
    காலத்தின் போக்கில் இணைந்த இவர்களது காதல் மூன்றாம் நபரின் தலையீட்டால் என்னவானது? தெரிந்து கொள்ளப் படியுங்கள் மகரந்தம் தாங்கும் மலரவள்!   
     
    Ver livro
  • Idamum Valamum Alaivuru Sirusudar - இடமும் வலமும் அலைவுறு சிறுசுடர் - cover

    Idamum Valamum Alaivuru...

    B.R. Mahadevan

    • 0
    • 0
    • 0
    Auto fiction Novel: இடமும் வலமும் அலைவுறு சிறுசுடர் A proud Aurality tamil audio book production ebook by Swasam Publications. Download FREE Aurality app now on play store and or iphone ios store தீவிரமான கருத்துகளும் சுயமான சிந்தனையும் கொண்ட இளைஞன் தனது கனவுலகைத் தேடி மேற்கொள்ளும் அலைச்சலே இந்த நாவல். மதத் தத்துவங்கள் அவனைத் துரத்துகின்றன. அரசியல் கொள்கைகள் அவனைக் குழப்புகின்றன. மாயமான் வேட்டையில் நிதர்சனத்தைப் புரிந்துகொண்டு, இதுவே நம் பாதை என்று அவன் ஒரு முடிவுக்கு வரும்போது காத்திருக்கிறது இன்னொரு மாயமான். எல்லாவற்றையும் கேள்விகளால் எதிர்கொள்ளும் ஓர் இளைஞனின் பேரலைச்சலை ரத்தமும் சதையுமாக, கொஞ்சம் புனைவுடன் நிறைய உண்மைகளுடன் எழுதி இருக்கிறார் B.R.மகாதேவன். அரசியல் என்ற பெயரிலும், ஆன்மிகம் என்ற பெயரிலும், மதம் என்ற பெயரிலும் இந்தச் சமூகம் தனக்குக் கற்பிக்கும் அனைத்தையும் கேள்விகளால் அடித்து நொறுக்கி தன் அடுத்த பயணத்துக்குக் காத்திருக்கும் இந்த இளைஞன், நிச்சயம் உங்களை அசைத்துப் பார்ப்பான். எழுத்தாளர் B.R.மகாதேவன் எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்
    Ver livro
  • நாணலே நங்கையானால் - Naanale Nangaiyaanaal? - cover

    நாணலே நங்கையானால் - Naanale...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுள் ஒன்றை வைத்து, அழகான காதல் கதையின் மூலம் வாசிப்பவர்களுக்கு சுவாரஸ்யம் ஊட்டும் வகையில், பலவித திடீர் திருப்பங்களுடனும் சுவாரஸ்யங்களுடனும் கதையை எளிமையாக விளக்க முயன்றிருக்கிறேன். 
    Ver livro
  • உடன்பிறப்பு - Udanpirappu-Sirukathai - cover

    உடன்பிறப்பு -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    உடன்பிறப்பு
    Ver livro