¡Acompáñanos a viajar por el mundo de los libros!
Añadir este libro a la estantería
Grey
Escribe un nuevo comentario Default profile 50px
Grey
Suscríbete para leer el libro completo o lee las primeras páginas gratis.
All characters reduced
சினேகிதனே - cover

சினேகிதனே

ஆர்.சுமதி

Editorial: Pocket Books

  • 0
  • 0
  • 0

Sinopsis

இளவழகன்...!பிரபலமான ஓவியன். குறுகிய காலத்தில் பெரிய சாம்ராஜ்ஜியத்தை வளைத்துப் போட்டு ஆட்சி செய்பவன்.பத்திரிகையுலகில் கொடிகட்டிப் பறக்கும் முன்னணி ஓவியன். மிகப் பெரிய ரசிகர் வட்டத்தைக் கொண்டவன். அவனுடைய தூரிகையில் தோன்றும் ஒவ்வொரு உருவமும் உயிரோவியம். பல பத்திரிகைகளின் அட்டைப் படத்தை அலங்கரிப்பது அவனுடைய கைவண்ணம்தான்.கண்களைக் கட்டிப்போட்டு சிந்தனையை சிதற விடாமல் ஒருமுகப்படுத்தும் சக்தி அவனுடைய ஓவியங்களுக்கு உண்டு. அவனுடைய கற்பனையில் உருவாகும் ஓவியப் பெண்ணின் அழகைக் கண்டு அதைப் போன்ற பெண் கிடைக்கமாட்டாளா என ஏங்கும் காளையர்கள் அதிகம். பல பத்திரிகைகள் அவனுடைய அட்டைப் படத்திற்காகவே விற்கும்.புகழின் உச்சியில் இருக்கும் இளவழகனிடமா இவள் அம்மாவின் படத்தை வரையலாம் என்கிறாள்.யமுனா ஷோபாவை அசைத்தாள்.“என்னடி... மலைச்சுப் போய் நிக்கறே?”“ஏய்... இளவழகன்கிட்ட அம்மாவை வரையறதா? நடக்குமாடி இது?”“ஏன் நடக்காது?” எதிர்க் கேள்வி கேட்டாள் யமுனா.“இளவழகன் எவ்வளவு பெரிய ஓவியர். புகழின் உச்சியில் இருக்கிறவர். ரொம்ப பிஸியான ஆள். அப்படிப்பட்டவர் இப்படி நம்மை மாதிரி ஆளுங்களுக்கு வரைஞ்சு தருவாரா? அவருக்கு பத்திரிகைகளுக்கு வரையவே நேரம் இருக்காது. நமக்கு வரைஞ்சு தருவாரா?” என்றாள்.“அதைப்பத்தி நீ கவலைப்படாதே. நான் பார்த்துக்கறேன்.“இதுக்கு முன்னாடி இளவழகனை நீ சந்திச்சிருக்கியா?”“இல்லை. நான் அவரோட ரசிகை. அவ்வளவுதான்.”“நீ அவரோட தீவிர ரசிகைங்கறதுதான் தெரிஞ்ச விஷயமாச்சே. இளவழகன் வரைஞ்ச படம் உள்ள காகிதம் ரோட்ல கிடந்தாக்கூட ரசிகை நீ. ஏன்டி... இப்படி செய்தா என்ன?”“எப்படி?”“ஊர்ல என்ன ஓவியர்களா இல்லை? நாம ஏன் வீணா அவருக்குத் தொந்தரவு தரணும்? வேற ஒருத்தர்கிட்ட அம்மாவோட படத்தை வரைஞ்சிடுவோம்.”“நோ! உங்க அம்மா ரொம்ப அழகானவங்க. அவங்களோட அழகை இளவழகனோட தூரிகையில் பார்க்கணும். அதுதான் என் ஆசை. நாம வீட்டுக்குப் போறோம்...” யமுனா உறுதியாகச் சொன்னாள்.“எனக்கென்னவோ நீ இளவழகனைப் பார்க்கிறதுக்கு இதை ஒரு சாக்கா வைச்சிருக்கிறேன்னு தோணுது” என்றாள் ஷோபா.யமுனா புருவத்தை உயர்த்தி சிரித்தாள்.“அப்படித்தான் வைச்சுக்கயேன்.”“ஏய்... ஏய்... என்னவோ இருக்கு? என்ன காதலா இளவழகனைக் காதலிக்கிறியா?”“பிரபலமா இருக்கிறவங்க மேல் யாருக்குமே ஒரு ஈர்ப்பு இருக்கும். இது இயற்கை. அதுவும் கலைஞர்கள்ன்னா அவங்க மேலே கொஞ்சம் அதிகமாகவே ஈர்ப்பு இருக்கும். அந்த மாதிரியான ஒரு ஈர்ப்புதான் இது. அதைப் போய் காதல் கீதல்னு...”“ஏன் இருக்கக்கூடாதா? காதலிச்சா தப்பா? உனக்கு அப்படியெல்லாம் எண்ணம் இல்லைன்னா சொல்லு. நான் வேணும்னா அவரைக் காதலிச்சுட்டுப் போறேன்.”இதைக் கேட்டு யமுனா வாய்விட்டு சிரித்தாள்
Disponible desde: 14/02/2024.
Longitud de impresión: 110 páginas.

Otros libros que te pueden interesar

  • உடன்பிறப்பு - Udanpirappu-Sirukathai - cover

    உடன்பிறப்பு -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    உடன்பிறப்பு
    Ver libro
  • மகரந்தம் தாங்கும் மலரவள் - Magarantham Thangum Malaraval (Tamil Edition) - cover

    மகரந்தம் தாங்கும் மலரவள் -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    தந்தையின் உழைப்பில் வாழ விரும்பாமல் தன் வாழ்க்கையின் ஒவ்வொரு முக்கியமான கால கட்டத்திலும், தன்னுடைய முடிவையே பிரதானமாகக் கொண்டு அதில் வெற்றியும் பெற்றிருப்பவன் நளன். தனக்கு எது வேண்டும் என்று முடிவெடுக்கத் தெரியாத பேதையவள் நேத்ரா. 
    காலத்தின் போக்கில் இணைந்த இவர்களது காதல் மூன்றாம் நபரின் தலையீட்டால் என்னவானது? தெரிந்து கொள்ளப் படியுங்கள் மகரந்தம் தாங்கும் மலரவள்!   
     
    Ver libro
  • Maharadhan - மகாரதன் - cover

    Maharadhan - மகாரதன்

    Siraa

    • 0
    • 0
    • 0
    மகாரதன் வரலாற்று நாவல் என்றாலே ஏதாவது ஒரு மன்னனின் வீர சாகசங்களையோ அல்லது அவன் காலத்தில் நடந்த நிகழ்வுகளையோ முன்னிலைப்படுத்திப் படைப்பதே வழக்கம். ஆனால் அதிலிருந்து மாறுபட்டு, ஒரு போர் என்றால் அதற்கு முன் மன்னர்கள் என்னவெல்லாம் செய்திருப்பார்கள், எப்பேர்ப்பட்ட நடவடிக்கைகளை எல்லாம் மேற்கொண்டிருப்பார்கள் என்று இந்த நாவல் நமக்கு அறிமுகம் செய்கிறது. பல்லவ மன்னர்களில் ஆகச் சிறந்த மன்னனாகவும் அதி சிறந்த வீரனாகவும் விளங்கிய இரண்டாம் நந்திவர்மன் காலத்தைக் கதைக்களமாகக் கொண்டு, சில கல்வெட்டுத் தரவுகளையும் வரலாற்றுக் குறிப்புகளையும் மையமாக வைத்து, அந்தக் காலத்து நிகழ்வுகளை நம் கண் முன்னால் கொண்டு வருகிறது இந்தப் புதினம். கடந்த கால நிகழ்வுகளை ஆராய்ந்து, கிடைக்கப் பெற்ற ஆவணங்களைச் சரிபார்த்து, அதில் கற்பனையைப் புகுத்தி நாவலாகப் படைப்பது மிகப்பெரிய சவால். அதனைத் திறம்படச் செய்திருக்கிறார் எழுத்தாளர் சிரா. எழுத்தாளர் சிரா எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் மகாரதன் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்  
    an Aurality Production
    Ver libro
  • முற்றும் முதல் நீ எனக்கு - Mutrum Muthal Nee Enakku - cover

    முற்றும் முதல் நீ எனக்கு -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    வாழ்க்கையில் யாருடைய துணையும் இன்றி தன் லட்சியங்களை அடையத் துடிக்கும் நம் நாயகன் கதிர்முகிலனுக்கு தன் மனம் கவர்ந்த பெண் மயூரியால் தடைபடும் தன் இலட்சியத்தை, ஒருவர் மேல் ஒருவர் கொண்டுள்ள அதீத காதலால் எவ்வாறு முறியடித்தனர் என்பதை அறிய என்னோடு பயணியுங்கள் 'முற்றும் முதல் நீ எனக்கு'   
    Ver libro
  • வாழ்வின் முதல் காதலா! நீதானா - Vaalvin Muthal Kadhalaa Neethaanaa - cover

    வாழ்வின் முதல் காதலா! நீதானா -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    “வெற்றி, நேத்து கிளப்ல பேசீட்டு இருக்கும் போது உனக்கு பொண்ணு பாக்கனுன்னு தான் ஒரு பே...ச்சுக்கு சொன்னேன். உடனே நம்ம ராஜி இருக்காளே, அவ பொண்ணு கூட ஏதோ மாடலிங் பண்ணீட்டு இருக்கான்னு... 
    நீ கூட நம்ப கம்பெனி விளம்பரத்துக்கு நடிக்க ஒரு வாய்ப்பு கொடுத்தியே.. அவ பேர் கூட...என்னம்மோ...” என்று நெற்றியை தட்டி தெரியாதது போல் இழுத்தவரிடம், 
    செய்தித் தாளைப் புரட்டியபடியே, “மிதுல்லா...” என்று அலட்டாமல் கூறியவனிடம், 
    “ஆஹ்... மிதுல்லா, நல்ல பேர். பாத்தியா ரெண்டு மூணு தடவை பாத்த உனக்கே அவளோட பேர் ஞாபகம் இருக்கு. அவ்வளவு சுலபமா அவளை மறக்க முடியுமா? எவ்ளோ அழகு அந்த பொண்ணு... 
    ம்ம்... வெற்றி, அவளுக்கு உன்னை கல்யாணம் பண்ண கேட்டாபா ராஜி. அழகு, அறிவு, திறமை எல்லாம் இருக்கு அவகிட்ட. 
    நம்ம வீட்டுக்கு ஏத்த பொண்ணு டா அவ. அதுவும் உனக்கு ரொம்ப பொருத்தமா இருப்பா. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. நீ என்ன சொல்ற வெற்றி?” என்று மகனின் முகத்தை ஆர்வமாக பார்த்து வினவினார் கற்பகாம்பாள். 
    செய்தித் தாளை மூடி மேஜையில் வைத்தவன், கற்பகாம்பாள் புறம் திரும்பி, “ம்ம்.. நல்ல அழகான பொண்ணு தான். நல்ல திறமையா நடிச்சா. ரொம்ப அறிவா பேசுனா தான். 
    ஆனா, ரொம்ப அதிகமா பேசுவாளே... அதுவுமில்லாம அவ யாருமில்லாத அநாதை இல்லை. நீங்க சொல்றது எதையும் அப்படியே கேக்கவும் மாட்டா. உங்களை எதித்து கேள்வி கேப்பா... 
    அவ இஷ்டத்துக்கு உங்களால இருக்க விட முடியுமா? முக்கியமா... உங்களுக்குத் தான் வாய் பேசாத முடியாத ஊமை பொண்ணு தானே மருமகளா வர பிடிக்கும்....” என்றவன் எழுந்து அவன் அணிந்திருந்த வெண்ணிற பருத்தி உடை பாக்கெட்டில் கைகளை நுழைத்த படி வினவ, 
    “என்னடா குத்தி பேசுறியா?” என்று கற்பகாம்பாள் வெற்றியை முறைக்க, 
    “என்னடா குத்தி பேசுறியா?” என்று கற்பகாம்பாள் வெற்றியை முறைக்க, 
    “இல்லையே நேரா தான் கேக்குறேன்.” என்றவன் பதில் தெளிவாக வந்து விழுந்தது.
    Ver libro
  • இளநெஞ்சே வா - Ilanenjee vaa (Romantic Thriller) - cover

    இளநெஞ்சே வா - Ilanenjee vaa...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    மன்னா பயணிகள் இருக்கையிலிருந்து குதித்து பாண்டியாவை நோக்கிச் சென்றான். "அவளை வெளிய கூட்டி வா...", என்று தாழ்வான குரலில் கூறினான். ஆனால் அதுவே கட்டளையாக இருந்தது..... 
    பாண்டியா ஒரு கணம் தயங்கி, ராதிகா அமர்ந்திருந்த வேனின் பின்புறத்தைப் பார்த்தான். 
    அவள் கைகள் கட்டப்பட்டிருந்தன, அவள் முகம் வெளிரிப்போய்... ஆனால் கண்கள் சண்டைக்கு நிற்ப்பவள் போல் முறைத்துக் கொண்டு இருந்தது. "நாம இங்க தான் இருக்கனுமா மன்னா? இந்த இடத்தை பாத்தா எனக்கு பயமா இருக்கு... வேற எங்காவது...?" என்றான். 
    மன்னா புன்னகைத்து, குளிர்ந்த காற்றுக்கு எதிராக தனது மேல் சட்டையை இறுக்கமாக இழுத்தபடி, சுற்றிலும் பார்த்தான். முகத்தில் இனம் புரியா புன்னகை அரும்பியது. 
    "அது தான் நமக்கு வேணும், பாண்டியா. இது தான் சரியான இடம்... இங்க தான் யாரும் வரமாட்டாங்க. அவள் கத்துனாலும் அலறினாலும்... யாரும் என்னன்னு கேட்க மாட்டாங்க.. now move" என்றான் அதற்க்கு மேல் பேசாதே என்பது போல்... 
    ராதிகா அமைதியாக இருக்க முயன்றாலும், மன்னா அவனது வார்த்தைகளில் சற்று நிதானமாக இருந்தாள். அவளுடைய இதயத் துடிப்பின் வேகம் கூடியது. ஆனால் அவள் அழவில்லை. அவள் உடைந்து அழுவதை தன் முன்னே இருக்கும் இந்த ஆடவர்களுக்குக் காண்பிக்க அவள் விரும்பவில்லை.... 
    பாண்டியா வேனின் கதவை எச்சரிக்கையுடன் திறந்தான். ராதிகாவின் கை மற்றும் கால் கட்டுக்களை அவிழ்த்து விட்டான். 
    அவனது குரல் முன்பை விட மென்மையாக இருந்தது. "இறங்கி வா..." என்றான். 
    மணிக்கட்டில் சிவந்து போயிருந்த தடத்தைப் மெலிதாக தேய்த்துவிட்டாள். வாயில் இருந்த கட்டு அவிழ்க்கப்பட அப்போது தான் நன்றாக மூச்சே விட முடிந்தது அவளாள்.
    Ver libro