திக் திக் டிசம்பர்
ரமணிசந்திரன்
Maison d'édition: Pocket Books
Synopsis
ஹரீஷ் அதிர்ந்துபோய் டாக்டரை ஏறிட்டான். அவர் முகம் இறுகிப்போய் லேப் டெக்னீஷியனை எரிச்சலாய்ப் பார்த்தார். 'பேஷண்டுக்கு நினைவு திரும்பி விட்டதா இல்லையா என்பதைக்கூடக் கவனிக்காமல் இப்படியா உண்மையைப் போட்டு உடைப்பது?' கோபமாய் கண்களால் கேட்ட கேள்விக்கு லேப் டெக்னீஷியன் முகம் வெளுத்து. "ஸாரி" என்று முனகினார்.ஹரீஷ் தடுமாற்றமாய் உடல் நடுங்க எழுந்து உட்கார்ந்தான். "டா... டாக்டர்...! எ... எனக்கு எ... எய்ட்ஸ் நோயா?"டாக்டர் ஓர் இன்ஸ்டண்ட் புன்னகை பூத்தார். "நோ... நோ... அவர் சொன்னது உன்னைப்பத்தி அல்ல. யூ ஆர் நார்மல்.""டாக்டர்... என்கிட்ட எதையும் மறைக்காதீங்க. இவர் என்பேரைச் சொன்னதை நான் கேட்டுட்டேன். எனக்கு எய்ட்ஸ் நோயா டாக்டர்?"டாக்டர் பெருமூச்சொன்றை விட்டபடி. கவலை ஈஷிக்கொண்ட முகத்தோடு தலையாட்டினார்."எஸ்... இது எய்ட்ஸோட ஆரம்ப நிலை.""டா... டாக்டர்... இது... எனக்கு எப்படி...?""அதை... நீதான் சொல்லணும் எய்ட்ஸ் ஒருத்தரைத் தாக்க எத்தனையோ வழிகள் இருக்கு. உனக்கு மோசமான பெண்கள்கிட்டே தொடர்பு இருக்கா?""இல்லை...""உனக்குக் கல்யாணம்...?""இன்னும் ஆகலை.எந்தப் பெண்ணோடவாவது சமீபத்துல...?""இல்லை.""பொய் சொல்லக் கூடாது.""சத்தியமா இல்லை டாக்டர் என்னோட அத்தை பொண்ணு மீராவைக்கூட நான் தொட்டுப் பேசினது இல்லை.""சமீபத்துல உனக்கு யாராவது ரத்ததானம் பண்ணினாங்களா?""இல்லையே...""உன்னோட ரிலேடிவ் சர்க்கிளிலோ, ஃப்ரண்ட்ஸ் சர்க்கிளிலோ யாருக்காவது எய்ட்ஸ் நோய் இருந்ததா?""இல்லை.""எய்ட்ஸ் தடுப்பு நோய் கேம்ப்கள் நடக்கிற இடங்களுக்குப் போய் வாலண்டியரா சர்வீஸ் பண்ணினது உண்டா?""இல்லை.""எதுவுமே இல்லைன்னா எப்படி? சமீபத்துல உடம்புக்கு முடியாம ஏதாவது ஹாஸ்பிடல்ல படுத்துட்டிருந்தியா?""ஹாஸ்பிடல்ல படுக்கலை. ஆனா...""சொல்லு.""போனமாசம் ஒரு நாள் சாயந்திரம் எனக்கு திடீர்னு காய்ச்சல் அடிச்சது. மாத்திரை சாப்பிட்டும் காய்ச்சல் கட்டுப்படலை. ரெண்டு தெரு தள்ளியிருந்த ஒரு டாக்டரோட க்ளினிக்குக்குப் போனேன். அந்த டாக்டர் எனக்கு இஞ்ஜெக்ஷன் பண்ணினார்.""எந்த டாக்டர்?""டாக்டர் சர்வேஸ்வரன்.இஞ்ஜெக்ஷனை டாக்டர் போட்டாரா, இல்லை நர்ஸ் போட்டாளா?""டாக்டர்தான் போட்டார்.""ஊசியை ஸ்டெரிலைஸ் பண்ணினாரா?""பண்ணலை.""எப்படி அவ்வளவு நிச்சயமாச் சொல்றே?""நான் டாக்டர்கிட்டே போனபோது அவர் எங்கேயோ வெளியே கிளம்பிப் போகத் தயாராயிருந்தார். நான் போனதுமே டெம்பரேச்சர் பார்த்துட்டு. இன்ஜெக்ஷன் போடணும்னு சொன்னார். நர்ஸ் ஊசியை ஸ்டெரிலைஸ் பண்ணப் போகும்போது, "வேண்டாம்அதுக்கெல்லாம் நேரமில்லை'ன்னு சொல்லி டாக்டர் ஊசி போட்டார்.""சந்தேகமே இல்லை. ஸ்டெரிலைஸ் பண்ணாத அந்த ஊசி மூலமாத்தான் எய்ட்ஸ் ஹெச்.ஐ.வி. கிருமிகள் உன்னோட ரத்தத்தில் கலந்திருக்கு. சில டாக்டர்கள் ஊசியை ஸ்டெரிலைஸ் பண்ண சோம்பல் பட்டுக்கிட்டு ஊசியைப் போடறதனால ஏற்படுகிற விபரீதம் இது."ஹரீஷின் உடம்புக்குள் பாய்ந்து கொண்டிருந்த ரத்தமெல்லாம் சட்டென்று வற்றிவிட்ட மாதிரியான உணர்வு. மண்டைக்குள் நட்சத்திரங்கள் வெடித்தன. 'ஸ்டெரிலைஸ் பண்ணாத அந்த ஊசி மூலமாத்தான் எய்ட்ஸ் ஹெச்.ஐ.வி. கிருமிகள் உன்னோட ரத்தத்தில் கலந்திருக்கு'. டாக்டர் சொன்ன இந்த வாசகம் ஹரீஷின் மனசுக்குள் பெரியதாய்க் கோஷமிட்டது.டாக்டர் அவனுக்கு ஆறுதல் வார்த்தைகளைச் சொல்ல வாயைத் திறந்த விநாடி. அவர் முதுகுக்குப் பின்னால் நடைச் சத்தம் கேட்டது.திரும்பினார்.கலவர முகமாய் நர்ஸ்
