Junte-se a nós em uma viagem ao mundo dos livros!
Adicionar este livro à prateleira
Grey
Deixe um novo comentário Default profile 50px
Grey
Assine para ler o livro completo ou leia as primeiras páginas de graça!
All characters reduced
பொன்னாடை - cover
LER

பொன்னாடை

ஆர்.சுமதி

Editora: Pocket Books

  • 0
  • 0
  • 0

Sinopse

அந்த பெரிய பங்களாவின் முன்னால் காரை நிறுத்தினான் வைதேகியின் டிரைவர்.“டிரைவர்...”“சொல்லுங்கம்மா...”“காரை விக்க ஏற்பாடு பண்ணிடு.”“அம்மா, கொஞ்சம் யோசனை பண்ணி செய்ங்கம்மா.”“என்ன யோசனை பண்ணச் சொல்றே?”“அம்மா இது வாரிசு இல்லாத சொத்து இல்லை. வாணியம்மா என்னைக்காவது ஒரு நாளைக்கு உங்களைத் தேடி வருவாங்க.”“அவ வரமாட்டா.”“அம்மா... அப்படி சொல்லாதீங்க. வாணியம்மா மட்டும் இல்லை ஐயாவும் வருவாங்க. உறவுகள் என்னைக்கும் உடைஞ்சுடாது. அப்ப வந்து சொத்துக்களை ஏன் வித்தீங்கன்னு கேட்டா நீங்க என்ன பதில் சொல்லுவீங்க? அம்மா பாசம்கிறது அத்தனை சீக்கிரத்துல விட்டுப் போகாதும்மா. அந்த சக்தி என்னைக்கும் ஜெயிக்கும். வாணியம்மா வருவாங்க. உங்கக்கூட இருப்பாங்க. அவங்க அனுபவிக்க வேண்டிய சொத்துக்களை இப்படி அனாதைப் பசங்களுக்கு எழுதி வைக்காதீங்கம்மா...”“ம்... நீ சொல்றதெல்லாம் எதுவும் நடக்காது. எனக்கு நல்லாத் தெரியும். என் கணவரும், என் மகளும் திரும்ப என்கிட்ட வரமாட்டாங்க. அதுல எந்த மாற்றமும் இல்லை. ஏன்னா... நான் பண்ணின பாவம் அப்படி. அந்த பாவத்துக்கு பரிகாரமா நான் என் சொத்தையெல்லாம் தானம் பண்ணலை. என் கணவருக்கு நான் செய்யற நன்றி இதுதான். இதெல்லாம் அவர் சம்பாதித்த சொத்து. அவர் வந்து இதை அனுபவிக்கபோறதில்லைங்கிறது உறுதி. அவரோட பொண்ணுங்களும் அவரை மாதிரிதான். உயிரே போனாலும் வைராக்கியத்திலிருந்து மாறமாட்டாங்க. ரெண்டு பேருமே அதை நிரூபிச்சிட்டாளுங்க. ப்ச்! பேசி எதுவும் ஆகப் போறதில்லை. சொன்னதை செய்.”சொல்லிவிட்டு உள்ளே சென்றாள். தனிமை வெறுமை அவளை எள்ளி நகையாடியது. சோர்வுடன் வந்து சோபாவில் சரிந்தாள்.வாணியும் சரளாவும் காற்சதங்கை ஒலிக்க அந்த வீடு பூராவும் ஓடி விளையாடிய காட்சி கண்களில் தெரிந்தது.அம்மா, அம்மா என அழைத்த அவர்களுடைய குரல் காதில் ஒலித்தது.இப்பொழுது, வீடு சுடுகாடு போல் ஒரு அமைதியில் இருந்தது. ஒரு பேச்சுக்குரல் இல்லை. அவள் மட்டுமே தன்னந்தனியாக பேய் போல் உலவிக் கொண்டிருக்கிறாள். கண்ணீர் திரண்டது. சுவரில் பெரிதாக்கப்பட்டு மாட்டப்பட்டிருந்த அந்த புகைப்படத்தில் அவளுடைய விழிகள் நிலைத்தது.இளம் வயது வைதேகியும் சேகரும் சரளாவையும்,. வாணியையும் அணைத்தபடி இருந்தனர். சிரிப்பு அனைவரின் முகத்திலும் குடி கொண்டிருந்தது.மகிழ்ச்சி பூத்துக்குலுங்கியது அந்த புகைப்படத்தில். அவளுடைய நெஞ்சம் வேதனையில் வாடியது. விம்மியது. அவள் குலுங்கியபொழுதே அதே நேரம் தொலைபேசி ஒலித்தது.முந்தானையால் கண்களை அவசரமாகத் துடைத்துக் கொண்டாள்.“ஹலோ... வைதேகி பேசறேன், நீங்க யாரு?”“மேடம், நான் கோபால்சாமி பேசறேன்.”“சொல்லுங்க.”“சொத்துக்களை விக்க ஏற்பாடு பண்ணச் சொல்லியிருந்தீங்களே! நல்ல பார்ட்டி ஒண்ணு வந்திருக்கு. அழைச்சுட்டு வரட்டுமா மேடம்.சரி. எப்ப வர்றீங்க?”“சாயந்தரம் அஞ்சு மணிக்கு வர்றோம்.”“சரி.” வைத்துவிட்டு வந்தாள்.அவள் பார்த்துப் பார்த்துக் கட்டிய இந்த வீடு இன்னொரு கைக்குப் போகப் போகிறது. ரசித்து ரசித்து பராமரித்த தோட்டம் விலைக்குப் போகப் போகிறது. அமுத சுரபியால் விளைந்த வயல்கள் அடுத்தவர் கைக்குப் போகப் போகிறது.நெஞ்சில் பொங்கிய வேதனை அலைகளை கட்டுப்படுத்த தெரியாமல் திண்டாடினாள்.கோபால்சாமி சொன்னபடியே மாலை, சொத்துக்களை வாங்க ஆள் அழைத்து வந்தார்.வீடு விலை பேசப்பட்டது. வந்தவர் பெரும் பணக்காரர். அவரே நிலங்களையும் விலைக்கு வாங்கத் தயாராக இருந்தார்.பேசிமுடிக்கப்பட்டது. பத்திரம் எழுதவும் பணம் கொடுக்கவும் தேதி குறிக்கப்பட்டது.வந்தவர் திருப்தியாக எழுந்து சென்றார்.அவர் சென்றபின் வைதேகி எழுந்தாள்.மனம் அழுதது.இரவு உணவு இறங்கவில்லை.படுக்கையில் புரண்டாள்.இந்த சொத்துக்களுக்காகத்தானே எல்லா உறவுகளையும் இழந்தாய். இன்று சொத்துக்களை அனாதைகளுக்கு எழுதி வைக்க முன் வந்திருக்கிறாய்.மனசாட்சி அவளை கேள்வி கேட்க அவளுடைய மனத்திரையில் கடந்த காலம் விரிந்தது
Disponível desde: 14/02/2024.
Comprimento de impressão: 78 páginas.

Outros livros que poderiam interessá-lo

  • மகரந்தம் தாங்கும் மலரவள் - Magarantham Thangum Malaraval (Tamil Edition) - cover

    மகரந்தம் தாங்கும் மலரவள் -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    தந்தையின் உழைப்பில் வாழ விரும்பாமல் தன் வாழ்க்கையின் ஒவ்வொரு முக்கியமான கால கட்டத்திலும், தன்னுடைய முடிவையே பிரதானமாகக் கொண்டு அதில் வெற்றியும் பெற்றிருப்பவன் நளன். தனக்கு எது வேண்டும் என்று முடிவெடுக்கத் தெரியாத பேதையவள் நேத்ரா. 
    காலத்தின் போக்கில் இணைந்த இவர்களது காதல் மூன்றாம் நபரின் தலையீட்டால் என்னவானது? தெரிந்து கொள்ளப் படியுங்கள் மகரந்தம் தாங்கும் மலரவள்!   
     
    Ver livro
  • En Iniya Iyandhira - cover

    En Iniya Iyandhira

    Sujatha

    • 0
    • 0
    • 0
    சுஜாதா எண்பதுகளில் ஆனந்த விகடனில் எழுதிய விஞ்ஞானத் தொடர்கதை. கி.பி 2022-ல் நடப்பதான இந்தக் கதையில் 'ஜீனோ' என்கிற ரோபாட் நாய்தான் கதாநாயகன். கதையில் வேறு கதாநாயகனே கிடையாது! இந்தியாவில் 'ஜீவா' என்னும் மகத்தான மெஸ்ஸையாவின் ஆட்சி நடைபெறுகிறது. தேசத்தில் லஞ்சம் கிடையாது. கவிதை கிடையாது. பாட்டு, கூத்து, பண்பாடு ஒன்றுக்கும் அனுமதி கிடையாது. தன்னிச்சையாக பிள்ளை பெற்றுக்கொள்ளக்கூட அனுமதி கிடையாது. ஐம்பது வயதுக்கு மேல் வாழ்க்கை நீடிப்பும் கிடையாது. இத்தகைய இயந்திரமயமான தேசத்தில் நிலா என்னும் குடிமகளின் கணவன் சிபி காணாமல் போய்விடுகிறான். ஜீவாவை எதிர்க்கும் புரட்சிக் கும்பலில் ஒருவனான ரவி, அவனது இயந்திர நாயான ஜீனோ இருவரும் நிலாவுக்கு உதவியாக இணைகின்றனர். நிலா - ஜீனோ கூட்டணி அரசாங்கத்தையே அசைத்துப் பார்க்கிறது.
    Ver livro
  • நாணலே நங்கையானால் - Naanale Nangaiyaanaal? - cover

    நாணலே நங்கையானால் - Naanale...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுள் ஒன்றை வைத்து, அழகான காதல் கதையின் மூலம் வாசிப்பவர்களுக்கு சுவாரஸ்யம் ஊட்டும் வகையில், பலவித திடீர் திருப்பங்களுடனும் சுவாரஸ்யங்களுடனும் கதையை எளிமையாக விளக்க முயன்றிருக்கிறேன். 
    Ver livro
  • நேசம் மறவாத நெஞ்சமடி - Nesam Maravaatha Nenjamadi - cover

    நேசம் மறவாத நெஞ்சமடி - Nesam...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    "அதை இன்னும் கொஞ்சம் முன்னமே சொன்னா தான் என்னவாம்! கை வலிக்கிது..." என்று வாய்க்குள் முணுமுணுத்தாள்.  
    மீனாக்ஷியின் கூற்றில், அவளைப் பார்த்தபடியே வீரா மெலிதாக சிரித்து சிகாரைத் தரையில் எரிந்து தன் ஷூ காலால் மிதித்து அதன் நெருப்பை அணைத்தான். ஆனால் மீனக்ஷியால் அவனுள் மூண்ட நெருப்பு என்னவோ அணைய மறுத்தது. 
     "அடுத்த முறை, முட்டாள்களின் பேச்சைக் கேட்காத அளவுக்கு புத்திசாலித்தனமா நடந்துக்கோ..." என்று கூறியவன் குரலில் கிண்டல் நிறைந்திருந்தது. 
    அவன் கூற்றை சரியாக புரிந்து கொள்ளவே சில நொடிகள் பிடித்தது மீனாக்ஷிக்கு. 
    மீனாக்ஷி பதிலளிப்பதற்கு முன்பு, வீரா தனது பைக்கின் மீது காலை சுழற்றி அமர்ந்தவன் என்ஜினைத் ஆன் செய்தான். 
    வாகனத்தை கிளப்பும் முன், “வெல்கம் டு திஸ் காலேஜ்” என்று கூறியவன் கண்கள் அவள் மீது நிலைத்திருக்க அவள் பதிலை எதிர்பாராமல் வாகன இயந்திரத்தின் ஒலியுடன் சென்றுவிட்டான் வீரா.  
    மீனாக்ஷியின் இதயத் துடிப்பின் வேகம் கூடியது. அவள், வீரா... அவன் மேல் கோபப்படுகிறாளா, சங்கடப்படுகிறாளா அல்லது அவன் யாரென்று அறிய ஆர்வமாக இருக்கிறாளா? என்பதை அவளால் தீர்மானிக்க முடியவில்லை. 
    ஆனால் ஒரு விஷயம் மட்டும் உறுதியாக இருந்தது. வீரா அவளால் அவள் மனதில், என்றும் மறக்க முடியாத எண்ணத்தை விட்டுச் சென்றிருந்தான்... 
    “ஹே நிறுத்து நிறுத்து... அதென்ன? முதல் முதல்ல ஒரு பொண்ணை பாக்குற ஆண், இப்படியா சிகிரெட்டை ஊதிக்கிட்டு... வெறிச்சு வெறிச்சு பாப்பான்? இவனுங்களை தானே உங்களை மாதிரி பொண்ணுங்களுக்கெல்லாம் பிடிக்கிறது? அவனை ஹீரோன்னு வேற சொல்லிக்கிறீங்க... 
    என்னால இந்த மாதிரி இர்ரிடேட்டிங் ஸ்டோரி எல்லாம் கேக்க முடியாது. ச்சா... நான்சென்ஸ்...” என்று வர்மா மீனாக்ஷியை பொரிந்து தள்ளி கதையை பாதியில் இடை வெட்டினான்.
    Ver livro
  • நெஞ்சம் உன்னைக் கெஞ்சும் - Nenjam Unnai Kenjum - cover

    நெஞ்சம் உன்னைக் கெஞ்சும் -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    கண்களில் கண்ணீர் வழிந்தோடியது. "எனக்கு... என்னை உங்ககிட்ட இருந்து காப்பாத்திக்க வேற வழி தெரியலை... என்னை மன்னிச்சிடுங்க...” என்றாள் மீரா. “பின்ன ஏன் இந்தக் கண்ணீர்?” விக்ரம் குரல் சந்தேகமாக வெளி வந்தது. “அது... தெரியலை! நீங்க... உங்க கையில ரத்தத்தைப் பாத்ததும்.... சாரி, நான் திரும்பவும் சொல்றேன், உங்களை நான் காயப்படுத்த நினைக்கலை... ஆனா, நீங்க என்கிட்டே நடந்துகிட்ட முறை ரொம்ப தப்பு... ஒரு பொண்ணோட அனுமதி இல்லாம அவளை அடைய நினைக்கிறது, தப்பு. அது அவளோட கணவனாவே இருந்தாலும் சரி....” என்றாள் தலை குனிந்தபடி. 
     விக்ரம் மெதுவாக மூச்சை உள்ளே இழுத்து, காயம் இல்லாத தன் இடக்கையை வைத்து மீராவின் நாடி பிடித்து உயர்த்தி தன்னைப் பார்க்கச் செய்தவன், "அப்படின்னா நீ ஏன் இன்னும் இங்கேயே இருக்க? போயிடு... போ மீரா, என்கிட்டே இருந்து தப்பிச்சு போயிடு... திரும்ப என் கண் முன்னாடி வராத. 
     இந்த மாதிரி ஒரு சந்தர்ப்பத்தை நீ பயன் படுத்திக்கலேன்னா... உன்னால எப்பவுமே என்கிட்டே இருந்து தப்பிக்க முடியாது... இப்போ நான் சொன்ன இந்த வார்த்தை... இதை இந்த ஒரு முறைக்கு மேல என் கிட்ட இருந்து நீ எதிர்பாக்க முடியாது. போ... போயிடு” என்றான் குரலில் சற்றே கடுமை கூட்டி.... 
     மீராவின் முகம் மெல்ல புன்னகையில் விகசித்தது. “நிஜம்மாவா நான் போகலாமா? திரும்ப என்னை தொந்தரவு செய்ய மாட்டீங்களே?” என்றாள் நம்ப முடியாத பாவனையில். “ம்… ஹ்ம்ம்..... கண்டிப்பா... மாட்டேன்” என்றான் விக்ரமாதித்யன்.
    Ver livro
  • Meendum Jeeno - cover

    Meendum Jeeno

    Sujatha

    • 0
    • 0
    • 0
    முற்றிலும் விஞ்ஞானமயமாக்கப்பட்ட வேறொரு உலகம், அந்த உலகத்தை ஆளும் பொம்மை ராணி நிலா. அவளைப் பின்னாலிருந்து ஆட்டுவிக்கும் ரவி, மனோ இருவர் கையில் ஒட்டுமொத்த அதிகாரமும் இருக்க, இயந்திர நாயான ஜீனோ, நிலாவுக்கு உதவ தன் ஒட்டு மொத்தத் தந்திரங்களையும் மூளையையும் பிரயோகிக்கிறது. ஜீனோவுக்கும் எதிரிகளுக்கும் இடையில் நடக்கும் போரின் முடிவு என்ன என்பதுதான் இந்த நாவல்.
    Ver livro