Junte-se a nós em uma viagem ao mundo dos livros!
Adicionar este livro à prateleira
Grey
Deixe um novo comentário Default profile 50px
Grey
Assine para ler o livro completo ou leia as primeiras páginas de graça!
All characters reduced
காதல் மலரும் காத்திரு - cover
LER

காதல் மலரும் காத்திரு

ஆர்.சுமதி

Editora: Pocket Books

  • 0
  • 0
  • 0

Sinopse

மனதை மயக்கும் மாலை நேரம்.அந்த அழகை மேலும் அழகூட்டுவதைப் போல் ஆதிரை அலையடிக்கும் கரையோரம் கால் பதித்து நடந்து கொண்டிருந்தாள்.அவளுடைய தோளை உரசியபடி நடந்து கொண்டிருந்த ஸ்டீபன் அவள் அழகை ரசித்த வண்ணம் நடந்தாலும்... வழக்கமாகப் பொலிவு பொங்கும் அவள் முகத்தில் ஒருவித அமைதியும் உற்சாகமின்மையும் தங்கியிருப்பதைக் கண்டான்.சற்றுத் தூரம் நடந்து விட்டு இருவரும் மணற்பரப்பில் அமர்ந்தனர்.“ஆதிரை... என்னாச்சு உனக்கு?” - அவளுடைய அமைதிக்கும் குழப்பத்திற்கும் விளக்கம் கேட்டான் ஸ்டீபன்.“ஒண்ணுமில்லை. நல்லாத்தானே இருக்கேன்...” - சிரிக்க முயன்றாள்.“வழக்கமான - கலகலப்பையே காணோம்? காதலிச்சவன் ஏமாத்திக் கைவிட்ட மாதிரி சோகமா யிருக்கே...” சிரித்தபடியே சீண்டினான்.“கடைசியில் நிலைமை அப்படித்தான் ஆகிடும் போலிருக்கு...” - தளர்வாகச் சொன்னாள்.“என் மேலே உனக்கு நம்பிக்கை இல்லையா? நான் ஏமாத்திடுவேனோன்னு பயப்படறியா?”“நீங்க இல்ல... நான்தான்.”“அடிப்பாவி! என்னை விட ஸ்மார்ட்டா எவனாவது உன்கிட்ட ‘ஐ லவ் யூ’ன்னு சொன்னானா? உடனே நீ பல்டி அடிச்சுட்டியா? ஆண் பாவம் பொல்லாதது. நான் சாபம் விட்டேன்னா... நீ இந்த அழகையெல்லாம் இழந்து அவ்வைக் கிழவி மாதிரி ஆயிடுவே.”ஆதிரை வாய் விட்டுக் கலகலவெனச் சிரித்தாள்“சொல்லு... யார் அந்த ஆணழகன்?”“சொன்னா அவனைக் கண்டுபிடிச்சு கண்டந்துண்டமா வெட்டிப் போடப் போறீங்களா?”“வெட்டிப் போடுறதா? அவன் கால்ல விழுந்து தயவு பண்ணி இந்தப் பிசாசைக் கல்யாணம் பண்ணிக்கோ. எனக்கு விடுதலை கொடுன்னு கெஞ்சுவேன்...”“என்னமோ இப்பத்தான் சாபம் தந்து கிழவியாக்கப் போறதாச் சொன்னீங்க?”“அதுக்குத் தேவையே இல்லை. ஏன்னா நீ இப்பவே பார்க்க கிழவி மாதிரிதான் இருக்கே...”“உங்களை...” - அவனைச் செல்லமாக மார்பில் குத்தினாள். பின் சொன்னாள்.“எங்கப்பா எனக்குக் கல்யாணம் பண்றதா முடிவு பண்ணிட்டார்.”“வெரிகுட்! இப்பத்தான் ஒரு நல்ல தகப்பன்கறதை நிரூபிச்சிருக்கார். நீ என்னைப் பற்றிச் சொல்லிட்டியா? அதனாலதான் கல்யாணம் பண்றதா முடிவு பண்ணியிருக்காரா?”“உங்களைப் பற்றிச் சொல்றதா? ஐய்யோ...”“ஏன்? நான் என்ன நாலு கொலை பண்ணிட்டு ஜெயிலுக்கா போயிட்டு வந்திருக்கேன். என்னைப் பற்றிச் சொல்லப் பயப்படுறே?”“எங்கப்பா கொலைகாரனுக்குக் கூட பொண்ணு கொடுப்பார் போலிருக்கு. வேற ஜாதிக்காரனுக்குக் கொடுக்கமாட்டார். அதிலும் நீங்க மதமே வேற.”“எங்க உங்கப்பா இந்தக் காலத்துல போய் இப்படியிருக்கார்...?”“எந்தக் காலத்திலேயும் இப்படிப்பட்டவங்க இருக்கத்தான் செய்வாங்க. எங்கப்பா எனக்கு மாப்பிள்ளை பார்க்கச் சொல்லி ஒரு தரகர்கிட்ட சொல்லியிருந்தார். அவரும் ஒரு ஜாதகத்தைக் கொடுத்திருந்தார். மாப்பிள்ளை அழகு. அதிகச் சம்பளம்.”“ஏய்... என்ன மட்டம் தட்டறியா?”அட... உண்மையைச் சொன்னேன். அந்தப் பையன் வேற ஜாதி. தரகர் ஏதோ அவசரத்துல ஜாதகத்தைக் கொடுத்துட்டார். அப்புறம்தான் விஷயத்தைச் சொல்லியிருக்கார். ஆனா அப்பா உடனே அந்த ஜாதகத்தைத் திருப்பி அனுப்பிட்டார்... அதான் பயமாயிருக்கு...” என நடந்ததைச் சொல்லி முடித்தாள்.“அதான் என்னை ஏமாத்தப் போறதாச் சொன்னியா? அப்படின்னா உங்க அப்பா பார்க்கிற மாப்பிள்ளையைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு என்னை அலைய விடப் போறியா?”“ச்சே! சும்மா விளையாட்டுக்குச் சொன்னேன். நீயின்றி நானில்லை. உன் நினைவே ஒரு சங்கீதம். நெஞ்சம் மறப்பதில்லை. உன் நினைவை இழப்பதில்லை.”“சகிக்கலை. வசனம் பேசறதை நிறுத்து. வாழ்க்கையைப் பற்றிப் பேசு.”“உங்கப்பா நம்ம காதலை ஏத்துக்கலைன்னா என்ன பண்றது?”“விடு... ஜூட்தான்.”“நீ ரொம்பத் துணிச்சலா இருக்கே...”“வேற வழி இல்லை. இல்லாட்டி நம்மைக் கோழையாக்கிடுவாங்க. ஒண்ணு நம்மைச் சாகடிச்சுடுவாங்க. இல்லாட்டி அவங்க செத்துப் போறதாச் சொல்லி மிரட்டி நம்மைப் பணிய வைச்சுடுவாங்க. நம்ம காதலைச் சொல்லி நாமே நமக்குக் குழி தோண்டிக்க வேண்டாம்...நம்ம ஃப்ரெண்ட்ஸுங்களை வச்சு ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிப்போம். மாலையும் கழுத்துமா போய் அவங்க கால்ல விழுந்தா ஒண்ணும் பண்ண முடியாது.”“அப்ப மட்டும் ஒத்துப்பாங்கன்னு என்ன நிச்சயம்?”“அப்போதைக்கு ஏத்துக்கலைன்னாலும் காலப் போக்குல மனசு மாறி ஒத்துப்பாங்க. அதிலும் நான் ஒரே பொண்ணு. பாசம் விடாது. தேடிக்கிட்டு வந்துடுவாங்க.”“ரொம்பத் தெளிவாத்தான் இருக்கே. ஆனா... என்னால அப்படி இருக்க முடியாது.ரிஜிஸ்டர் மேரேஜல்லாம் பண்ணிக்க முடியாது.”
Disponível desde: 14/02/2024.
Comprimento de impressão: 131 páginas.

Outros livros que poderiam interessá-lo

  • நேசம் மறவாத நெஞ்சமடி - Nesam Maravaatha Nenjamadi - cover

    நேசம் மறவாத நெஞ்சமடி - Nesam...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    "அதை இன்னும் கொஞ்சம் முன்னமே சொன்னா தான் என்னவாம்! கை வலிக்கிது..." என்று வாய்க்குள் முணுமுணுத்தாள்.  
    மீனாக்ஷியின் கூற்றில், அவளைப் பார்த்தபடியே வீரா மெலிதாக சிரித்து சிகாரைத் தரையில் எரிந்து தன் ஷூ காலால் மிதித்து அதன் நெருப்பை அணைத்தான். ஆனால் மீனக்ஷியால் அவனுள் மூண்ட நெருப்பு என்னவோ அணைய மறுத்தது. 
     "அடுத்த முறை, முட்டாள்களின் பேச்சைக் கேட்காத அளவுக்கு புத்திசாலித்தனமா நடந்துக்கோ..." என்று கூறியவன் குரலில் கிண்டல் நிறைந்திருந்தது. 
    அவன் கூற்றை சரியாக புரிந்து கொள்ளவே சில நொடிகள் பிடித்தது மீனாக்ஷிக்கு. 
    மீனாக்ஷி பதிலளிப்பதற்கு முன்பு, வீரா தனது பைக்கின் மீது காலை சுழற்றி அமர்ந்தவன் என்ஜினைத் ஆன் செய்தான். 
    வாகனத்தை கிளப்பும் முன், “வெல்கம் டு திஸ் காலேஜ்” என்று கூறியவன் கண்கள் அவள் மீது நிலைத்திருக்க அவள் பதிலை எதிர்பாராமல் வாகன இயந்திரத்தின் ஒலியுடன் சென்றுவிட்டான் வீரா.  
    மீனாக்ஷியின் இதயத் துடிப்பின் வேகம் கூடியது. அவள், வீரா... அவன் மேல் கோபப்படுகிறாளா, சங்கடப்படுகிறாளா அல்லது அவன் யாரென்று அறிய ஆர்வமாக இருக்கிறாளா? என்பதை அவளால் தீர்மானிக்க முடியவில்லை. 
    ஆனால் ஒரு விஷயம் மட்டும் உறுதியாக இருந்தது. வீரா அவளால் அவள் மனதில், என்றும் மறக்க முடியாத எண்ணத்தை விட்டுச் சென்றிருந்தான்... 
    “ஹே நிறுத்து நிறுத்து... அதென்ன? முதல் முதல்ல ஒரு பொண்ணை பாக்குற ஆண், இப்படியா சிகிரெட்டை ஊதிக்கிட்டு... வெறிச்சு வெறிச்சு பாப்பான்? இவனுங்களை தானே உங்களை மாதிரி பொண்ணுங்களுக்கெல்லாம் பிடிக்கிறது? அவனை ஹீரோன்னு வேற சொல்லிக்கிறீங்க... 
    என்னால இந்த மாதிரி இர்ரிடேட்டிங் ஸ்டோரி எல்லாம் கேக்க முடியாது. ச்சா... நான்சென்ஸ்...” என்று வர்மா மீனாக்ஷியை பொரிந்து தள்ளி கதையை பாதியில் இடை வெட்டினான்.
    Ver livro
  • Maharadhan - மகாரதன் - cover

    Maharadhan - மகாரதன்

    Siraa

    • 0
    • 0
    • 0
    மகாரதன் வரலாற்று நாவல் என்றாலே ஏதாவது ஒரு மன்னனின் வீர சாகசங்களையோ அல்லது அவன் காலத்தில் நடந்த நிகழ்வுகளையோ முன்னிலைப்படுத்திப் படைப்பதே வழக்கம். ஆனால் அதிலிருந்து மாறுபட்டு, ஒரு போர் என்றால் அதற்கு முன் மன்னர்கள் என்னவெல்லாம் செய்திருப்பார்கள், எப்பேர்ப்பட்ட நடவடிக்கைகளை எல்லாம் மேற்கொண்டிருப்பார்கள் என்று இந்த நாவல் நமக்கு அறிமுகம் செய்கிறது. பல்லவ மன்னர்களில் ஆகச் சிறந்த மன்னனாகவும் அதி சிறந்த வீரனாகவும் விளங்கிய இரண்டாம் நந்திவர்மன் காலத்தைக் கதைக்களமாகக் கொண்டு, சில கல்வெட்டுத் தரவுகளையும் வரலாற்றுக் குறிப்புகளையும் மையமாக வைத்து, அந்தக் காலத்து நிகழ்வுகளை நம் கண் முன்னால் கொண்டு வருகிறது இந்தப் புதினம். கடந்த கால நிகழ்வுகளை ஆராய்ந்து, கிடைக்கப் பெற்ற ஆவணங்களைச் சரிபார்த்து, அதில் கற்பனையைப் புகுத்தி நாவலாகப் படைப்பது மிகப்பெரிய சவால். அதனைத் திறம்படச் செய்திருக்கிறார் எழுத்தாளர் சிரா. எழுத்தாளர் சிரா எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் மகாரதன் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்  
    an Aurality Production
    Ver livro
  • Meendum Jeeno - cover

    Meendum Jeeno

    Sujatha

    • 0
    • 0
    • 0
    முற்றிலும் விஞ்ஞானமயமாக்கப்பட்ட வேறொரு உலகம், அந்த உலகத்தை ஆளும் பொம்மை ராணி நிலா. அவளைப் பின்னாலிருந்து ஆட்டுவிக்கும் ரவி, மனோ இருவர் கையில் ஒட்டுமொத்த அதிகாரமும் இருக்க, இயந்திர நாயான ஜீனோ, நிலாவுக்கு உதவ தன் ஒட்டு மொத்தத் தந்திரங்களையும் மூளையையும் பிரயோகிக்கிறது. ஜீனோவுக்கும் எதிரிகளுக்கும் இடையில் நடக்கும் போரின் முடிவு என்ன என்பதுதான் இந்த நாவல்.
    Ver livro
  • Choza Sooriyan - சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் - cover

    Choza Sooriyan - சோழன் தலைகொண்ட...

    Siraa

    • 0
    • 0
    • 0
    Description 
    சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் - Part 1 சோழ இளவரசனான உத்தம சீலியுடன் நடந்த யுத்தத்திற்குப் பின், பாண்டிய நாட்டைக் கைப்பற்றினான் வீரபாண்டியன். ஒரு போருக்குப் பின் ஒரு மன்னன் தன் நாட்டை மீட்டெடுப்பது அத்தனை சுலபமல்ல. அது எத்தனை கடினமானது என்பதை, கற்பனை கலந்து கல்வெட்டுத் தரவுகளுடன் எழுதி இருக்கிறார் சிரா. சோழனோ பாண்டியனோ, தோல்வியுற்ற மன்னனுக்கும் பெரிய நாடு இருக்கும். அவனைக் கடவுள் என்று கொண்டாடிய மனிதர்கள் இருப்பார்கள். ஒரு போரில் தோல்வியுற்றான் என்ற காரணத்துக்காக அந்த மன்னன் வீரம் இல்லாதவன் என்று அர்த்தமில்லை. ஒரு மாபெரும் அரசனைத் துணிவுடன் எதிர்த்து நிற்க இன்னொரு மாவீரனால்தான் முடியும். அப்படி சோழம் என்ற ஒரு பெரும் தேசத்தை எதிர்க்கத் துணிந்த ஓர் உன்னத வீரனைப் பற்றிய கதை இது. பல்வேறு ஆதாரங்களை மையமாக வைத்து எழுதப்பட்டிருக்கும் சுவராஸ்யமான வரலாற்று நாவல். எழுத்தாளர் சிரா எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம். A proud Aurality production
    Ver livro
  • Idamum Valamum Alaivuru Sirusudar - இடமும் வலமும் அலைவுறு சிறுசுடர் - cover

    Idamum Valamum Alaivuru...

    B.R. Mahadevan

    • 0
    • 0
    • 0
    Auto fiction Novel: இடமும் வலமும் அலைவுறு சிறுசுடர் A proud Aurality tamil audio book production ebook by Swasam Publications. Download FREE Aurality app now on play store and or iphone ios store தீவிரமான கருத்துகளும் சுயமான சிந்தனையும் கொண்ட இளைஞன் தனது கனவுலகைத் தேடி மேற்கொள்ளும் அலைச்சலே இந்த நாவல். மதத் தத்துவங்கள் அவனைத் துரத்துகின்றன. அரசியல் கொள்கைகள் அவனைக் குழப்புகின்றன. மாயமான் வேட்டையில் நிதர்சனத்தைப் புரிந்துகொண்டு, இதுவே நம் பாதை என்று அவன் ஒரு முடிவுக்கு வரும்போது காத்திருக்கிறது இன்னொரு மாயமான். எல்லாவற்றையும் கேள்விகளால் எதிர்கொள்ளும் ஓர் இளைஞனின் பேரலைச்சலை ரத்தமும் சதையுமாக, கொஞ்சம் புனைவுடன் நிறைய உண்மைகளுடன் எழுதி இருக்கிறார் B.R.மகாதேவன். அரசியல் என்ற பெயரிலும், ஆன்மிகம் என்ற பெயரிலும், மதம் என்ற பெயரிலும் இந்தச் சமூகம் தனக்குக் கற்பிக்கும் அனைத்தையும் கேள்விகளால் அடித்து நொறுக்கி தன் அடுத்த பயணத்துக்குக் காத்திருக்கும் இந்த இளைஞன், நிச்சயம் உங்களை அசைத்துப் பார்ப்பான். எழுத்தாளர் B.R.மகாதேவன் எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்
    Ver livro
  • உடன்பிறப்பு - Udanpirappu-Sirukathai - cover

    உடன்பிறப்பு -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    உடன்பிறப்பு
    Ver livro