Junte-se a nós em uma viagem ao mundo dos livros!
Adicionar este livro à prateleira
Grey
Deixe um novo comentário Default profile 50px
Grey
Assine para ler o livro completo ou leia as primeiras páginas de graça!
All characters reduced
மறவாதே மனமே! - cover
LER

மறவாதே மனமே!

ஆர்.சுமதி

Editora: Pocket Books

  • 0
  • 0
  • 0

Sinopse

பார்வதியும், அம்சா மாமியும் ஒருவரையொருவர் அதிர்ச்சியோடு பார்த்துக் கொண்டனர்.“பார்வதி... என்னடி இது, உன் புள்ளையாண்டான் ஒரு குட்டியோடு வர்றான். என்ன அசிங்கம்!”பார்வதிக்கும் நெஞ்சில் நெருப்பைக் கொட்டியது போல் இருந்தது. ஆனால், மாமி எதிரே மானம் போகாமல் பார்த்துக் கொள்ள அவள் தவித்தாள்.“என்ன மாமி... அசிங்கம் அது இதுன்னுகிட்டு! தன்கூட வேலை பார்க்கிற பொண்ணா இருக்கலாம். இப்ப ஆம்பளையும் பொம்பளையும் சகஜமா பழகுதுங்களே?”“அதுக்கு இப்படி ஒட்டி உரசிக்கிட்டா போவாங்க? அந்தப் பொண்ணு உன் பையன் இடுப்பை என்னமா உடும்புப் பிடியா புடிச்சுக்கிட்டு வண்டியில் உட்கார்ந்திருந்தா... அருமை பெருமையா ஒண்ணு பெத்து அதையும் இப்படி விட்டுட்டியேடி! அவள் என்ன சாதியோ... குலமோ? கடவுளே...”பார்வதியால் எதுவும் பேச முடியவில்லை. அவளுக்கு அடிவயிறு கலங்கியது.“இந்தக் காலத்துல நடையா நடந்து நாம தேடி கட்டி வச்சதுங்களே உள்ளே வந்த ரெண்டு நாளில் நம்மை எந்த ஊருன்னு கேட்குதுங்க. இப்படி தானாக வர்றதுங்களைப் பற்றி கேட்கவே வேண்டாம். கணவனை கைக்குள் போட்டுக்கிட்டு நம்மை ஒருவழி பண்ணிடும். ஆரம்பத்திலேயே நாம எச்சரிக்கையா இருக்கிறது நல்லது.”“என்ன மாமி நீங்க? என்னமோ கல்யாணமே நடந்துட்ட மாதிரி பேசுறீங்க? நான் நடக்க விட்டுடுவேனா? சாதி, மதம், ஜாதகம் இதெல்லாம் பார்த்துதான் என் புள்ளைக்கு கல்யாணம் பண்ணுவேன். நான் பார்க்கிற பொண்ணுதான் என் வீட்டுக்கு மருமகளாக வரணும்.”“அதை, உன் புள்ளையாண்டான் கேட்கணுமே!”“கேட்காம எங்க போவான்? அவன் எனக்குப் பயந்தவன்.”“காதல் வந்துட்டா, இந்தக் காலத்துல பயமாவது... கத்திரிக்காயாவது? இதோ பாரு... வீட்டுக்குப் போனதும் தடாலடியா அவனைப் பிடிச்சு கத்தாதே. மெதுவா கல்யாண பேச்சை எடு. அவனாக சொல்லட்டும். அப்புறம் ஒரு பிடி பிடி” மாமி திட்டம் போட்டுக் கொடுத்தாள்.இருவரும் தங்கள் வீட்டுக்கு வந்தனர். தனது அம்சா மாமி, பார்வதியின் பக்கத்து வீட்டுக்காரி.பார்வதி, வீட்டுக்குள் நுழையும் போது, முற்றத்தைப் பார்த்தாள். கேசவனின் “பைக்” இல்லை.‘அவன் எங்கே போனான்? அவளை எங்கே இறக்கி விட்டான்?’உள்ளே வந்தாள்.திண்ணையில் அமர்ந்திருந்தார், கணவர் முருகேசன். அவர் கையில் செய்தித்தாள்.“என்னங்க... உங்க அருமை பையன் வந்தானா?” கேட்டவாறு, அருகில் அமர்ந்தாள்.“வந்தான்... யாரோ நண்பனைப் பார்த்துட்டு வர்றேன்னு சொல்லிட்டு, உள்ளேகூட வராம அப்படியே போயிட்டான்.”“இன்னைக்கு என்ன காரியம் நடந்ததுன்னு உங்களுக்குத் தெரியுமா?”“என்ன நடந்தது? நீ கோவிலுக்கு போயிட்டு வர்றே. அவ்வளவுதானே?”“அதுமட்டுமில்லை” என்று இழுத்தவள், வழியில் தான் கண்ட காட்சியைச் சொன்னாள்.“கொடுத்து வச்சவன். அந்தக் காலத்துல எதிரே வர்ற பொண்ணை நிமிர்ந்து பார்க்கவே எனக்கு தொடை நடுங்கும்.”“என்ன... கிண்டலா?”“கிண்டல் இல்லை. இப்போ என்ன பண்ணுறது? அவன் இஷ்டப்பட்ட பொண்ணையே கட்டிவச்சுட்டா போச்சு.”“போதும்... நீங்க ஒருத்தரே போதும். இந்தக் குடும்பம் உருப்பட்ட மாதிரிதான்.கணவனோடு அவள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது கேசவன், வண்டியில் வந்து இறங்கினான். உற்சாகமாக அவன் பெற்றோரை நோக்கி வரவும், ஆத்திரத்தில் கொதித்தாள், அம்மா.அவன், அதை சட்டை செய்யவில்லை.“அம்மா! பசிக்குது” என்றான்.“இப்போ என்னால் டிபனெல்லாம் பண்ண முடியாது. காப்பி வேணா போட்டுத் தர்றேன்.”“காப்பி வேண்டாம்! வர்ற வழியில என் சகாவோடு காப்பி குடிச்சுட்டேன்.”‘ஆம்பளை சகாவா? பொம்பளை சகாவா?’ அவசரமாகக் கேட்பதற்கு அம்மாவுக்கு நாக்கு துடித்தது. கட்டுப்படுத்திக் கொண்டாள்.“அவன்தான் பசிக்குதுங்கிறானே... ஏதாவது பண்ணிக் கொடேன்” என்றபடி முருகேசன் உள்ளே வந்தார்.பார்வதி கோபமாக சமையலறைக்குள் நுழைந்தாள். எரிச்சலோடு, பாத்திரங்களை போட்டு உருட்டினாள்.“அம்மாவுக்கு என்னாச்சு? கோபமாக இருக்கிற மாதிரி தெரியுது?” அப்பாவைப் பார்த்து கேட்டபடியே தொலைக்காட்சியை உயிர்ப்பித்தான், கேசவன்.“கொஞ்ச நேரத்துல தெரியும்... நீயே பாரு” என்றபடி அவரும் தொலைக்காட்சியில் ஆழ்ந்தார்.சில நிமிடங்களில் சூடாக ரவா உப்புமாவுடன் வந்தாள், பார்வதி. ‘டங்’கென மகன் எதிரே வைத்தாள். அவன் சாப்பிடத் தொடங்க, அம்மா இங்கும் அங்கும் உலவினாள்.‘முதலில் கல்யாண பேசசை எடு’ என அம்சா மாமி சொன்னது மறந்து போனது.அவன் சாப்பிட்டு முடிக்கும்வரை காத்திருந்தவளைப் போல் இருந்துவிட்டு திடீரென கத்தத் தொடங்கினாள்.“ஏன்டா... உன் இடுப்பைப் புடிச்சுக்கிட்டு வண்டியில் ஒருத்தி வந்தாளே... அவ யாருடா?”அதிரடியாக அம்மா இப்படிக் கேட்பாள் என்பதை எதிர்பார்க்காத கேசவன், ஒரு கணம் ஆடித்தான் போனான்
Disponível desde: 14/02/2024.
Comprimento de impressão: 84 páginas.

Outros livros que poderiam interessá-lo

  • இளநெஞ்சே வா - Ilanenjee vaa (Romantic Thriller) - cover

    இளநெஞ்சே வா - Ilanenjee vaa...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    மன்னா பயணிகள் இருக்கையிலிருந்து குதித்து பாண்டியாவை நோக்கிச் சென்றான். "அவளை வெளிய கூட்டி வா...", என்று தாழ்வான குரலில் கூறினான். ஆனால் அதுவே கட்டளையாக இருந்தது..... 
    பாண்டியா ஒரு கணம் தயங்கி, ராதிகா அமர்ந்திருந்த வேனின் பின்புறத்தைப் பார்த்தான். 
    அவள் கைகள் கட்டப்பட்டிருந்தன, அவள் முகம் வெளிரிப்போய்... ஆனால் கண்கள் சண்டைக்கு நிற்ப்பவள் போல் முறைத்துக் கொண்டு இருந்தது. "நாம இங்க தான் இருக்கனுமா மன்னா? இந்த இடத்தை பாத்தா எனக்கு பயமா இருக்கு... வேற எங்காவது...?" என்றான். 
    மன்னா புன்னகைத்து, குளிர்ந்த காற்றுக்கு எதிராக தனது மேல் சட்டையை இறுக்கமாக இழுத்தபடி, சுற்றிலும் பார்த்தான். முகத்தில் இனம் புரியா புன்னகை அரும்பியது. 
    "அது தான் நமக்கு வேணும், பாண்டியா. இது தான் சரியான இடம்... இங்க தான் யாரும் வரமாட்டாங்க. அவள் கத்துனாலும் அலறினாலும்... யாரும் என்னன்னு கேட்க மாட்டாங்க.. now move" என்றான் அதற்க்கு மேல் பேசாதே என்பது போல்... 
    ராதிகா அமைதியாக இருக்க முயன்றாலும், மன்னா அவனது வார்த்தைகளில் சற்று நிதானமாக இருந்தாள். அவளுடைய இதயத் துடிப்பின் வேகம் கூடியது. ஆனால் அவள் அழவில்லை. அவள் உடைந்து அழுவதை தன் முன்னே இருக்கும் இந்த ஆடவர்களுக்குக் காண்பிக்க அவள் விரும்பவில்லை.... 
    பாண்டியா வேனின் கதவை எச்சரிக்கையுடன் திறந்தான். ராதிகாவின் கை மற்றும் கால் கட்டுக்களை அவிழ்த்து விட்டான். 
    அவனது குரல் முன்பை விட மென்மையாக இருந்தது. "இறங்கி வா..." என்றான். 
    மணிக்கட்டில் சிவந்து போயிருந்த தடத்தைப் மெலிதாக தேய்த்துவிட்டாள். வாயில் இருந்த கட்டு அவிழ்க்கப்பட அப்போது தான் நன்றாக மூச்சே விட முடிந்தது அவளாள்.
    Ver livro
  • Idamum Valamum Alaivuru Sirusudar - இடமும் வலமும் அலைவுறு சிறுசுடர் - cover

    Idamum Valamum Alaivuru...

    B.R. Mahadevan

    • 0
    • 0
    • 0
    Auto fiction Novel: இடமும் வலமும் அலைவுறு சிறுசுடர் A proud Aurality tamil audio book production ebook by Swasam Publications. Download FREE Aurality app now on play store and or iphone ios store தீவிரமான கருத்துகளும் சுயமான சிந்தனையும் கொண்ட இளைஞன் தனது கனவுலகைத் தேடி மேற்கொள்ளும் அலைச்சலே இந்த நாவல். மதத் தத்துவங்கள் அவனைத் துரத்துகின்றன. அரசியல் கொள்கைகள் அவனைக் குழப்புகின்றன. மாயமான் வேட்டையில் நிதர்சனத்தைப் புரிந்துகொண்டு, இதுவே நம் பாதை என்று அவன் ஒரு முடிவுக்கு வரும்போது காத்திருக்கிறது இன்னொரு மாயமான். எல்லாவற்றையும் கேள்விகளால் எதிர்கொள்ளும் ஓர் இளைஞனின் பேரலைச்சலை ரத்தமும் சதையுமாக, கொஞ்சம் புனைவுடன் நிறைய உண்மைகளுடன் எழுதி இருக்கிறார் B.R.மகாதேவன். அரசியல் என்ற பெயரிலும், ஆன்மிகம் என்ற பெயரிலும், மதம் என்ற பெயரிலும் இந்தச் சமூகம் தனக்குக் கற்பிக்கும் அனைத்தையும் கேள்விகளால் அடித்து நொறுக்கி தன் அடுத்த பயணத்துக்குக் காத்திருக்கும் இந்த இளைஞன், நிச்சயம் உங்களை அசைத்துப் பார்ப்பான். எழுத்தாளர் B.R.மகாதேவன் எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்
    Ver livro
  • நாணலே நங்கையானால் - Naanale Nangaiyaanaal? - cover

    நாணலே நங்கையானால் - Naanale...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுள் ஒன்றை வைத்து, அழகான காதல் கதையின் மூலம் வாசிப்பவர்களுக்கு சுவாரஸ்யம் ஊட்டும் வகையில், பலவித திடீர் திருப்பங்களுடனும் சுவாரஸ்யங்களுடனும் கதையை எளிமையாக விளக்க முயன்றிருக்கிறேன். 
    Ver livro
  • நெஞ்சம் உன்னைக் கெஞ்சும் - Nenjam Unnai Kenjum - cover

    நெஞ்சம் உன்னைக் கெஞ்சும் -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    கண்களில் கண்ணீர் வழிந்தோடியது. "எனக்கு... என்னை உங்ககிட்ட இருந்து காப்பாத்திக்க வேற வழி தெரியலை... என்னை மன்னிச்சிடுங்க...” என்றாள் மீரா. “பின்ன ஏன் இந்தக் கண்ணீர்?” விக்ரம் குரல் சந்தேகமாக வெளி வந்தது. “அது... தெரியலை! நீங்க... உங்க கையில ரத்தத்தைப் பாத்ததும்.... சாரி, நான் திரும்பவும் சொல்றேன், உங்களை நான் காயப்படுத்த நினைக்கலை... ஆனா, நீங்க என்கிட்டே நடந்துகிட்ட முறை ரொம்ப தப்பு... ஒரு பொண்ணோட அனுமதி இல்லாம அவளை அடைய நினைக்கிறது, தப்பு. அது அவளோட கணவனாவே இருந்தாலும் சரி....” என்றாள் தலை குனிந்தபடி. 
     விக்ரம் மெதுவாக மூச்சை உள்ளே இழுத்து, காயம் இல்லாத தன் இடக்கையை வைத்து மீராவின் நாடி பிடித்து உயர்த்தி தன்னைப் பார்க்கச் செய்தவன், "அப்படின்னா நீ ஏன் இன்னும் இங்கேயே இருக்க? போயிடு... போ மீரா, என்கிட்டே இருந்து தப்பிச்சு போயிடு... திரும்ப என் கண் முன்னாடி வராத. 
     இந்த மாதிரி ஒரு சந்தர்ப்பத்தை நீ பயன் படுத்திக்கலேன்னா... உன்னால எப்பவுமே என்கிட்டே இருந்து தப்பிக்க முடியாது... இப்போ நான் சொன்ன இந்த வார்த்தை... இதை இந்த ஒரு முறைக்கு மேல என் கிட்ட இருந்து நீ எதிர்பாக்க முடியாது. போ... போயிடு” என்றான் குரலில் சற்றே கடுமை கூட்டி.... 
     மீராவின் முகம் மெல்ல புன்னகையில் விகசித்தது. “நிஜம்மாவா நான் போகலாமா? திரும்ப என்னை தொந்தரவு செய்ய மாட்டீங்களே?” என்றாள் நம்ப முடியாத பாவனையில். “ம்… ஹ்ம்ம்..... கண்டிப்பா... மாட்டேன்” என்றான் விக்ரமாதித்யன்.
    Ver livro
  • முற்றும் முதல் நீ எனக்கு - Mutrum Muthal Nee Enakku - cover

    முற்றும் முதல் நீ எனக்கு -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    வாழ்க்கையில் யாருடைய துணையும் இன்றி தன் லட்சியங்களை அடையத் துடிக்கும் நம் நாயகன் கதிர்முகிலனுக்கு தன் மனம் கவர்ந்த பெண் மயூரியால் தடைபடும் தன் இலட்சியத்தை, ஒருவர் மேல் ஒருவர் கொண்டுள்ள அதீத காதலால் எவ்வாறு முறியடித்தனர் என்பதை அறிய என்னோடு பயணியுங்கள் 'முற்றும் முதல் நீ எனக்கு'   
    Ver livro
  • உடன்பிறப்பு - Udanpirappu-Sirukathai - cover

    உடன்பிறப்பு -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    உடன்பிறப்பு
    Ver livro