ஜில்லுனு ஒரு கப் இளமை!
தேவிபாலா
Verlag: Pocket Books
Beschreibung
டேவிட் வீட்டுக்கு வந்து விட்டான்.ஜோவை உட்கார வைத்து ஜென்னி பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தாள்.டேவிட் முகம் கழுவி உடை மாற்றிக் கொண்டு வந்தான்.“அம்மா பசிக்குது!”“சப்பாத்தி சூடா இருக்குடா ராஜா. சாப்பிடலாம்.”ஜோ ஓடி வந்து டேவிட்டின் கழுத்தைக் கட்டிக் கொண்டான்.“டாடி. வீக் எண்ட்ல கிஷ்கிந்தா போகலாமா?”“சரிடா கண்ணா.”“அடுத்த மாசம் எங்க ஸ்கூல்ல ஊட்டிக்கு எக்ஸ்கர்ஷன் கூட்டிட்டு போறாங்களாம். என்னை நீ அனுப்புவியா?”“போயிட்டு வாயேன்.”“மம்மி ‘வேண்டாம்’னு சொல்லுது.”“மம்மி கிட்ட நான் பேசறேன். சரியா?”“டாடி...! நான் சைக்கிள் கத்துக்கணும். என் வயசுப் பசங்க எல்லாரும் ஓட்டறாங்க!”ஜென்னி வெளியே வந்தாள்.“அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். நம்ம வீடு மெயின் ரோட்ல இருக்கு. ட்ராபிக் அதிகமாயிருக்கு. நீ சைக்கிளை சரியா ஓட்டலைனா, நான் மடில நெருப்பைக் கட்டிட்டு இருக்கணும்.”“பாருங்க டாடி, நீ போம்மா. டாடிதான் நல்லவங்க. எதுக்குமே தடை சொல்றதில்லை. நீ மோசம்.“சரி, சரி! சாப்பிட வா!”“எனக்கு வேண்டாம்.” ஜோ முகத்தைத் தூக்கி வைத்துக் கொள்ள,“வாடா! கோவத்தை சாப்பாட்டு மேலே காட்டாதே. நீ நெனச்சதெல்லாம் நடக்கும். வா. வர வர உனக்கு செல்லம் அதிகமாயிடுச்சு.”மூவரும் சாப்பிட உட்கார -வழக்கம் போல டேவிட்தான் ஜோவுக்கு ஊட்டினான்.பாதி சாப்பிடும் போதே ஜோவுக்கு உறக்கம் வந்து விட்டது. ஜென்னி கை கழுவி விட்டு, ஜோவை அணைத்துப் பிடித்து படுக்கைக்கு கொண்டு போனாள்.படுக்க வைத்தாள். உறங்கி விட்டான்.தளதளப்பான உடம்பு. குண்டுக் கன்னம். உருண்டை முழி. வசீகரமான சிரிப்பு. நல்ல பளிச் நிறம்.பார்த்தவுடன் அள்ளிக் கொண்டு போகும் அழகு.ஜோவை யார் பார்த்தாலும் விடமாட்டார்கள்.வெளியே வந்தாள். சமையல்கட்டை சீராக்கி, கதவைப் பூட்டி விட்டு வர இரவு பத்தாகி விட்டது.“இப்ப கோபமெல்லாம் அடங்கி தெளிவுக்கு வந்துட்டியா ஜென்னி?”“எனக்குக் கோபமே இல்லை. நான் தெளிவாகத்தான் இருக்கேன்.”“உன் எண்ணம் மாறிடுச்சா!”“இல்லீங்க. கலைக்கறதுல நான் தீர்மானமா இருக்கேன். முடிவே பண்ணிட்டேன்.”“என்ன பேசற நீ?”“இந்த அழகான ஜோதான் நமக்கு முதலும், கடைசியும். இவனுக்கு போட்டியா ஒருத்தர் வரக் கூடாது.ஜென்னி! என்ன பேசற? இது தப்பு. அவன் மேல நாம வச்ச பாசம் கடுகளவு கூடக் குறையப் போறதில்லை. அவனுக்கு துணைக்கு ஒரு தம்பியோ, தங்கையோ வரட்டுமே. ஏன் ஜென்னி தடுக்கற?”“இல்லீங்க. அது சரியா வராதுனு என் அடி நெஞ்சுல ஆழமா, அழுத்தமா படிஞ்சாச்சு.”“அந்த எண்ணத்தை நான் மாத்தறேன்!”“அந்த கடவுளே வந்தாலும் அதை மாற்ற முடியாது.”“நான் இத்தனை சொல்லியும், நீ பிடிவாதமா இருக்கறது நியாயமா ஜென்னி?”“என்னை மன்னிச்சிடுங்க! என் எண்ணம் மாறாது.”படக்கென எழுந்து விட்டான் டேவிட்
