Rejoignez-nous pour un voyage dans le monde des livres!
Ajouter ce livre à l'électronique
Grey
Ecrivez un nouveau commentaire Default profile 50px
Grey
Abonnez-vous pour lire le livre complet ou lisez les premières pages gratuitement!
All characters reduced
பூமாலை போட வா! - i - cover

பூமாலை போட வா! - i

தேவிபாலா

Maison d'édition: Pocket Books

  • 0
  • 0
  • 0

Synopsis

காலையில் அந்த அதிர்ச்சிகரமான சேதி வந்தது! உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த லிங்கம் என்ற ஒரு ஆள் மட்டும் அதிகாலையில் இறந்துவிட்டான் என்ற தகவல்!குடும்பமே ஆடிப் போனது!லிங்கத்தின் உடல் பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்படுகிறது என்ற தகவலும் வந்தது!இந்திராவுக்கு மயக்கமே வந்தது!ஒரு மணி நேரத்தில் தொழிலாளிகள் பட்டாளம் ஒன்று வீட்டின் முன் கூடிவிட்டது!“லிங்கத்தைக் கொன்னுட்டீங்க! அவர் குடும்பத்துக்கு என்ன நஷ்ட ஈடு தரப்போறீங்க? எங்களுக்கு உறுதிமொழி தர்றவரைக்கும் போகமாட்டோம்!”வீட்டின் முன் உட்கார்ந்துவிட்டார்கள்.குடும்பம் மொத்தமும் உறைந்து, பயந்து -பாதி மரித்துப் போயிருந்தது!கதிர் வெளியே வந்தான்.“கண்டிப்பா செய்யறோம். உடனடியா நாங்க பணத்துக்கு எங்கே போவோம்?”“ஏன்? பெரிசா வீடு எழும்புதே! அதை வித்து செட்டில் பண்ணு!”“இல்லைனா, கடனை வாங்கு. ஏதோ ஒண்ணு செய்!” பலவிதமான கூச்சல்கள்.கதிர் போலீசுக்குத் தகவல் கொடுத்துவிட்டான். வந்து விட்டார்கள்.“எல்லாரும் கலைஞ்சு போங்க!”“மாட்டோம். எங்களுக்கு நியாயம் கிடைக்கணும்! அதுவரைக்கும் போகமாட்டோம்!“இது தொழிற்சாலை இல்லை! தனி மனிதர்கள் வாழற வீடு! அவங்களும் 24 மணி நேரத்துல எதையும் செஞ்சிட முடியாது! முறையா பேசி, சட்டப்படி என்ன செய்யணுமோ செய்வாங்க! நாங்களே வாங்கித் தர்றோம்!”போலீஸ் வந்து பேசியதும் கூட்டம் மிரண்டது! கலைந்து போனது!போலீஸ் அதிகாரி உள்ளே வந்தார்.“நிச்சயமா ஏதாவது செய்ய வேண்டியிருக்கும்! குறிப்பா, செத்துப் போன லிங்கத்தோட குடும்பத்துக்கு நீங்க பெரிய நஷ்ட ஈடாத் தரவேண்டியிருக்கும்! கூடிய சீக்கிரம் ஏற்பாடு பண்ணிக்குங்க!”“......!”“தொழிலாளிகளை ஏமாற்ற முடியாது. கூடாது! அப்புறம் கடல் மாதிரி அவங்க பொங்கிட்டா, நாங்களே கட்டுப்படுத்த முடியாது. ரெண்டாவது - இது அரசியலாயிட்டா, இன்னும் விபரீதம். உங்க குடும்பத்து மேல வச்ச மரியாதை காரணமா, உங்களை நான் எச்சரிக்கறேன்!”ரமணி தலையாட்டினான்.இந்திரா கலவரம் பொங்க நின்றாள்
Disponible depuis: 16/01/2024.
Longueur d'impression: 72 pages.

D'autres livres qui pourraient vous intéresser

  • மகரந்தம் தாங்கும் மலரவள் - Magarantham Thangum Malaraval (Tamil Edition) - cover

    மகரந்தம் தாங்கும் மலரவள் -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    தந்தையின் உழைப்பில் வாழ விரும்பாமல் தன் வாழ்க்கையின் ஒவ்வொரு முக்கியமான கால கட்டத்திலும், தன்னுடைய முடிவையே பிரதானமாகக் கொண்டு அதில் வெற்றியும் பெற்றிருப்பவன் நளன். தனக்கு எது வேண்டும் என்று முடிவெடுக்கத் தெரியாத பேதையவள் நேத்ரா. 
    காலத்தின் போக்கில் இணைந்த இவர்களது காதல் மூன்றாம் நபரின் தலையீட்டால் என்னவானது? தெரிந்து கொள்ளப் படியுங்கள் மகரந்தம் தாங்கும் மலரவள்!   
     
    Voir livre
  • நாணலே நங்கையானால் - Naanale Nangaiyaanaal? - cover

    நாணலே நங்கையானால் - Naanale...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுள் ஒன்றை வைத்து, அழகான காதல் கதையின் மூலம் வாசிப்பவர்களுக்கு சுவாரஸ்யம் ஊட்டும் வகையில், பலவித திடீர் திருப்பங்களுடனும் சுவாரஸ்யங்களுடனும் கதையை எளிமையாக விளக்க முயன்றிருக்கிறேன். 
    Voir livre
  • நெஞ்சம் உன்னைக் கெஞ்சும் - Nenjam Unnai Kenjum - cover

    நெஞ்சம் உன்னைக் கெஞ்சும் -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    கண்களில் கண்ணீர் வழிந்தோடியது. "எனக்கு... என்னை உங்ககிட்ட இருந்து காப்பாத்திக்க வேற வழி தெரியலை... என்னை மன்னிச்சிடுங்க...” என்றாள் மீரா. “பின்ன ஏன் இந்தக் கண்ணீர்?” விக்ரம் குரல் சந்தேகமாக வெளி வந்தது. “அது... தெரியலை! நீங்க... உங்க கையில ரத்தத்தைப் பாத்ததும்.... சாரி, நான் திரும்பவும் சொல்றேன், உங்களை நான் காயப்படுத்த நினைக்கலை... ஆனா, நீங்க என்கிட்டே நடந்துகிட்ட முறை ரொம்ப தப்பு... ஒரு பொண்ணோட அனுமதி இல்லாம அவளை அடைய நினைக்கிறது, தப்பு. அது அவளோட கணவனாவே இருந்தாலும் சரி....” என்றாள் தலை குனிந்தபடி. 
     விக்ரம் மெதுவாக மூச்சை உள்ளே இழுத்து, காயம் இல்லாத தன் இடக்கையை வைத்து மீராவின் நாடி பிடித்து உயர்த்தி தன்னைப் பார்க்கச் செய்தவன், "அப்படின்னா நீ ஏன் இன்னும் இங்கேயே இருக்க? போயிடு... போ மீரா, என்கிட்டே இருந்து தப்பிச்சு போயிடு... திரும்ப என் கண் முன்னாடி வராத. 
     இந்த மாதிரி ஒரு சந்தர்ப்பத்தை நீ பயன் படுத்திக்கலேன்னா... உன்னால எப்பவுமே என்கிட்டே இருந்து தப்பிக்க முடியாது... இப்போ நான் சொன்ன இந்த வார்த்தை... இதை இந்த ஒரு முறைக்கு மேல என் கிட்ட இருந்து நீ எதிர்பாக்க முடியாது. போ... போயிடு” என்றான் குரலில் சற்றே கடுமை கூட்டி.... 
     மீராவின் முகம் மெல்ல புன்னகையில் விகசித்தது. “நிஜம்மாவா நான் போகலாமா? திரும்ப என்னை தொந்தரவு செய்ய மாட்டீங்களே?” என்றாள் நம்ப முடியாத பாவனையில். “ம்… ஹ்ம்ம்..... கண்டிப்பா... மாட்டேன்” என்றான் விக்ரமாதித்யன்.
    Voir livre
  • முற்றும் முதல் நீ எனக்கு - Mutrum Muthal Nee Enakku - cover

    முற்றும் முதல் நீ எனக்கு -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    வாழ்க்கையில் யாருடைய துணையும் இன்றி தன் லட்சியங்களை அடையத் துடிக்கும் நம் நாயகன் கதிர்முகிலனுக்கு தன் மனம் கவர்ந்த பெண் மயூரியால் தடைபடும் தன் இலட்சியத்தை, ஒருவர் மேல் ஒருவர் கொண்டுள்ள அதீத காதலால் எவ்வாறு முறியடித்தனர் என்பதை அறிய என்னோடு பயணியுங்கள் 'முற்றும் முதல் நீ எனக்கு'   
    Voir livre
  • Meendum Jeeno - cover

    Meendum Jeeno

    Sujatha

    • 0
    • 0
    • 0
    முற்றிலும் விஞ்ஞானமயமாக்கப்பட்ட வேறொரு உலகம், அந்த உலகத்தை ஆளும் பொம்மை ராணி நிலா. அவளைப் பின்னாலிருந்து ஆட்டுவிக்கும் ரவி, மனோ இருவர் கையில் ஒட்டுமொத்த அதிகாரமும் இருக்க, இயந்திர நாயான ஜீனோ, நிலாவுக்கு உதவ தன் ஒட்டு மொத்தத் தந்திரங்களையும் மூளையையும் பிரயோகிக்கிறது. ஜீனோவுக்கும் எதிரிகளுக்கும் இடையில் நடக்கும் போரின் முடிவு என்ன என்பதுதான் இந்த நாவல்.
    Voir livre
  • இளநெஞ்சே வா - Ilanenjee vaa (Romantic Thriller) - cover

    இளநெஞ்சே வா - Ilanenjee vaa...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    மன்னா பயணிகள் இருக்கையிலிருந்து குதித்து பாண்டியாவை நோக்கிச் சென்றான். "அவளை வெளிய கூட்டி வா...", என்று தாழ்வான குரலில் கூறினான். ஆனால் அதுவே கட்டளையாக இருந்தது..... 
    பாண்டியா ஒரு கணம் தயங்கி, ராதிகா அமர்ந்திருந்த வேனின் பின்புறத்தைப் பார்த்தான். 
    அவள் கைகள் கட்டப்பட்டிருந்தன, அவள் முகம் வெளிரிப்போய்... ஆனால் கண்கள் சண்டைக்கு நிற்ப்பவள் போல் முறைத்துக் கொண்டு இருந்தது. "நாம இங்க தான் இருக்கனுமா மன்னா? இந்த இடத்தை பாத்தா எனக்கு பயமா இருக்கு... வேற எங்காவது...?" என்றான். 
    மன்னா புன்னகைத்து, குளிர்ந்த காற்றுக்கு எதிராக தனது மேல் சட்டையை இறுக்கமாக இழுத்தபடி, சுற்றிலும் பார்த்தான். முகத்தில் இனம் புரியா புன்னகை அரும்பியது. 
    "அது தான் நமக்கு வேணும், பாண்டியா. இது தான் சரியான இடம்... இங்க தான் யாரும் வரமாட்டாங்க. அவள் கத்துனாலும் அலறினாலும்... யாரும் என்னன்னு கேட்க மாட்டாங்க.. now move" என்றான் அதற்க்கு மேல் பேசாதே என்பது போல்... 
    ராதிகா அமைதியாக இருக்க முயன்றாலும், மன்னா அவனது வார்த்தைகளில் சற்று நிதானமாக இருந்தாள். அவளுடைய இதயத் துடிப்பின் வேகம் கூடியது. ஆனால் அவள் அழவில்லை. அவள் உடைந்து அழுவதை தன் முன்னே இருக்கும் இந்த ஆடவர்களுக்குக் காண்பிக்க அவள் விரும்பவில்லை.... 
    பாண்டியா வேனின் கதவை எச்சரிக்கையுடன் திறந்தான். ராதிகாவின் கை மற்றும் கால் கட்டுக்களை அவிழ்த்து விட்டான். 
    அவனது குரல் முன்பை விட மென்மையாக இருந்தது. "இறங்கி வா..." என்றான். 
    மணிக்கட்டில் சிவந்து போயிருந்த தடத்தைப் மெலிதாக தேய்த்துவிட்டாள். வாயில் இருந்த கட்டு அவிழ்க்கப்பட அப்போது தான் நன்றாக மூச்சே விட முடிந்தது அவளாள்.
    Voir livre