முகம் பார்க்கும் நிலவு
தேவிபாலா
Maison d'édition: Pocket Books
Synopsis
“என்னய்யா இது?”“அதானே சார்! கண்ணுக்கு எட்டின தூரம் வரைக்கும் குதிரையைக் காணலை!”“அந்த ட்ரெயினரைக் கூப்பிடுய்யா.”குதிரையின் சொந்தக்காரன் வந்தான்.“என்னய்யா இது?”“சார்... அது முரட்டுக் குதிரை!”“அதனால?”“ஏடா கூடமா இவர் பிடரில தட்டினதை நான் பார்த்தேன். கன்னாபின்னான்னு வேகம் எடுத்திருக்கு!”“அதை நிறுத்த முடியாதா?”“முடியும். அதுக்கும் ஒரு குறிப்பிட்ட இடத்துல தட்டணும்.”“அதை ஏன்யா நீ சொல்லித் தரலை?”“குதிரை ரொம்ப தூரம் ஓட வேண்டாம்னு தானே நீங்க சொன்னீங்க?”“டூப் போடலாம்னு சந்தோஷ்கிட்ட நான் அப்பவே சொன்னேன். கேக்கலை.”ஈஸ்வர் டென்ஷன் ஆகிவிட்டான்.“இருபது நிமிஷம் ஆகுது டைரக்டர். என் சிஸ்டர் இன்னும் வரலை!”“அட இருங்க சார். உங்களைவிட எங்களுக்குக் கவலை அதிகம். அவங்களை வெச்சு நிறைய எடுக்க வேண்டியது இருக்கு!அவர்கள் போய் கிட்டத்தட்ட நாற்பது நிமிடங்கள் ஆகிவிட்டன.இணை இயக்குநர் நெருங்கினான்.“சார்!”“சொல்லுய்யா!”“நம்ம யூனிட் வண்டிய எடுத்துட்டு கொஞ்ச தூரம் போய்ப் பார்க்கலாமா?”“சரி! செய்!”யூனிட் வாகனத்தோடு இணை இயக்குநரும் இன்னும் இரு உதவியாளர்களும் புறப்பட்டார்கள்.மாருதி ஓடத் தொடங்கியது.அத்தனை பேரும் முள்மேல் இருந்தார்கள்.நாலு கிலோ மீட்டர் தூரத்துக்கு வண்டி ஓடியது - கடற்கரையை ஒட்டியே.“சார் அங்கே நிக்குது நம்ம குதிரை!”“ஆமாய்யா... வெள்ளைக் குதிரை!”வாகனம் அதனருகில் போய் நின்றது. குதிரை மெல்ல நடந்து கொண்டிருந்தது.“குதிரை மட்டும்தான்யா இருக்கு. அவங்க ரெண்டு பேரும் எங்கே?”ட்ரெய்னர் குதிரையைப் பெற்றுக் கொள்ள, அந்த இடத்தில் ஒரு உதவியாளனை விட்டுவிட்டு துணை இயக்குநர் பதறப் பதற ஸ்பாட்டுக்கு வந்தான்.“என்னய்யா?”“குதிரை இருக்கு சார். ஆர்ட்டிஸ்ட் ரெண்டு பேரையும் காணலை!”“என்னது?” ஈஸ்வர் தீயை மிதித்ததைப் போல் கூச்சலிட்டான்
