Join us on a literary world trip!
Add this book to bookshelf
Grey
Write a new comment Default profile 50px
Grey
Subscribe to read the full book or read the first pages for free!
All characters reduced
தேவி - cover

தேவி

ரமணிசந்திரன்

Publisher: Publishdrive

  • 0
  • 0
  • 0

Summary

தேவிக்குத் தனியாகச் சிந்திக்க வேண்டியிருந்தது!‘என் தோழியைப் பார்க்கப் போகிறேன்’ என்று அத்தையிடம் சொன்னாள். அத்தையின் பதிலை எதிர்பாராமலே விரைவாக வெளியே நடந்து விட்டாள். சற்றுத் தயங்கினால் கூட அத்தை தடுத்து விடுவாள் என்பது அவளுக்குத் தெரியும். இப்போதுகூட தேவிக்காக அவளுடைய தங்கை செல்வி அத்தையிடம் வாங்கிக் கட்டிக் கொண்டு இருப்பாள் என்பது தேவிக்கு செந்தாமரை தேவிக்கு நன்றாகத் தெரியும். ஆனால் என்ன செய்வது? சுயமான சிந்தனைக்கு அந்த வீட்டில் இடமே கிடையாதே, சிந்திக்காமல் எப்படிச் செயல்பட முடியும்?செந்தாமரை தேவி, வெண் தாமரைச் செல்வி. ஆகா நிரம்பவும் பொருத்தம் பார்த்துதான் அப்பாவும், அம்மாவும் பெயர் சூட்டி விட்டார்கள். தன் தோழிக்கு ஒரு கடிதம் எழுத வேண்டுமானால் உறைவாங்க இருபது பைசா கூட தேவியிடம் கிடையாது! செல்வியோ அத்தையின் அதட்டலில் எட்டாவதோடு படிப்பை நிறுத்தி விட்டாள். தேவியின் திடமும் துணிவும் அவளுக்கும் இருந்திருந்தால் அவளும் மேலே படித்திருப்பாள். ஆனால், அவள் வெறும் கோழை, முதுகெலும்பே கிடையாது.லேசான புருவச் சுளிப்புடன் தேவி மேலும் வேகமாக நடக்கலானாள்.வைகையின் வெண்மணல் பரப்பு விரிந்து அகன்று பரந்து கிடந்தது. “வா மகளே, உனக்கு என்ன வேதனை? என்னிடம் சொல்லி ஆறுதல் பெற்றுக் கொள்’ என்று ஓடையாகச் சென்ற ஆறும் மணலும் அழைப்பது போல் தேவிக்குத் தோன்றியது. சட்டென விழிகளில் நீர் மல்கியது. சுற்றுப்புறத்தில் ஆட்கள் நடமாட்டம் இல்லாதிருந்தால் அப்படியே குப்புற விழுந்து அழுதிருப்பாள்.அழுதிருப்பாளா! அதுவும் சந்தேகம்தான். தேவியைப் பொறுத்தவரையில் அழுவது கோழைத்தனம். அதிலும் மற்றவர் பார்க்க அழுவது என்றால் சே! அவமானம்! ஆத்திரத்துடன் தலையைச் சிலுப்பிக் கொண்டாள். நிமிர்ந்து நேராக நடந்தாள். தன் வழக்கமான இடத்தை அடைந்தாள்.
 
வைகை ஆற்றுப் பாலத்தின் ஒருபுறமாக பாலத்தைத் தாங்கும் கரையோரத் தூண் மீது சாய்ந்தபடி, அவள் அமர்ந்தாள். மெல்லிய நீண்ட விரல்கள் பட்டு மணலில் கோலமிட்டன. பூமணலின் பூக்கோலம், பாவையின் மனதிலோ எண்ணத்தின் கோலம்.எண்ணுவதற்கும் அதிகமாக ஒன்றும் இல்லை. சசி அக்கா சொல்லுவதை ஏற்பதா வேண்டாமா? இரண்டில் ஒன்று முடிவு செய்ய வேண்டும்.செல்விக்கும் அவளுக்கும் இந்தப் பிறவியில் ஒரு விடிவு காலம் வேண்டும் என்றால், சசி அக்கா சொல்வதை ஏற்பதுதான் வழி. ஆனால், குடும்பத்தை விட்டுப் பிரிந்தாக வேண்டும். பிரிய முடியாதபடி யாருக்கும் யாரிடமும் பற்றும் பாசமும் உருகி ஓடுவது ஒன்றும் இல்லைதான். ஆனால் செல்வியும் தேவியும் மட்டுமே குடும்பம் என்று ஆகிவிட வேண்டியதிருக்கும். ஒரு கவலை கலக்கம் என்றால், காப்பதற்குப் பெரியவர்கள் இருக்கமாட்டார்கள்.இப்போதும் கலக்கத்தை தீர்க்க யாருமே கிடையாது. என்றாலும் தனியே இருக்கும் பெண்கள் தானே என்று யாரும் வாலாட்ட முடியாது. அதுவும்தான் எப்படிச் சொல்வது? அத்தையின் அக்கா மகன் ஒரு தடியன் வந்திருக்கிறானே அவன் செல்வியைப் பார்த்து விசில் அடிப்பதும் கொச்சையாகப் பாடுவது... எல்லாம் அத்தை கொடுக்கும் இடம். செல்வியும் பயந்து ஓடுகிறாள். அந்த நாய் விரட்டுகிறது. திரும்பி நின்று ஒருதரம் முறைத்தால் கூடப் போதும். அதற்குக் கூடத் துணிவின்றி நடுங்கிக் கொண்டு கிடக்கிறாள் மக்கு!இந்தக் கஷ்டத்தில் இருந்து அவளை மீட்க எந்தப் பெரியவர்கள் இருக்கிறார்கள்? இந்தப் பெரியவர்களை நம்பி எட்டிப் பார்க்கும் விடிவு காலத்தை விட்டு விடுவதா?சிந்தனையில் மூழ்கிக் கிடந்த தேவிக்கு சுற்றுப்புறமே மறந்திருந்தது.‘சுளீர்’ என்று யாரையோ அறையும் ஓசையும் “அய்யோ சத்தியமாய் நான் திருடவில்லையே” என்று ஒரு சிறு பெண்ணின் கதறலும் வெகு அருகில் கேட்கவே திடுக்கிட்டு எழுந்தாள்.கதறிய குரல் அறிமுகமானது போலவும் தோன்றியது. சுற்று முற்றும் பார்த்தாள். பாலத் தூணின் மறுபுறம்தான் அங்கே விரைந்து ஓடினாள்
Available since: 04/03/2025.
Print length: 136 pages.

Other books that might interest you

  • Siluvai - cover

    Siluvai

    Jayakanthan

    • 0
    • 0
    • 0
    Jayakanthan was a pioneer Tamil writer who gave a new identity to Tamil short stories. Apart from reinventing the form, he also helped it gain a wider audience. Here are seventeen stories from the entirety of Jayakanthan's writings selected by Poet and Writer Sukumaran. It shows us the multifaceted image of a path-breaking writer, and a snapshot of Tamil literature of that time. தமிழ்ச் சிறுகதைகளுக்கு புதிய வார்ப்பும் வடிவமும் வனப்பும் வழங்கியவர் ஜெயகாந்தன். சிறுகதை இலக்கியத்துக்கு விரிவான வாசகப் பரப்பை உருவாக்கியவரும் அவரே. ஜெயகாந்தனின் மொத்தச் சிறுகதைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பதினேழு கதைகளின் தொகுப்பு 'ஒரு வீடு பூட்டிக் கிடக்கிறது'. ஒரு காலகட்டத்தைச் சேர்ந்த தமிழ் சிறுகதைப் போக்கையும் முன்னோடி எழுத்தாளர் ஒருவரின் நோக்கையும் அடையாளப்படுத்துகிறது இத்தொகுப்பு.
    Show book
  • Manthira Viral - cover

    Manthira Viral

    Indra Soundarrajan

    • 0
    • 0
    • 0
    A child is born with the Midas Touch; everything it touches becomes gold! However, the child doesn't know this. Manthira Viral is the story of the people who compete to own the child and the mystery around it!
    
    ஒரு குழந்தையின் விரல்களே மந்திர விரல்கள். அதன் கைப்படுவதெல்லாம் பொன்னாகிவிடும். ஆனால் அதற்கோ தன் கரங்கள் மந்திர கரங்கள் என்பது தெரியாது. அது தான் குழந்தையாயிற்றே! அக்குழந்தையை சிலர் அடைய போடும் போட்டியும் அதன் முடிவுகளும் வினோதம்!
    Show book
  • Aarudhal - cover

    Aarudhal

    T Janakiraman

    • 0
    • 0
    • 0
    தமிழ் சிறுகதை எழுத்தாளர்களில் பெரும் கலைஞர் தி. ஜானகிராமன். நவீன புனைகதைக்கு அவர் அளித்திருப்பவை வெவ்வேறு நிறமும் வெவ்வேறு களமும் வெவ்வேறு உணர்வும் கொண்ட ஒளி பொருந்திய கதைகள். அவரது கதையுலகம் நுட்பமானது மட்டுமல்ல; விரிவானதும் கூட.  சிறுகதை எழுத்தாளர்களில் அதிக வசீகரம் கொண்டவர் தி. ஜானகிராமன். அபூர்வமான அழகுணர்ச்சிகொண்ட இவர், நினைவில் நீங்காது நிற்கும் அற்புதமான பல சிறுகதைகளைப் படைத்திருக்கிறார்.
    Show book
  • Maasi Veedhiyin Kal Sandhugal - cover

    Maasi Veedhiyin Kal Sandhugal

    Seenu Ramasamy

    • 0
    • 0
    • 0
    பிரபல இயக்குனர்/ கவிஞர் சீனு ராமசாமி எழுதிய “மாசி வீதியின் கல் சந்துகள்” கவிதைத் தொகுப்பு உங்கள் தீபிகா அருணின் குரலில் ஒலிவடிவில் இதோ கதை ஓசையில். இந்தத் தொகுப்பில் ஐந்துவிதமான கவிதைகள் இடம் பெற்றுள்ளன. ஒன்று கடந்தகால நினைவிலிருந்து எழும் காட்சிகளால் உருவாக்கபட்டது. இரண்டாவது நகரவாழ்வு தரும் நெருக்கடிகளால் உருவானது. மூன்றாவது இயற்கையின் மீதான தீராத விருப்பத்தால் எழுதப்பட்டது. நான்காவது கவிதை எழுதுதல் மற்றும் அதன் செயல்பாடுகள் பற்றியது. ஐந்தாவது தன்னைச் சுற்றிய உலகின் சமகாலப் போக்குகளையும், அபத்தங்களையும் பற்றியது. பெறுவதும் தருவதும் என்று ஒரு கவிதைக்குத் தலைப்பு வைத்திருக்கிறார். இந்தத் தொகுப்பிலுள்ள எல்லாக் கவிதைகளையும் திறக்கும் கடவுச் சொல் இதுவே. கேட்டு ரசியுங்கள்.
    Show book
  • Vibarithathin Vilai Vidhya - cover

    Vibarithathin Vilai Vidhya

    Pattukottai Prabakar

    • 0
    • 0
    • 0
    Manohar - the protagonist's murky personal life as a bachelor, his hedonistic showdown with Deyva Nayagam on the business front and his wife Vidya's dangerous yet naughty acts, all meet in a straight line to eclipse Manohar's life. The plot unwinds as the paradox of love plays "Truth or Dare" in the protagonist's life.  மனோகரின் இளமைக்கால காதல், தெய்வ நாயகத்துடனான தொழில் வகை மோதல், அவனது அன்பு மனைவி வித்யாவின் விபரீதமான குறும்புகள் ஆகிய சுறுக்குகள் ஒரே புள்ளியில் இறுகி மனோகரின் வாழ்க்கையைப் புரட்டிப்போடும் மர்ம முடிச்சை எப்படி மாற்றுகிறது?
    Show book
  • நாணலே நங்கையானால் - Naanale Nangaiyaanaal? - cover

    நாணலே நங்கையானால் - Naanale...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுள் ஒன்றை வைத்து, அழகான காதல் கதையின் மூலம் வாசிப்பவர்களுக்கு சுவாரஸ்யம் ஊட்டும் வகையில், பலவித திடீர் திருப்பங்களுடனும் சுவாரஸ்யங்களுடனும் கதையை எளிமையாக விளக்க முயன்றிருக்கிறேன். 
    Show book