Junte-se a nós em uma viagem ao mundo dos livros!
Adicionar este livro à prateleira
Grey
Deixe um novo comentário Default profile 50px
Grey
Assine para ler o livro completo ou leia as primeiras páginas de graça!
All characters reduced
என் உயிரின் உயிரே - cover
LER

என் உயிரின் உயிரே

ஆர்.மகேஸ்வரி

Editora: Pocket Books

  • 0
  • 0
  • 0

Sinopse

அப்போது திவ்யபிரியா, அவளது தாய் மரகதமும் ரொம்பவே கஷ்ட ஜீவனம் நடத்திக் கொண்டிருந்தனர்! 
 
அவளுடைய தந்தை இருந்த வரை ஓரளவு நடுத்தர வாழ்க்கை வாழ்ந்தனர்! 
 
தந்தைக்கு நுரையீரல் புற்றுநோய் வர...
 
தலையில் தீ விழுந்த கணக்காய் கலங்கினாள், திவ்யபிரியாவின் தாய் மரகதம். 
 
மரகதம் மருத்துவ செலவிற்குப் பணமில்லாமல் கஷ்டப்பட்டாள். 
 
சொந்த பந்தங்களிடம் கடன் கேட்டு கையேந்தினாள்.
 
ஒருவரும் மனமிரங்கவில்லை!
 
கடைசியாய் குடியிருக்கும் வீட்டை விற்க முடிவு செய்தாள். 
 
அவளின் நிலைமையை... சூழ்நிலையை உணர்ந்து அடிமாட்டு விலைக்கு கேட்டனர். 
 
வீட்டைவிட கணவனின் உயிர் அவளுக்கு முக்கியமாய்ப்பட... அநியாய விலைக்கு விற்றுவிட்டு... வைத்தியம் பார்த்தாள். 
 
கடைசியில் புற்று நோயின் தீவிரம் தாங்காமல் செத்தே விட்டார். 
 
மரகதமும், திவ்யபிரியாவும் கத்தினார்கள்!
 
கதறினார்கள்!
 
விழுந்து புரண்டார்கள்!
 
துடிதுடித்தார்கள்!
 
எத்தனை கதறினாலும்... துடித்தாலும்... விழுந்து புரண்டாலும் இறந்தவர் மீண்டும் உயிருடன் திரும்புவார்களா? 
 
அவரின் மருத்துவ செலவிற்கும், இறுதி சடங்கிற்கும் எல்லாப் பணத்தையும் செலவழித்து... உயிரோடு இருந்த  இருவருக்கும் மிஞ்சியது ஐம்பதாயிரம் ரூபாய் மட்டுமே! 
 
மரகதம் அந்தத் தொகையை வங்கியில் போட்டாள்.
 
அந்தத் தொகைக்கு கிடைக்கும் வட்டியிலும்...
 
வீட்டிலேயே ஊறுகாய், வடகம், வற்றல் எனப்போட்டு வெயிலில் அலைந்து, திரிந்து விற்று கிடைக்கும் சொற்பத் தொகையிலும்... வாடகை வீட்டில் குடித்தனத்தைத் தொடங்கி... கஷ்டப்பட்டு வாழ்கின்றனர். 
 
தந்தை இறந்த சமயம் திவ்யபிரியா பனிரெண்டாம் வகுப்பில் அடியெடுத்து வைத்தாள்! 
 
தந்தையின் மரணம் தந்த சோகத்திலும்... தன்னைத்தேற்றிக் கொண்டு... முழு மூச்சாய் கல்வியில் சிந்தையைச் செலுத்த... 
 
திவ்யபிரியா அந்த பள்ளிக்கே முதல் மதிப்பெண் பெற்று தேறினாள். மாவட்டத்திலும் முதலாவதாய் வந்தாள்! 
 
பள்ளியில் பாராட்டினார்கள்!
 
பத்தாயிரம் ரூபாய் பரிசளித்தார்கள்!
 
இவ்வளவு புகழ்ச்சிகளுக்கும், மரியாதைகளுக்கும், மதிப்புகளுக்கும்... கொஞ்சம் கூட தலைக்கணமே இல்லாமல் இருந்தாள், திவ்யபிரியா! 
 
அன்று அம்மாவிடம் தயங்கித் தயங்கி போய் நின்றாள். 
 
“என்ன, திவ்யா?”
 
“கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கணும்மா!” பயந்தபடி கேட்க... 
 
“எதுக்கு?”
 
மரகதம் கோபமாய் கேட்டாள்.
 
“மேலே படிக்கணுமில்லையா?”
 
“படிச்சது போதும், திவ்யா!” பட்டென்று பதில் அம்மாவிடமிருந்து வர... திவ்யா ஆடிப்போனாள். 
 
“அம்மா நான் மேலே படிக்கணும்!”
 
“உன்னை காலேஜிக்கெல்லாம் அனுப்பிப் படிக்க வைக்க நம்மகிட்ட நிறைய காசா இருக்கு?” 
 
“அம்மா...”
 
“இருக்கற தொகையும் செலவழிச்சிட்டா... உன் எதிர்காலத்துக்கு என்ன செய்ய?” 
 
“அம்மா...”
 
“நாளைக்கு ஒரு கல்யாணம் காட்சின்னா உனக்கு நான் என்ன செய்வேன்? சொல்லு? எப்படி ஒருத்தன்கிட்ட உன்னை ஒப்படைப்பேன்! அதுக்குப் பணம் வேணுமில்லையா? அந்தக் கொஞ்ச காசையும் கரைச்சிட்டா நல்லாயிருக்குமா?” 
 
மரகதம் வேகமாய் படபடக்க...
 
“அம்மா... என்னை டாக்டருக்கோ... இஞ்சினியருக்கோ படிக்க வையுன்னு கேட்கலே! எனக்கும் அந்த அளவு ஆசையில்லே!... 
 
ஒரு சாதாரண டிகிரி மட்டும் படிக்க வையும்மா! அந்த ஐம்பதாயிரத்தில் நீ கையே வைக்க வேண்டாம்!” 
 
“பணத்துக்கு என்ன செய்வது?”
 
மரகதம் புருவம் உயர்த்தி கேட்க... 
 
“ஸ்காலர்ஷிப்ல படிச்சுடுவேன்!”
 
“அப்படின்னா...?”
 
“அரசாங்கம் உதவிப் பணம் தரும்! அடுத்ததா ஏதாவது தொண்டு நிறுவனங்க கிட்ட உதவி கேட்டால் என்னைப் படிக்க வைப்பாங்க! 
 
உன்னோட செலவு வெறும் புத்தகம்... நோட்... பேனா தாம்மா! மற்ற பொண்ணுங்க மாதிரி ஆடம்பரமா ட்ரஸ் பண்ணிக்கணும்... நகை போட்டுக்கணும்... மேக்கப் பண்ணிக்கணும்... ஸ்கூட்டியில ஜம்முன்னு போகணும்னு எல்லாம் எனக்கு ஆசையில்லேம்மா!
 
பக்கத்துல இருக்க காலேஜ்னா ஒரு சைக்கிள் போதும்! அதுகூட வேணாம்மா நான் நடந்தே போயிடறேன்!” 
Disponível desde: 07/02/2024.
Comprimento de impressão: 202 páginas.

Outros livros que poderiam interessá-lo

  • Choza Sooriyan - சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் - cover

    Choza Sooriyan - சோழன் தலைகொண்ட...

    Siraa

    • 0
    • 0
    • 0
    Description 
    சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் - Part 1 சோழ இளவரசனான உத்தம சீலியுடன் நடந்த யுத்தத்திற்குப் பின், பாண்டிய நாட்டைக் கைப்பற்றினான் வீரபாண்டியன். ஒரு போருக்குப் பின் ஒரு மன்னன் தன் நாட்டை மீட்டெடுப்பது அத்தனை சுலபமல்ல. அது எத்தனை கடினமானது என்பதை, கற்பனை கலந்து கல்வெட்டுத் தரவுகளுடன் எழுதி இருக்கிறார் சிரா. சோழனோ பாண்டியனோ, தோல்வியுற்ற மன்னனுக்கும் பெரிய நாடு இருக்கும். அவனைக் கடவுள் என்று கொண்டாடிய மனிதர்கள் இருப்பார்கள். ஒரு போரில் தோல்வியுற்றான் என்ற காரணத்துக்காக அந்த மன்னன் வீரம் இல்லாதவன் என்று அர்த்தமில்லை. ஒரு மாபெரும் அரசனைத் துணிவுடன் எதிர்த்து நிற்க இன்னொரு மாவீரனால்தான் முடியும். அப்படி சோழம் என்ற ஒரு பெரும் தேசத்தை எதிர்க்கத் துணிந்த ஓர் உன்னத வீரனைப் பற்றிய கதை இது. பல்வேறு ஆதாரங்களை மையமாக வைத்து எழுதப்பட்டிருக்கும் சுவராஸ்யமான வரலாற்று நாவல். எழுத்தாளர் சிரா எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம். A proud Aurality production
    Ver livro
  • En Iniya Iyandhira - cover

    En Iniya Iyandhira

    Sujatha

    • 0
    • 0
    • 0
    சுஜாதா எண்பதுகளில் ஆனந்த விகடனில் எழுதிய விஞ்ஞானத் தொடர்கதை. கி.பி 2022-ல் நடப்பதான இந்தக் கதையில் 'ஜீனோ' என்கிற ரோபாட் நாய்தான் கதாநாயகன். கதையில் வேறு கதாநாயகனே கிடையாது! இந்தியாவில் 'ஜீவா' என்னும் மகத்தான மெஸ்ஸையாவின் ஆட்சி நடைபெறுகிறது. தேசத்தில் லஞ்சம் கிடையாது. கவிதை கிடையாது. பாட்டு, கூத்து, பண்பாடு ஒன்றுக்கும் அனுமதி கிடையாது. தன்னிச்சையாக பிள்ளை பெற்றுக்கொள்ளக்கூட அனுமதி கிடையாது. ஐம்பது வயதுக்கு மேல் வாழ்க்கை நீடிப்பும் கிடையாது. இத்தகைய இயந்திரமயமான தேசத்தில் நிலா என்னும் குடிமகளின் கணவன் சிபி காணாமல் போய்விடுகிறான். ஜீவாவை எதிர்க்கும் புரட்சிக் கும்பலில் ஒருவனான ரவி, அவனது இயந்திர நாயான ஜீனோ இருவரும் நிலாவுக்கு உதவியாக இணைகின்றனர். நிலா - ஜீனோ கூட்டணி அரசாங்கத்தையே அசைத்துப் பார்க்கிறது.
    Ver livro
  • Kaalachakram - cover

    Kaalachakram

    Kalachakram Narasimha

    • 0
    • 0
    • 0
    "காஷ்மீரம் சிவனால் உண்டாக்கப்பட்டது. பார்வதி தனது தோழிகளுடன் விளையாடுவதற்காக ஒரு இடம் கேட்க, சிவானந்தர் தனது கேசத்திலிருந்து ஓர் முடி யை எடுத்து போட அது காஷ்மீரம் என்கிற அழகிய நந்தவனமாக உருவாகியது என்று புராணங்கள் கூறுகின்றன. கேசத்திலிருந்து வந்ததால், கேஷ மீறம். பார்வதி இதன் அழகில் மெய்யாக்கி இங்கேயே குஜ் ஜேஸ்வரியாக ஸ்ரீசக்கரம் மீது நின்று கோவில் கொள்கிறாள். தெற்கே குடந்தையில் கொம்பை காளியின் உக்கிரத்தை அடக்க, ஆதி சங்கரர் ஸ்ரீ சக்கரத்தை எடுத்துச் சென்றுவிட, காஷ்மீரம் சிறிது சிறிதாக நாசம் அடைகிறது. காஷ்மீரத்து பண்டிதர்கள் அகதிகளாக விரட்டப்பட்ட தங்கள் நாட்டின் இழிநிலையை கண்டு மனம் வருந்திய ஷ்ரத்தா என்கிற பெண், ஒரு வேளை மீண்டும் ஸ்ரீ சக்கரத்தை குஜிஜேஸ்வரி ஆலயத்தில் வைத்தால், காஷ்மீரத்துக்கு விடிவு பிறக்குமோ என்று நினைத்து, ஸ்ரீசக்கரத்தை தேடி தெற்கே வருகிறாள். கும்பையை சேர்ந்த அந்தணர் குடும்பத்தை சேர்ந்த ஒரு வாலிபனை மணந்து, அவன் உதவியோடு ஸ்ரீசக்கரத்தை தேட, பல மர்ம நிகழ்வுகளை சந்திக்கிறாள். அந்த ஸ்ரீசக்கரம் எங்கு இருக்கிறது என்று தேடியவள் அதனை கண்டுபிடித்து எடுக்க முயலும்போது பல சக்திகள் அவளுக்கு எதிராக செயல்பட, எல்லாவற்றையும் முறியடித்து அவள் ஸ்ரீசக்கரத்தை எடுக்க முயலும்போது, ஒரு பெரிய பிரச்சனை ஏற்படுகிறது. அதையும் சமாளிகையில் ஒரு பெரிய அரசியல் குடும்பத்தின் சூழ்ச்சிக்கு பலியாகிறாள். தன்னை பலிகடா ஆக்கிய அந்த குடும்பத்தையும் பழி வாங்க நினைக்கிறாள். ஸ்ரீசக்கரத்தையும் மீண்டும் காஷ்மீரத்திற்கு கொண்டு போக ஷ்ரதா முயலுகிறாள். அவளது எண்ணங்கள் ஈடேறியாதா என்பதுதான் கதை. காலச்சக்கரம் நரசிம்மாவின் முதல் நாவல்."
    Ver livro
  • உடன்பிறப்பு - Udanpirappu-Sirukathai - cover

    உடன்பிறப்பு -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    உடன்பிறப்பு
    Ver livro
  • முற்றும் முதல் நீ எனக்கு - Mutrum Muthal Nee Enakku - cover

    முற்றும் முதல் நீ எனக்கு -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    வாழ்க்கையில் யாருடைய துணையும் இன்றி தன் லட்சியங்களை அடையத் துடிக்கும் நம் நாயகன் கதிர்முகிலனுக்கு தன் மனம் கவர்ந்த பெண் மயூரியால் தடைபடும் தன் இலட்சியத்தை, ஒருவர் மேல் ஒருவர் கொண்டுள்ள அதீத காதலால் எவ்வாறு முறியடித்தனர் என்பதை அறிய என்னோடு பயணியுங்கள் 'முற்றும் முதல் நீ எனக்கு'   
    Ver livro
  • Meendum Jeeno - cover

    Meendum Jeeno

    Sujatha

    • 0
    • 0
    • 0
    முற்றிலும் விஞ்ஞானமயமாக்கப்பட்ட வேறொரு உலகம், அந்த உலகத்தை ஆளும் பொம்மை ராணி நிலா. அவளைப் பின்னாலிருந்து ஆட்டுவிக்கும் ரவி, மனோ இருவர் கையில் ஒட்டுமொத்த அதிகாரமும் இருக்க, இயந்திர நாயான ஜீனோ, நிலாவுக்கு உதவ தன் ஒட்டு மொத்தத் தந்திரங்களையும் மூளையையும் பிரயோகிக்கிறது. ஜீனோவுக்கும் எதிரிகளுக்கும் இடையில் நடக்கும் போரின் முடிவு என்ன என்பதுதான் இந்த நாவல்.
    Ver livro