Join us on a literary world trip!
Add this book to bookshelf
Grey
Write a new comment Default profile 50px
Grey
Subscribe to read the full book or read the first pages for free!
All characters reduced
அழகான ஆபத்து - cover

அழகான ஆபத்து

தேவிபாலா

Publisher: Pocket Books

  • 0
  • 0
  • 0

Summary

கல்யாணம் முடிந்த மறுநாளே குலதெய்வம் கோயில் வழிபாடு, இன்னும் சில கோயில்கள் என பிரசாத்தின் அம்மா தீர்மானித்து விட்டாள்!அதையாவது குறைந்த நபர்களோடு போனார்களா?இரண்டு வேன் வைத்துக் கொண்டு, இருபத்தி நான்கு பேர் கொண்ட கூட்டம் புறப்பட்டது!அதுவும், காலை மூணு மணிக்கே எழுந்து புளிசாதம், இட்லி, சப்பாத்தி, தயிர் சாதம் என ஒரு பட்டாளமே இறங்கி வேலை பார்த்தது!“அக்கா! மருமகளைக் கூப்பிட்டு வேலை குடு! நீதான் ஆளுக்கு தகுந்த மாதிரி வேலை தருவியே!”“இப்பத்தானே வாழ வந்திருக்கா! அவ எதுவும் செய்ய வேண்டாம். அவங்க சின்னக்குடும்பம்! பெரிய குடும்பத்துக்கு செஞ்சு பழக்கம் இருக்காது வசுமதி!”அந்த காமெடி பீஸ் கேட்கவில்லை!“பழக்கிவிடுக்கா!”அங்கே ஒரு முசுட்டு பெரியப்பா - அதிகபிரசங்கி பெரியப்பா, எதைப்பார்த்தாலும் பெருமூச்சு விடும் ஒரு அத்தை - செக்ஸ் ஜோக்கை கொஞ்சம் கூட லஜ்ஜையில்லாமல் சொல்லும் ஒரு மாமா... நல்லதும் கெட்டதுமாக கலந்த ஒரு பாட்டி... தவிர வாண்டுக் கூட்டங்கள்... அவர்களது மழலையை அதே குரலில் சொல்லிக்காட்டும் அக்காக்கள்... இந்த மாதிரி ஒரு கும்பல்!பிரசாத்துக்கு பயமாக இருந்தது!நேற்று ரத்திரி அவள் பேசிய பேச்சு, அவனை உறங்கவிடவில்லை! இதே நிலைமையில் இருந்தால், இவள் யாரிடம் என்ன பேசுவாளோ என்ற பதட்டம் இருந்தது“என்னடா? ராத்திரி தூங்கினியா?” ஒரு அக்கா புருஷன்!“மூஞ்சி வீங்கிக்கிடக்கு! காலைல கதவு திறந்ததும் குழந்தையோட வருவான்னு நெனச்சேன்!”இன்னொரு மாமா!“டேய்! உங்கம்மா பெத்தது மொத்தம் எட்டு! மிஞ்சினது நீங்க அஞ்சு பேர்!”“அந்தக் காலத்துல பொழுது போக்கே பலான விஷயம்தானே?”பெரியவர்கள், குழந்தைகள் இருக்கும் வீடு என பார்க்காமல் அப்பட்டமாக பேசும் உறவுகள்.நாற்பது கடந்த பெண்கள் வெட்கப்படுவதும், அவர்களை சேர்த்து வைத்து ஐம்பது கடந்த அரைக்கிழங்கள் தாம்பத்ய வர்ணனை தருவதும்... இரவு நேர ரெக்கார்ட் டான்ஸை மிஞ்சியது!வேனில் புறப்பட்டு போய் நாலு நாட்களில் பதினோரு கோயில்கள் என கதறக் கதற அடித்து, கொண்டு போன உணவு ஊசிப்போக, வெளியில் நல்ல ஓட்டலை பதிவு செய்யாமல் சத்திரம், சாவடி என தங்கிக்கொண்டு, நரகத்தை உணர்ந்தாள் சொப்னா.“டேய்! ரெண்டாவது நாள் பிரியக்கூடாது! தனி ரூம் குடுங்க!”இவர்களுக்கு மட்டும் மட்டமான லாட்ஜில் ஒரு கேவலமான அறை!ஜன்னல் வழியாக மூத்திர நாற்றம். மூச்சு முட்டியது!“24 பேர் இருக்கும் போது பெரிய ஓட்டல்கள்ள ரூம் போட்டா கட்டுப்படியாகாது! கொஞ்சம் சமாளி சொப்னா!”“எதுக்கு 24 பேர்? நமக்குக் கல்யாணமாகி, குல தெய்வ வழிபாட்டுக்கு நம்ம கூட உங்கப்பா, அம்மா மட்டும் போதாதா! இத்தனை பெரிய கும்பல் வேணுமா!”“எல்லாரும் பணத்தை ஷேர் பண்ணிப்பாங்க!”அவள் பேசவில்லை!“நேத்திக்கே நமக்கு எதுவும் நடக்கலை!“வேண்டாம். அதுக்கொரு வசதியும், மனசந்தோஷமும் வேணும் பிரசாத்! இத்தனை நாற்றங்களோட, ஒரு தாம்பத்யம் தொடங்க வேண்டாமே! பிளீஸ்!”மறுநாள் ஒரு பெரிய கோயில் வழிபாடு!அந்தக்குளத்தில் குளித்தால்தான் விசேஷமாம்.அது குலதெய்வம் கோயில்!ஆண், பெண்களுக்கு தனித்தனி படித்துறை!ஆனாலும் குளம் திசை வரும் போது சகலமும் கலக்கும் மையப்பகுதி!“அய்யோ! இங்கே எப்படி அத்தே குளிக்கிறது!”அந்த காமெடி பீஸ் வந்து விட்டது
Available since: 01/16/2024.
Print length: 83 pages.

Other books that might interest you

  • நேசம் மறவாத நெஞ்சமடி - Nesam Maravaatha Nenjamadi - cover

    நேசம் மறவாத நெஞ்சமடி - Nesam...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    "அதை இன்னும் கொஞ்சம் முன்னமே சொன்னா தான் என்னவாம்! கை வலிக்கிது..." என்று வாய்க்குள் முணுமுணுத்தாள்.  
    மீனாக்ஷியின் கூற்றில், அவளைப் பார்த்தபடியே வீரா மெலிதாக சிரித்து சிகாரைத் தரையில் எரிந்து தன் ஷூ காலால் மிதித்து அதன் நெருப்பை அணைத்தான். ஆனால் மீனக்ஷியால் அவனுள் மூண்ட நெருப்பு என்னவோ அணைய மறுத்தது. 
     "அடுத்த முறை, முட்டாள்களின் பேச்சைக் கேட்காத அளவுக்கு புத்திசாலித்தனமா நடந்துக்கோ..." என்று கூறியவன் குரலில் கிண்டல் நிறைந்திருந்தது. 
    அவன் கூற்றை சரியாக புரிந்து கொள்ளவே சில நொடிகள் பிடித்தது மீனாக்ஷிக்கு. 
    மீனாக்ஷி பதிலளிப்பதற்கு முன்பு, வீரா தனது பைக்கின் மீது காலை சுழற்றி அமர்ந்தவன் என்ஜினைத் ஆன் செய்தான். 
    வாகனத்தை கிளப்பும் முன், “வெல்கம் டு திஸ் காலேஜ்” என்று கூறியவன் கண்கள் அவள் மீது நிலைத்திருக்க அவள் பதிலை எதிர்பாராமல் வாகன இயந்திரத்தின் ஒலியுடன் சென்றுவிட்டான் வீரா.  
    மீனாக்ஷியின் இதயத் துடிப்பின் வேகம் கூடியது. அவள், வீரா... அவன் மேல் கோபப்படுகிறாளா, சங்கடப்படுகிறாளா அல்லது அவன் யாரென்று அறிய ஆர்வமாக இருக்கிறாளா? என்பதை அவளால் தீர்மானிக்க முடியவில்லை. 
    ஆனால் ஒரு விஷயம் மட்டும் உறுதியாக இருந்தது. வீரா அவளால் அவள் மனதில், என்றும் மறக்க முடியாத எண்ணத்தை விட்டுச் சென்றிருந்தான்... 
    “ஹே நிறுத்து நிறுத்து... அதென்ன? முதல் முதல்ல ஒரு பொண்ணை பாக்குற ஆண், இப்படியா சிகிரெட்டை ஊதிக்கிட்டு... வெறிச்சு வெறிச்சு பாப்பான்? இவனுங்களை தானே உங்களை மாதிரி பொண்ணுங்களுக்கெல்லாம் பிடிக்கிறது? அவனை ஹீரோன்னு வேற சொல்லிக்கிறீங்க... 
    என்னால இந்த மாதிரி இர்ரிடேட்டிங் ஸ்டோரி எல்லாம் கேக்க முடியாது. ச்சா... நான்சென்ஸ்...” என்று வர்மா மீனாக்ஷியை பொரிந்து தள்ளி கதையை பாதியில் இடை வெட்டினான்.
    Show book
  • Meendum Jeeno - cover

    Meendum Jeeno

    Sujatha

    • 0
    • 0
    • 0
    முற்றிலும் விஞ்ஞானமயமாக்கப்பட்ட வேறொரு உலகம், அந்த உலகத்தை ஆளும் பொம்மை ராணி நிலா. அவளைப் பின்னாலிருந்து ஆட்டுவிக்கும் ரவி, மனோ இருவர் கையில் ஒட்டுமொத்த அதிகாரமும் இருக்க, இயந்திர நாயான ஜீனோ, நிலாவுக்கு உதவ தன் ஒட்டு மொத்தத் தந்திரங்களையும் மூளையையும் பிரயோகிக்கிறது. ஜீனோவுக்கும் எதிரிகளுக்கும் இடையில் நடக்கும் போரின் முடிவு என்ன என்பதுதான் இந்த நாவல்.
    Show book
  • மகரந்தம் தாங்கும் மலரவள் - Magarantham Thangum Malaraval (Tamil Edition) - cover

    மகரந்தம் தாங்கும் மலரவள் -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    தந்தையின் உழைப்பில் வாழ விரும்பாமல் தன் வாழ்க்கையின் ஒவ்வொரு முக்கியமான கால கட்டத்திலும், தன்னுடைய முடிவையே பிரதானமாகக் கொண்டு அதில் வெற்றியும் பெற்றிருப்பவன் நளன். தனக்கு எது வேண்டும் என்று முடிவெடுக்கத் தெரியாத பேதையவள் நேத்ரா. 
    காலத்தின் போக்கில் இணைந்த இவர்களது காதல் மூன்றாம் நபரின் தலையீட்டால் என்னவானது? தெரிந்து கொள்ளப் படியுங்கள் மகரந்தம் தாங்கும் மலரவள்!   
     
    Show book
  • நாணலே நங்கையானால் - Naanale Nangaiyaanaal? - cover

    நாணலே நங்கையானால் - Naanale...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுள் ஒன்றை வைத்து, அழகான காதல் கதையின் மூலம் வாசிப்பவர்களுக்கு சுவாரஸ்யம் ஊட்டும் வகையில், பலவித திடீர் திருப்பங்களுடனும் சுவாரஸ்யங்களுடனும் கதையை எளிமையாக விளக்க முயன்றிருக்கிறேன். 
    Show book
  • நெஞ்சம் உன்னைக் கெஞ்சும் - Nenjam Unnai Kenjum - cover

    நெஞ்சம் உன்னைக் கெஞ்சும் -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    கண்களில் கண்ணீர் வழிந்தோடியது. "எனக்கு... என்னை உங்ககிட்ட இருந்து காப்பாத்திக்க வேற வழி தெரியலை... என்னை மன்னிச்சிடுங்க...” என்றாள் மீரா. “பின்ன ஏன் இந்தக் கண்ணீர்?” விக்ரம் குரல் சந்தேகமாக வெளி வந்தது. “அது... தெரியலை! நீங்க... உங்க கையில ரத்தத்தைப் பாத்ததும்.... சாரி, நான் திரும்பவும் சொல்றேன், உங்களை நான் காயப்படுத்த நினைக்கலை... ஆனா, நீங்க என்கிட்டே நடந்துகிட்ட முறை ரொம்ப தப்பு... ஒரு பொண்ணோட அனுமதி இல்லாம அவளை அடைய நினைக்கிறது, தப்பு. அது அவளோட கணவனாவே இருந்தாலும் சரி....” என்றாள் தலை குனிந்தபடி. 
     விக்ரம் மெதுவாக மூச்சை உள்ளே இழுத்து, காயம் இல்லாத தன் இடக்கையை வைத்து மீராவின் நாடி பிடித்து உயர்த்தி தன்னைப் பார்க்கச் செய்தவன், "அப்படின்னா நீ ஏன் இன்னும் இங்கேயே இருக்க? போயிடு... போ மீரா, என்கிட்டே இருந்து தப்பிச்சு போயிடு... திரும்ப என் கண் முன்னாடி வராத. 
     இந்த மாதிரி ஒரு சந்தர்ப்பத்தை நீ பயன் படுத்திக்கலேன்னா... உன்னால எப்பவுமே என்கிட்டே இருந்து தப்பிக்க முடியாது... இப்போ நான் சொன்ன இந்த வார்த்தை... இதை இந்த ஒரு முறைக்கு மேல என் கிட்ட இருந்து நீ எதிர்பாக்க முடியாது. போ... போயிடு” என்றான் குரலில் சற்றே கடுமை கூட்டி.... 
     மீராவின் முகம் மெல்ல புன்னகையில் விகசித்தது. “நிஜம்மாவா நான் போகலாமா? திரும்ப என்னை தொந்தரவு செய்ய மாட்டீங்களே?” என்றாள் நம்ப முடியாத பாவனையில். “ம்… ஹ்ம்ம்..... கண்டிப்பா... மாட்டேன்” என்றான் விக்ரமாதித்யன்.
    Show book
  • Maharadhan - மகாரதன் - cover

    Maharadhan - மகாரதன்

    Siraa

    • 0
    • 0
    • 0
    மகாரதன் வரலாற்று நாவல் என்றாலே ஏதாவது ஒரு மன்னனின் வீர சாகசங்களையோ அல்லது அவன் காலத்தில் நடந்த நிகழ்வுகளையோ முன்னிலைப்படுத்திப் படைப்பதே வழக்கம். ஆனால் அதிலிருந்து மாறுபட்டு, ஒரு போர் என்றால் அதற்கு முன் மன்னர்கள் என்னவெல்லாம் செய்திருப்பார்கள், எப்பேர்ப்பட்ட நடவடிக்கைகளை எல்லாம் மேற்கொண்டிருப்பார்கள் என்று இந்த நாவல் நமக்கு அறிமுகம் செய்கிறது. பல்லவ மன்னர்களில் ஆகச் சிறந்த மன்னனாகவும் அதி சிறந்த வீரனாகவும் விளங்கிய இரண்டாம் நந்திவர்மன் காலத்தைக் கதைக்களமாகக் கொண்டு, சில கல்வெட்டுத் தரவுகளையும் வரலாற்றுக் குறிப்புகளையும் மையமாக வைத்து, அந்தக் காலத்து நிகழ்வுகளை நம் கண் முன்னால் கொண்டு வருகிறது இந்தப் புதினம். கடந்த கால நிகழ்வுகளை ஆராய்ந்து, கிடைக்கப் பெற்ற ஆவணங்களைச் சரிபார்த்து, அதில் கற்பனையைப் புகுத்தி நாவலாகப் படைப்பது மிகப்பெரிய சவால். அதனைத் திறம்படச் செய்திருக்கிறார் எழுத்தாளர் சிரா. எழுத்தாளர் சிரா எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் மகாரதன் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்  
    an Aurality Production
    Show book