Join us on a literary world trip!
Add this book to bookshelf
Grey
Write a new comment Default profile 50px
Grey
Subscribe to read the full book or read the first pages for free!
All characters reduced
இலக்கு! - cover

இலக்கு!

தேவிபாலா

Publisher: Pocket Books

  • 0
  • 0
  • 0

Summary

“என்னங்க! இப்ப வெளியூர்ப் பயணம் தப்போ? யோசனை பண்ணிப் பாருங்க!”அம்மா கேட்டாள்.“என்ன தப்பு அதுல? நமக்குனு ஒரு விருப்பம் இருக்கக் கூடாதா? நாம இந்த வீட்ல அடிமைகளா? நாம இல்லாம இருந்தாத் தாண்டி, அதுங்களுக்கு நம்ம அருமை புரியும்!”“நான் இல்லைனு சொல்லலீங்க! ஆனா...!“என்ன ஆனா?”“நமக்குள்ள சலிப்பு நியாயம்தான். வயசான காலத்துல பாரம் சுமக்க முடியலை. எல்லாம் சரிதான். ஆனா நம்மகிட்டேயும் கொஞ்சம் தப்பு இருக்குங்க!”“என்ன உளர்ற?”‘உளறலை! எல்லாத்துக்கும் ஆளை ஏற்பாடு பண்றதா ரெண்டு பேரும் சொல்றாங்க! நாம ஒப்புக்காம பிடிவாதம் பிடிக்கிறோம்!”“அதெல்லாம் சரிப்படாதுடி!”“ஏன்? நாமும் கஷ்டப்படக்கூடாது! பிரச்னையும் தீரணும்னு அவங்க சொல்றாங்க! அதை மறுத்தா, அவங்களுக்கும் பிரச்னைதானே?”“அவ வேலையை விடட்டுமே!”“என்ன பேசறீங்க? அத்தனை பெரிய சம்பளம் வாங்கும்போது வேலையை விட முடியுமா?”“நீ யார் பக்கம் பேசற?“கோவப்படாதீங்க! பணம் இருக்கும்போது ஆள் - அம்பாரினு அவங்களால நிலைமையை சமாளிச்சிட முடியும். கொஞ்சம் தடுமாறி அப்புறமா எழுந்து நின்னுடுவாங்க!”“நிக்கட்டும்!”“அப்புறமா நம்ம மேல வெறுப்பு வரும். இத்தனை நாள் பட்ட பாடு இல்லைனு ஆயிடும்! அவன் நமக்கு ஒரே பிள்ளை! அந்த மாதிரி ஒரு கசப்பை சம்பாதிக்கலாமா? சொல்லுங்க!”“அப்படீன்னா அவளைத் தொங்கணும்னு சொல்றியா?”“இதப்பாருங்க! இது குடும்பம். கோவமாவே பிரச்னைகளை அணுகினா, பூதாகரமா அது வெடிக்கும்! கொஞ்சம் சாந்தமா பார்த்தா, நல்லதில்லையா?”“நாளைக்கு நாம போறோம்!”“என் தம்பி வீட்டுக்குப் போயிட்டு, அங்கிருந்து பதிவு பண்றோமா?”“ஆமாண்டி! டிக்கெட் கிடைக்கும்! எனக்குப் போகணும்னு தோணியாச்சு! நீ வரலைனாலும் நான் போவேன்!”“சரி! உங்க பிடிவாதத்தை யாரால மாற்ற முடியும்? நானும் வர்றேன்!”மறுநாள் காலை எழுந்து சீக்கிரமே குளித்து அம்மா சமையலுக்கான ஏற்பாடுகளைச் செய்ய, சுமி வந்துவிட்டாள்.“அத்தே! நீங்க பயண ஏற்பாடுகளை கவனிங்க! நான் பாத்துக்கறேன்!”“நீ வேலைக்கு போக வேண்டாமா?”“நீங்க ஊருக்குப் போறீங்களே! நான் எப்படி போக முடியும்?”“ஒரு மாசம் லீவா?” கேட்டபடி அப்பா வர,“இல்லை மாமா! அதிகபட்சம் ரெண்டு நாள்! ஆட்களை ஏற்பாடு பண்ண அந்த அவகாசம் வேண்டாமா?”“ஓ... ஆளைப் போடறதா முடிவு பண்ணியாச்சா?”“வேற வழியில்லையே? நான் வேலைக்குப் போயாகணுமே!”“அப்பவும் நீ வேலையை விடமாட்டே?”“இல்லை மாமா!” ஒரே பதில் பளிச்சென!அம்மா பேக் செய்யத் தொடங்கினாள். பாபுவும் லீவு போட்டிருந்தான்.“அத்தே... உங்களுக்கு என்ன சாப்பாடா? டிபனா?”“எங்களுக்கு எதுவும் வேண்டாம்மா! வழில சாப்பிட்டுக்கறோம்!”“சரி மாமா!”அடுத்த ஒரு மணி நேரத்தில் இருவரும் பெட்டிகளோடு தயாராகிவிட்டார்கள்
Available since: 01/13/2024.
Print length: 92 pages.

Other books that might interest you

  • வாழ்வின் முதல் காதலா! நீதானா - Vaalvin Muthal Kadhalaa Neethaanaa - cover

    வாழ்வின் முதல் காதலா! நீதானா -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    “வெற்றி, நேத்து கிளப்ல பேசீட்டு இருக்கும் போது உனக்கு பொண்ணு பாக்கனுன்னு தான் ஒரு பே...ச்சுக்கு சொன்னேன். உடனே நம்ம ராஜி இருக்காளே, அவ பொண்ணு கூட ஏதோ மாடலிங் பண்ணீட்டு இருக்கான்னு... 
    நீ கூட நம்ப கம்பெனி விளம்பரத்துக்கு நடிக்க ஒரு வாய்ப்பு கொடுத்தியே.. அவ பேர் கூட...என்னம்மோ...” என்று நெற்றியை தட்டி தெரியாதது போல் இழுத்தவரிடம், 
    செய்தித் தாளைப் புரட்டியபடியே, “மிதுல்லா...” என்று அலட்டாமல் கூறியவனிடம், 
    “ஆஹ்... மிதுல்லா, நல்ல பேர். பாத்தியா ரெண்டு மூணு தடவை பாத்த உனக்கே அவளோட பேர் ஞாபகம் இருக்கு. அவ்வளவு சுலபமா அவளை மறக்க முடியுமா? எவ்ளோ அழகு அந்த பொண்ணு... 
    ம்ம்... வெற்றி, அவளுக்கு உன்னை கல்யாணம் பண்ண கேட்டாபா ராஜி. அழகு, அறிவு, திறமை எல்லாம் இருக்கு அவகிட்ட. 
    நம்ம வீட்டுக்கு ஏத்த பொண்ணு டா அவ. அதுவும் உனக்கு ரொம்ப பொருத்தமா இருப்பா. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. நீ என்ன சொல்ற வெற்றி?” என்று மகனின் முகத்தை ஆர்வமாக பார்த்து வினவினார் கற்பகாம்பாள். 
    செய்தித் தாளை மூடி மேஜையில் வைத்தவன், கற்பகாம்பாள் புறம் திரும்பி, “ம்ம்.. நல்ல அழகான பொண்ணு தான். நல்ல திறமையா நடிச்சா. ரொம்ப அறிவா பேசுனா தான். 
    ஆனா, ரொம்ப அதிகமா பேசுவாளே... அதுவுமில்லாம அவ யாருமில்லாத அநாதை இல்லை. நீங்க சொல்றது எதையும் அப்படியே கேக்கவும் மாட்டா. உங்களை எதித்து கேள்வி கேப்பா... 
    அவ இஷ்டத்துக்கு உங்களால இருக்க விட முடியுமா? முக்கியமா... உங்களுக்குத் தான் வாய் பேசாத முடியாத ஊமை பொண்ணு தானே மருமகளா வர பிடிக்கும்....” என்றவன் எழுந்து அவன் அணிந்திருந்த வெண்ணிற பருத்தி உடை பாக்கெட்டில் கைகளை நுழைத்த படி வினவ, 
    “என்னடா குத்தி பேசுறியா?” என்று கற்பகாம்பாள் வெற்றியை முறைக்க, 
    “என்னடா குத்தி பேசுறியா?” என்று கற்பகாம்பாள் வெற்றியை முறைக்க, 
    “இல்லையே நேரா தான் கேக்குறேன்.” என்றவன் பதில் தெளிவாக வந்து விழுந்தது.
    Show book
  • மகரந்தம் தாங்கும் மலரவள் - Magarantham Thangum Malaraval (Tamil Edition) - cover

    மகரந்தம் தாங்கும் மலரவள் -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    தந்தையின் உழைப்பில் வாழ விரும்பாமல் தன் வாழ்க்கையின் ஒவ்வொரு முக்கியமான கால கட்டத்திலும், தன்னுடைய முடிவையே பிரதானமாகக் கொண்டு அதில் வெற்றியும் பெற்றிருப்பவன் நளன். தனக்கு எது வேண்டும் என்று முடிவெடுக்கத் தெரியாத பேதையவள் நேத்ரா. 
    காலத்தின் போக்கில் இணைந்த இவர்களது காதல் மூன்றாம் நபரின் தலையீட்டால் என்னவானது? தெரிந்து கொள்ளப் படியுங்கள் மகரந்தம் தாங்கும் மலரவள்!   
     
    Show book
  • Meendum Jeeno - cover

    Meendum Jeeno

    Sujatha

    • 0
    • 0
    • 0
    முற்றிலும் விஞ்ஞானமயமாக்கப்பட்ட வேறொரு உலகம், அந்த உலகத்தை ஆளும் பொம்மை ராணி நிலா. அவளைப் பின்னாலிருந்து ஆட்டுவிக்கும் ரவி, மனோ இருவர் கையில் ஒட்டுமொத்த அதிகாரமும் இருக்க, இயந்திர நாயான ஜீனோ, நிலாவுக்கு உதவ தன் ஒட்டு மொத்தத் தந்திரங்களையும் மூளையையும் பிரயோகிக்கிறது. ஜீனோவுக்கும் எதிரிகளுக்கும் இடையில் நடக்கும் போரின் முடிவு என்ன என்பதுதான் இந்த நாவல்.
    Show book
  • உடன்பிறப்பு - Udanpirappu-Sirukathai - cover

    உடன்பிறப்பு -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    உடன்பிறப்பு
    Show book
  • இளநெஞ்சே வா - Ilanenjee vaa (Romantic Thriller) - cover

    இளநெஞ்சே வா - Ilanenjee vaa...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    மன்னா பயணிகள் இருக்கையிலிருந்து குதித்து பாண்டியாவை நோக்கிச் சென்றான். "அவளை வெளிய கூட்டி வா...", என்று தாழ்வான குரலில் கூறினான். ஆனால் அதுவே கட்டளையாக இருந்தது..... 
    பாண்டியா ஒரு கணம் தயங்கி, ராதிகா அமர்ந்திருந்த வேனின் பின்புறத்தைப் பார்த்தான். 
    அவள் கைகள் கட்டப்பட்டிருந்தன, அவள் முகம் வெளிரிப்போய்... ஆனால் கண்கள் சண்டைக்கு நிற்ப்பவள் போல் முறைத்துக் கொண்டு இருந்தது. "நாம இங்க தான் இருக்கனுமா மன்னா? இந்த இடத்தை பாத்தா எனக்கு பயமா இருக்கு... வேற எங்காவது...?" என்றான். 
    மன்னா புன்னகைத்து, குளிர்ந்த காற்றுக்கு எதிராக தனது மேல் சட்டையை இறுக்கமாக இழுத்தபடி, சுற்றிலும் பார்த்தான். முகத்தில் இனம் புரியா புன்னகை அரும்பியது. 
    "அது தான் நமக்கு வேணும், பாண்டியா. இது தான் சரியான இடம்... இங்க தான் யாரும் வரமாட்டாங்க. அவள் கத்துனாலும் அலறினாலும்... யாரும் என்னன்னு கேட்க மாட்டாங்க.. now move" என்றான் அதற்க்கு மேல் பேசாதே என்பது போல்... 
    ராதிகா அமைதியாக இருக்க முயன்றாலும், மன்னா அவனது வார்த்தைகளில் சற்று நிதானமாக இருந்தாள். அவளுடைய இதயத் துடிப்பின் வேகம் கூடியது. ஆனால் அவள் அழவில்லை. அவள் உடைந்து அழுவதை தன் முன்னே இருக்கும் இந்த ஆடவர்களுக்குக் காண்பிக்க அவள் விரும்பவில்லை.... 
    பாண்டியா வேனின் கதவை எச்சரிக்கையுடன் திறந்தான். ராதிகாவின் கை மற்றும் கால் கட்டுக்களை அவிழ்த்து விட்டான். 
    அவனது குரல் முன்பை விட மென்மையாக இருந்தது. "இறங்கி வா..." என்றான். 
    மணிக்கட்டில் சிவந்து போயிருந்த தடத்தைப் மெலிதாக தேய்த்துவிட்டாள். வாயில் இருந்த கட்டு அவிழ்க்கப்பட அப்போது தான் நன்றாக மூச்சே விட முடிந்தது அவளாள்.
    Show book
  • முற்றும் முதல் நீ எனக்கு - Mutrum Muthal Nee Enakku - cover

    முற்றும் முதல் நீ எனக்கு -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    வாழ்க்கையில் யாருடைய துணையும் இன்றி தன் லட்சியங்களை அடையத் துடிக்கும் நம் நாயகன் கதிர்முகிலனுக்கு தன் மனம் கவர்ந்த பெண் மயூரியால் தடைபடும் தன் இலட்சியத்தை, ஒருவர் மேல் ஒருவர் கொண்டுள்ள அதீத காதலால் எவ்வாறு முறியடித்தனர் என்பதை அறிய என்னோடு பயணியுங்கள் 'முற்றும் முதல் நீ எனக்கு'   
    Show book