Rejoignez-nous pour un voyage dans le monde des livres!
Ajouter ce livre à l'électronique
Grey
Ecrivez un nouveau commentaire Default profile 50px
Grey
Abonnez-vous pour lire le livre complet ou lisez les premières pages gratuitement!
All characters reduced
விவேக்கின் 1000 நிமிஷங்கள் - cover

விவேக்கின் 1000 நிமிஷங்கள்

ரமணிசந்திரன்

Maison d'édition: Pocket Books

  • 0
  • 0
  • 0

Synopsis

ஏர்ஃபோர்ட் வழியில் - ரோட்டோரமாய் மரங்களுக்கு மத்தியில் மறைந்து நின்றிருந்தது. அந்த ஜோர்டான் மெர்ஸிடிஸ் 500 SPL மாடல் ஜீப். இந்த நூற்றாண்டின் அதிவேக ஜீப் உச்சபட்ச வேகம் நூற்றி ஐம்பது கிலோமீட்டர்.ஜீப்புக்குள் அவனும் அவளும் காத்திருந்தார்கள்.அவன்? - மனோஅவள்? - தேவி.இருபத்தைந்து வயதான மனோ - ஒரு ராயல் ஷுட்டர். கடந்த இரண்டு வருஷ காலமாய் இந்தியாவில் நடந்த துப்பாக்கி சுடும் போட்டிகளில் கலந்து கொண்டு பாயிண்ட்டுகளை குவித்து ராயல் ஷுட்டர் பெயரை வாங்கிக் கொண்டவன். எந்த ரக துப்பாக்கியானாலும் சரி... அது மனோவின் கைகளுக்கு வந்து விட்டால், அவன் சொன்னபடி தான் கேட்கும் அவன் ‘எய்ம்’ பண்ணுகிற இடத்தில்தான் தோட்டாவை அனுப்பும். பிடிவாதமான உயரம் ‘வினோத் கன்னா’வை ஞாபகம் படுத்துகிற இறுக்கமான முகம்.இருப்த்தேழு வயதான தேவி, துப்பாக்கி சுடுவதில் பயிற்சி பெறுவதற்காக மனோவிடம் மாணவியாக சேர்ந்து, பின் காதலியாக பிரமோஷன் வாங்கிக் கொண்டவள் ஏர்ஹோஸ்டல் வேலைக்கு அப்பிளிகேஷன் போட்டால் - தயக்கம் காட்டாமல் ‘ஏர் இந்தியா’ அப்பாயிண்ட்மென்ட் ஆர்டர் வழங்குகிற அளவுக்கு அழகு யோக்கியாதாம்சங்கள்.இரண்டு பேரும் ஸ்டோன்வாஷ் பேண்ட் ஷர்ட்டுக்குள் நுழைந்து இருந்தார்கள். கண்களில் பைனாகுலர் கண்ணாடி.“மனோ...”“ம்…”“அந்த பிளாஸ்க்கை எடுங்க...”“என்ன காப்பியா.”“ஆமா...”“இப்பத்தானே பத்து நிமிஷத்துக்கு முன்னாடி கொட்டிகிட்டே?”“அது எப்பவோ ஆவியா போயிடுச்சு...”“நாமென்ன பிக்னிக்கா வந்திருக்கோம்.... பிஸ்கெட்டை. கொரிச்சிட்டு காப்பி சாப்பிட்டுகிட்டு...! சை! உன்னை கூட்டிக்கிட்டு வந்திருக்கக்கூடாது...?”“ஸாரி... மனோ...’’“இதோ பார் தேவி... இங்கே காத்திட்டிருக்கிறது ஒரு காக்காயையோ குருவியையோ சுடறதுக்கு இல்லை. லாஸ்வேகா நாட்டுப் பிரதமர் ஆர்லேண்டோவை இந்த ஏ.கே. 47 ரக துப்பாக்கியாலே சுட்டுக் குதறத்தான் மத்தியானம் மூணு மணியிலிருந்து உட்கார்ந்திட்டிருக்கோம்.”“எனக்குத் தெரியாதா என்ன...?”“அந்த சீரியஸ்னெஸ்ஸே உன்கிட்டே இல்லையே...? மரத்துல வந்து உட்கார்ற குருவிகளைப் பார்க்கிறதும் - ரோட்ல போற கார்களை எண்ணறதும். பத்து நிமிஷத்துக்கொரு ‘க்ராக் ஜாக்’ பிஸ்கெட்டை கொரிச்சு காப்பியை விழுங்கறதும்...”“சரி... இனிமே நான் சீரியஸ்” - தேவி பைனாகுலரைப் பொருத்தி கொண்டு தொலைவில் தெரிந்த ஏர்ஃபோர்ட்டைப் பார்த்தாள். விமானம் ஒன்று புறப்படும் தருவாயில் ப்ரொப்பலர்களை சுழற்றிக் கொண்டிருந்தது.“ஆர்லேண்டோவுக்கு செக்யூரிட்டி ஏற்பாடுகள் எப்படியிருக்குன்னு பார்...?”பைனா குலரை நகர்த்தினாள் தேவி. உதடுகள் 0 வடிவத்தில் குவிந்தது..
Disponible depuis: 08/02/2024.
Longueur d'impression: 87 pages.

D'autres livres qui pourraient vous intéresser

  • Aetho Nadakirathu - cover

    Aetho Nadakirathu

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    பிரபல மனநல மருத்துவர் அமிர்தவர்ஷினி, தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க வருகிறார், அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் எதிர்பாரத விதமாக நிகழ்ச்சி அரங்கில் கொல்லபடுகிறார்..போலீஸ் வரவழைக்க ப்படுகிறார்கள் ,போலீஸின் யூகம் படி அரங்கில் உள்ள ஒருவரால் தான் கொலை நடந்திருக்கிறது,அது யார் ? எதற்காக என்ற ஆவலா? அதற்கு கேளுங்கள்
    ஏதோ நடக்கிறது!
    Voir livre
  • Jeiyppathu Nijam - cover

    Jeiyppathu Nijam

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    இலட்சியா -95 அதி நவீன ரக விமானத்தை பற்றிய சில இரகசிய குறிப்புகள் வெளிநாட்டவர்களுக்கு விற்க படுவதாக இரகசிய தகவல் டெல்லியில் உள்ள நேஷனல் செக்யூரிட்டி ஃபோர்ஸிடமிருந்து தகவல், சென்னையில் உள்ள விவேக்கிற்கு வர உடனே டெல்லிக்கு விரைகிறான்.
    இலட்சியா -95 பற்றிய சில இரகசிய தகவல்கள் சேட்டர்ஜி, மெஹரா மற்றும் விஷ்ணு வர்த்தன் இவர்கள் மூவருக்கு மட்டுமே தெரியும், இதில் இருவர் கொல்லப்படுகின்றனர். கடைசியில் தீவிர இரகசிய குழுவில் உள்ள ஒரு கருப்பாடு யார்? என்று கண்டறிந்த இரகசியங்களை எவ்வாறு மீட்கின்றனர் என்பதை அறிய கேளுங்கள் ஜெயிப்பது நிஐம்..
    Voir livre
  • Thappu Thappaai oru Thappu - cover

    Thappu Thappaai oru Thappu

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    "தப்பு என்பதே ஒரு தப்பான விஷயம். அந்தத் தப்பையே தப்புத் தப்பாய் பண்ணினால் எப்படியிருக்கும் ? குற்றம் செய்தவர்கள் சட்டத்தின் பார்வையிலிருந்து தப்பித்துக் கொண்டாலும், நீதி தேவதை ஏதாவது ஒரு வடிவில் வந்து அவர்களைத் தண்டிப்பது காலத்தின் கட்டாயமாக மாறுகிறது. இது ஒரு சோஷியோ க்ரைம் த்ரில்லர்.
    
    நாவலின் நாயகி காயத்ரியும், நாயகன் சத்யநாராயணனும் எதிர்பாராதவிதமாய் தெருவில் சந்தித்துக்கொள்கிறார்கள். இருவரும் ஒரே பள்ளியில் கல்லூரியில் படித்தவர்கள். காயத்ரியிடம் சத்யநாராயணன் இப்போது நீ என்ன வேலை செய்து கொண்டிருக்கிறாய் என்று கேட்க, அவள் தன்னிடம் உள்ள பையைத் திறந்து காட்டி, "ஊதுவத்தி வியாபாரம்தான் என்னுடைய பிசினஸ். வீடுவீடாய் போய் விற்று வருகிறேன்" என்று சொல்ல சத்யநாராயணன் அதிர்ந்து போய் அவளிடம், " காயத்ரி ! இதை உன்னிடமிருந்து நான் எதிர்பார்க்கலை. பள்ளியிலும், கல்லூரியிலும் நீ ஒரு கெட்டிக்கார மாணவியாய் இருந்தாய். நீ ஒரு நல்ல வேலையில் இருந்து உனக்குத் திருமணமும் நடந்து இருக்கும் என்று நினைத்தேன். உன் வாழ்க்கையில் என்னதான் நடந்தது என்று கேட்க காயத்ரி ஒரு விரக்தி சிரிப்போடு, " விதி சிரிக்கும்போது நாம் அழ வேண்டியிருக்கிறதே " என்று சொல்கிறாள். அவள் சொன்ன இந்த வரியில் இருந்துதான் " தப்புத் தப்பாய் ஒரு தப்பு " நாவல் சூடு பிடிக்கிறது.
    
    காயத்ரியின் தற்போதைய நிலைமைக்கு எது காரணம் யார் காரணம் என்பது ப்ளாஷ்பேக்கில் தெரிய வரும்போது வாசகர்கள் ஒரு அதிர்ச்சிக்கு உட்பட்டு உறைந்து போவது மட்டும் நிச்சயம். காரணம் palm membrane. அது என்ன "palm membrane" என்று கேட்கிறீர்களா ஆடியோவில் நாவலைக் கேளுங்கள்."
    Voir livre
  • Kadaisi Theekkuchi - cover

    Kadaisi Theekkuchi

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    ஒரு விஞ்ஞானி தனது பயோ டெக்னாலஜி கண்டுபிடிப்புகளை எதிர்கால மனிதசமூகத்தை காப்பாற்றும் நோக்கில் தன் மனைவியுடன் பாதுகாக்க போராடுகிறார். தொடர்ச்சியாக உயிருக்கு ஆபத்தான அச்சுறுத்தல்களையும், எதிர்பாராத சம்பவங்களையும் இந்த ஜோடி ஒரு கொலையை மறைக்கும்போது எதிர்கொள்கின்றனர்.
    Voir livre
  • Marma Maaligai - cover

    Marma Maaligai

    Kottayam Pushpanath

    • 0
    • 0
    • 0
    "'Maranam Pathiyirikkunna Thazhvara' is one of the most famous detective novels written by Kottayam Pushpanath. It belongs to the Pushparaj series of Kottayam Pushpanath.
    Detective Pushparaj, he is a private detective working in India. The Criminal Department seeks his help in cracking down on many cases of trauma and confusion. In this novel, 'Maranam Pathiyirikkunna Thazhvara' Detective Pushparaj unravels a mysterious bungalow and some of the events surrounding it. The novel tells the story of a valley where death hides, just like the title of the novel.
    
    கோட்டயம் புஷ்பநாத் எழுதிய மிகவும் பிரபலமான துப்பறியும் நாவல்களில் ஒன்று 'மரணத்தாழ்வரா'. இது கோட்டயம் புஷ்பநாத்தின் புஷ்பராஜ் தொடருக்கு சொந்தமானது. துப்பறியும் புஷ்பராஜ், இந்தியாவில் பணிபுரியும் ஒரு தனியார் துப்பறியும் நபர். அதிர்ச்சி மற்றும் குழப்பம் தொடர்பான பல வழக்குகளைத் தீர்ப்பதற்கு குற்றவியல் துறை அவரது உதவியை நாடுகிறது. இந்த நாவலில் துப்பறியும் புஷ்பராஜ் ஒரு மர்மமான பங்களாவையும் அதைச் சுற்றியுள்ள சில நிகழ்வுகளையும் அவிழ்த்து விடுகிறார். நாவலின் தலைப்பைப் போலவே மரணம் மறைந்திருக்கும் ஒரு பள்ளத்தாக்கின் கதையையும் இந்த நாவல் சொல்கிறது.
    Voir livre
  • Irandhukidantha Thendral - cover

    Irandhukidantha Thendral

    Anonyme

    • 0
    • 0
    • 0
    வெளியூரில் வேலை செய்யும் குமரன் தன்னுடைய மனைவி பார்ப்பதற்காக இரவு நேர பஸ்ஸில் பயணம் செய்கிறான். இயற்கை உபாதைக்காக கீழே இறங்கி குப்பை மண்டி கிடந்த அந்த இடத்தில் அவன் கண்ட காட்சி அவனை எப்படிப்பட்ட சிக்கலில் மாட்ட வைக்கிறது என்பதை திகிலோடு சொல்வதுதான் இந்த கதை.
    Voir livre