Junte-se a nós em uma viagem ao mundo dos livros!
Adicionar este livro à prateleira
Grey
Deixe um novo comentário Default profile 50px
Grey
Assine para ler o livro completo ou leia as primeiras páginas de graça!
All characters reduced
மலரே மயங்காதே! - cover
LER

மலரே மயங்காதே!

ஆர்.சுமதி

Editora: Pocket Books

  • 0
  • 0
  • 0

Sinopse

கைகள் இரண்டையும் தாமரை மொட்டாக்கி, நந்தனின் எதிரே குவித்தாள், தமிழ்.தாமரை மொட்டின் மீது பனித்துளி விழுந்து சிதறியதைப் போல், அவளுடைய கண்ணீர்த் துளி, கையில் விழுந்து சிதறியது.“நன்றி... எங்க அப்பாவைச் சரியான நேரத்துக்கு ஆஸ்பத்திரியில் சேர்த்து உயிரைக் காப்பாத்திட்டீங்க! உங்களுக்குக் கோடி நன்றி சொன்னாலும் நீங்க செய்த உதவிக்கு ஈடாகாது.”நந்தன் சற்றே சங்கோஜப்பட்டான்.‘‘ஐயோ.. என்ன மேடம், நீங்க வேற..! மனிதனுக்கு மனிதன் இந்த உதவி செய்யலைன்னா எப்படி?”“நீங்க செய்த உதவியைச் சாதாரணமா எடுத்துக்கிறது உங்களுக்குப் பெருந்தன்மையா இருக்கலாம், ஆனா, எனக்கு எங்க அப்பாவைக் காப்பாத்தின தெய்வமா நீங்க தெரியுறீங்க.’’“இல்லை... எப்போதெல்லாம் பிறருக்கு உதவி செய்ய நேரம் வாய்க்குதோ, அப்போதெல்லாம் உதவி செய்திடணும். அப்பத்தான், மனித வாழ்க்கை நிறைவா இருக்கும்.”“உங்க செயல் மட்டுமில்லை, பேச்சும் மனதைத் தொடுகிற மாதிரி இருக்கு, மிஸ்டர்...’’‘‘நந்தன்.’’அவளுடைய முகத்தில் அப்பா ஏற்படுத்திய கலக்கம் மறைந்து முதன் முறையாக அழகான புன்னகை மலர்ந்தது.‘‘நந்தன், உங்களுக்குப் பொருத்தமான பெயர்தான். ஆபத்துல துடிக்கிற உயிரைக் காக்கிற பகவானுடைய திருநாமம். அந்தக் கிருஷ்ணனே வந்து எங்க அப்பாவைக் காப்பாத்தின மாதிரி காப்பாத்திட்டீங்க.”ட்டா... விட்டால் இந்த ஆஸ்பத்திரி ஓரமா கோவிலே கட்டி, கையில் ஒரு புல்லாங்குழலைக் கொடுத்து நிக்க வச்சுடுவீங்க போலிருக்கே! அப்புறம்... இங்க உள்ள அழகழகான நர்சுகள் எல்லாம் கோபிகை மாதிரி என்னையே சுத்த ஆரம்பிச்சுடுவாங்க.’’அவன் இப்படிச் சொல்லவும் புன்னகை படர்ந்த அந்த முகம், பூரிப்பில் நிறைந்தது.“அப்பாவை இன்னும் ஒரு மணி நேரம் கழிச்சுத்தான் பார்க்கணும்னு. டாக்டர் சொல்லிட்டார். இனிப் பயம் இல்லைன்னு உறுதி கொடுத்துட்டார். நீங்க ஆபீசிலிருந்து ஓடி வந்திருக்கீங்க. மணி இரண்டாகப் போகுது. சாப்பிடாம இருக்கக் கூடாது. வாங்க, பக்கத்திலேயே ஓட்டல் இருக்கு. சாப்பிடலாம்,’’ என்றான்.“இல்லைங்க. எனக்குப் பசி இல்லை. அப்பாவைப் பார்த்த பிறகுதான் என்னால் எதுவுமே சாப்பிட முடியும்.’’‘‘நீங்க சாப்பிடாம இருக்க முடியும். ஆனா, எனக்குப். பயங்கரப் பசி...’’அவனை அதிர்வாக ஏறிட்டாள்.‘நீங்க சாப்பிடலையா?’’‘‘எப்படிங்க சாப்பிட முடியும்? ஒருவர் உயிருக்குப் போராடும் போது பக்கத்தில் இருக்கிறவனுக்குப் பசி எடுக்குமா? இப்போ பயங்கரப் பசி எனக்கு. ஏன்னா... மனசு நிறைவா இருக்கு. நீங்க என்னோடு சாப்பிடலைன்னா பெண் பாவம் என்னைச் சும்மா விடுமா?’’ அவன் சந்தோஷமாகச் சிரித்தான்.‘‘சாரி... வாங்க!’’ அவனுடைய பேச்சில் இதமாகச் சிரித்த படி அவனுடன் கிளம்பினாள்.இருவரும் பக்கத்திலிருந்த ஓட்டலுக்குள் நுழைந்தனர். இரண்டு சாப்பாடு சொல்லிவிட்டு வந்தான், நந்தன். இருவரும் எதிரெதிரே அமர்ந்தனர்.‘‘நீங்க எங்கே வேலை பார்க்கிறீங்க மிஸ்டர் நந்தன்?’’‘‘இந்த மிஸ்டர், சிஸ்டரெல்லாம் எதுக்கு? அழகா நந்தன்னு கூப்பிடுங்க. நந்துன்னு சுருக்கிக் கூப்பிட்டால் ரொம்ப சந்தோஷமா இருக்கும். பதிலுக்கு நானும் உங்களை அமுது என்று கூப்பிடுகிறேன்.”‘‘பசியில் உங்களுக்கு என் பேர் கூட மறந்துடுச்சா? என் பெயர் அமுது இல்லை , தமிழ்!’’ “நான் ஞாபக சக்தியில் யானை மாதிரி. உங்க பேரை மறக்கலை. சரியாத்தான் சொன்னேன்.’’‘‘என்ன... என் பெயர் அமுது என்றுதானே சொன்னீங்க?’’‘‘ஆமா! ‘தமிழுக்கும் அமுதென்று பேர்’ பாட்டுக் கேட்ட தில்லையா? பாரதிதாசன் பாடல். அதான், தமிழை அமுதாக்கிச் சொன்னேன்.”அவளை முதலில் புன்னகைக்க வைத்து, பிறகு மலர வைத்தவன், இப்போது பலமாய்ச் சிரிக்கவே வைத்து விட்டான்.‘‘சிரிக்க வைக்கிற மாதிரி நல்லா பேசுறீங்க!’’ அவள் சலங்கையாகக் குலுங்கினாள்.சிலர் திரும்பிப் பார்த்தனர்.“பாருங்க, வாய் விட்டுச் சிரிச்சா நோய் விட்டுப் போகும்னு பெரியவங்க சொன்னது எவ்வளவு உண்மை! உங்க முகத்துல தெரிஞ்ச கவலை யெல்லாம் நீங்க சிரிக்க ஆரம்பிச்சதும் போன இடமே தெரியலை!” என்றவாறே அவளுடைய முகத்தை ரசித்தான்.இலையில் சூடாகச் சோறு போட்டு. சாம்பார் ஊற்றி, வகை வகையாகப் பொரியலை வைத்தான், ஓட்டல் பணியாள்.சாப்பாட்டைப் பிசைந்த நந்தன், ‘‘பாருங்க... நாம உண்மைன்னு நினைக்கிறதெல்லாம் அடுத்த நிமிடமே பொய்யா மாறிடுது!” என்றான்.“எது?” அவனை ஆவலாகப் பார்த்தாள், அவள்.
Disponível desde: 14/02/2024.
Comprimento de impressão: 98 páginas.

Outros livros que poderiam interessá-lo

  • மகரந்தம் தாங்கும் மலரவள் - Magarantham Thangum Malaraval (Tamil Edition) - cover

    மகரந்தம் தாங்கும் மலரவள் -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    தந்தையின் உழைப்பில் வாழ விரும்பாமல் தன் வாழ்க்கையின் ஒவ்வொரு முக்கியமான கால கட்டத்திலும், தன்னுடைய முடிவையே பிரதானமாகக் கொண்டு அதில் வெற்றியும் பெற்றிருப்பவன் நளன். தனக்கு எது வேண்டும் என்று முடிவெடுக்கத் தெரியாத பேதையவள் நேத்ரா. 
    காலத்தின் போக்கில் இணைந்த இவர்களது காதல் மூன்றாம் நபரின் தலையீட்டால் என்னவானது? தெரிந்து கொள்ளப் படியுங்கள் மகரந்தம் தாங்கும் மலரவள்!   
     
    Ver livro
  • நெஞ்சம் உன்னைக் கெஞ்சும் - Nenjam Unnai Kenjum - cover

    நெஞ்சம் உன்னைக் கெஞ்சும் -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    கண்களில் கண்ணீர் வழிந்தோடியது. "எனக்கு... என்னை உங்ககிட்ட இருந்து காப்பாத்திக்க வேற வழி தெரியலை... என்னை மன்னிச்சிடுங்க...” என்றாள் மீரா. “பின்ன ஏன் இந்தக் கண்ணீர்?” விக்ரம் குரல் சந்தேகமாக வெளி வந்தது. “அது... தெரியலை! நீங்க... உங்க கையில ரத்தத்தைப் பாத்ததும்.... சாரி, நான் திரும்பவும் சொல்றேன், உங்களை நான் காயப்படுத்த நினைக்கலை... ஆனா, நீங்க என்கிட்டே நடந்துகிட்ட முறை ரொம்ப தப்பு... ஒரு பொண்ணோட அனுமதி இல்லாம அவளை அடைய நினைக்கிறது, தப்பு. அது அவளோட கணவனாவே இருந்தாலும் சரி....” என்றாள் தலை குனிந்தபடி. 
     விக்ரம் மெதுவாக மூச்சை உள்ளே இழுத்து, காயம் இல்லாத தன் இடக்கையை வைத்து மீராவின் நாடி பிடித்து உயர்த்தி தன்னைப் பார்க்கச் செய்தவன், "அப்படின்னா நீ ஏன் இன்னும் இங்கேயே இருக்க? போயிடு... போ மீரா, என்கிட்டே இருந்து தப்பிச்சு போயிடு... திரும்ப என் கண் முன்னாடி வராத. 
     இந்த மாதிரி ஒரு சந்தர்ப்பத்தை நீ பயன் படுத்திக்கலேன்னா... உன்னால எப்பவுமே என்கிட்டே இருந்து தப்பிக்க முடியாது... இப்போ நான் சொன்ன இந்த வார்த்தை... இதை இந்த ஒரு முறைக்கு மேல என் கிட்ட இருந்து நீ எதிர்பாக்க முடியாது. போ... போயிடு” என்றான் குரலில் சற்றே கடுமை கூட்டி.... 
     மீராவின் முகம் மெல்ல புன்னகையில் விகசித்தது. “நிஜம்மாவா நான் போகலாமா? திரும்ப என்னை தொந்தரவு செய்ய மாட்டீங்களே?” என்றாள் நம்ப முடியாத பாவனையில். “ம்… ஹ்ம்ம்..... கண்டிப்பா... மாட்டேன்” என்றான் விக்ரமாதித்யன்.
    Ver livro
  • உடன்பிறப்பு - Udanpirappu-Sirukathai - cover

    உடன்பிறப்பு -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    உடன்பிறப்பு
    Ver livro
  • நேசம் மறவாத நெஞ்சமடி - Nesam Maravaatha Nenjamadi - cover

    நேசம் மறவாத நெஞ்சமடி - Nesam...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    "அதை இன்னும் கொஞ்சம் முன்னமே சொன்னா தான் என்னவாம்! கை வலிக்கிது..." என்று வாய்க்குள் முணுமுணுத்தாள்.  
    மீனாக்ஷியின் கூற்றில், அவளைப் பார்த்தபடியே வீரா மெலிதாக சிரித்து சிகாரைத் தரையில் எரிந்து தன் ஷூ காலால் மிதித்து அதன் நெருப்பை அணைத்தான். ஆனால் மீனக்ஷியால் அவனுள் மூண்ட நெருப்பு என்னவோ அணைய மறுத்தது. 
     "அடுத்த முறை, முட்டாள்களின் பேச்சைக் கேட்காத அளவுக்கு புத்திசாலித்தனமா நடந்துக்கோ..." என்று கூறியவன் குரலில் கிண்டல் நிறைந்திருந்தது. 
    அவன் கூற்றை சரியாக புரிந்து கொள்ளவே சில நொடிகள் பிடித்தது மீனாக்ஷிக்கு. 
    மீனாக்ஷி பதிலளிப்பதற்கு முன்பு, வீரா தனது பைக்கின் மீது காலை சுழற்றி அமர்ந்தவன் என்ஜினைத் ஆன் செய்தான். 
    வாகனத்தை கிளப்பும் முன், “வெல்கம் டு திஸ் காலேஜ்” என்று கூறியவன் கண்கள் அவள் மீது நிலைத்திருக்க அவள் பதிலை எதிர்பாராமல் வாகன இயந்திரத்தின் ஒலியுடன் சென்றுவிட்டான் வீரா.  
    மீனாக்ஷியின் இதயத் துடிப்பின் வேகம் கூடியது. அவள், வீரா... அவன் மேல் கோபப்படுகிறாளா, சங்கடப்படுகிறாளா அல்லது அவன் யாரென்று அறிய ஆர்வமாக இருக்கிறாளா? என்பதை அவளால் தீர்மானிக்க முடியவில்லை. 
    ஆனால் ஒரு விஷயம் மட்டும் உறுதியாக இருந்தது. வீரா அவளால் அவள் மனதில், என்றும் மறக்க முடியாத எண்ணத்தை விட்டுச் சென்றிருந்தான்... 
    “ஹே நிறுத்து நிறுத்து... அதென்ன? முதல் முதல்ல ஒரு பொண்ணை பாக்குற ஆண், இப்படியா சிகிரெட்டை ஊதிக்கிட்டு... வெறிச்சு வெறிச்சு பாப்பான்? இவனுங்களை தானே உங்களை மாதிரி பொண்ணுங்களுக்கெல்லாம் பிடிக்கிறது? அவனை ஹீரோன்னு வேற சொல்லிக்கிறீங்க... 
    என்னால இந்த மாதிரி இர்ரிடேட்டிங் ஸ்டோரி எல்லாம் கேக்க முடியாது. ச்சா... நான்சென்ஸ்...” என்று வர்மா மீனாக்ஷியை பொரிந்து தள்ளி கதையை பாதியில் இடை வெட்டினான்.
    Ver livro
  • Choza Sooriyan - சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் - cover

    Choza Sooriyan - சோழன் தலைகொண்ட...

    Siraa

    • 0
    • 0
    • 0
    Description 
    சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் - Part 1 சோழ இளவரசனான உத்தம சீலியுடன் நடந்த யுத்தத்திற்குப் பின், பாண்டிய நாட்டைக் கைப்பற்றினான் வீரபாண்டியன். ஒரு போருக்குப் பின் ஒரு மன்னன் தன் நாட்டை மீட்டெடுப்பது அத்தனை சுலபமல்ல. அது எத்தனை கடினமானது என்பதை, கற்பனை கலந்து கல்வெட்டுத் தரவுகளுடன் எழுதி இருக்கிறார் சிரா. சோழனோ பாண்டியனோ, தோல்வியுற்ற மன்னனுக்கும் பெரிய நாடு இருக்கும். அவனைக் கடவுள் என்று கொண்டாடிய மனிதர்கள் இருப்பார்கள். ஒரு போரில் தோல்வியுற்றான் என்ற காரணத்துக்காக அந்த மன்னன் வீரம் இல்லாதவன் என்று அர்த்தமில்லை. ஒரு மாபெரும் அரசனைத் துணிவுடன் எதிர்த்து நிற்க இன்னொரு மாவீரனால்தான் முடியும். அப்படி சோழம் என்ற ஒரு பெரும் தேசத்தை எதிர்க்கத் துணிந்த ஓர் உன்னத வீரனைப் பற்றிய கதை இது. பல்வேறு ஆதாரங்களை மையமாக வைத்து எழுதப்பட்டிருக்கும் சுவராஸ்யமான வரலாற்று நாவல். எழுத்தாளர் சிரா எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம். A proud Aurality production
    Ver livro
  • Idamum Valamum Alaivuru Sirusudar - இடமும் வலமும் அலைவுறு சிறுசுடர் - cover

    Idamum Valamum Alaivuru...

    B.R. Mahadevan

    • 0
    • 0
    • 0
    Auto fiction Novel: இடமும் வலமும் அலைவுறு சிறுசுடர் A proud Aurality tamil audio book production ebook by Swasam Publications. Download FREE Aurality app now on play store and or iphone ios store தீவிரமான கருத்துகளும் சுயமான சிந்தனையும் கொண்ட இளைஞன் தனது கனவுலகைத் தேடி மேற்கொள்ளும் அலைச்சலே இந்த நாவல். மதத் தத்துவங்கள் அவனைத் துரத்துகின்றன. அரசியல் கொள்கைகள் அவனைக் குழப்புகின்றன. மாயமான் வேட்டையில் நிதர்சனத்தைப் புரிந்துகொண்டு, இதுவே நம் பாதை என்று அவன் ஒரு முடிவுக்கு வரும்போது காத்திருக்கிறது இன்னொரு மாயமான். எல்லாவற்றையும் கேள்விகளால் எதிர்கொள்ளும் ஓர் இளைஞனின் பேரலைச்சலை ரத்தமும் சதையுமாக, கொஞ்சம் புனைவுடன் நிறைய உண்மைகளுடன் எழுதி இருக்கிறார் B.R.மகாதேவன். அரசியல் என்ற பெயரிலும், ஆன்மிகம் என்ற பெயரிலும், மதம் என்ற பெயரிலும் இந்தச் சமூகம் தனக்குக் கற்பிக்கும் அனைத்தையும் கேள்விகளால் அடித்து நொறுக்கி தன் அடுத்த பயணத்துக்குக் காத்திருக்கும் இந்த இளைஞன், நிச்சயம் உங்களை அசைத்துப் பார்ப்பான். எழுத்தாளர் B.R.மகாதேவன் எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்
    Ver livro