Join us on a literary world trip!
Add this book to bookshelf
Grey
Write a new comment Default profile 50px
Grey
Subscribe to read the full book or read the first pages for free!
All characters reduced
பாப விமோசனம் - cover

பாப விமோசனம்

தேவிபாலா

Publisher: Pocket Books

  • 0
  • 0
  • 0

Summary

பேருந்தை விட்டு இறங்கினாள் வாணி! சாலையைக் கடந்தாள்.சற்றே அமைதியான சூழலில் இருக்கும் ஊட்டியிலிருந்து ஆரவாரமாக மாறுபட்டிருந்தது சென்னை!அந்த அடுக்குமாடிக் கட்டிடத்தின் முன் நின்றாள்இவள் வர விரும்பிய ஆபீஸ் ஐந்தாவது மாடியில்!லிஃப்ட்டுக்குள் நுழைந்து, ஐந்தாவது மாடியில் வெளிப்பட்டடள்.அது இசைத்துட்டு விற்கும் நிறுவனம் சமீப காலத்தில் காஸெட், ஸீடீ என தன் தொழிலுக்கு நாகரீக மெருகு சேர்த்துக் கொண்டுவிட்டது! உலக அரங்கில் நிற்குமளவுக்கு சர்வதேச சந்தையில் இடம் பிடித்த நிறுவனம்.அந்தரங்கச் செயலாளர் பதவி…! சம்பளம் ஆரம்பத்தில் ஏழாயிரம்! ஒரு வருட பயிற்சி காலம். வேலை ஊர்ஜிதமானால் பத்து ரூபாய்க்குமேல சம்பளம்.! மற்ற வசதிகளும் உண்டு.நேர்முகத்துக்கு அழைப்பு வரும் என்று வாணி நினைக்கவே இல்லை!விஸ்தாரமான, ஏஸி செய்யப்பட்ட ஹாலில், ஏராளமான அலங்காரத்துடன் ஏழெட்டு பெண்கள்!இவளை ஒரு மாதிரி ‘நல்ல தங்காளைப்’ பார்ப்பதைப்போல பார்த்தார்கள்.புடவைத் தலைப்பை இழுத்துப் போர்த்தியிருந்தாள் வாணி! பத்தரை மணிக்குள் அந்த ஹாலில் இருபதுக்கும் மேற்பட்ட பெண்கள் கூட்டம்!“எத்தனை வேகன்ஸி?” ஒருத்தி ப்யூனைக் கேட்டாள்.“ஒரு இடம்தான்மா!”அந்தப் பெண் நம்பிக்கை இழந்தாள்.பதினொரு மணிக்கு எம்.டி. வந்து விட்டதாக ஒரு பரபரப்பு தென்பட்டது!ஒவ்வொருத்தியாக அழைக்கப்பட்டனர்.ஐந்தாவதாக,“வாணி!”வாணி எழுந்தாள். மெல்ல நடந்தாள்.“மணிமேகலை போறா பாரு!” பின்னாலிருந்து குரல் துரத்தியது!கதவைத் தள்ளித் திறந்தாள்.“யெஸ் கம் இன்!”நிமிர்ந்தாள். தூக்கி வாரிப் போட்டது!‘ரயிலில் பார்த்த அவன்!’‘பால் கொண்டு வந்த அவன்!’‘பரிவோடு பேச நினைத்து, முகம் வாடி, சொல்லாமல் போன அவன்!’அவனும் இவளை எதிர்பார்க்கவில்லை என்பதை அதிர்ந்த முகம் சொன்னது!“ஒக்காருங்க!”லேசான நடுக்கத்தை கஷ்டப்பட்டு கட்டுப்படுத்திக் கொண்டாள் வாணி!‘கண்டிப்பாக எனக்கு இந்த வேலை கிடைக்காது!’‘இவனை நான் அலட்சியப் படுத்தியிருக்கிறேன். மறக்க மாட்டான் நிச்சயமாக’குனிந்த தலையோடு அமர்ந்திருக்கும் அவளையே ஓரிரு நொடி பார்த்தான்.சட்டென எழுந்தான்
Available since: 02/03/2024.
Print length: 68 pages.

Other books that might interest you

  • Thiruvaymozhi - cover

    Thiruvaymozhi

    Nammazhvar

    • 0
    • 0
    • 0
    திருவாய்மொழி தமிழ் வேதம் எனப் போற்றப்படும் நூல். நம்மாழ்வார் இதனைப் பாடியுள்ளார். நம்மாழ்வாரின் பாட்டுடைத் தலைவர் திருமால். 
    இவர் திருமாலைத் தெய்வமாகக் கொண்டு பாடல்களைப் பாடினாலும் பிற சமயக் கோட்பாடுகளையும் மதித்துப் போற்றியவர். 
    நம்மாழ்வாரின் திருவாய்மொழி 1102 பாசுரங்களைக் (பாடல்களைக்) கொண்டது. இதில் பல்வேறு வகையான விருத்தப் பாடல்கள் அந்தாதியாக அமைந்துள்ளன. இந்நூலின் பாடல்களில் பல அகத்திணைத் துறைகளாக உள்ளன. 
    அவாவறச் சூழ் அரியை அயனை அரனை அலற்றி 
    அவாவற்று வீடுபெற்ற குருகூர்ச் சடகோபன் சொன்ன 
    அவாவிலந் தந்தாதிகளால் இவையாயிரமும் முடிந்த 
    அவாவிலந் தாதி பத்தறிந்தார் பிறந்தார் உயர்ந்தே. (10-10-11) 
    அவா நீங்கும் படி சூந்து வரும் திருமாலை, நான்முகனை, சிவபெருமானைப் போற்றிப் பாடி, அவா நீங்கி வீடு பெற்ற குருகூரின் சடகோபனாகிய நான் சொன்ன அவா நீக்கும் அந்தாதித் தொடையால் அமைந்த இந்த ஆயிரம் பாடல்களை நிறைவு செய்த அவா நீக்கும் அந்தாதியான இந்தப் பத்துப் பாடல்களையும் பாடியவர்கள் வீடு பேறு பெற்று உயர்ந்தார்கள் என்று கூறும் பாடலோடு நூல் நிறைவு பெறுகிறது. 
     நம்மாழ்வார் பாடல்களை ஒலி நூலாக்கம் செய்திருக்கும் ரமணி தன் முனைவர் பட்டத்துக்காக //நம்மாழ்வார் மற்றும் ஹாப்கின்ஸ் ஆகியோர் பாடல்களில் சமய அனுபவம்// (Religious Experience in the Poetry of Nammalvar and Hopkins) என்றோர் ஆராய்ச்சி நூல் எழுதியிருக்கிறார். சென்னைப் பல்கலைக் கழகம் இதற்கான முனைவர் பட்டம் தந்திருக்கிறது.
    Show book
  • Mandhira Muzhakkam - cover

    Mandhira Muzhakkam

    Kottayam Pushpanath

    • 0
    • 0
    • 0
    பழங்காலத்தில் ஏழீக்கரை கிராமத்தில் கொடிகட்டிப் பறந்திருந்த குடும்பம் பொன்னாட்டு மனை . மூத்த வாரிசுகளின் ஆடம்பர சுகபோகமான வாழ்க்கை முறைகளால் இன்று வறுமையில் தள்ளப்பட்டு அந்த குடும்பத்தில் மீதம் உள்ளவர்கள், பத்ரன நம்பூதிரியும் இருபத்தேழு வயதான வேலை இல்லா பட்டதாரி மகன் கிருஷ்ணன் உண்ணியும் தான். கிருஷ்ணன் உண்ணி வீட்டில் இருந்த பழைய ஓலைசுவடிகளை புரட்ட, முன்னோர்களின் நினைவு எழுந்து அவர்களை விட கெட்டிக்காரனாக வேண்டும் என்கிற ஆசை கொள்கிறான்.
    
    இந்நிலையில் புகழ்பெற்ற நம்பூதிரி குடும்பத்தை சேர்ந்த இளம்பெண் ஒருத்தியின் திருமணம் மூன்றாவது தடவையாக தடைப்பட , இந்த சம்பவங்களின் பின்னணியை தெரிந்து கொள்வதற்காக பெண் வீட்டார் பிரஸ்னம் பார்க்க முடிவுசெய்கிறார்கள். தந்தையின் தூண்டுதலால் அங்கு செல்லும் கிருஷ்ணன் உண்ணி நம்பூதிரியின் பெண் திருமணம் நடைபெற , தன் திறமையை செயல் படுத்தி என்ன செய்கிறான் என்பதை அறிய கேளுங்கள் "மந்திர முழக்கம்"
    Show book
  • நாணலே நங்கையானால் - Naanale Nangaiyaanaal? - cover

    நாணலே நங்கையானால் - Naanale...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுள் ஒன்றை வைத்து, அழகான காதல் கதையின் மூலம் வாசிப்பவர்களுக்கு சுவாரஸ்யம் ஊட்டும் வகையில், பலவித திடீர் திருப்பங்களுடனும் சுவாரஸ்யங்களுடனும் கதையை எளிமையாக விளக்க முயன்றிருக்கிறேன். 
    Show book
  • தேசிய இயக்கப் பாடல்கள் - cover

    தேசிய இயக்கப் பாடல்கள்

    Bharathiyaar

    • 0
    • 0
    • 0
    தேசிய இயக்கப் பாடல்கள் 
    பாரதியாரி்டம் விடுதலை உணர்வு, நாட்டுப் பற்று முதலியவை ஊறிக் கிடந்தன. சத்ரபதி சிவாஜி மகாராட்டிர சுயராஜியத்திற்கு அடிப்படைக் காரணமானவர். சிவாஜியின் வீரம், நடுவு நிலைமை முதலிய அருங்குணங்களை இந்தியர் அறிந்து கொள்ள வேண்டும் என்று பாரதி சத்ரபதி சிவாஜி தம் படைகளுக்குக் கூறியதாகப் பாடியுள்ளார். ஆங்கிலேயருக்குத் தொண்டு செய்து அவர்களை அண்டி அடிமையாய் இருந்து வாழ்தலே மேன்மையானது என்ற எண்ணத்துடன் வாழும் மக்களைப் பாரதியார் அடிமை என்றே குறிப்பிடுகிறார். இந்தியர்கள் தங்களுக்குள்ளே உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி, சமயப் பிரிவு, இனப்பிரிவு எனப் பல்வேறு வழக்கங்களுக்கும் சமுதாயப் பழக்கங்களுக்கும் அடிமைப்பட்டுக் கிடந்தனர். இவற்றுக்கும் விடுதலை வேண்டும் என்று கருதினார். இழிந்தவர் என்று யாரும் இல்லாமல் அனைவரும் சமமாக வாழ வேண்டும் என்று விரும்பினார். எங்கெல்லாம் அநீதி இழைக்கப்படுகின்றதோ அங்கெல்லாம் விடுதலை வேண்டும் என்ற உலகளாவிய நோக்கம் கொண்டதாக இருந்தது. பெல்ஜியத்தை வீழ்த்திய ஜெர்மனி இந்திய வீரர்களிடம் அனுதாபம் உடையதாக இருந்தது.ஜெர்மனியால் வீழ்த்தப்பட்ட பெல்ஜியத்திற்கு வாழ்த்துக் கூறியிருக்கிறார். பாரதியாரின் தேசாபிமானத்தையும் வென்று நிற்கிறது மனிதாபிமானம். உருசியத் தோழர்கள் செய்து வரும் முயற்சிகளின் மீது கடவுள் பேரருள் செலுத்துவாராக என்று உருசியாப் புரட்சி பற்றிப் பாரதியார் பாடுகிறார். உருசியா நாடு புரட்சியில் வெற்றியடைந்ததை நினைத்து மகிழ்ச்சியடைகிறார். அதை நினைத்து ஆனந்தமாகப் பாடிக் களிக்கிறார். பாரததேசத்தின் பெருமை, பாரத மக்கள், அவர்களது விடுதலை வேட்கை, விடுதலை பெறுவதால் அடையும் மகிழ்ச்சி, பயன் தேசத்தலைவர்கள், பிற நா
    Show book
  • Ghanatheya Dina - cover

    Ghanatheya Dina

    Lohit Naikar

    • 0
    • 0
    • 0
    Short story by Lohit Naikar
    Show book
  • Theerpu - cover

    Theerpu

    Lohit Naikar

    • 0
    • 0
    • 0
    Short story by Lohit Naikar
    Show book