சொக்குதே மனம்!
தேவிபாலா
Publisher: Pocket Books
Summary
காலை நாலு மணிக்கு ராதாவின் அந்தத் தோழி வீட்டுக்கு வந்து அவளை அழைத்துக் கொண்டார்கள். கார் புறப்பட்டது! தோழி ராதாவை வாழ்த்தி அனுப்பினாள்!கார் திருவான்மியூர் கடந்ததும் பாலாவைத் திரும்பிப் பார்த்தாள் ராதா!“ஏன் உங்க முகத்துல சிரிப்பே இல்லை பாலா? பதட்டமா?”முன்னால் உட்கார்ந்திருந்த சரத் எல்லா விஷயங்களையும் ஒன்று விடாமல் சொன்னான்.“அய்யோ! மாட்டிப் போமே!”“நான் எதுக்கு இருக்கேன் ராதா? கவலைப்படாதீங்க! பாத்துக்கலாம்!”“சரத்! அவங்களும் முதல்ல பிள்ளையார் கோயிலுக்குத் தான் வருவாங்க.”“அவங்க எந்த நேரத்துல வந்து சேருவாங்கனு தெரியலை. தைரியமா இருங்க. எது நடந்தாலும் ஏத்துக்கத்தான் வேணும். புரியுதா?”பாண்டிச்சேரிக்கு ஆறரை மணிக்கெல்லாம் இவர்களது கார் போய் விட்டது. ஏற்பாடுகளை சரத் செய்து வைத்திருந்தான்.அங்குள்ள நண்பன் ஒருவனது அறைக்கு வந்து இருவரும் உடைகளை மாற்றி ஒப்பனை செய்து கொண்டு தயாராக இருந்தார்கள்.சரத் கோயிலுக்கு வந்து அய்யரைத் தயார் செய்து, ஏழரைக்குத் தொடங்கினால், எட்டுக்குள் முடித்து விட வேண்டும் என்று கேட்டுக் கொண்டான்.ஏழரைக்கு சரியாக இருவரும் உள்ளே வந்து உட்கார்ந்தார்கள். கோயிலில் கூட்டம் இருந்ததுஇருவருக்கும் பதட்டத்தில் உட்காரக்கூட முடியவில்லை. சரத் தைரியம் சொன்னாலும் வாசலையே பார்த்துக் கொண்டிருந்தான்.சரியாக எட்டு மணிக்கு பாலா தாலியைக் கட்டி விட்டான்.இனி உண்மை தெரிந்தாலும் போராட்டம் தான். தாலி ஏறுவது தடுக்கப்படவில்லை.மளமளவென சாமியைக் கும்பிட்டு விட்டு இருவரும் வெளியே வந்து விட, சற்று தூரத்தில் கார் வந்து நின்றது. அப்பா - அம்மா இறங்குவதை சரத் பார்த்து விட்டான்.இவர்களைக் காருக்குள் அழைத்து உட்கார வைத்தான். தானும் உட்கார்ந்து கொண்டான்.அவர்கள் தியானத்தை சுருக்கமாக முடித்துக் கொண்டு காருக்கு வந்து விட்டார்கள்.அப்பா - அம்மா ஆசிரமத்துக்குள் நுழைவது தெரிந்தது.சரத் பெருமூச்சு விட்டான்.“தப்பிச்சிட்டோம். இனி பயமில்லை. நல்ல ஓட்டல்ல டிபனுக்கு ஏற்பாடு செஞ்சிருக்கேன். போய் சாப்டுட்டு, நேரா பதிவு அலுவலகத்துக்கு போக வேண்டியதுதான்!”பாலா தலையசைத்தான்.மணவறையில் மாலை மாற்றுவது, தாலி கட்டுவது, பிள்ளையார் சன்னதியில் வணங்குவது என சகலத்துக்கும் சரத் புகைப்படம் எடுத்து வைத்திருந்தான். அப்பா - அம்மா ஆலயத்துக்குள் நுழைவதைக் கூட புகைப்பட மெடுத்து விட்டான்.மூவரும் வந்து சாப்பிட்டார்கள்.“இனி நீங்க பதட்டப்பட வேண்டாம். எல்லாமே சரியா நடக்கும். மத்யானம் ஒரு மணிக்குள்ளே சென்னைக்கு என் வீட்டுக்குப் போயிடலாம்.”காலை பத்தரை மணிக்கு பதிவு அலுவலகத்துக்கு மாலையோடு வந் தார்கள். ஏற்கெனவே ராதாவின் இன்னொரு தோழி தயாராக இருந்தாள்
