Begleiten Sie uns auf eine literarische Weltreise!
Buch zum Bücherregal hinzufügen
Grey
Einen neuen Kommentar schreiben Default profile 50px
Grey
Jetzt das ganze Buch im Abo oder die ersten Seiten gratis lesen!
All characters reduced
பூவும் பொட்டும்! - cover

பூவும் பொட்டும்!

தோழர் கா.கருமலையப்பன்

Verlag: Pocket Books

  • 0
  • 0
  • 0

Beschreibung

கெட்டி மேளம் முழங்க, மணமகளின் கழுத்தில் மாங்கல்யத்தைக் கட்டினான் மணமகன். ஊரும் உறவும் அட்சதை தூவி வாழ்த்த, முன் இருக்கையில் அமர்ந்திருந்த சிவசங்கரியும் மனோகரும் தங்கள் கையில் இருந்த  அட்சதைகளைத் தூவினர்.
 
“கடவுளே! மணமக்கள் கடைசிவரை சந்தோஷமா வாழணும்.”
 
மனதிற்குள் வேண்டிக்கொண்டே, எழுந்து நின்றாள் சிவசங்கரி.
 
“மனோ! போலாமா?” 
 
“கிப்ட் கொடுக்கணுமே. வாக்கா, கொடுத்திட்டு வந்திடலாம்” - என்றவாறே மனோகரும் எழுந்து கொண்டான். 
 
“நானுமா? வேண்டாம், மனோ. நான் வெளியே வெயிட் பண்றேன். நீ போய்க் கொடுத்திட்டு வந்திடு.” 
 
“ஏங்க்கா?”
 
“ம்ப்ச்! வேண்டாம்னா விடு.” 
 
“சரி வா. பொண்ணோட அப்பா கையிலே கொடுத்துட்டுப் போகலாம்.” கையிலிருந்த பரிசுப் பொட்டலத்தோடு மனோகர் நகர, தனது பட்டுப் புடவையை நீவிவிட்டுக் கொண்டவாறே தம்பியைப் பின் தொடர்ந்தாள் சிவசங்கரி.
 
அக்காள் தம்பி இருவரும் மருத்துவர்கள். சிவசங்கரி, பெண்கள் நலச் சிறப்பு மருத்துவர். மேலும் சர்க்கரை வியாதிக்கான ஆராய்ச்சிப் படிப்பைப் படித்துக் கொண்டிருப்பவள்.
 
மனோகர் குழந்தைகள் நல மருத்துவர். இளம் வயதிலேயே கைராசியான மருத்துவர் என்ற பட்டம் பெற்றவன். புன்னகையும் கனிவான பேச்சும் இவனது ப்ளஸ் பாயிண்ட்.  சிவசங்கரி, தனது மயில் கழுத்து நிறப் பட்டுப் புடவையைக் குனிந்து சரி செய்துகொண்டே வர, எதிரே வந்தவன் மீது மோதி நின்றாள். 
 
“ஐயாம் ஸோ ஸாரி.” - பதட்டமாய்க் கேட்டவாறே நிமிர்ந்தவளின் முகம் கருத்தது. எதிரே புன்னகையோடு நின்றிருந்தான் டாக்டர் பிரபாகர்.
 
“இவனா? இங்கேயா? ச்சே! இவன் முகத்தில் விழிக்கும்படி ஆயிற்றே!” - கடுப்பாய் விலகி நடக்க முயன்றவளைப் பிரபாகரின் குரல் தடுத்து நிறுத்தியது.
 
“ஹாய் சங்கரி! எப்படி இருக்கே?” - கேட்டவனை ஆத்திரமாய் முறைத்துவிட்டு விலகிச் சென்றாள். 
 
“இடியட்! எந்த முகத்தை வைத்துக் கொண்டு பேசுகிறான். நான்சென்ஸ்!” - முனகியவாறே வந்த சகோதரியைத் திரும்பிப் பார்த்தான் தம்பி. 
 
“அக்கா! என்னாச்சு?”
 
“ஒன்னுமில்ல...”
 
“இல்ல... ஏதோ இருக்கு. இப்ப யாரைத் திட்டினே?”
 
“ம்... அந்த இடியட்டைத்தான்.” - கடுப்பாய்ச் சொன்னாள். 
 
“எந்த இடியட்டை?”
 
“அதான்... அந்தப் பிரபாகர்.”
 
“அட! பிரபாகர்கூட மேரேஜுக்கு வந்திருக்காரா? நான் பார்க்கலியே!”
 
“நீ வேற கடுப்பேத்தாதே.” 
 
“நீ ஏங்க்கா டென்ஷனாகுறே. இது நம்ம சக டாக்டர் வீட்டுக் கல்யாணம். பிரபாகர் அவர் வீட்டுக்கு வர்றதுல உனக்கு என்ன கோபம்?”
 
“கல்யாணத்துக்கு வந்தவன் எங்கிட்ட ஏன் பேசணும்?”
 
“என்னக்கா நீ? உன்னோட க்ரூப் ஸ்டூடண்ட். ஒரே ஹாஸ்பிடல்ல வேலை செய்திருக்கீங்க. அந்தப் பழக்கத்தில பேசியிருக்கலாம்.” 
 
“புரியாமப் பேசாதடா. அவனைப் பார்த்தாலே எனக்குப் பிடிக்கல்ல.” - சிவசங்கரியின் குரலில் தொனித்த வெறுப்பு, அவனை மேலே பேசவிடாமல் தடுத்தது.
 
அமைதியாகச் சென்றவன், மணப் பெண்ணின் தகப்பனாரைக் கண்டதும் நின்றான். முகமலர்ச்சியோடு  அவர்களை நெருங்கினார் பத்ரிநாத். 
 
“வாங்க. சாப்பிட்டீங்களா?”
 
“இல்ல. ஹாஸ்பிடல்ல கொஞ்சம் வேலை இருக்கு. கிளம்பறோம்.”
 
“என்ன மனோ நீங்க? நமக்கு என்னிக்குத்தான் வேலை இல்ல. இன்னிக்குக் கண்டிப்பாச் சாப்பிட்டுட்டுத்தான் போகணும். வாங்க என்கூட.” - கைப்பற்றி அழைத்தவரிடம் நாசூக்காக மறுத்தாள் சிவசங்கரி.
Verfügbar seit: 03.02.2024.
Drucklänge: 228 Seiten.

Weitere Bücher, die Sie mögen werden

  • இளநெஞ்சே வா - Ilanenjee vaa (Romantic Thriller) - cover

    இளநெஞ்சே வா - Ilanenjee vaa...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    மன்னா பயணிகள் இருக்கையிலிருந்து குதித்து பாண்டியாவை நோக்கிச் சென்றான். "அவளை வெளிய கூட்டி வா...", என்று தாழ்வான குரலில் கூறினான். ஆனால் அதுவே கட்டளையாக இருந்தது..... 
    பாண்டியா ஒரு கணம் தயங்கி, ராதிகா அமர்ந்திருந்த வேனின் பின்புறத்தைப் பார்த்தான். 
    அவள் கைகள் கட்டப்பட்டிருந்தன, அவள் முகம் வெளிரிப்போய்... ஆனால் கண்கள் சண்டைக்கு நிற்ப்பவள் போல் முறைத்துக் கொண்டு இருந்தது. "நாம இங்க தான் இருக்கனுமா மன்னா? இந்த இடத்தை பாத்தா எனக்கு பயமா இருக்கு... வேற எங்காவது...?" என்றான். 
    மன்னா புன்னகைத்து, குளிர்ந்த காற்றுக்கு எதிராக தனது மேல் சட்டையை இறுக்கமாக இழுத்தபடி, சுற்றிலும் பார்த்தான். முகத்தில் இனம் புரியா புன்னகை அரும்பியது. 
    "அது தான் நமக்கு வேணும், பாண்டியா. இது தான் சரியான இடம்... இங்க தான் யாரும் வரமாட்டாங்க. அவள் கத்துனாலும் அலறினாலும்... யாரும் என்னன்னு கேட்க மாட்டாங்க.. now move" என்றான் அதற்க்கு மேல் பேசாதே என்பது போல்... 
    ராதிகா அமைதியாக இருக்க முயன்றாலும், மன்னா அவனது வார்த்தைகளில் சற்று நிதானமாக இருந்தாள். அவளுடைய இதயத் துடிப்பின் வேகம் கூடியது. ஆனால் அவள் அழவில்லை. அவள் உடைந்து அழுவதை தன் முன்னே இருக்கும் இந்த ஆடவர்களுக்குக் காண்பிக்க அவள் விரும்பவில்லை.... 
    பாண்டியா வேனின் கதவை எச்சரிக்கையுடன் திறந்தான். ராதிகாவின் கை மற்றும் கால் கட்டுக்களை அவிழ்த்து விட்டான். 
    அவனது குரல் முன்பை விட மென்மையாக இருந்தது. "இறங்கி வா..." என்றான். 
    மணிக்கட்டில் சிவந்து போயிருந்த தடத்தைப் மெலிதாக தேய்த்துவிட்டாள். வாயில் இருந்த கட்டு அவிழ்க்கப்பட அப்போது தான் நன்றாக மூச்சே விட முடிந்தது அவளாள்.
    Zum Buch
  • நாணலே நங்கையானால் - Naanale Nangaiyaanaal? - cover

    நாணலே நங்கையானால் - Naanale...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுள் ஒன்றை வைத்து, அழகான காதல் கதையின் மூலம் வாசிப்பவர்களுக்கு சுவாரஸ்யம் ஊட்டும் வகையில், பலவித திடீர் திருப்பங்களுடனும் சுவாரஸ்யங்களுடனும் கதையை எளிமையாக விளக்க முயன்றிருக்கிறேன். 
    Zum Buch
  • மகரந்தம் தாங்கும் மலரவள் - Magarantham Thangum Malaraval (Tamil Edition) - cover

    மகரந்தம் தாங்கும் மலரவள் -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    தந்தையின் உழைப்பில் வாழ விரும்பாமல் தன் வாழ்க்கையின் ஒவ்வொரு முக்கியமான கால கட்டத்திலும், தன்னுடைய முடிவையே பிரதானமாகக் கொண்டு அதில் வெற்றியும் பெற்றிருப்பவன் நளன். தனக்கு எது வேண்டும் என்று முடிவெடுக்கத் தெரியாத பேதையவள் நேத்ரா. 
    காலத்தின் போக்கில் இணைந்த இவர்களது காதல் மூன்றாம் நபரின் தலையீட்டால் என்னவானது? தெரிந்து கொள்ளப் படியுங்கள் மகரந்தம் தாங்கும் மலரவள்!   
     
    Zum Buch
  • Meendum Jeeno - cover

    Meendum Jeeno

    Sujatha

    • 0
    • 0
    • 0
    முற்றிலும் விஞ்ஞானமயமாக்கப்பட்ட வேறொரு உலகம், அந்த உலகத்தை ஆளும் பொம்மை ராணி நிலா. அவளைப் பின்னாலிருந்து ஆட்டுவிக்கும் ரவி, மனோ இருவர் கையில் ஒட்டுமொத்த அதிகாரமும் இருக்க, இயந்திர நாயான ஜீனோ, நிலாவுக்கு உதவ தன் ஒட்டு மொத்தத் தந்திரங்களையும் மூளையையும் பிரயோகிக்கிறது. ஜீனோவுக்கும் எதிரிகளுக்கும் இடையில் நடக்கும் போரின் முடிவு என்ன என்பதுதான் இந்த நாவல்.
    Zum Buch
  • Idamum Valamum Alaivuru Sirusudar - இடமும் வலமும் அலைவுறு சிறுசுடர் - cover

    Idamum Valamum Alaivuru...

    B.R. Mahadevan

    • 0
    • 0
    • 0
    Auto fiction Novel: இடமும் வலமும் அலைவுறு சிறுசுடர் A proud Aurality tamil audio book production ebook by Swasam Publications. Download FREE Aurality app now on play store and or iphone ios store தீவிரமான கருத்துகளும் சுயமான சிந்தனையும் கொண்ட இளைஞன் தனது கனவுலகைத் தேடி மேற்கொள்ளும் அலைச்சலே இந்த நாவல். மதத் தத்துவங்கள் அவனைத் துரத்துகின்றன. அரசியல் கொள்கைகள் அவனைக் குழப்புகின்றன. மாயமான் வேட்டையில் நிதர்சனத்தைப் புரிந்துகொண்டு, இதுவே நம் பாதை என்று அவன் ஒரு முடிவுக்கு வரும்போது காத்திருக்கிறது இன்னொரு மாயமான். எல்லாவற்றையும் கேள்விகளால் எதிர்கொள்ளும் ஓர் இளைஞனின் பேரலைச்சலை ரத்தமும் சதையுமாக, கொஞ்சம் புனைவுடன் நிறைய உண்மைகளுடன் எழுதி இருக்கிறார் B.R.மகாதேவன். அரசியல் என்ற பெயரிலும், ஆன்மிகம் என்ற பெயரிலும், மதம் என்ற பெயரிலும் இந்தச் சமூகம் தனக்குக் கற்பிக்கும் அனைத்தையும் கேள்விகளால் அடித்து நொறுக்கி தன் அடுத்த பயணத்துக்குக் காத்திருக்கும் இந்த இளைஞன், நிச்சயம் உங்களை அசைத்துப் பார்ப்பான். எழுத்தாளர் B.R.மகாதேவன் எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்
    Zum Buch
  • Maharadhan - மகாரதன் - cover

    Maharadhan - மகாரதன்

    Siraa

    • 0
    • 0
    • 0
    மகாரதன் வரலாற்று நாவல் என்றாலே ஏதாவது ஒரு மன்னனின் வீர சாகசங்களையோ அல்லது அவன் காலத்தில் நடந்த நிகழ்வுகளையோ முன்னிலைப்படுத்திப் படைப்பதே வழக்கம். ஆனால் அதிலிருந்து மாறுபட்டு, ஒரு போர் என்றால் அதற்கு முன் மன்னர்கள் என்னவெல்லாம் செய்திருப்பார்கள், எப்பேர்ப்பட்ட நடவடிக்கைகளை எல்லாம் மேற்கொண்டிருப்பார்கள் என்று இந்த நாவல் நமக்கு அறிமுகம் செய்கிறது. பல்லவ மன்னர்களில் ஆகச் சிறந்த மன்னனாகவும் அதி சிறந்த வீரனாகவும் விளங்கிய இரண்டாம் நந்திவர்மன் காலத்தைக் கதைக்களமாகக் கொண்டு, சில கல்வெட்டுத் தரவுகளையும் வரலாற்றுக் குறிப்புகளையும் மையமாக வைத்து, அந்தக் காலத்து நிகழ்வுகளை நம் கண் முன்னால் கொண்டு வருகிறது இந்தப் புதினம். கடந்த கால நிகழ்வுகளை ஆராய்ந்து, கிடைக்கப் பெற்ற ஆவணங்களைச் சரிபார்த்து, அதில் கற்பனையைப் புகுத்தி நாவலாகப் படைப்பது மிகப்பெரிய சவால். அதனைத் திறம்படச் செய்திருக்கிறார் எழுத்தாளர் சிரா. எழுத்தாளர் சிரா எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் மகாரதன் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்  
    an Aurality Production
    Zum Buch