Rejoignez-nous pour un voyage dans le monde des livres!
Ajouter ce livre à l'électronique
Grey
Ecrivez un nouveau commentaire Default profile 50px
Grey
Abonnez-vous pour lire le livre complet ou lisez les premières pages gratuitement!
All characters reduced
'மை' விழி வாசலிலே! - cover

'மை' விழி வாசலிலே!

தேவிபாலா

Maison d'édition: Pocket Books

  • 0
  • 0
  • 0

Synopsis

ராஜா சங்கீதாவின் கழுத்தில் தாலி கட்டி விட்டான்.அவர்களது உபச்சாரத்தைத் தாங்க முடியவில்லை. அளவுக்கு அதிகமான பணிவும், செயற்கைத்தனமும் ராஜா வீட்டில் யாருக்குமே பிடிக்கவில்லை.முதல்நாள் ராத்திரியிலிருந்தே தொடர்ந்து வாண வேடிக்கை நடத்திக்கொண்டிருந்தார் சொக்கலிங்கம்.பணத்தை வாரி இறைத்துக் கொண்டிருந்தார்.ராஜாவுக்கு ஒரு வகை உபச்சாரம்...அப்பா, அம்மாவுக்கு வேறு வகை என்று ஏகவாரியாக பிரித்து இருந்தார்கள்.எல்லாம் முடிந்து முதலிரவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.சொக்கலிங்கம் வீடு அலங்கரிக்கப் பட்டிருந்தது.ராஜா கல்யாணம் முடிந்த களைப்பில் ‘அக்கடா’ என்று சாய்ந்திருந்தான்.சகாயம், ஜெர்வின் அருகில் வந்தார்கள்.“ராஜா! இன்னும் கொஞ்ச நேரத்துல சாந்தி முகூர்த்தம். நீ குழந்தை இல்லை. எல்லாம் தெரியும் உனக்கு. ஆனாலும் சொல்றோம். கிராமத்துப் பொண்ணு! அதிகம் தைரியம் இருக்காது. அவ மிரண்டு போற மாதிரி செயல்படாதே!”“அண்ணா! நீங்க கவலையே பட வேண்டாம். எனக்கு களைப்பா இருக்கு. இன்னிக்கு எதுவும் நடக்காது!”“அப்படியில்லைடா!”சொக்கலிங்கம் வந்தார்“மாப்ளை ரெடியா?”“தோ... வந்துட்டே இருக்கான்.”அவர் போய்விட்டார். பட்டுவேட்டி, சட்டை சகிதம் தனியறைக்குள் நுழைந்தான் ராஜா.சற்று நேரத்தில் சங்கீதா உள்ளே வர, கதவு தாளிடப்பட்டது வெளியே.பால் செம்புடன் குனிந்த தலை நிமிராமல் வந்த சங்கீதா, அதை வைத்துவிட்டு, நமஸ்கரித்தாள்.“எழுந்திரு! தமிழ் சினிமால்லாம் வேண்டாம். இயல்பா இருப்பம். நிறையப் பேசுவோம்! இப்படி வந்து உட்காரு!”சங்கீதா கூச்சத்துடன் உட்கார்ந்தாள்.“என்னைப்பாரு! எத்தனை நேரம் நிலத்தையே பார்த்துட்டு இருப்பே?”“எனக்கு வெக்கமா இருக்கு!”“அப்ப படுத்துத் தூங்கலாமா?”“உங்க இஷ்டம்!”அருகில் நெருங்கி, அவள் முகவாயைத் தொட்டு மெல்ல நிமிர்த்தினான்.அவள் முகத்தை நேருக்கு நேர் நெருக்கத்தில் பார்த்தான்.புருவத்துக்கு மேல் புள்ளிக் கோலமெல்லாம் போட்டு, அழகான முகத்தை அசிங்கப்படுத்தி இருந்தார்கள்.‘சொல்லலாமா?’‘இதுமாதிரி நகை மூட்டையாக நாளை முதல் இருக்காதே என்று சொல்லி விடலாமா?’“அவ கிராமத்துப் பொண்ணு! எடுத்த எடுப்புல உன் அறிவு ஜீவித்தனத்தைக் காட்டி அவளை மிரள வைக்காதே!”ஜெர்வின் சொல்லியிருந்தாள்
Disponible depuis: 03/02/2024.
Longueur d'impression: 50 pages.

D'autres livres qui pourraient vous intéresser

  • Puratchikkavi - cover

    Puratchikkavi

    Bharathidasan

    • 0
    • 0
    • 0
    கடந்த நூற்றாண்டின் தலை சிறந்த கவிஞர்களில் ஒருவரான பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் எழுதிய ஒரு குறுங்காவியமே புரட்சிக்கவி என்பதாகும். இக்காவியம் காஷ்மீரத்தில் எழுதப்பட்ட பில்கணீயம் என்ற நூலைத் தழுவி எழுதப்பட்டாலும் பாவேந்தர் கதை முடிவில் காட்சி அமைப்பை மாற்றி மக்கள் புரட்சி அமைவதாகக் காட்டியுள்ளார்.இக்காவியத்தில் நாட்டின் அரசன் உதாரன் எனும் கவிஞனை தன் மகளுக்குத் தமிழ் கற்பிக்கத் தருவிக்கிறான். இருவரும் காதல் வயப்படாமல் இருக்கத் தன் மகள் அமுதவல்லிக்குத் தொழு நோய் என்று உதாரனிடமும் உதாரனுக்குக் கண் பார்வையில்லை என்று அமுதவல்லியிடமும் கூறுகின்றான்.ஒரு நாள் இரவு உதாரன் வானத்தில் நிலவைக் கண்டு பாட, அமுதவல்லி கண்பார்வை அற்றவன் எவ்வாறு நிலவைப் பாடுகின்றான் என ஐயம் கொண்டு உதாரனைக் காண, இருவரும் காதல் கொள்கின்றனர். இச்செய்தி அறிந்த மன்னவன் இருவருக்கும் மரண தண்டனை விதிக்கின்றான். மக்கள் புரட்சி செய்து, அரசனைத் துரத்தி விட்டு கவிஞனுக்கும் இளவரசிக்கும் மீட்சி தருவதாகவும் அங்கு மக்களாட்சி அமைவதாகவும் காட்டிக் காவியத்தை நிறைவு செய்கின்றார். 
    இப்பாடலில் பாவேந்தர் தம் உள்ளக்கிடக்கையான பெண் கல்வியை வெளிப்படுத்துகிறார். அமுதவல்லி, “தமிழிலக் கியங்கள் தமிழிலக் கணங்கள் அமைவுற ஆய்ந்தாள் அயல்மொழி பயின்றாள் ஆன்ற ஒழுக்கநூல் நீதிநூல் உணர்ந்தாள்” 
    கொலைக்களத்தில் பேச வாய்ப்பு கிடைத்த பின் உதாரன் நாட்டு மக்களைப் பார்த்து உரையாடுகின்றான். பேரன்பு கொண்டோரே பெரியோரே என் பெற்றதாய் மாரே நல்லிளம் சிங்கங்காள் என்று தொடங்கும் தன் உரையில் உதாரன் நாட்டு மக்களின் உணர்வைத் தட்டி எழுப்ப முயல்கிறான். முதலில் அரசன் மக்களின் உழைப்பை உறிஞ்சி மக்களையே ஆள்வதாகக
    Voir livre
  • Boothathazhvar hymns - cover

    Boothathazhvar hymns

    Boothathazhvar

    • 0
    • 0
    • 0
    நாலாயிர திவ்விய பிரபந்தப் பாடல்களுக்கு சாஸ்திரிய சங்கீத வடிவு தந்திருக்கிறார்கள். அப்படி நம்மை வந்தடையும் பாடல்கள் நாலாயிரத்தில் ஓரிரு நூறு பாடல்களே. சற்றே நீண்ட வடிவில் பாராயணமாகக் கிடைக்கின்றன. 
    பிரபந்தப் பாடல்கள் இயற்றமிழ் பாற்பட்டவை. இயற்றமிழ்ப் பாடல் வகைகளுக்கும் இனங்களுக்கும் ஓசை வகுப்பு முறை இருக்கிறது. இவ்வோசையில் பிரபந்தப் பாடல்கள் அனைத்தையும் தரும் ஒரு முயற்சிதான் இந்த ஒலியாக்கம். செப்பல், அகவல், துள்ளல், தூங்கல் ஓசைகளில் யாப்பிலக்கிணத்துக்கு ஏற்ப பூதத்தாழ்வாரின் பாடல்களை இந்த ஒலி நூலில் கேட்கலாம். 
    பூதத்தாழ்வாரின் இரண்டாம் திருவந்தாதி 100 பாசுரங்களை இந்த ஒலி நூலில் கேட்கலாம். பன்னிரு ஆழ்வார்களின் பாடல்கள் தனித்தனி ஒலி நூல்களாக ரமணி ஒலி நூலகத்தில் கிடைக்கின்றன. 
     The Vaishnavite hymns, Nalayira Divya Prabantham are set to music as well as recited in the recitation (parayana) tradition. While a randomly selected couple of hundreds of poems only are set to music and sung by performing artists, the recitation has been established as a discipline. These hymns have been composed according to Tamil Prosody known as //yappu//. They belong to what is known as //iyatramiz//. Such classical compositions have four kinds, AkavarpA, Venpa, Kalippa and Vanjippa (Pavinankal). Each of these have several derivative forms known as Pavakaikal. These conform to the traditional method of rendering in Akavalosai, Seppalosai, Thullalosai and Thunkalosai. This tradition has been lost for good. In an attempt to revive the traditional methods of rendering, Ramani Audio Books has recorded about 1500 hours of audio beginning from Ettuththokai down to contemporary literature through Epics, Bhakthi literature (Saivam, Vaishnavam, Buddhism, Islam) as well as Middle Age Tamil Literature. 
    In this audiobook you can listen to Boothathazhvar’s Irantam Thiruvanthathi (100 verses) rendered in crisp and prosodically correct rendering. Other works by Azhvars are given in separate books.
    Voir livre
  • Malaiyankulam - Short story collection - மலையன்குளம் (சிறுகதைத் தொகுப்பு) - cover

    Malaiyankulam - Short story...

    Jayaraman Raghunathan

    • 0
    • 0
    • 0
    Malayankulam - மலையன்குளம் - Short story collection a proud audio book production by Aurality tamil audio book and itsdiff entertainment http://aurality.app to download our app to provide feedback  
    சிறுகதைகள் எப்போதுமே மனதுக்கு நெருக்கமானவை. நம் பால்ய கால நினைவுகளைக் கிளர்த்தும் கதைகள் கூடுதல் நெருக்கமானவை. நம் நினைவுகளைக் கிளர்த்துபவை. கரைய வைப்பவை. மலையன்குளம் என்ற இந்தத் தொகுப்பில் இருக்கும் கதைகள் இந்த வகையைச் சேர்ந்தவை. ஜெயராமன் ரகுநாதனின் பூச்சுகளற்ற நடையில், இந்தக் கதைகளுக்குள் நாம் இயல்பாகவே நுழைந்து விடுகிறோம். இதில் வரும் கதாபாத்திரங்களை நாம் அனைவரும் நம் வாழ்க்கையில் ஒரு தடவையேனும் நிச்சயம் கடந்து வந்திருப்போம். இதில் வரும் நிகழ்வுகள் நம் வாழ்விலும் நடந்திருக்கும். இந்தக் கதைகளில் வரும் ‘இவன்’ நாமாகவும் இருக்கலாம். இந்தக் கதைகள் உங்களைச் சிரிக்க வைக்கும், சிந்திக்க வைக்கும், நெகிழவும் வைக்கும். பல பசுமையான நினைவுகளுக்கு அழைத்துச் செல்லும் கால இயந்திரமாக இந்தக் கதைகள் இருக்கும்.  
    எழுத்தாளர் ஜெயராமன் ரகுநாதன் எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம். a proud tamil audiobook production from Aurality
    Voir livre
  • யாதுமாகி நின்றாய் - Yaadhumaagi Nindrai - cover

    யாதுமாகி நின்றாய் - Yaadhumaagi...

    Pavala Sankari

    • 0
    • 0
    • 0
    இந்தத் தொகுப்பில் உள்ள கதைகளில் பல, உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் சிறிது கற்பனை கலந்து எழுதப்பட்டுள்ளது. சில சம்பவங்கள் நடந்ததற்கான முகாந்திரம் சம்பந்தப்பட்டவர்களைத் தவிர வேறு ஒருவருக்கும் தெரிய வாய்ப்பில்லாமல் போகும்போது, உலக நடப்புகளின் அடிப்படையில் இப்படித்தான் நடந்திருக்கக்கூடும் என்ற கணிப்புடன் எழுத வேண்டியதாகிறது. வாசகர்களின் கற்பனையையும் சேர்த்து அத்தோடு பயணித்து முடிவு காணலாம் என்கிறபடியான சம்பவங்களும் உண்டு. அந்த வகையில் வாசகர்களின் கற்பனையையும் ஊக்குவித்து புதுக்கதை வடிக்கச் செய்யும் வாய்ப்பும் அதிகரிக்கக்கூடிய சம்பவங்களின் தொகுப்பே இச்சிறுகதைகள்.
    Voir livre
  • திருப்புகழ் - Volume 16 - cover

    திருப்புகழ் - Volume 16

    நிலோபர் அன்பரசு

    • 0
    • 0
    • 0
    திருப்புகழ் என்பது முருகக் கடவுள் மீது அருணகிரிநாதர் இயற்றிய ஒரு பக்தி நூல். திருப்புகழில் 1340 இசைப்பாடல்கள் உள்ளன. இவற்றுள் 1088க்கும் மேற்பட்ட சந்த வேறுபாடுகள் உள்ளன என்று கணித்திருக்கிறார்கள். திருப்புகழை தேவாரம், திருவாசகம் போல் மந்திர நூலாகவும், நாள்தோறும் இறைவனைப் போற்றிப் புகழ்பாடும் நூலாகவும், முருகன் மீது பக்தி கொண்டோர் பின்பற்றும் நூலாகவும் கொள்கின்றனர். திருப்புகழில் மிகச் சிறந்த சொல்லாட்சி, இசை நூட்பங்கள், கவித்துவம், இலக்கிய நயம், தாள நுட்பம், சந்தபேதம், இனிய ஓசை ஆகியவை அடங்கியது. இது இசை நூல்களிலடங்காத தனித்தன்மை பெற்றது. அருணகிரிநாதர் 15-ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். திருப்புகழில், இலக்கியமும் பக்தியும் இணக்கமாகக் கலக்கப்பட்டுள்ளதைக் காணலாம். மேலும், "திருப்புகழ்" இடைக்கால தமிழ் இலக்கியத்தின் முக்கிய படைப்புகளில் ஒன்றாக உள்ளது. இது கவிதை மற்றும் இசை நயத்திற்காகவும், அதன் மத, தார்மீக மற்றும் தத்துவ உள்ளடக்கங்களுக்காகவும் மக்களால் அறியப்படுகின்ற ஒரு நூலாக இருக்கிறது. திருப்புகழ் பாடல்கள் நல்லொழுக்கம் மற்றும் நீதியுள்ள வாழ்க்கையை வாழ்வதற்கான வழியைக் காட்டுகின்றன. மேலும் ஒரு புதிய வழிபாட்டு முறையான இசை மூலம் வழிபடுவதை உலகிற்கு உணர்த்தும் விதமாக அவை உள்ளன. "திருப்புகழ்" தேவாரத்திற்கு இணையாகவும், "கந்தர் அலங்காரம்" திருவாசகத்திற்கு இணையாகவும், "கந்தர் அனுபூதி" திருமந்திரத்திற்கு இணையாகவும் முருக பக்தர்களால் போற்றப்படுகின்றன. 
    ரமணியின் ஒலி நூலாக்கத்தில் பதினாறாம் தொகுதியாக 313 பொதுப்பாடல்களில் 1161 முதல் 1200 வரையிலான 60 திருப்புகழ்ப் பாடல்கள் அமைகின்றன.
    Voir livre
  • Nyasa - cover

    Nyasa

    Kasturi Bayari

    • 0
    • 0
    • 0
    Short story by Kasturi Bayari
    Voir livre