Begleiten Sie uns auf eine literarische Weltreise!
Buch zum Bücherregal hinzufügen
Grey
Einen neuen Kommentar schreiben Default profile 50px
Grey
Jetzt das ganze Buch im Abo oder die ersten Seiten gratis lesen!
All characters reduced
பூமாலை போட வா! - ii - cover

பூமாலை போட வா! - ii

தேவிபாலா

Verlag: Pocket Books

  • 0
  • 0
  • 0

Beschreibung

அந்த வீடே பரபரப்பாக இருந்தது.மாற்றலாகி நாளைக்கு ரமணி வரும் நாள். தற்செயலாக அந்த நாள் பிரமாத முகூர்த்த நாளாக அமைந்துவிட்டது. இதை விட்டால் இந்த அளவுக்கு பிரமாதமான நாள் இன்னும் ஒரு மாசத்துக்கு இல்லை!அதே நாளில் காதம்பரியைப் பார்த்து, தாம்பூலம் மாற்றுவது என அப்பா தயாராகிவிட்டார்.காதம்பரி வீட்டுக்கும் அதை அறிவித்துவிட்டார்.“என்னங்க! ரமணி வந்து ஒரு வார்த்தை கேட்டுட்டு, இதை செஞ்சிருக்கலாம்!”“ரமணி வருவான். நாள் வருமாடி? காலைல ரயில் வருது! ரமணி எட்டு மணிக்குள்ளே வீட்டுக்கு வந்துடுவான். காதம்பரி வீட்டுக்கு சாயங்காலம் போகப் போறோம். நடுவுல ஏராளமான அவகாசம். உன் பிள்ளைகிட்டப் பேச உனக்கு அது போதாதா?”“நான் பேசவா சொல்றேன்? கட்டிக்கப் போறவன் அவன். அவனுக்குப் பிடிக்கணும்!”“அவளுக்கென்னடி குறைச்சல்? அவளைப் பிடிக்கலைனு யார் சொல்ல முடியும்? நிச்சயமா புடிக்கும்! தங்கம்...! மசமசன்னு இருக்கக் கூடாது! ஒரு முடிவை எடுத்த பிறகு, அதை செயல்படுத்த கால தாமதம் கூடவே கூடாது! புரியுதா?”அம்மா எதுவும் சொல்லவில்லை! உள்ளே வந்தாள்.ரெண்டாவது மகன் சசி - கல்லூரி பேராசிரியர் தயாராகிக் கொண்டிருந்தான்.“நாளைக்கு நீ லீவு போட்ரு சசி!”“சரிம்மா! அப்பா - அண்ணனைக் கேக்காம ரொம்ப அவசரப்படறார். அவனுக்கு சில சமயம் சுருக்குனு கோவம் வந்துடும்!”இவருக்கு நினைச்சது நடக்கலைனா, புடிக்காது!”“அந்த குணத்தையெல்லாம் இனிமே மாற்றிக்கணும்! எங்களுக்கும் சுதந்திரம் உண்டு. ரமணி விட்டுக் குடுக்கறான்! நான் மாட்டேன்!”சசி புறப்பட்டு விட்டான்.“சரிப்பா! எது நடந்தாலும் பிரச்னை இல்லாம நடக்கணும்! குடும்பம் சந்தோஷமா இருக்கணும்!”இரவுக்குள் தாம்பூலம் மாற்றுவதற்குத் தோதான அத்தனை பொருட்களையும் அப்பா சேகரித்துவிட்டார்.காதம்பரிக்கு சேலை ரவிக்கை இத்யாதிகள்!பெண்கள் இருவரும் முதல் நாள் இரவே வீட்டுக்கு வந்துவிட்டார்கள்.“ஸ்டேஷனுக்கு யாரு போறாங்க?”“யாரும் வர வேண்டாம்னு ரமணி சொல்லிட்டான். அவன் வளர்ந்த இடம்தானே! வந்துடுவான்!”கதிர் மட்டும் ஏதோ ஒரு விளையாட்டுக்காக வெளியூருக்குப் போயிருந்தான்.அந்த வீட்டுக்கு ஒரு கல்யாணக் களை வந்துவிட்டது!எல்லாரும் எதிர்பார்த்த மறுநாளைய காலைப் பொழுது விடிந்தது!தொலைபேசியில் கேட்க, ரயில் சரியான நேரத்துக்கு வருகிறது என்றார்கள்.எட்டுக்குள் ரமணி வந்துவிடுவான்.ரமணிக்குப் பிடித்த காலை உணவாகச் செய்து அம்மா காத்திருந்தாள்!சரியாக ஏழு ஐம்பது!வாசலில் அந்தக் கால் டாக்ஸி வந்து நின்றதுவிரைவில் அவன் கல்யாண மாப்பிள்ளை ஆகப் போகிறான் என்பதால், வந்ததும் அவனுக்கு ஆரத்தி எடுக்க வேண்டும் என்பது அப்பா உத்தரவுஅம்மா ஆரத்தித் தட்டோடு ஓடி வந்தாள்.ரமணி இறங்கினான்!ஒருமுறை அம்மாவைப் பார்த்துவிட்டு, டாக்ஸியின் பின் கதவைத் திறந்துவிட்டான்.ஒரு இளம் பெண்ணும், மூன்று வயதுப் பெண் குழந்தையும் காரைவிட்டு இறங்கினார்கள்.அவள் கலவரத்துடன் ரமணிக்கு சற்று தள்ளி நின்றுகொண்டாள்.அப்பா கதவருகில் இருந்தார். அப்பா உட்பட, அனைவர் முகமும் மாறியது!“அம்மா ஆரத்தியோட வந்திருக்காங்க! என் பக்கத்துல வந்து நில்லு இந்திரா!”அம்மா ஆடிப்போனாள்.“ரமணி! அவசரப்படாதே! புருஷன் - பொண்டாட்டிதான் ஆரத்திக்கு சேர்ந்து நிக்கணும். யாரோ ஒருத்தர் உன்பக்கத்துல நிக்கக் கூடாது!”“யாரோ ஒருத்தர் இல்லைம்மா! இந்திரா என் மனைவிதான்!”“ரமணீ...!”அம்மா அலறியபடி ஆரத்தித் தட்டை நழுவவிட, அந்த சிகப்பான திரவம் தரையில் பரவி, ரமணியின் காலைத் தொட்டது!குடும்பத்தில் அத்தனை பேருக்கும் பலத்த அதிர்ச்சி.“தங்கம்! அவன் உள்ளே வரவேண்டாம்!”அப்பா கூச்சலிட்டார்.சசி அவரை நெருங்கினான்
Verfügbar seit: 16.01.2024.
Drucklänge: 74 Seiten.

Weitere Bücher, die Sie mögen werden

  • Meendum Jeeno - cover

    Meendum Jeeno

    Sujatha

    • 0
    • 0
    • 0
    முற்றிலும் விஞ்ஞானமயமாக்கப்பட்ட வேறொரு உலகம், அந்த உலகத்தை ஆளும் பொம்மை ராணி நிலா. அவளைப் பின்னாலிருந்து ஆட்டுவிக்கும் ரவி, மனோ இருவர் கையில் ஒட்டுமொத்த அதிகாரமும் இருக்க, இயந்திர நாயான ஜீனோ, நிலாவுக்கு உதவ தன் ஒட்டு மொத்தத் தந்திரங்களையும் மூளையையும் பிரயோகிக்கிறது. ஜீனோவுக்கும் எதிரிகளுக்கும் இடையில் நடக்கும் போரின் முடிவு என்ன என்பதுதான் இந்த நாவல்.
    Zum Buch
  • வாழ்வின் முதல் காதலா! நீதானா - Vaalvin Muthal Kadhalaa Neethaanaa - cover

    வாழ்வின் முதல் காதலா! நீதானா -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    “வெற்றி, நேத்து கிளப்ல பேசீட்டு இருக்கும் போது உனக்கு பொண்ணு பாக்கனுன்னு தான் ஒரு பே...ச்சுக்கு சொன்னேன். உடனே நம்ம ராஜி இருக்காளே, அவ பொண்ணு கூட ஏதோ மாடலிங் பண்ணீட்டு இருக்கான்னு... 
    நீ கூட நம்ப கம்பெனி விளம்பரத்துக்கு நடிக்க ஒரு வாய்ப்பு கொடுத்தியே.. அவ பேர் கூட...என்னம்மோ...” என்று நெற்றியை தட்டி தெரியாதது போல் இழுத்தவரிடம், 
    செய்தித் தாளைப் புரட்டியபடியே, “மிதுல்லா...” என்று அலட்டாமல் கூறியவனிடம், 
    “ஆஹ்... மிதுல்லா, நல்ல பேர். பாத்தியா ரெண்டு மூணு தடவை பாத்த உனக்கே அவளோட பேர் ஞாபகம் இருக்கு. அவ்வளவு சுலபமா அவளை மறக்க முடியுமா? எவ்ளோ அழகு அந்த பொண்ணு... 
    ம்ம்... வெற்றி, அவளுக்கு உன்னை கல்யாணம் பண்ண கேட்டாபா ராஜி. அழகு, அறிவு, திறமை எல்லாம் இருக்கு அவகிட்ட. 
    நம்ம வீட்டுக்கு ஏத்த பொண்ணு டா அவ. அதுவும் உனக்கு ரொம்ப பொருத்தமா இருப்பா. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. நீ என்ன சொல்ற வெற்றி?” என்று மகனின் முகத்தை ஆர்வமாக பார்த்து வினவினார் கற்பகாம்பாள். 
    செய்தித் தாளை மூடி மேஜையில் வைத்தவன், கற்பகாம்பாள் புறம் திரும்பி, “ம்ம்.. நல்ல அழகான பொண்ணு தான். நல்ல திறமையா நடிச்சா. ரொம்ப அறிவா பேசுனா தான். 
    ஆனா, ரொம்ப அதிகமா பேசுவாளே... அதுவுமில்லாம அவ யாருமில்லாத அநாதை இல்லை. நீங்க சொல்றது எதையும் அப்படியே கேக்கவும் மாட்டா. உங்களை எதித்து கேள்வி கேப்பா... 
    அவ இஷ்டத்துக்கு உங்களால இருக்க விட முடியுமா? முக்கியமா... உங்களுக்குத் தான் வாய் பேசாத முடியாத ஊமை பொண்ணு தானே மருமகளா வர பிடிக்கும்....” என்றவன் எழுந்து அவன் அணிந்திருந்த வெண்ணிற பருத்தி உடை பாக்கெட்டில் கைகளை நுழைத்த படி வினவ, 
    “என்னடா குத்தி பேசுறியா?” என்று கற்பகாம்பாள் வெற்றியை முறைக்க, 
    “என்னடா குத்தி பேசுறியா?” என்று கற்பகாம்பாள் வெற்றியை முறைக்க, 
    “இல்லையே நேரா தான் கேக்குறேன்.” என்றவன் பதில் தெளிவாக வந்து விழுந்தது.
    Zum Buch
  • மகரந்தம் தாங்கும் மலரவள் - Magarantham Thangum Malaraval (Tamil Edition) - cover

    மகரந்தம் தாங்கும் மலரவள் -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    தந்தையின் உழைப்பில் வாழ விரும்பாமல் தன் வாழ்க்கையின் ஒவ்வொரு முக்கியமான கால கட்டத்திலும், தன்னுடைய முடிவையே பிரதானமாகக் கொண்டு அதில் வெற்றியும் பெற்றிருப்பவன் நளன். தனக்கு எது வேண்டும் என்று முடிவெடுக்கத் தெரியாத பேதையவள் நேத்ரா. 
    காலத்தின் போக்கில் இணைந்த இவர்களது காதல் மூன்றாம் நபரின் தலையீட்டால் என்னவானது? தெரிந்து கொள்ளப் படியுங்கள் மகரந்தம் தாங்கும் மலரவள்!   
     
    Zum Buch
  • நாணலே நங்கையானால் - Naanale Nangaiyaanaal? - cover

    நாணலே நங்கையானால் - Naanale...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுள் ஒன்றை வைத்து, அழகான காதல் கதையின் மூலம் வாசிப்பவர்களுக்கு சுவாரஸ்யம் ஊட்டும் வகையில், பலவித திடீர் திருப்பங்களுடனும் சுவாரஸ்யங்களுடனும் கதையை எளிமையாக விளக்க முயன்றிருக்கிறேன். 
    Zum Buch
  • உடன்பிறப்பு - Udanpirappu-Sirukathai - cover

    உடன்பிறப்பு -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    உடன்பிறப்பு
    Zum Buch
  • En Iniya Iyandhira - cover

    En Iniya Iyandhira

    Sujatha

    • 0
    • 0
    • 0
    சுஜாதா எண்பதுகளில் ஆனந்த விகடனில் எழுதிய விஞ்ஞானத் தொடர்கதை. கி.பி 2022-ல் நடப்பதான இந்தக் கதையில் 'ஜீனோ' என்கிற ரோபாட் நாய்தான் கதாநாயகன். கதையில் வேறு கதாநாயகனே கிடையாது! இந்தியாவில் 'ஜீவா' என்னும் மகத்தான மெஸ்ஸையாவின் ஆட்சி நடைபெறுகிறது. தேசத்தில் லஞ்சம் கிடையாது. கவிதை கிடையாது. பாட்டு, கூத்து, பண்பாடு ஒன்றுக்கும் அனுமதி கிடையாது. தன்னிச்சையாக பிள்ளை பெற்றுக்கொள்ளக்கூட அனுமதி கிடையாது. ஐம்பது வயதுக்கு மேல் வாழ்க்கை நீடிப்பும் கிடையாது. இத்தகைய இயந்திரமயமான தேசத்தில் நிலா என்னும் குடிமகளின் கணவன் சிபி காணாமல் போய்விடுகிறான். ஜீவாவை எதிர்க்கும் புரட்சிக் கும்பலில் ஒருவனான ரவி, அவனது இயந்திர நாயான ஜீனோ இருவரும் நிலாவுக்கு உதவியாக இணைகின்றனர். நிலா - ஜீனோ கூட்டணி அரசாங்கத்தையே அசைத்துப் பார்க்கிறது.
    Zum Buch