Junte-se a nós em uma viagem ao mundo dos livros!
Adicionar este livro à prateleira
Grey
Deixe um novo comentário Default profile 50px
Grey
Assine para ler o livro completo ou leia as primeiras páginas de graça!
All characters reduced
மனசுக்குள் வரலாமா? - cover
LER

மனசுக்குள் வரலாமா?

ஆர்.சுமதி

Editora: Pocket Books

  • 0
  • 0
  • 0

Sinopse

கமலா வீட்டிற்கு வந்தபோது மணி ஏழரை. தன்னுடைய ஸ்கூட்டரை வீட்டின் முன்னே, தோட்டத்துப் பக்கம் வாகனங்கள் நிறுத்துவதற்காக கட்டப்பட்டிருந்த இடத்தில் நிறுத்தி விட்டு உள்ளே வந்தாள். அலங்காரமான அழகான வீடு. பணக்காரத் திமிரில் தலைநிமிர்ந்து நின்றது. அவளுடைய கன்னத்தைப் போல் பளபளக்கும் தரை.கமலா மாடிக்கு வந்தாள். தன்னுடைய அறைக்குள் வந்து மெத்தையில் விழுந்தாள். கண்களை மூடிக் கொண்டாள். அவளுடைய மனம் குதூகலித்தது. முரளி தந்த முத்தமும் மோகப் பேச்சும் அவளைக் கணிசமானதொரு களிப்பில் ஆழ்த்தியிருந்தது.குளியலறைக்குள் நுழைந்து குளித்தாள். புத்துணர்வுடன் வெளியே வந்தாள். இரவு உடையில் தன்னை நுழைத்துக் கொண்டாள். மெல்லிய ஒப்பனை செய்தாள். படிக்க வேண்டிய புத்தகங்களை எடுத்துக் கொண்டு இருக்கைக்கு வந்தாள். புத்தகத்தின் பக்கங்களைப் புரட்டினாள்.காதலில் விழுந்த கண்களின் எதிரே இருப்பதெல்லாம் காதலனின் முகத்தை தவிர வேறில்லை. அச்சில் இருக்கும் எழுத்தெல்லாம் அவனாகவே இருந்ததில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. படிப்பதற்கு சிரமப்பட்டாள் கமலா.கமலாவின் தந்தை பிரபல சோப்பு நிறுவனம் ஒன்றின் சொந்தக்காரர். மார்க்கெட்டில் அவருடைய நிறுவனப் பொருட்களுக்கே முதலிடம். ‘மணிவண்ணன்’ அவருடைய திருநாமம். அவரைத் தெரியாதவர்களே சுற்று வட்டாரத்தில் இல்லை. அவருடைய ஒரே மகள் கமலா. அவருடைய சொத்துக்களின் ஒரே வாரிசு. மூன்று வருடங்களுக்கு முன்புதான் மணிவண்ணனின் மனைவி, கமலாவின் தாய் இறந்து போனாள் மூளையில் கட்டி வந்து ஆபரேஷன் செய்தும் பலன் இல்லாமல் போய் சேர்ந்தாள். மணிவண்ணன் பணத்தைவிடப் பாசத்தை பெரிதாக நினைப்பவர். மனைவியின் இழப்பு, அவரை மிகவும் பாதித்தது. ஆனால், மகளின் முகத்திற்காகசிரித்தார். மிகவும் கண்டிப்பானவர், ஒரே மகள் என்பதற்காக அவர் அவளை செல்லம் கொடுத்தெல்லாம் வளர்க்கவில்லை. அதே சமயம் சிலரைப் போல் ஒரேயடியாக கண்டிப்பை செலுத்துபவரும் இல்லை.மனைவியை இழந்ததிலிருந்து அவர் நிறைய மாறியிருந்தார் முன்பெல்லாம் வியாபாரம், வியாபாரம் என இருப்பார். அவர் எந்த நேரத்திற்கு வீட்டிற்கு வருவார், எந்த நேரத்தில் சாப்பிடுகிறார் என்பதெல்லாம் அவளுக்கே தெரியாமல் இருந்தது. பெரும்பாலும் அம்மாவிடமே அதிக ஒட்டுதல் அவளுக்கு அம்மா எல்லாவற்றையும் நிர்வகித்துக் கொள்வாள். மகளை கவனிக்க மனைவி இருக்கிறாள் என அலட்சியமாக இருந்த மணிவண்ணன் அவள் இறந்ததும் திணறிப் போனார். மகளுக்காக அதன் பிறகு இரவு சீக்கிரமே வந்து விடுவார். எந்த வேலை எப்படியிருந்தாலும் இரவு சாப்பாடு மகளுடன்தான்.அம்மாவின் அரவணைப்பை இழந்த கமலாவிற்கு அப்பாவின் ஒட்டுதல் ஆறுதல் தந்தது. பணத்தைவிட அப்பா பாசத்திற்கு முக்கியத்துவம் தந்தது அவளுக்குத் தாயின் இழப்பை மறக்க வைத்தது.எப்படியோ முரளியைக் கொஞ்ச நேரம் ஒதுக்கி வைத்துவிட்டு படிப்பில் கவனத்தை செலுத்தினாள் கமலா. அவள் எம்.காம். கடைசி வருடம் படித்துக் கொண்டிருக்கிறாள்.சரியாய் ஒன்பது மணிக்கு அப்பா வந்து விட்டார். அடுத்த சில நிமிடங்களில் புத்தகத்தை மூடிவிட்டு இறங்கி கீழே வந்தாள்.. பசி வயிற்றைக் கிள்ளியது. அப்பா மாற்றுடைக்கு மாறி அறையை விட்டு வந்தார்.“கமலா... சாப்பிடலாமா? பயங்கர பசி” என்றார்.“எனக்கும்தாம்பா...” என்றாள்.அப்பாவும் பெண்ணும் சாப்பாட்டு மேஜையருகே வந்து அமர்ந்தனர். இருவரும் பொதுவான விஷயங்களைப் பேசியபடியே சாப்பிட்டனர்.“கமலா...” உருளைக் கிழங்கை ருசித்தபடியே மணிவண்ணன் மகளைப் பார்த்தார்.“என்னப்பா...?” திடுக்கிட்டவளைப் போல் கேட்டாள். அவளுடைய மனம் ஒருபுறம் முரளியுடன் உலாவிக் கொண்டிருந்ததே காரணம்
Disponível desde: 14/02/2024.
Comprimento de impressão: 78 páginas.

Outros livros que poderiam interessá-lo

  • Choza Sooriyan - சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் - cover

    Choza Sooriyan - சோழன் தலைகொண்ட...

    Siraa

    • 0
    • 0
    • 0
    Description 
    சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் - Part 1 சோழ இளவரசனான உத்தம சீலியுடன் நடந்த யுத்தத்திற்குப் பின், பாண்டிய நாட்டைக் கைப்பற்றினான் வீரபாண்டியன். ஒரு போருக்குப் பின் ஒரு மன்னன் தன் நாட்டை மீட்டெடுப்பது அத்தனை சுலபமல்ல. அது எத்தனை கடினமானது என்பதை, கற்பனை கலந்து கல்வெட்டுத் தரவுகளுடன் எழுதி இருக்கிறார் சிரா. சோழனோ பாண்டியனோ, தோல்வியுற்ற மன்னனுக்கும் பெரிய நாடு இருக்கும். அவனைக் கடவுள் என்று கொண்டாடிய மனிதர்கள் இருப்பார்கள். ஒரு போரில் தோல்வியுற்றான் என்ற காரணத்துக்காக அந்த மன்னன் வீரம் இல்லாதவன் என்று அர்த்தமில்லை. ஒரு மாபெரும் அரசனைத் துணிவுடன் எதிர்த்து நிற்க இன்னொரு மாவீரனால்தான் முடியும். அப்படி சோழம் என்ற ஒரு பெரும் தேசத்தை எதிர்க்கத் துணிந்த ஓர் உன்னத வீரனைப் பற்றிய கதை இது. பல்வேறு ஆதாரங்களை மையமாக வைத்து எழுதப்பட்டிருக்கும் சுவராஸ்யமான வரலாற்று நாவல். எழுத்தாளர் சிரா எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம். A proud Aurality production
    Ver livro
  • நெஞ்சம் உன்னைக் கெஞ்சும் - Nenjam Unnai Kenjum - cover

    நெஞ்சம் உன்னைக் கெஞ்சும் -...

    Kamlai Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    கண்களில் கண்ணீர் வழிந்தோடியது. "எனக்கு... என்னை உங்ககிட்ட இருந்து காப்பாத்திக்க வேற வழி தெரியலை... என்னை மன்னிச்சிடுங்க...” என்றாள் மீரா. “பின்ன ஏன் இந்தக் கண்ணீர்?” விக்ரம் குரல் சந்தேகமாக வெளி வந்தது. “அது... தெரியலை! நீங்க... உங்க கையில ரத்தத்தைப் பாத்ததும்.... சாரி, நான் திரும்பவும் சொல்றேன், உங்களை நான் காயப்படுத்த நினைக்கலை... ஆனா, நீங்க என்கிட்டே நடந்துகிட்ட முறை ரொம்ப தப்பு... ஒரு பொண்ணோட அனுமதி இல்லாம அவளை அடைய நினைக்கிறது, தப்பு. அது அவளோட கணவனாவே இருந்தாலும் சரி....” என்றாள் தலை குனிந்தபடி. 
     விக்ரம் மெதுவாக மூச்சை உள்ளே இழுத்து, காயம் இல்லாத தன் இடக்கையை வைத்து மீராவின் நாடி பிடித்து உயர்த்தி தன்னைப் பார்க்கச் செய்தவன், "அப்படின்னா நீ ஏன் இன்னும் இங்கேயே இருக்க? போயிடு... போ மீரா, என்கிட்டே இருந்து தப்பிச்சு போயிடு... திரும்ப என் கண் முன்னாடி வராத. 
     இந்த மாதிரி ஒரு சந்தர்ப்பத்தை நீ பயன் படுத்திக்கலேன்னா... உன்னால எப்பவுமே என்கிட்டே இருந்து தப்பிக்க முடியாது... இப்போ நான் சொன்ன இந்த வார்த்தை... இதை இந்த ஒரு முறைக்கு மேல என் கிட்ட இருந்து நீ எதிர்பாக்க முடியாது. போ... போயிடு” என்றான் குரலில் சற்றே கடுமை கூட்டி.... 
     மீராவின் முகம் மெல்ல புன்னகையில் விகசித்தது. “நிஜம்மாவா நான் போகலாமா? திரும்ப என்னை தொந்தரவு செய்ய மாட்டீங்களே?” என்றாள் நம்ப முடியாத பாவனையில். “ம்… ஹ்ம்ம்..... கண்டிப்பா... மாட்டேன்” என்றான் விக்ரமாதித்யன்.
    Ver livro
  • மகரந்தம் தாங்கும் மலரவள் - Magarantham Thangum Malaraval (Tamil Edition) - cover

    மகரந்தம் தாங்கும் மலரவள் -...

    Kamlai Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    தந்தையின் உழைப்பில் வாழ விரும்பாமல் தன் வாழ்க்கையின் ஒவ்வொரு முக்கியமான கால கட்டத்திலும், தன்னுடைய முடிவையே பிரதானமாகக் கொண்டு அதில் வெற்றியும் பெற்றிருப்பவன் நளன். தனக்கு எது வேண்டும் என்று முடிவெடுக்கத் தெரியாத பேதையவள் நேத்ரா. 
    காலத்தின் போக்கில் இணைந்த இவர்களது காதல் மூன்றாம் நபரின் தலையீட்டால் என்னவானது? தெரிந்து கொள்ளப் படியுங்கள் மகரந்தம் தாங்கும் மலரவள்!   
     
    Ver livro
  • நேசம் மறவாத நெஞ்சமடி - Nesam Maravaatha Nenjamadi - cover

    நேசம் மறவாத நெஞ்சமடி - Nesam...

    Kamlai Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    "அதை இன்னும் கொஞ்சம் முன்னமே சொன்னா தான் என்னவாம்! கை வலிக்கிது..." என்று வாய்க்குள் முணுமுணுத்தாள்.  
    மீனாக்ஷியின் கூற்றில், அவளைப் பார்த்தபடியே வீரா மெலிதாக சிரித்து சிகாரைத் தரையில் எரிந்து தன் ஷூ காலால் மிதித்து அதன் நெருப்பை அணைத்தான். ஆனால் மீனக்ஷியால் அவனுள் மூண்ட நெருப்பு என்னவோ அணைய மறுத்தது. 
     "அடுத்த முறை, முட்டாள்களின் பேச்சைக் கேட்காத அளவுக்கு புத்திசாலித்தனமா நடந்துக்கோ..." என்று கூறியவன் குரலில் கிண்டல் நிறைந்திருந்தது. 
    அவன் கூற்றை சரியாக புரிந்து கொள்ளவே சில நொடிகள் பிடித்தது மீனாக்ஷிக்கு. 
    மீனாக்ஷி பதிலளிப்பதற்கு முன்பு, வீரா தனது பைக்கின் மீது காலை சுழற்றி அமர்ந்தவன் என்ஜினைத் ஆன் செய்தான். 
    வாகனத்தை கிளப்பும் முன், “வெல்கம் டு திஸ் காலேஜ்” என்று கூறியவன் கண்கள் அவள் மீது நிலைத்திருக்க அவள் பதிலை எதிர்பாராமல் வாகன இயந்திரத்தின் ஒலியுடன் சென்றுவிட்டான் வீரா.  
    மீனாக்ஷியின் இதயத் துடிப்பின் வேகம் கூடியது. அவள், வீரா... அவன் மேல் கோபப்படுகிறாளா, சங்கடப்படுகிறாளா அல்லது அவன் யாரென்று அறிய ஆர்வமாக இருக்கிறாளா? என்பதை அவளால் தீர்மானிக்க முடியவில்லை. 
    ஆனால் ஒரு விஷயம் மட்டும் உறுதியாக இருந்தது. வீரா அவளால் அவள் மனதில், என்றும் மறக்க முடியாத எண்ணத்தை விட்டுச் சென்றிருந்தான்... 
    “ஹே நிறுத்து நிறுத்து... அதென்ன? முதல் முதல்ல ஒரு பொண்ணை பாக்குற ஆண், இப்படியா சிகிரெட்டை ஊதிக்கிட்டு... வெறிச்சு வெறிச்சு பாப்பான்? இவனுங்களை தானே உங்களை மாதிரி பொண்ணுங்களுக்கெல்லாம் பிடிக்கிறது? அவனை ஹீரோன்னு வேற சொல்லிக்கிறீங்க... 
    என்னால இந்த மாதிரி இர்ரிடேட்டிங் ஸ்டோரி எல்லாம் கேக்க முடியாது. ச்சா... நான்சென்ஸ்...” என்று வர்மா மீனாக்ஷியை பொரிந்து தள்ளி கதையை பாதியில் இடை வெட்டினான்.
    Ver livro
  • Idamum Valamum Alaivuru Sirusudar - இடமும் வலமும் அலைவுறு சிறுசுடர் - cover

    Idamum Valamum Alaivuru...

    B.R. Mahadevan

    • 0
    • 0
    • 0
    Auto fiction Novel: இடமும் வலமும் அலைவுறு சிறுசுடர் A proud Aurality tamil audio book production ebook by Swasam Publications. Download FREE Aurality app now on play store and or iphone ios store தீவிரமான கருத்துகளும் சுயமான சிந்தனையும் கொண்ட இளைஞன் தனது கனவுலகைத் தேடி மேற்கொள்ளும் அலைச்சலே இந்த நாவல். மதத் தத்துவங்கள் அவனைத் துரத்துகின்றன. அரசியல் கொள்கைகள் அவனைக் குழப்புகின்றன. மாயமான் வேட்டையில் நிதர்சனத்தைப் புரிந்துகொண்டு, இதுவே நம் பாதை என்று அவன் ஒரு முடிவுக்கு வரும்போது காத்திருக்கிறது இன்னொரு மாயமான். எல்லாவற்றையும் கேள்விகளால் எதிர்கொள்ளும் ஓர் இளைஞனின் பேரலைச்சலை ரத்தமும் சதையுமாக, கொஞ்சம் புனைவுடன் நிறைய உண்மைகளுடன் எழுதி இருக்கிறார் B.R.மகாதேவன். அரசியல் என்ற பெயரிலும், ஆன்மிகம் என்ற பெயரிலும், மதம் என்ற பெயரிலும் இந்தச் சமூகம் தனக்குக் கற்பிக்கும் அனைத்தையும் கேள்விகளால் அடித்து நொறுக்கி தன் அடுத்த பயணத்துக்குக் காத்திருக்கும் இந்த இளைஞன், நிச்சயம் உங்களை அசைத்துப் பார்ப்பான். எழுத்தாளர் B.R.மகாதேவன் எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்
    Ver livro
  • நாணலே நங்கையானால் - Naanale Nangaiyaanaal? - cover

    நாணலே நங்கையானால் - Naanale...

    Kamlai Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுள் ஒன்றை வைத்து, அழகான காதல் கதையின் மூலம் வாசிப்பவர்களுக்கு சுவாரஸ்யம் ஊட்டும் வகையில், பலவித திடீர் திருப்பங்களுடனும் சுவாரஸ்யங்களுடனும் கதையை எளிமையாக விளக்க முயன்றிருக்கிறேன். 
    Ver livro