அந்தி மழை
தேவிபாலா
Maison d'édition: Pocket Books
Synopsis
கிருஷ்ணா காலையில் முனகியபடி படுத்திருக்க, யமுனா பதறி விட்டாள்.“என்னம்மா?”“வழக்கமான இடுப்பு வலி! வெளில சாப்ட்டுக்கோ யமுனா! நீ புறப்படு!”“நீ பட்டினி கிடப்பியா?”“நான் கொஞ்சம் மெதுவா எழுந்து செஞ்சுபேன்! இதுக்கெல்லாம் உன் லீவை வீணாக்காதேம்மா! வலி அதிகமிருந்தா நான் போன் பண்றேன்!”“சரிம்மா!” யமுனா அரை மனதுடன் புறப்பட்டாள்!ஆபீஸ் வந்து அரைமணியில் சேர்மன் அழைத்து விட்டார். உள்ளே வந்து வணங்கினாள்!“ஒக்காரு யமுனா! சிகாகோலேருந்து இப்பத்தான் தகவல் வந்தது! ஒரு புது ப்ராஜெக்ட் தொடங்க உத்தரவு குடுத்திருக்காங்க! பெரிய ப்ராஜெக்ட்! பெரிய தொகை ஒதுக்கியிருக்காங்க! எடுத்துச் செய்ய திறமையான அதிகாரிகள் வேணும்!”“சரிங்க சார்!”“உன்னையும் சென்னைல உள்ள ரமணியையும் அலாட் பண்ணியிருக்காங்க!”“ரெண்டு பேரும் சிகாகோ போகணுமா?”“இல்லைம்மா! சென்னைலதான் இதுக்கான சூழ்நிலை, ராமெட்டீரியல் இன்னம் பல சங்கதிகள் சரியா வரும். ரமணி அங்கியே இருக்கார். நீதான் சென்னைக்குப் போகணும் யமுனா!”“எத்தனை நாள்?”“நாளெல்லாம் இல்லை! ப்ராஜெக்ட் முடிய குறைஞ்சபட்சம் மூணு வருஷங்கள் ஆகும்! அதனால சென்னைக்கு உனக்கு மாற்றல் தரவேண்டியிருக்கும்!”யமுனா முகம் மாறியது!“என்னம்மா?”“அதில்லை! போய்த்தான் ஆகணுமா?”“உங்கம்மாவோட போய்டு! உனக்கு கம்பெனி வீடு, கார் எல்லாம் தரும்! இப்பவே உன் சம்பளம் உயர்ந்தாச்சு! தவிர, இன்சென்டிவ், அதுஇதுன்னு லட்சரூபாய் தாண்டுவே! ப்ராஜெக்ட் பிரமாதமா கம்ப்ளீட் ஆயிட்டா, உன்னைப் பிடிக்க முடியாது!”அவள் பேசவில்லை!“நீ படிச்சு, வேலைக்கு வந்த வரைக்கும் ஆளானது இந்த மும்பைலதான்! ஆனாலும் அடிப்படைல நீ தமிழ்நாட்டுப் பெண்தானேமா!”“ஆமாம் சார்!”“இதை நீ வீட்ல சொன்னா, உங்கம்மா ரொம்ப சந்தோஷப்படுவாங்க! தமிழ் நாட்டு வாழ்க்கையை அந்த பூமில பிறந்தவங்க வேண்டாம்னு சொல்லுவாங்களா?”“இல்லை சார்!”“அடுத்த வாரமே நீ புறப்பட வேண்டி வரும்! இங்கே எல்லாம் தயாராயிடும்! அங்கே போனதும், கம்பெனி வீட்டுக்கே உன்னைக் கூட்டிட்டுப் போயிடுவாங்க! எந்தக் கஷ்டமும் இல்லை!”“சரிங்க சார்!”யமுனா வெளியே வந்தாள்!‘இந்த மாற்றம் நல்லதா? கெட்டதா?’‘அம்மா இதை எப்படி எடுத்துக் கொள்வாள்?நிறையக் கேள்விகள் வந்தது!அவசரமாக ஒதுக்கி விட்டு, மற்ற வேலைகளை கவனிக்கத் தொடங்கி விட்டாள்!புறப்படவே இரவு ஏழரை ஆகி விட்டது!அம்மா வழக்கம் போல போன்!“வந்துட்டே இருக்கேன்மா!”அரைமணி நேரத்தில் வீடு திரும்பி ஒரு குளியலை போட்டு, நைட்டி அணிந்து யமுனா வர, அம்மா சூடான சப்பாத்தி, சப்ஜியை தயார் செய்திருந்தாள்!“சாப்பிடும்மா!”“நீயும் ஒக்காரும்மா!”“இருக்கட்டும்! உனக்கு சூடா போட்டுத் தர்றேன்! பசிக்கும்! இன்னிக்கு வேலை அதிகமா? முகம் சோர்வா இருக்கே யமுனா?”யமுனா பதிலேதும் சொல்லவில்லை
