சொந்தக்காரங்க!
தேவிபாலா
Verlag: Pocket Books
Beschreibung
வழக்கம் போல ஆபீசுக்கு வந்தான்! வேலைகள் நிறைய இருந்த காரணமாக, தீபாவுடன் பேச முடியவில்லை! தீபாவும் அவனை அழைக்கவில்லை!மாலை நாலுமணிக்கு தீபா போன் செய்தாள்!“சொல்லு தீபா!”“ஸாரி மனோ! அப்பாவுக்கு பீப்பி எக்கச்சக்கமா ஏறி, மயக்கம் போட்டு, காலைல நான் புறப்படற நேரத்துல அமளி துமளியாகி, அப்பாவைக் கொண்டு வந்து ஆஸ்பத்திரில சேர்த்திருக்கோம்!”“மை காட்! இதை ஏன் நீ காலைல சொல்லலை?”“இருந்த டென்ஷன்ல எதுவும் தோணலை மனோ!”“இப்ப அப்பா எப்படி இருக்கார்?”“ட்ரீட்மெண்ட் போயிட்டிருக்கு! எல்லா டெஸ்ட்டும் எடுத்திருக்காங்க! இந்த அளவுக்கு ரத்த அழுத்தம் இருந்தா, அது பல பெரிய விவகாரங்கள்ள கொண்டு போய் விடும்னு டாக்டர் எச்சரிக்கறார்.”“எந்த ஆஸ்பிட்டல் தீபா?”“காவேரி ஆஸ்பிட்டல்ல மனோ!”“நான் இப்பவே புறப்பட்டு வர்றேன் தீபா!”மனோ அவசரமாக புறப்பட்டான். ஏ.டி.எம்.மில் கொஞ்சம் பணமும் ட்ராப் செய்து கொண்டான்!அரை மணியில் வர, தீபாவின் அம்மா, தங்கை நிகிலா எல்லாரும் இருந்தார்கள். அப்பா ஐ.சி.யு.வில்!“வாங்க மனோ!அம்மாவுக்கு தீபா மனோவை அறிமுகப்படுத்த,வணங்கினான்!“உங்களை முதல் முதல்ல சந்திக்கறது ஆஸ்பத்திரில வச்சா? கஷ்டமா இருக்கு தம்பி!”“பரவால்லைம்மா! அப்பா இப்ப எப்படி இருக்கார் தீபா?”“மயக்கம் தெளியலை! இன்ஜெக்ஷன் போட்டிருக்காங்க! பீப்பி இப்பக் குறைஞ்சிருக்கு.”“ஏன் இந்த திடீர் ஏற்றம்?”“காரணம் நான்தான்.”“என்ன சொல்ற?”“கல்யாணப் பேச்சுத்தான். கைல பணமில்லை! நான் சொல்ற நிபந்தனைகளுக்கு பிள்ளை வீட்டார் கட்டுப்படணுமேனு கவலை! அப்பா கைல பணமில்லாத ஏக்கம், ஒரு குற்ற உணர்வா மாறியிருக்கு மனோ!”“எதுக்கு? மகள் சம்பாதிக்கறா! மனைவி மெஸ் நடத்தறாங்க! அவருக்கு என்ன குறைச்சல்?”“அப்படியில்லை மனோ! ஒரு மகன் இல்லை! பொண்ணுகளை நம்பி வாழ வேண்டியிருக்கே! என்ன எடுத்துச் சொன்னாலும் அவரோட தாழ்வு மனப்பான்மை போகலை! அது நோயை அதிமாக்குது!”“நான் பேசறேன் தீபா!”டாக்டர் வெளியே வந்தார்.“மயக்கம் தெளிஞ்சாச்சு! பயமில்லை! நீங்க போய்ப் பாக்கலாம்! கூட்டம் போட வேண்டாம். டென்ஷன் படுத்தாம பேசுங்க! நம்பிக்கை ஊட்டுங்க! அவருக்கு அதுதான் டானிக்! நாளைக்கு ஒரு நாள் இருந்துட்டு, மறுநாள் போகலாம்!சரி டாக்டர்!”“நீங்க மூணுபேரும் முதல்ல போங்க தீபா!”“சரி மனோ!”மூவரும் உள்ளே வந்தார்கள். பீறிட்ட அழுகையை அம்மா அடக்கிக் கொண்டாள்
