பெரியவங்க
தேவிபாலா
Verlag: Pocket Books
Beschreibung
கணேசன் வீட்டுக்குள் நுழைந்தார். அவரது சம்சாரம் வள்ளி ஓடி வந்தாள்.“ஏன் இப்படி தலை தெறிக்க ஓடி வர்றே?”“தரகர் போன் பண்ணினார்! ஏழு மணிக்கு உங்களோட வர்றேன்னு நான் சொல்லியிருக்கேன்!”“எதுக்கு?”“நம்ம புஷ்பாவுக்கு ஏதோ ஒரு ஜாதகம் நல்லா பொருந்துதாம்! பாத்துடலாமே!”“சரி! அதுக்கு நான் எதுக்கு?”“நீங்கதானே புஷ்பாவுக்கு அப்பா?”“அதை நீதான் சொல்லணும்?”“உதைபடுவீங்க! என்னைக் கேவலப்படுத்தறீங்களா?”“யாருடி இவ? சந்தேகம் உனக்குத் தானே வந்திருக்கு?”“போதும். வயசுக்குத் தகுந்த மாதிரி பேசுங்க! உடனே புறப்படுங்க!”“ஜாதகப் பொருத்தம் பாக்க ஜோடியா போகணும்னு இல்லை. நீ போனாப் போதும். அது கூட இன்னிக்கு வேண்டாம். ரெண்டு நாள் போகட்டும்.”புஷ்பா அப்பாவுக்கு காபி எடுத்துக் கொண்டு வந்தாள்.“அம்மா! அப்பாவுக்கு நாளைக்கு ரிடையர்மென்ட்! உன் கூட இனிமே எல்லா இடங்களுக்கும் அப்பா வருவார்!”கணேசன் நிமிர்ந்தார்.பையன் ரவிசங்கர் உள்ளே நுழைந்தான்பைக்கை சர்வீஸுக்கு விட்டாச்சா ரவி?”புஷ்பா கேட்க,“இல்லைக்கா! அதை இனிமே காயலான் கடைக்குத்தான் போடணும். புது பைக் வாங்கணும்.”“நல்ல வண்டி வாங்கணும்னா அறுவது, எழுபது ரூபா ஆகும்டா!”“ஆகட்டுமே! அப்பா ரிடையர் ஆகிறார். மொத்தப் பணம் வருமே! வாங்கிக்கறேன்.”“வண்டிக்கெல்லாம் பணம் தர மாட்டேன். வீட்ல ரெண்டு பொண்ணுங்க இருக்கு. அதுங்களை ஆளாக்க வேண்டாமா?” - அம்மா குறுக்கிட,கடைக்குட்டி ரேணு புகுந்தாள்.“நான் பிஎஸ்ஸி முடிச்சிட்டு பயோ மெடிக்கல் போகப் போறேன். படிப்புக்கு எனக்குப் பணம் வேணும்.”ஆளாளுக்கு அப்பாவின் ரிடையர் மென்ட் பணத்தை கமிட் செய்ய - கணேசன் நிலை குலைந்தார்.‘பெருமாள் சொல்வது நூற்றுக்கு நாறு சரி! நம்மை அத்தனை பேருமாச் சேர்ந்து தெருவுலதான் நிறுத்தப் போறாங்க! யோசிக்கணும். கடமைங்கற பேர்ல தப்பு பண்ணிட்டு, கடைசிக் காலத்துல கையேந்தி நிக்கற நிலைமை வரக் கூடாது!”கணேசன் உள்ளே வந்து விட்டார்.வள்ளி பின்னால் வந்தாள்.“என்னங்க?”“எனக்குத் தலை வலிக்குது. என்னைக் கொஞ்சம் தனியா விடறியா?”“ஏன் கோவப் படறீங்க?”“அப்புறமா ‘மூட்’ வரும் போது கொஞ்சறேன். போறியா?”வள்ளி வெளியே வந்தாள்
