கண்ணன் வரும் நேரமிது
ஆர்.சுமதி
Maison d'édition: Pocket Books
Synopsis
புருஷன் இருக்கறவரைதான் நமக்கு மதிப்பு மரியாதை. அப்பறம் ஒண்ணும் கிடையாது.’சுசீலாவைப் பார்த்தபடியே லட்டு பிடிக்கத்துவங்கிய பிரபாவதிக்கு சற்று முன் செண்பகம் சொன்ன இந்த வார்த்தைகள் எதிரொலித்துக் கொண்டேயிருந்தன.‘புருஷன் இருக்கறவரைதான் மதிப்பும், மரியாதையும் கிடைக்குமாம். புருஷன் இருந்து இவளுக்கென்ன கிடைத்தது? கடைசியில் ஹோமில் இருக்க வேண்டிய நிலமை.’‘அதுக்கென்ன பண்றது? இவளை யாரு ஹோம்ல இருக்கச் சொன்னா? புருஷனும் பொண்ணுங்களும் பேரும் புகழுமாயிருக்காங்க. பணத்துலயே புரள்றாங்க. இவ நினைச்சா மகாராணி மாதிரி வாழலாம். திமிர் வேற என்ன? வரட்டு கௌரவம். தானே தன்னை வருத்திக்கறா. இவளுக்கென்ன ஹோம்ல வந்து கெடக்கணும்னு தலையெழுத்தா? காசுதான் வாழ்க்கை என நினைப்பவர்கள் அவளைப்பற்றி பேசும் பேச்சு இது.’‘வாழ்க்கைன்னா விட்டுக் கொடுத்துத்தான் போகணும்!வாழ்க்கையைப் பற்றிய தத்துவங்களை பேசுவதற்காகவே அவதாரம் எடுத்த அரிஸ்டாட்டில்கள் அவளுக்கு தரும் அறிவுரை இது!’இத்தனைக்கும் வயது சுசீலாவிற்கு ஐம்பதுதான். அதற்குள்ளேயே வாழ்க்கையை வெறுத்துவிட்டாள்.‘யாருக்காக ஓடி ஓடி உழைக்கணும்? உழைச்சு உழைச்சு என்னாகப் போகுது? நம்ம உழைப்பு மத்தவங்களோட முன்னேற்றத்துக்கு உதவுறவரைதான் நம்ம உழைப்புக்கு மதிப்பு. அதுக்கு பிறகு நம்ம உழைப்பு அவங்களுக்கு கால் தூசு!’இதுதான் சுசீலா தன் வாழ்க்கையிலிருந்து கத்துக்கிட்ட பாசம்தன் உழைப்பு பிறருக்கு கால்தூசியான போது அவள் உழைப்பதை நிறுத்தி விட்டாள்.வேலையை ராஜினாமா செய்துவிட்டாள். எடுத்துக்கொண்டிருந்த டியூஷனையெல்லாம் மூடினாள். கையிலிருக்கும் பணமே காலம் முழுவதும் என் ஒருத்திக்கு போதும் என இந்த ஹோமில் வந்து சேர்ந்து விட்டாள்.முதியோர் இல்லத்தில் வந்து சேருமளவிற்கு அவள் ஒன்றும் வயதானவளில்லை.ஐம்பதை நெருங்குகிறாள். அவ்வளவுதான். தனியாக வாழப் பிடிக்கவில்லை. இங்கு வந்துவிட்டாள்.இங்கு வந்துவிட்டாலே தவிர யாருடனும் நெருங்கிப் பழகமாட்டாள். மனவேதனையை யாரிடமும் பகிரமாட்டாள்.மனம் விட்டு சிரிக்கமாட்டாள்.அவள் கதையை அவள் பகிர வேண்டிய அவசியமே இல்லை. ஊரே அறிந்த ஒன்று.சுவாரசியமாக பேசும் ஒன்று.‘சுசீலா இந்த நீயூஸை படியேன். உன் புருஷனுக்கும் புதுசா நடிக்க வந்த கேரள நடிகைக்கும் கிசுகிசுன்னு போட்டிருக்கு. இந்த நடிகைகளுக்கு விவஸ்தையே இல்லையா? அழகாயிருக்காளுங்க வயசும் திறமையும் இருக்கு. அப்பன் வயசுலயிருக்கற நடிகர்களை எதுக்கு சுத்தறாளுங்க...’அந்த இல்லத்தில் அடிக்கடி சுவாரசியத்தோடு பேசப்படும் விஷயம், கவர்ச்சிகரமான விஷயம்.‘அடடா... உன் பொண்ணு நிக்கற கோலத்தைப்பாரு.உவ்வே. அது டிரஸ்ஸும் மேக்கப்பும்!’அட்டைப்படத்தில் கவர்ச்சியாக போஸ் கொடுத்தபடி நிற்கும் அவளுடைய பெண்ணின் புகைப்படம் வந்திருக்கும் பத்திரிகையை அனைவரும் முகச் சுளிப்புடன் பார்க்கும் போது எதுவுமே தன்னை பாதிக்காததைப் போல் மாத நாவலில் மூழ்கியிருப்பாள் சுசீலா
