Begleiten Sie uns auf eine literarische Weltreise!
Buch zum Bücherregal hinzufügen
Grey
Einen neuen Kommentar schreiben Default profile 50px
Grey
Jetzt das ganze Buch im Abo oder die ersten Seiten gratis lesen!
All characters reduced
ரத்தம் சிந்தும் ரோஜாக்கள் - cover

ரத்தம் சிந்தும் ரோஜாக்கள்

ரமணிசந்திரன்

Verlag: Pocket Books

  • 0
  • 0
  • 0

Beschreibung

ஆர்.எஸ்.புரம் எக்ஸ்டன்ஷன் ஏரியா.ஐந்தாவது செக்டாரில் இரண்டாவது பங்களா, மினி பங்களா.காலை மணி ஆறு. போலீஸ் ஜீப் ஒன்று நிதானமான வேகத்தோடு பங்களாவின் காம்பௌண்ட் கேட்டுக்குள் நுழைந்து போர்டிகோவில் மெளனமானது. ஜீப்பின் முன் சீட்டிலிருந்து டி.எஸ்.பி. ராஜபாண்டியன் இறங்கினார். போர்டிகோ தூரமாய் போலியோ பூட்ஸ் அணிந்த காலோடு சாய்ந்து உட்கார்ந்தபடி - நாய்க் குட்டியோடு விளையாடிக் கொண்டிருந்த அந்த ஏழுவயது சிறுவன் - அவசர அவசரமாய் எழுந்து நின்றபடி கத்தினான்:“அம்மா...! தாத்தா... வந்தாச்சு...” ராஜபாண்டியன் சிரித்துக் கொண்டே சிறுவனை நெருங்கி தன் தலையிலிருந்த தொப்பியை எடுத்து அவன் தலையில் பொருத்தி இரண்டு கைகளாலும் அவனை அள்ளித் தூக்கிக்கொண்டார்.“என்னடா பாபு. இவ்வளவு காலையில எந்திரிச்சு... போர்டிகோ படியில வந்து உட்கார்ந்திட்டிருக்கே...?” ஐம்பத்தி மூன்று வயதான ராஜபாண்டியன் ஒரு சிம்மம் மாதிரி நடந்து உள்ளேப் போனார்.“ஏன் தாத்தா ராத்திரி வரல்...?”“திருடனைப் புடிச்சாத்தானே வரமுடியும்?”“புடிச்சிட்டீங்களா தாத்தா...?”“புடிக்காமே... வருவேனா...? புடிச்சு... ஜெயில்ல போட்டுட்டுத்தான் வர்றேன்...” ராஜபாண்டியன் மீசையை முறுக்கியபடி சொல்லிக் கொண்டிருக்கும் போதே பக்கத்து அறையிலிருந்து சியாமளா வெளிப்பட்டாள்இருபத்தேழு வயதை முடிக்கப் போகும் சியாமளாவுக்கு கொஞ்சம் பூசின மாதிரி உடம்பு. சந்தன நிறமான முகத்தில் குங்குமம் மட்டும் மிஸ்ஸிங்... அடர்த்தியான தலைக் கேசத்தை எவ்வளவு தான் அழகாக வாரிப் பின்னினாலும் துளியூண்டு பூ வைத்துக் கொள்ள முடியாது. கழுத்தில் சரம்சரமாய்த் தொங்கும் தங்கச் செயின்களுக்கு மத்தியில் தாலிக் கொடி காணாமல் போயிருந்தது. பத்தொன்பதாவது வயதில்- பாங்க் ஆபீஸர் சரவணகுமாருக்கு வாழ்க்கைப்பட்டு இருபதாவது வயதில் பாபுவுக்கு அம்மாவாகி இருபத்தி மூன்றாம் வயதில் கணவனை மஞ்சள் காமாலைக்குப் பலி கொடுத்து விட்டு மஞ்சள் பூசுவதை நிறுத்திக் கொண்டவள், அவளுடைய மாமாவும் அத்தையும் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் தன் அப்பாவோடும் தங்கை கவிதாவோடும் வந்து இணைந்து கொண்டாள்.“என்னப்பா... ராத்திரி பூராவும்... நீங்க வருவீங்க வருவீங்கன்னு எதிர்பார்த்தே சரியானபடி தூங்கலை... பாபுவும் ஞாபகம் வந்தப்பல்லாம் கண்முழிச்சுப் பார்த்து- 'என்னம்மா... தாத்தா வந்துட்டாரா...? வந்துட்டாரா'ன்னு கேட்டுட்டே இருந்தான்... போன காரியம் என்னப்பா ஆச்சு...? அந்த வட நாட்டு முகமூடி ஆசாமிகளை மடக்கிட்டீங்களா?”ராஜபாண்டியன் சிரித்தார்.“ஏம்பா... சிரிக்கறீங்க...?”“முகமூடி கொள்ளைக்காரங்க... வடநாட்டு ஆசாமிங்க இல்லேம்மா... எல்லோருமே தமிழ் ஆளுங்கதான். அதுமாதிரி ட்ரஸ் பண்ணிட்டு அரையும் குறையுமா... இந்தி பேசிக்... கொள்ளையடிச்ச ஆசாமிகளை மடக்கி... லத்தியால ரெண்டு தட்டுத் தட்டினா... அவனவன் தாய் பாஷையில ‘அய்யோ அம்மா'ங்கிறான். மொத்தம்... ஏழுபேர்... ஒரே கயத்துல கட்டி ஸ்டேஷன்ல கொண்டு போய்த் தள்ளிட்டு வர்றேன்... ஆமா... கவிதா எங்கே...? இன்னும் தூங்கறாளா...? நாற்காலியில் சாய்ந்தபடியே கேட்டார், ராஜபாண்டியன்.சியாமளாவின் முகம் சட்டென்று மாறியது,கவிதாவா...? அவ...அவ... வந்தப்பா...”ராஜபாண்டியன் குழப்பமாய் நிமிர்ந்தார்“என்னம்மா...? கவிதாவைப் பத்தி கேட்டா... இந்தத் திணறு திணர்றே.?”“அவ... அவளோட ஃப்ரெண்ட் ராணி வீட்டுக்குப் போயிருக்காப்பா...”“ராணி வீட்டுக்கா...? இவ்வளவு காலங்கார்த்தாலே ராணி வீட்டுக்கு எதுக்காக போயிருக்கா...?”“அவ... இப்போ... காலையில போகலையப்பா... நேத்திக்கு சாயந்தரம் அஞ்சு மணிக்கே கிளம்பிப் போயிட்டா... ராணிக்கு பெர்த்டேயாம்...அதைக்க் க்ராண்டா செலிபிரேட் பண்ணப்போறதாவும் உதவிக்கு கவிதாவும் கூட வந்தா... நல்லாயிருக்கும்ன்னு அந்த ராணிப்பொண்ணு கெஞ்சினா... அதான் அனுப்பி வெச்சேன்... ராத்திரி எட்டு மணிக்கெல்லாம் கொண்டு வந்து விட்டுடறேன்னு கூட்டிகிட்டுப் போனா...”“எட்டுமணிக்கு வரலையா...?”“ராணி வீட்டிலிருந்து போன் வந்தது... கவிதா ராத்திரி இங்கேயே தங்கி... நாளைக்குப் பர்த்டே பார்ட்டியில் கலந்துட்டு வருவாள்னு சொன்னாங்க...”ராஜபாண்டியனின் முகம் கோபத்துக்குப் போனது.
Verfügbar seit: 13.01.2024.
Drucklänge: 111 Seiten.

Weitere Bücher, die Sie mögen werden

  • Galugambada Atankadali - cover

    Galugambada Atankadali

    D V Guruprasd

    • 0
    • 0
    • 0
    'ಸಾವಿನ ಸೆರಗಿನಲ್ಲಿ' ಕೃತಿಯ ಎರಡನೆಯ ಭಾಗವೇ ಈ ಕೃತಿ, 'ಗಲ್ಲುಗಂಬದ ಆತಂಕದಲ್ಲಿ'. ಇದರ ಹೆಸರೇ ಸೂಚಿಸುವಂತೆ ಮರಣದಂಡನೆಯ ಶಿಕ್ಷೆಗೆ ಈಡಾಗಿರುವ ಕೈದಿಗಳ ಕಥೆಗಳ ಗುಚ್ಛವಿದು.
    Zum Buch
  • 1+1=0 - cover

    1+1=0

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    சுடர்க்கொடி ஒரு தைரியமான பத்திரிகை நிருபர் அவரும் அவர் சகோதரனும் மர்மமான முறையில் படுகொலை செய்யப்படுகிறார்கள். கொலையாளியைத் தேடி விவேக்கும் விஷ்ணுவும் எடுக்கும் நடவடிக்கை வெற்றியா? தோல்வியா?
    கேளுங்கள் 1+1=0 ராஜேஷ்குமாரின் விருவிரு துப்பறியும் நாவல்.
    Zum Buch
  • Jadi Maleya Ratri - cover

    Jadi Maleya Ratri

    Yandamoori Veerendranath

    • 0
    • 0
    • 0
    ಬದುಕು ಇಂಡೆಕ್ಸ್ ಇಲ್ಲದ ರಟ್ಟಿನ ಪುಸ್ತಕ. ಎಚ್ರಿಕೆಯಿಂದ ಹುಡಿಕಿದರೆ ನಮಗೆ ಬೇಕಾದ ಪದಗಳು ಬೇರೆ ಬೇರೆ ಪುಟದಲ್ಲಿ ಸಿಗದೇ ಇರಲಾರವು! ನಾವು ಮಾಡಬೇಕಾಗಿದ್ದು ಅವುಗಳನ್ನು ಸಮನ್ವಯ ಮಾಡಿಕೊಳ್ಳುವುದು ಮಾತ್ರವೇ...
    Zum Buch
  • Kolayudhir Kaalam - cover

    Kolayudhir Kaalam

    Sujatha

    • 0
    • 0
    • 0
    அறிவியலுக்கும் அமானுஷ்யத்திற்கும் இடையே நிகழும் தீராத போராட்டத்தை முன்வைக்கும் இந்நாவல் கணேஷ் வசந்த் தோன்றும் சுஜாதாவின் படைப்புகளில் பெரும் புகழ்பெற்றதாகும். மனதை அதிர வைக்கும் சம்பவங்களும் எதிர்பாராத திருப்பங்களும் தீர்க்கமுடியாத புதிர்களும் நிறைந்த கொலையுதிர் காலம் வெளிவந்த காலத்திலிருந்தே வாசகர்களின் உற்சாகமான வாசிப்பிற்கு உரியதாக இருந்து வந்திருக்கிறது.
    Zum Buch
  • Aetho Nadakirathu - cover

    Aetho Nadakirathu

    Rajesh Kumar

    • 0
    • 0
    • 0
    பிரபல மனநல மருத்துவர் அமிர்தவர்ஷினி, தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க வருகிறார், அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் எதிர்பாரத விதமாக நிகழ்ச்சி அரங்கில் கொல்லபடுகிறார்..போலீஸ் வரவழைக்க ப்படுகிறார்கள் ,போலீஸின் யூகம் படி அரங்கில் உள்ள ஒருவரால் தான் கொலை நடந்திருக்கிறது,அது யார் ? எதற்காக என்ற ஆவலா? அதற்கு கேளுங்கள்
    ஏதோ நடக்கிறது!
    Zum Buch
  • Varnavin Maranam - cover

    Varnavin Maranam

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    A gripping murder mystery where a husband allegedly kills his wife and commits suicide. But when three more deaths follow mysteriously, what dark secrets come to light? Listen to this thrilling Tamil audiobook "Varnavin Maranam" by Rajesh Kumar. 
    இளமாறன் தன் மனைவி செவ்வந்தியை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்டானா? அல்லது யாரோ திட்டமிட்டு செய்த கொலையா? மூன்று மரணங்களின் பின்னணியில் உள்ள அதிர்ச்சி தகவல்கள். ராஜேஷ் குமாரின் "வர்ணாவின் மரணம்" நாவல் - முழு ஆடியோ புக்.
    Zum Buch