Rejoignez-nous pour un voyage dans le monde des livres!
Ajouter ce livre à l'électronique
Grey
Ecrivez un nouveau commentaire Default profile 50px
Grey
Abonnez-vous pour lire le livre complet ou lisez les premières pages gratuitement!
All characters reduced
மார்'கிழி' மாதம் - cover

மார்'கிழி' மாதம்

தேவிபாலா

Maison d'édition: Pocket Books

  • 0
  • 0
  • 0

Synopsis

தூக்கம் கலைந்ததும்.வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்தாள்.அறை முழுவதும் ஒரே இருட்டாக இருந்தது. ‘திக்’கென்றது ரேஷ்மாவுக்கு.அவசரமாக விளக்குகளை உயிர்ப்பித்தாள்.மேஜையின் மேலிருந்த தன் கைக் கடிகாரத்தைப் பார்த்தாள். மணி ஏழு...டிபன் முடித்து, அறைக்கு வரும் போது மணி ஒன்பதரை இப்போது ஏழா? இத்தனை நேரமா தூங்கியிருக்கிறேன்?டிரஸ்ஸிங் டேபிள் கண்ணாடியில் பார்த்த போது, முகம் சற்று உப்பிச் சிவந்து, தூக்கம் அதிகம் என்பதைக் காட்டியது.‘எங்கே சௌத்ரி?’‘ஒரு மணி நேரத்தில் வருவதாக, ஒன்பதரைக்குச் சொல்லிவிட்டுப் போனவர், இன்னுமா வரவில்லை? வந்தால், கதவைத்தட்டி அழைக்க மாட்டாரா?’திகீரென்றது.அழுகை உடைத்துக்கொண்டு புறப்பட்டது.சற்று விலகி நின்ற கதவு திறந்தால், பால்கனி என்று காலையிலேயே கவனித்திருந்தாள்.திறந்தாள்...சோடியக் கண்கள் விழித்துக்கொண்டு, இரவு நேரச் சென்னை அசுரகதியில் இயங்கிக் கொண்டிருக்கநிற்கப் பிடிக்காமல் உள்ளே வந்தாள்.அடி வயிறு கலங்கியது.‘இத்தனை நேரமாக, சௌத்ரிக்கு என்ன வேலை?’‘சென்னை எனக்கு புதிது... இந்த ஊர் மொழியும் தெரியாது என்றெல்லாம் புரிந்துமா சௌத்ரி...?’‘நோ... அப்படி இருக்க மாட்டார் சௌத்ரி!’‘கோரமாண்டல் எக்ஸ்பிரஸில், என்னைவிட்டு அங்குலம் அசையாத சௌத்ரியா, தனியாக ஓட்டல் அறைக்குள் விட்டு விட்டு?’‘சௌத்ரிக்கு எதுவும் விபத்தா?’நினைத்த போதே, கண்களை இருட்டிக்கொண்டு வந்தது.தடாலெனக் கீழே உட்கார்ந்தாள்.நேரம் எட்டை நெருங்கிக் கொண்டிருந்தது.இன்னும் வரவில்லை சௌத்ரி.‘ஓட்டல் ரிசப்ஷனில் கேட்கலாமா?’‘அவர்களுக்கு மட்டும் என்ன தெரியும்? ‘விஸிட்டிங் கார்ட்’ அடிக்க, நல்ல பிரஸ்ஸா பார்க்கணும் என்று சொல்லிப் போனவர் தானே?’‘சென்னையில் எத்தனை பிரஸ்? தெருத்தெருவாகத் தேட முடியுமா?’‘போலீஸில் புகார் செய்யலாமா?’‘ஸ்டேஷனில் வைத்து ஒரு பெண்ணை இன்ஸ்பெக்டர் கற்பழித்ததாக போனவாரம் செய்தி படித்ததிலிருந்தே, போலீஸ் மேலிருந்த கொஞ்ச, நஞ்ச நம்பிக்கையும் போய்விட்டது‘இந்த ஒரு இரவு, பல்லைக் கடித்துக்கொண்டு சமாளித்துவிடவேண்டும். விடிந்துவிட்டால் யோசிக்கத் தொடங்கலாம்’ ‘தனக்கெப்படி, இத்தனை தைரியமும் தெளிவும் ஏற்பட்டது என்று ரேஷ்மாவுக்கே ஆச்சர்யமாக இருந்தது.’‘தூக்கம் மட்டும் வரவில்லை.’எப்படியும் சௌத்ரி, நள்ளிரவானாலும் வந்துவிடுவான் என்ற கடைசி நம்பிக்கையும் செத்தபோது இரவு மணி இரண்டு. ஒரு மாதிரி மரத்துப் போயிருந்தாள்.பகல் வெகு நேரம் உறங்கியதற்கான தண்டனையை விடிய விடிய அனுபவித்தாள்.ஒரு வழியாக விடிந்தும் விட்டது.‘இனி யோசிக்க வேண்டும்!’‘சென்னையில், தனக்கு யாரைத் தெரியும்?’‘உறவும் இல்லை... ஸ்நேகிதி...’ சட்டென் தன் பேனா நண்பி சுலோவின் நினைவு வந்தது. அவசரமாக டைரியைப் பிரித்து, சுலோவின் விலாசத்தைத் தேடி சேகரித்துக் கொண்டாள்.‘இதுவரை நேரில் பார்த்திராத சுலோவிடம், முதல் சந்திப்பிலேயே, என் கணவனைக் காணவில்லை என்று சொல்ல முடியுமா?’‘நேரில் பார்க்காவிட்டாலும், கடிதம் மூலம் சுலோவிடம் அப்படியொரு நெருக்கத்தை ஏற்படுத்தியிருந்தது நிஜம்தான்’‘சௌத்ரியை திருமணம் செய்து கொள்ள முடிவானதும், முதலில் சுலோவுக்குத்தானே எழுதினாள்? இனி கல்கத்தாவில் இருக்க மாட்டேன், ஊட்டி போனதும், புது முகவரி தருகிறேன் என்று போன வாரம்தானே எழுதினாள்?’பெட்டியிலிருந்து பணத்தை எடுத்துக் கொண்டு, அவசரமாகத் தயாரானாள். அறையைப் பூட்டிக் கொண்டு, வெளியில் வந்து, ஆட்டோவை அழைத்து, சுலோவின் விலாசம் சொன்னாள்
Disponible depuis: 03/02/2024.
Longueur d'impression: 81 pages.

D'autres livres qui pourraient vous intéresser

  • Kolai Thodarbukku Appaal - cover

    Kolai Thodarbukku Appaal

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    Our hero goes to Dubai for a job and stays in a small room. What is his job and why does he face a lot of problems in it? How intelligent are the Dubai Police? Listen Kolai Thodarbukku Appaal to know more.
    
    செல்வம் கொழிக்கும் துபாயில் தமிழர்கள் நிறைய பேர் பல்வேறு பணிகளில்
    இருக்கிறார்கள். இந்த நாவலின் நாயகனும் துபாயில் ஓர் அறையில் தங்கி வேலை பார்த்துக் கொண்டு இருக்கிறான். அது எது மாதிரியான வேலை என்பதும் அந்த வேலையின் காரணமாய் அவன் சந்திக்கும் பிரச்சினைகளுமே நாவலின் சுவாரஸ்யமான விஷயங்களாய் இருக்கின்றன. துபாய் போலீஸின் கெட்டிக்காரத்தனங்கள் இந்த நாவலில் கூடுதல் கவனத்தோடு சொல்லப்பட்டு இருப்பது கொலை தொடர்புக்கு அப்பால் நாவலுக்கு ஒரு ப்ளஸ் பாயிண்ட்.
    Voir livre
  • Irandhukidantha Thendral - cover

    Irandhukidantha Thendral

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    வெளியூரில் வேலை செய்யும் குமரன் தன்னுடைய மனைவி பார்ப்பதற்காக இரவு நேர பஸ்ஸில் பயணம் செய்கிறான். இயற்கை உபாதைக்காக கீழே இறங்கி குப்பை மண்டி கிடந்த அந்த இடத்தில் அவன் கண்ட காட்சி அவனை எப்படிப்பட்ட சிக்கலில் மாட்ட வைக்கிறது என்பதை திகிலோடு சொல்வதுதான் இந்த கதை.
    Voir livre
  • Nalliravu Vaanavil - cover

    Nalliravu Vaanavil

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    Mysterious incidents happening in Delhi and Mylapore are very suspicious and dangerous. These incidents are to prevent a 'Bio-Truth' from being misused by corrupt forces. It is known that a rainbow cannot be formed in night, but this novel says otherwise. Listen to know how!
    
    சாஃப்ட்வேர் தொழில் நுட்பத்தில் ஒரு பயோட்ரூத் கண்டுபிடிக்கப்படுகிறது. அந்த உன்னதமான உண்மை, தீய சக்திகளின் கைகளுக்கு போய்விடக்கூடாதே என்பதற்காக  டெல்லியில் சில சம்பவங்களும், மயிலாப்பூரில் ஒரு சாதாரண நடுத்தரக்குடும்பத்தில் நடக்கும் சம்பவங்களும் விபரீதம் நிறைந்தவையாக உள்ளன. நள்ளிரவு வானவில் தோன்றுவது என்பது சாத்தியம் இல்லாத ஒன்று என்று எல்லோர்க்கும் தெரியும். ஆனால் இந்த நாவல் சாத்தியம் என்கிறது.
    எப்படி?  செவி கொடுத்து கேட்டுப் பாருங்கள்.
    Voir livre
  • Neeyum Bommai Naanum Bommai - cover

    Neeyum Bommai Naanum Bommai

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    ராஜலிங்கம் என்னும் மிக பெரிய செல்வந்தர் தன் மகளின் சிகிச்சைக்காக உச்சிமலை சித்தரிடம் செல்கிறார்.ஒரு தீவிரவாத கூட்டம் ராஜலிங்கத்தின் சொத்தினை கைப்பற்றுவதற்காக திட்டம் தீட்டுகிறார்கள். சித்தருக்கும் தீவிரவாத கூட்டத்திற்கும் என்ன சம்மந்தம், ராஜலிங்கத்தின் மகள் உயிர் பிழைத்தாளா? தீவிரவாதிகளின் திட்டம் நிறைவேறியதா? மிக விறு விறுப்பாகவும்,  ஸ்வாரஸ்யமாகவும் கதை நகர்கிறது.
    Voir livre
  • Manthira Viral - cover

    Manthira Viral

    Indra Soundarrajan

    • 0
    • 0
    • 0
    A child is born with the Midas Touch; everything it touches becomes gold! However, the child doesn't know this. Manthira Viral is the story of the people who compete to own the child and the mystery around it!
    
    ஒரு குழந்தையின் விரல்களே மந்திர விரல்கள். அதன் கைப்படுவதெல்லாம் பொன்னாகிவிடும். ஆனால் அதற்கோ தன் கரங்கள் மந்திர கரங்கள் என்பது தெரியாது. அது தான் குழந்தையாயிற்றே! அக்குழந்தையை சிலர் அடைய போடும் போட்டியும் அதன் முடிவுகளும் வினோதம்!
    Voir livre
  • Vivek In Tokyo - cover

    Vivek In Tokyo

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    நேர்மையான நீதிபதி ஸ்வாதி சிங்கிற்கு  பல இடையூறுகள்  வருகின்றன. தன் பதவியை விட்டு ஓய்வு பெற்று, தன் மகளின் சிகிச்சைக்காக டோக்கியோ செல்ல திட்டமிடுகிறார். அங்கு  இடையூறுகள்  எதுவும் ஏற்படாமல் இருப்பதற்காக ரகசிய உளவுத்துறை அதிகாரிகளான விவேக் மற்றும் விஷ்ணுவின் உதவியை நாடுகிறார். அதற்குப் பின் பல திடுக்கிடும் அதிர்ச்சி தகவல்கள் கிடைக்கின்றன. யார் உண்மையான குற்றவாளி என்று அறிந்து கொள்ள கேளுங்கள் விவேக் இன் டோக்கியோ!
    Voir livre