Begleiten Sie uns auf eine literarische Weltreise!
Buch zum Bücherregal hinzufügen
Grey
Einen neuen Kommentar schreiben Default profile 50px
Grey
Jetzt das ganze Buch im Abo oder die ersten Seiten gratis lesen!
All characters reduced
பனித்திரை - cover

பனித்திரை

தேவிபாலா

Verlag: Pocket Books

  • 0
  • 0
  • 0

Beschreibung

சந்திரா சீக்கிரமே எழுந்து குளித்து தயாராகிவிட்டாள்.“சீக்கிரம் போகணுமாடி?”“ஆமாம்மா! நிறைய வேலை இருக்கு. போற வழியில கோவில்ல சாமி கும்பிட்டுட்டு, அப்படியே ‘ஆபீசு’க்குப் போயிடுவேன்.”சந்திராவுக்கு பக்தி அதிகம்.அந்தக் குடும்பத்தில் எல்லாருக்குமே இறை நம்பிக்கை உண்டு. காண்டீபன், சாவித்திரி இரண்டு பேருக்கும் வழிபாட்டு ஆர்வம் அதிகம். அதனால்தான் பெண்களுக்கும்...ரத்தத்தில் ஊறிய சங்கதி.“சாப்பிட்டு போடி.”“இல்லேம்மா... நேரமில்ல. ‘ஆபீஸ் கேன்டீன்’ல பார்த்துக்கிறேன்.”சந்திரா ‘டூ வீலரில்’ தான் போவாள்.“சந்திரா! நானும் புறப்பட்டாச்சு. ‘கம்பெனி கார்’ வரும். உன்னை ‘டிராப் பண்ணிடட்டா?” - அப்பா கேட்க,“இல்லப்பா! உங்க கம்பெனி வண்டியெல்லாம் எனக்கு சரிப்படாது. நான் என்னை மட்டுமே நம்புறவ. புரியதா...?”“ஆம்பளை மாதிரி பேசுவா.”“அம்மா! உனக்கு பையன் இல்லாத குறையைத் தீர்க்க வந்தவ நான்தான்.”“சந்திரா... எங்க ‘கம்பெனி’யில ஒரு நல்ல வேலை வருது. நீ ‘அப்ளை’ பண்ணுறியா? நல்ல சம்பளம்.“இல்லேப்பா.”“ஏன்ம்மா! முதலாளியை வந்து பாரேன்.”“உங்க முதலாளியை இதுவரைக்கும் நான் பார்த்ததே இல்ல. ஒரே இடத்துல அப்பா- மகள் வேலை பார்த்தா, பல பிரச்சினைகள் வரும்ப்பா. வேணாம்.”“என்னடீ பிரச்சினை... உனக்கு பாதுகாப்புதானே?”“ஏன்... இப்ப எனக்கு பாதுகாப்பு இல்லையா என்ன? அது வேண்டாம்மா.”பானு குறுக்கிட்டாள்.“அப்பா! இந்த ஏப்ரல்ல என் ‘டிகிரி படிப்பு முடிஞ்சிடும். எனக்கு உங்க கம்பெனியில வேலை வாங்கிக் குடுங்க.”அதற்குள் சந்திரா புறப்பட்டாள்.இருபது நிமிடங்களில் கோவிலை அடைந்துவிட்டாள்.பழக்கப்பட்ட கோவில்தான்.அர்ச்சனைக் கூடையைக் கொண்டு வந்து சந்திரா தர,பேர், நட்சத்திரம் கேட்டு குருக்கள் ஆரம்பிக்க,வாசலில் கார் வந்து நிற்க,ஒரு பெரிய மனிதன் தன் பரிவாரங்களுடன் இறங்க,குருக்கள் இவளை விட்டுவிட்டு அங்கே ஓடினார்.கூழைக் கும்பிடு போட்டு, அவர்கள் கொண்டு வந்த அர்ச்சனைப் பொருட்கள்- மாலைகளை வாங்கிக்கொண்டு, மந்திரம் சொன்னபடி உள்ளே போக... அந்தப் பெரிய மனிதரும் ‘ஸ்டைலாக நடந்து வர,அவருடன் ஓர் இளைஞன் வர“குருக்களே... நிறுத்துங்க.” சந்திரா கூச்சலிட,‘படக்’கென அனைவரும் திரும்ப,“முதல்ல வந்தவ நான். என் அர்ச்சனையைத் தொடங்கிட்டு, அதைப் பாதியில் நிறுத்திட்டு ஓடினா என்ன அர்த்தம்?”குருக்கள் அருகில் வந்தார்.“மெதுவா பேசும்மா! அவர் பெரிய மனிதர். ‘பிசி’யா இருப்பார். அவரை முதல்ல அனுப்பிட்டு உங்கிட்ட வர்றேன்.”“இது தப்பு! ஆண்டவன் சந்நதியில் பெரியவங்க- சின்னவங்கன்னு பாகுபாடெல்லாம் கிடையாது. இங்கே எல்லாருமே ‘பிசி’தான். நான் மட்டும் சும்மாவா இருக்கேன்?”கூட்டம் கூடிவிட்டது
Verfügbar seit: 16.01.2024.
Drucklänge: 79 Seiten.

Weitere Bücher, die Sie mögen werden

  • முற்றும் முதல் நீ எனக்கு - Mutrum Muthal Nee Enakku - cover

    முற்றும் முதல் நீ எனக்கு -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    வாழ்க்கையில் யாருடைய துணையும் இன்றி தன் லட்சியங்களை அடையத் துடிக்கும் நம் நாயகன் கதிர்முகிலனுக்கு தன் மனம் கவர்ந்த பெண் மயூரியால் தடைபடும் தன் இலட்சியத்தை, ஒருவர் மேல் ஒருவர் கொண்டுள்ள அதீத காதலால் எவ்வாறு முறியடித்தனர் என்பதை அறிய என்னோடு பயணியுங்கள் 'முற்றும் முதல் நீ எனக்கு'   
    Zum Buch
  • மகரந்தம் தாங்கும் மலரவள் - Magarantham Thangum Malaraval (Tamil Edition) - cover

    மகரந்தம் தாங்கும் மலரவள் -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    தந்தையின் உழைப்பில் வாழ விரும்பாமல் தன் வாழ்க்கையின் ஒவ்வொரு முக்கியமான கால கட்டத்திலும், தன்னுடைய முடிவையே பிரதானமாகக் கொண்டு அதில் வெற்றியும் பெற்றிருப்பவன் நளன். தனக்கு எது வேண்டும் என்று முடிவெடுக்கத் தெரியாத பேதையவள் நேத்ரா. 
    காலத்தின் போக்கில் இணைந்த இவர்களது காதல் மூன்றாம் நபரின் தலையீட்டால் என்னவானது? தெரிந்து கொள்ளப் படியுங்கள் மகரந்தம் தாங்கும் மலரவள்!   
     
    Zum Buch
  • உடன்பிறப்பு - Udanpirappu-Sirukathai - cover

    உடன்பிறப்பு -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    உடன்பிறப்பு
    Zum Buch
  • நெஞ்சம் உன்னைக் கெஞ்சும் - Nenjam Unnai Kenjum - cover

    நெஞ்சம் உன்னைக் கெஞ்சும் -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    கண்களில் கண்ணீர் வழிந்தோடியது. "எனக்கு... என்னை உங்ககிட்ட இருந்து காப்பாத்திக்க வேற வழி தெரியலை... என்னை மன்னிச்சிடுங்க...” என்றாள் மீரா. “பின்ன ஏன் இந்தக் கண்ணீர்?” விக்ரம் குரல் சந்தேகமாக வெளி வந்தது. “அது... தெரியலை! நீங்க... உங்க கையில ரத்தத்தைப் பாத்ததும்.... சாரி, நான் திரும்பவும் சொல்றேன், உங்களை நான் காயப்படுத்த நினைக்கலை... ஆனா, நீங்க என்கிட்டே நடந்துகிட்ட முறை ரொம்ப தப்பு... ஒரு பொண்ணோட அனுமதி இல்லாம அவளை அடைய நினைக்கிறது, தப்பு. அது அவளோட கணவனாவே இருந்தாலும் சரி....” என்றாள் தலை குனிந்தபடி. 
     விக்ரம் மெதுவாக மூச்சை உள்ளே இழுத்து, காயம் இல்லாத தன் இடக்கையை வைத்து மீராவின் நாடி பிடித்து உயர்த்தி தன்னைப் பார்க்கச் செய்தவன், "அப்படின்னா நீ ஏன் இன்னும் இங்கேயே இருக்க? போயிடு... போ மீரா, என்கிட்டே இருந்து தப்பிச்சு போயிடு... திரும்ப என் கண் முன்னாடி வராத. 
     இந்த மாதிரி ஒரு சந்தர்ப்பத்தை நீ பயன் படுத்திக்கலேன்னா... உன்னால எப்பவுமே என்கிட்டே இருந்து தப்பிக்க முடியாது... இப்போ நான் சொன்ன இந்த வார்த்தை... இதை இந்த ஒரு முறைக்கு மேல என் கிட்ட இருந்து நீ எதிர்பாக்க முடியாது. போ... போயிடு” என்றான் குரலில் சற்றே கடுமை கூட்டி.... 
     மீராவின் முகம் மெல்ல புன்னகையில் விகசித்தது. “நிஜம்மாவா நான் போகலாமா? திரும்ப என்னை தொந்தரவு செய்ய மாட்டீங்களே?” என்றாள் நம்ப முடியாத பாவனையில். “ம்… ஹ்ம்ம்..... கண்டிப்பா... மாட்டேன்” என்றான் விக்ரமாதித்யன்.
    Zum Buch
  • Idamum Valamum Alaivuru Sirusudar - இடமும் வலமும் அலைவுறு சிறுசுடர் - cover

    Idamum Valamum Alaivuru...

    B.R. Mahadevan

    • 0
    • 0
    • 0
    Auto fiction Novel: இடமும் வலமும் அலைவுறு சிறுசுடர் A proud Aurality tamil audio book production ebook by Swasam Publications. Download FREE Aurality app now on play store and or iphone ios store தீவிரமான கருத்துகளும் சுயமான சிந்தனையும் கொண்ட இளைஞன் தனது கனவுலகைத் தேடி மேற்கொள்ளும் அலைச்சலே இந்த நாவல். மதத் தத்துவங்கள் அவனைத் துரத்துகின்றன. அரசியல் கொள்கைகள் அவனைக் குழப்புகின்றன. மாயமான் வேட்டையில் நிதர்சனத்தைப் புரிந்துகொண்டு, இதுவே நம் பாதை என்று அவன் ஒரு முடிவுக்கு வரும்போது காத்திருக்கிறது இன்னொரு மாயமான். எல்லாவற்றையும் கேள்விகளால் எதிர்கொள்ளும் ஓர் இளைஞனின் பேரலைச்சலை ரத்தமும் சதையுமாக, கொஞ்சம் புனைவுடன் நிறைய உண்மைகளுடன் எழுதி இருக்கிறார் B.R.மகாதேவன். அரசியல் என்ற பெயரிலும், ஆன்மிகம் என்ற பெயரிலும், மதம் என்ற பெயரிலும் இந்தச் சமூகம் தனக்குக் கற்பிக்கும் அனைத்தையும் கேள்விகளால் அடித்து நொறுக்கி தன் அடுத்த பயணத்துக்குக் காத்திருக்கும் இந்த இளைஞன், நிச்சயம் உங்களை அசைத்துப் பார்ப்பான். எழுத்தாளர் B.R.மகாதேவன் எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்
    Zum Buch
  • En Iniya Iyandhira - cover

    En Iniya Iyandhira

    Sujatha

    • 0
    • 0
    • 0
    சுஜாதா எண்பதுகளில் ஆனந்த விகடனில் எழுதிய விஞ்ஞானத் தொடர்கதை. கி.பி 2022-ல் நடப்பதான இந்தக் கதையில் 'ஜீனோ' என்கிற ரோபாட் நாய்தான் கதாநாயகன். கதையில் வேறு கதாநாயகனே கிடையாது! இந்தியாவில் 'ஜீவா' என்னும் மகத்தான மெஸ்ஸையாவின் ஆட்சி நடைபெறுகிறது. தேசத்தில் லஞ்சம் கிடையாது. கவிதை கிடையாது. பாட்டு, கூத்து, பண்பாடு ஒன்றுக்கும் அனுமதி கிடையாது. தன்னிச்சையாக பிள்ளை பெற்றுக்கொள்ளக்கூட அனுமதி கிடையாது. ஐம்பது வயதுக்கு மேல் வாழ்க்கை நீடிப்பும் கிடையாது. இத்தகைய இயந்திரமயமான தேசத்தில் நிலா என்னும் குடிமகளின் கணவன் சிபி காணாமல் போய்விடுகிறான். ஜீவாவை எதிர்க்கும் புரட்சிக் கும்பலில் ஒருவனான ரவி, அவனது இயந்திர நாயான ஜீனோ இருவரும் நிலாவுக்கு உதவியாக இணைகின்றனர். நிலா - ஜீனோ கூட்டணி அரசாங்கத்தையே அசைத்துப் பார்க்கிறது.
    Zum Buch