கண்துடைப்பு
தேவிபாலா
Verlag: Pocket Books
Beschreibung
அஞ்சலி கம்ப்யூட்டர் முன்பு அமர்ந்து பரபரப்பாக செயல்பட்டுக் கொண்டிருந்தாள்.செக்ஷன் ஆபீசர் வந்தார். பார்த்தார்.“அஞ்சலி! இன்னிக்கு அதிக நேரம் இருந்து பண்ணிடுங்க! நாளைக்குக் காலைல ஏழு மணிக்கே வந்துடுங்க! நாளைக்கும் முழு நாள் வேலை செஞ்சாத்தான் இது முடியும்! நாளைக்கு டெஸ்பாட்ச் பண்ணியாகணும்!”“சரிங்க சார்!”போன் அடித்தது! அஞ்சலி எடுத்தாள்! முருகன்தான்!“உன் ‘கால்’ பார்த்தேன். கூப்பிட்டியா அஞ்சலி!”“ஆமாங்க! ஒன்பது மணிவரைக்கும் ஆபீஸ்ல வேலை இருக்கு!”“நான் வந்து உன்னைக் கூட்டிட்டுப் போறேன்! கவலைப்படாதே! ஏதாவது சாப்பிடும்மா! ஒடம்பு கெட்ரப் போகுது!”“சரிங்க!”வைத்து விட்டு வேலையைத் தொடர,“அம்மா!”அஞ்சலி நிமிர்ந்தாள். அப்பா வீட்டு பழைய டிரைவர்!“அடடா! வாங்க சின்னசாமி! என்ன இவ்ளோ தூரம்?”“வெளில கார்ல பெரியம்மா இருக்காங்க! உங்களைப் பாக்க வந்திருக்காங்க!”“அம்மாவா? என்னைப் பாக்கவா?”அஞ்சலிக்கு குபீரென முகம் மலர்ந்தது.தற்காலிகமாக கம்ப்யூட்டரை நிறுத்தி விட்டு, வேகமாக வெளியே வந்தாள். கார் கம்பெனிக்குள் நின்றது!அஞ்சலி ஓடி வந்தாள்!அம்மா பின்கதவைத் திறந்தாள்!“அம்மா!”“உள்ளே வந்துடு அஞ்சலி!”அஞ்சலி காருக்குள் நுழைந்தாள்!“என்னம்மா?”“நீ எப்படீடா இருக்கே? இளைச்சு, கறுத்துப் போயிட்டியேம்மா?”“இல்லைம்மா! நான் நல்லாத்தான் இருக்கேன். நம்ம வீட்ல இருந்த மாதிரிதான் இருக்கேன். பணக்கார ரத்னவேலு மனைவிதான் இளைச்சிருக்கே!”அம்மா பேசவில்லை.“சொல்லும்மா! நாளை மறுநாள் உன் வீட்ல நடக்கப் போற உன் மகள் ஸ்நேகா நிச்சயதார்த்தத்துக்கு எல்லாரும் வந்து சேர்ந்தாச்சா?”“அஞ்சலி?”“என்னம்மா... ஊருக்கே தெரிஞ்சிருக்கு! மீடியா கவரேஜ் கூட இருக்கு! எனக்கு மட்டும் தெரியாதா?”அம்மா அஞ்சலியை ஆழமாகப் பார்த்தாள்!“அஞ்சலி! உன் தங்கச்சி நிச்சயத்துக்கு நீயும் வரணும்மா! உன்னை அழைக்கத்தான் வந்தேன்.”“அப்பா - ஸாரி - உன் புருஷனுக்கு சொல்லிட்டு வந்தியா? இல்லை, சொல்லாம திருட்டத்தனமா வந்தியா?”“அவர் சம்மதத்தோடதான் வந்தேன்மா!”“வீட்டுக்கு வந்து கூப்பிட்டா, என் புருஷனையும் கூப்பிடணும். அதை நீங்க யாரும் விரும்பலை. அதனால இங்கே வந்துட்டியாக்கும்?”“அஞ்சலி!”“ஸாரிம்மா! நான் வரப்போறதில்லை! முதலாவதா, ஆபீஸ்ல எனக்கு லீவு இல்லை. அடுத்தபடியா, அவர் வேண்டாம் - நான் மட்டும் போதும்னு நினைக்கறவங்க வீட்டுக்கு நான் வர விரும்பலை! ஸ்நேகாவுக்கு என் வாழ்த்துக்களை சொல்லிடும்மா!”“ஏம்மா எங்கிட்ட கோவப்படற? நீ எப்பவும் வேணும்னு நினைக்கற இந்தம்மாவை நீயும் புண்படுத்தினா எப்படி அஞ்சலி?”கல்யாணி அழுதாள்!“உன்னை நான் புண்படுத்தலைமா! நீங்க எல்லாரும் சேர்ந்து என்னை அவமானப்படுத்தறது உனக்குப் புரியலையா?”“அஞ்சலி! என்னைப் பேச விடு! முருகனைக் கூப்பிட எனக்கு விருப்பம்தான். எப்ப உன் புருஷன் ஆயாச்சோ, அப்பவே முருகனை என் மாப்ளையா நான் அங்கீகரிச்சிட்டேன். ஆனா நான் கூப்பிட்டு, அந்த வீட்டு விழாவுக்கு முருகன் வந்தா என்ன நடக்கும்னு உனக்குத் தெரியாதா அஞ்சலி?”“தெரியும்! அவரை உன் புருஷன் உட்பட எல்லாரும் அவமானப்படுத்துவாங்க!”“அது உன் கண் முன்னால நடக்கணுமா?”“அம்மா! அவமானம் அவருக்கு மட்டுமில்லை! நான் தனியா வந்தாலும், எனக்கும் அது நிகழும்! என்னையும் கேவலப்படுத்தாம விடுவாங்களா! சொல்லு!”கல்யாணி பேசவில்லை
