வளர்ப்பு
தேவிபாலா
Verlag: Pocket Books
Beschreibung
கிட்டத்தட்ட 2 வயது நெருங்குவதற்குள் குறும்பும் வன்முறையும் உச்ச கட்டத்துக்கு வந்து விட்டது!வீட்டில் சரமாரியாக பொருட்கள் உடைந்தது! பூஜை அறை சாமி படங்களையும் விட்டு வைக்கவில்லை.சேதாரம் அதிகமானது!சாக்கடையில் கைவிடுவது! சுவரை சுரண்டுவது, மண் தின்னுவது என சகல சேட்டைகளும்!ஒழுங்காக உடைகளை அணியமாட்டான்!பிறந்த மேனியாக அவன் நிற்பதை ரசித்து சிரிப்பார்கள்.ஒரு வாட்ஸ் அப் வீடியோவில் ஆண் குழந்தையின் பிறப்பு உறுப்பை நாய் கவ்வியதை படுபயங்கரமாக வெளியிட்டிருக்க, ரூபா அதை செல்வத்திடம் காட்டினாள்.“விட்ரு! அது தெருவுல உள்ள பிச்சைக்காரக் குழந்தை! நம்ம ஆதியோட ஏன் கம்பேர் பண்ற?”“இல்லைப்பா! தொற்று நோய் எதுக்கும் ஆளாகக் கூடாதில்லையா?”கேட்கவில்லை!ரூபாவின் பெற்றோரும், தம்பியும் உள்ளூர்தான்.அவர்களும் இவனது அடிக்குத் தப்பவில்லை.ரூபா வீட்டுக்கு வந்த சமயம், அப்பா கேட்டே விட்டார்.“என்ன ரூபா? இப்பிடி வளர்க்கிறாங்க? தர்ஷினி கவனிக்க வேண்டாமா?”அவ எந்த ஒரு பொறுப்பையும் சுமக்கமாட்டா! நான் பேசிப் பாத்துட்டேன்! பேரனைச் சொன்னா, அவங்களுக்குப் புடிக்காது! சாரதி அண்ணனோட குடும்பம் முதல் பிறந்த நாளுக்கு வந்துட்டு, வேதனையோட திரும்பினாங்க!”“அடடா! குழந்தை பிறந்து 2 வருஷமாச்சு! இவ எதுக்கு பிறந்த வீட்லயே இருக்கா?”“அம்மா! எங்கிட்ட பேசற மாதிரி அவங்ககிட்டப் பேசாதே! உறவே கெட்டுப் போயிடும்!”“நீ மாப்ளைகிட்டப் பேசு!”“உபயோகமில்லைம்மா! அவர் எதிலும் தலையிடமாட்டார்! வெளில அடி பட்டா சரியாகும்! என் குடும்பமாச்சே! அது கூடாதுனு நான் பாக்கறேன். கேக்கறதில்லை! நீங்க யாரும் பேசிடாதீங்க!”அடுத்த வாரமே, உறவுக்காரர்கள் வீட்டில் குழந்தையின் பேர் சூட்டு விழாவுக்கு போகும்படி இருந்தது!குழந்தை பிறந்த 27-வது நாள் அவர் பெயரிட அத்தனை பேரும் போயிருந்தார்கள்.அது பொம்மை போலிருக்க, ஆதி நெருங்கி, அதைத் தொட்டுப் பார்த்து படக்கென கிள்ளி விடஅது வீரிட்டு அழ,அதன் கைகளில் ஆதியின் நகம்பட்டு ரத்தத் துளிகள்.“என்ன விசாலம்? உன் பேரனைக் கவனிக்கமாட்டியா? பிஞ்சுக் குழந்தையைக் கிள்ளிட்டான்!”“தர்ஷினி! பெத்துட்டாப் போதாது! அதும்மேல கண் வச்சு கவனிக்கணும்!”குடும்பம் கொதித்து அம்மா, மகளை விளாசத் தொடங்க, பதிலே பேச முடியவில்லை.ஒரு மாதிரி ரசாபாசம் ஆகிவிட்டது!வாசுதேவனுக்கு லீவு இல்லை என்பதால், வர முடியவில்லை.மாலை வீடு திரும்பி விட்டார்கள்.“ஏண்டா ராஜா, அந்த மாதிரி செஞ்சே? அது குட்டிப் பாப்பா இல்லையா! செய்யக்கூடாது!”குரலில் கனம் ஏற்றி விசாலம் சொல்ல,பாட்டியை அடித்தான். கொலைப் பார்வை பார்த்தான்.“அம்மா! அவனைத் திட்டாதே! நீ சொன்னா, அவனால தாங்கிக்க முடியாது!”ரூபாவுக்கு பொறுக்க முடியவில்லை.“தப்பு தர்ஷினி! இப்பக்கூட அத்தை கண்டிக்கலைனா, அது சரியில்லை. நீயும் அத்தையும் அங்கே வாங்கின பேச்சு போதாதா? இந்த அவமானம் உங்களுக்குத் தேவையா?”“அண்ணி! இதுல என்ன அவமானம்! அவங்க பேசினா, நாங்க கரைஞ்சா போயிடுவோம்! அதுக்காக பச்சப் புள்ளையை அடிக்கச் சொல்றீங்களா?”“இல்லை தர்ஷினி! கண்டிக்கலைனா தப்பாயிடும்! நாளைக்கு இவனைக் கூட்டிட்டு அந்த வீட்டுக்குப் போக முடியுமா?”“வேண்டாம்! ஆதியைப் புடிக்காதவங்க எனக்கு வேண்டாம்!”“இப்பிடி எல்லாரையும் உதற முடியுமா தர்ஷினி!”விசாலம் கடுப்பாகி விட்டாள்.“ரூபா! அவ, ஆதிக்கு அம்மா! அவன்தான் அவளுக்கு முதல்ல உசத்தி. அவனை யாரு வேண்டாம்னு சொன்னாலும், அவ உதறுவா! அதுதான் நியாயம்!”“அத்தே! அது பிஞ்சுக் குழந்தை! இவனுக்கும் விவரம் தெரியாது! படாத இடத்துல பட்டு விபரீதமாயிருந்தா, நாம என்ன செய்ய முடியும் அத்தே?”“எதுக்கு ஓவரா கற்பனை பண்ற? கொஞ்ச நாளா குழந்தை மேல வெளி ஆட்களை விட நீதான் அதிகமா புகார் படிக்கற!”“அம்மா! 2 வருஷங்கள் கடந்தும் தனக்கு வரலைனு அண்ணிக்கு ஆதங்கம்! அதான் என் பிள்ளையைக் கழுவி ஊத்தறாங்க!
